லத்தீபா ராஜினாமாவை சிலாங்கூர் ஆட்சி மன்றம் விவாதிக்கும்

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து பிகேஆர் சட்டப் பிரிவுத் தலைவர் லத்தீபா கோயா விலகிக் கொண்டிருப்பதை சிலாங்கூர் மாநில ஆட்சி மன்றம் நாளைய கூட்டத்தில் விவாதிக்கும். அந்தத் தகவலை மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் வெளியிட்டார். "எனக்கு அவரது ( பதவித் துறப்பு) கடிதம்…

துணைப் பிரதமரும் மசீச-வும் வாக்குவாதம்

மசீச சீனர்களுடைய உணர்வுகளைப் 'புரிந்து கொள்ளவில்லை' என வெளிப்படையாக குற்றம் சாட்டியதின் வழி துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மசீச தலைவர்களை உசுப்பி விட்டுள்ளதாக தோன்றுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்து அம்னோ தொகுதி ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த முஹைடின், பிஎன் உறுப்புக் கட்சிகள்- குறிப்பாக மசீச-வையும்…

லத்தீபா ராஜினாமா மீது சிலாங்கூர் பிகேஆர், மாநில அரசைச் சாடுகிறது

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தனக்கு எதிராக கூறப்படும் குறைபாடுகளைத் திறந்த மனத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அந்த மாநில பிகேஆர் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு குறைகள் தெரிவிக்கப்பட்டது லத்தீபா கோயா பெட்டாலிங் ஜெயா மாநகாரட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்கு வழி வகுத்து விட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து…

லிங்: நான் டாக்டர் மகாதீரை ஏமாற்றத் துணிய மாட்டேன்

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் மீது அமைச்சரவையை ஏமாற்றியதாக தமக்கு எதிராக தவறாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். தமது வழக்குரைஞர் விசாரணை செய்த போது லிங் அவ்வாறு சொன்னார்.…

லியு:சிலாங்கூரில் தண்ணீருக்குப் பஞ்சமில்லை

சிலாங்கூரில் உள்ள ஏழு அணைக்கட்டுகளிலும் நீர் நிரம்பி நிற்கிறது என்று கூறிய சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு, வேண்டுமென்றே நீர் நெருக்கடி என்ற ஒன்றை உருவாக்க வேண்டாம் என்று ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரை(சபாஷ்) எச்சரித்தார். மாநில ஊராட்சி, ஆராய்ச்சி,மேம்பாட்டுக்குழுத் தலைவரான லியு, தாமும் பல கிராமத்…

பிஎன் ஆட்சியில் தண்ணீர் கட்டணம் உயரும்:சேவியர் எச்சரிக்கை

சிலாங்கூரில் பிஎன் ஆட்சிக்குத் திரும்பினால் தண்ணீர் கட்டணம் குறிப்பிடத்தக்க வகையில் உயரலாம் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் என்னதான் சொன்னாலும் பக்காத்தான் ரக்யாட்டின் இலவச நீர் திட்டத்தை பிஎன்னால் தொடர இயலாது என்று சேவியர்…

பினாங்கில் பிஎன் வெற்றி பெற்றால் ‘வாடகை-கொள்முதல்’ வீடுகள்

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தான் ஆட்சிக்கு வந்தால் அமலாக்கப் போவதாக பினாங்கு பாரிசான் நேசனல் இன்னொரு வாக்குறுதியை பினாங்கு மக்களுக்கு வழங்கியுள்ளது. இந்த முறை 'வாடகை-கொள்முதல்' கோட்பாட்டின் மூலம் 350,000 ரிங்கிட்டுக்கும் குறைவான விலையில்  வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாக பிஎன் உறுதி கூறியுள்ளது. இவ்வாண்டு பிற்பகுதியில் அல்லது அடுத்த…

சைம் டார்பி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது நம்பிக்கை…

சைம் டார்பி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அகமட் ஜுபிர் முர்ஷிட் மீது நம்பிக்கை மோசடி தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டன. சைம் டார்பி நிறுவனத்துக்கு அந்த மோசடிகளினால் 100 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரவாக்கில் சைம்…

மந்திரி புசார் நடவடிக்கைக்கு ஒரு சபாஷ், தனியார் மயம் போக்கிரித்தனமாகி…

"தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவையைக் கூட அரசியல் மயமாக்க முடியும்- பிஎன் சேவகர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டதே அதற்குக் காரணம்."         சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள சிலாங்கூர் விருப்பம் அக்குவினாஸ்: மாநில அரசாங்கம் சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதை நான் ஆதரிக்கிறேன். வீடமைப்பாளர் என்ற…

எம்ஏசிசி: கையூட்டு தப்பில்லை எனத் தனியார் துறையில் சிலர் கருதுகிறார்கள்

தனியார் துறையில் சிலர் கையூட்டுக் கொடுப்பதை ஒரு குற்றமாகக் கருதவில்லை என்கிறார் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) உயர் அதிகாரி ஒருவர். அதனால்தான் ஊழல் பற்றிய புகார் செய்வதில் தனியார் துறையிடமிருந்து போதுமான ஆதரவு கிடைப்பதில்லை என்று அதன் துணைத் தலைமை ஆணையர் சுதினா சூட்டன்(வலம்) கூறினார். “அரசுத்துறையில்தான் ஊழலுக்காக…

