பூச்சோங்கில் புதிய மின்சுடலை; மக்கள் போராட்டத்திற்கு வெற்றி!

பூச்சோங் மயானத்தில் பல ஆண்டுகளாக இருந்த தகனம் செய்யும் வழிமுறைக்கு சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஒரு புதிய மின்சுடலையின் வழி தீர்வு கண்டுள்ளது. இன்று அந்த மின்சுடலையின் வளாகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சுபாங் ஜெயா நகராண்மைக் கழக தலைவர் அஸ்மாவி பின் கஸ்பி விளக்கமளித்தார். 2011…

மலேசியப் படைகளை எச்சரிக்க பிலிப்பினோ கும்பல் துப்பாக்கிச் சூடு

மூன்றாவது வாரமாக லஹாட் டத்துவில் பதுங்கியுள்ள பிலிப்பினோ கும்பல் ஒன்று 24 மணி நேரத்துக்கு முன்பு துப்பாக்கிச் சூடுகளைக் கிளப்பியதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறின. மலேசிய பாதுகாப்புப் படைகளை எச்சரிப்பதற்காக தாங்கள் அவ்வாறு சுட்டதாக பின்னர் அந்தக் கும்பலைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர். ஆறு மலேசிய வீரர்கள் லஹாட் டத்து…

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சீன வர்த்தகர்களுக்கு ‘மகிழ்ச்சி இல்லை’

மலேசியப் பொருளாதாரத்தின் நடப்பு நிலைமை குறித்து மலேசிய கூட்டு சீன வர்த்தக, தொழிலியல் சங்கத்தின் உறுப்பினர்களில் 75 விழுக்காட்டினர் மகிழ்ச்சி அடையவில்லை. இவ்வாண்டு ஜனவரி மாதமும் பிப்ரவரி மாதமும் அது நடத்திய ஒர் ஆய்வின் வழி அது தெரிய வந்துள்ளது. 2012 பிற்பகுதியில் மலேசியப் பொருளாதார நிலவரம் பற்றி…

‘இனி மீண்டும் அப்பறவை பூமிக்குத் திரும்பாது’ – பா.அ. சிவத்தின்…

இன்று காலை சாலை விபத்தொன்றில் மரணமடைந்த கவிஞர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரை எழுத்தாளர்,  செய்தி ஆசிரியர் திரு. பா.அ. சிவம் குறித்து நினைவலைகளைப் பகிர்வதில் பெரும் துயர் கொள்கின்றோம். செம்பருத்தி மாத இதழ் வெளிவந்த தொடக்க கால கட்டங்களில் சிவத்தின் படைப்புகள் வெளிவராத இதழ்கள் மிகக் குறைவு எனக் கூறலாம்.…

சான்று காட்டுங்கள்: பாலாவுக்கு பெர்காசா வலியுறுத்து

மலாய் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா, பக்காத்தான் ரக்யாட்டுக்குப் பரப்புரை செய்ய நாடு திரும்பியுள்ள தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மங்கோலியப் பெண் அல்டான்துயா ஷாரீபுவின் கொலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குத் தொடர்புண்டு என்று கூறுவதற்கு ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. பாலா ஆதாரம் காண்பிக்கத் தவறினால்,…

“விவேகக் கைத்தொலைபேசிகள் 13வது பொதுத் தேர்தலுக்கு பேராபத்து”

சாதாரண விவேகக் கைத்தொலைபேசிகளும் அவற்றின் சாதரணமான பயன்பாடுகளும் அதிகாரிகள் தயாராக இல்லா விட்டால் 13வது பொதுத் தேர்தலில் சிரமத்தை ஏற்படுத்தலாம் என மூத்த ஊடகவியலாளர் ஒருவர் கருதுகிறார். "வரும் தேர்தலில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் விவேகக் கைத் தொலைபேசிகளுடைய வலிமை மீது கவனம் செலுத்தா விட