தேர்தல் கொள்கை அறிக்கைகளை ஒலிபரப்புவதற்கான ஆர்டிஎம் வழிமுறைகள் ஆய்வு செய்யப்படுகின்றன

ஆர்டிஎம் எனப்படும் மலேசிய வானொலி தொலைக்காட்சி வழியாக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் கொள்கை அறிக்கைகளை ஒலிபரப்புவதற்கு அனுமதிப்பது தொடர்பான வழிமுறைகளையும் நிபந்தனைகளையும் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு பரிசீலித்து வருகின்றது. அந்தத் தகவலை இன்று தேவான் நெகாராவில் அதன் துணை அமைச்சர் ஜோசப் சாலாங் வெளியிட்டார். வழிமுறைகளுக்கும்…

இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு ரிம600 பக்காத்தான் வழங்கும்

பக்காத்தான் ரக்யாட்டில் உள்ள கட்சிகளின் மகளிர் பகுதிகள் மகளிருக்கான ‘புக்கு ஜிங்கா’ ஒன்றை வெளியிட்டுள்ளன.அதில், பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் மகளிர் மேம்பாட்டுக்காகக் கொண்டுவரப்படும் திட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மலேசிய மகளிர் திட்டம் (Agenda Wanita Malaysia ,AWM) என்று அழைக்கப்படும் அதைச் செயல்படுத்த ரிம5பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.…

கோலா டைமன்சி-யிடமிருந்து வெகுமதி பெறவில்லை என்கிறார் லிங்

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதித் திட்டத்துக்காக ஆயிரம் ஏக்கர் நிலம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பில் கோலா டைமன்சி சென் பெர்ஹாட்-டிடமிருந்து  (KDSB) எந்த வடிவத்திலும் வெகுமதி எதனையும் பெறவில்லை என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் கியாங் சிக் அத்துடன் தாம் KDSB-யின் பேச்சாளராக இருந்ததாகக்…

எரிசக்தி உடன்பாடு: சிடிக் புதல்வியின் நிறுவனம் கொழுத்த ஆதாயத்தைப் பெறும்

அரசாங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் சிடிக் ஹசானின் புதல்வியுடன் தொடர்புடையவை எனக் கூறப்படும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் சூரிய வெப்ப எரிசக்தி திட்டத்தின் வழி ஆண்டுக்கு 70 மில்லியன் ரிங்கிட்டைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த மதீப்பீட்டை டிஏபி-யின் பிரச்சாரப் பிரிவுத் தலைவரும் அதன் தலைமைப் பொருளாதார வல்லுநருமான டோனி…

சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள சிலாங்கூர் அரசாங்கம் விரும்புகிறது

சிலாங்கூரில் நீர் வள, விநியோகிப்புச் சலுகைகளைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனத்தின் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கான தனது உரிமையைப் பயன்படுத்தப் போவதாக மாநில மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை சபாஷ் அறிவித்துள்ள தண்ணீர் பங்கீட்டு நடவடிக்கைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களின் உண்மை நிலை குறித்து மாநில…

போலீஸ் பட்ஜெட்டில் தவறான துறைகளுக்கு முன்னுரிமை

எம்பி பேசுகிறார்: LIEW CHIN TONG கூட்டரசு வரவு-செலவுத் திட்டத்தில் 2010,2011,2012 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் அரசாங்கம் போலீசைக் குற்ற எதிர்ப்புக்குப் பயன்படுத்துவதைவிட ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு பயன்படுத்திக்கொண்டிருப்பதைதான் காண்பிக்கின்றன. குற்றவிகிதம் உச்சத்தில் இருக்கும் வேளையில் போலீசுக்கான பட்ஜெட்டில் எதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது பொருத்தமானதே.…

லத்தீப்பா கோயா பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்திலிருந்து ராஜினாமா

லத்தீப்பா கோயா பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற  (MBPJ) உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு மாநில ஆட்சிமன்றம் திட்டமிடுவதாக வதந்திகள் பரவி வரும் வேலையில் அவர் அந்தப் பதவியைத் துறந்துள்ளார். அந்த ஊகங்கள் பொது மக்களிடையே பரவத் தொடங்கி விட்டதால் தமது பதவியில்…

அம்னோ ஹுடுட் ஆதரவு, மசீச-வுக்கு இக்கட்டான சூழ்நிலை

அந்தக் கட்சி பண அரசியலில் மூழ்கியிருப்பதை ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது. பல ஊழல்களிலும் சிக்கியுள்ளது. இப்போது ஹுடுட் சட்டத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கின்றது. ஹுடுட் சட்ட அமலாக்கத்தை புத்ரி அம்னோ ஆதரிக்கிறது போத்தாக் சின்: இது குறித்து மசீச என்ன சொல்லப் போகிறது ? டிஏபி தலைவர் வெளிப்படையாக…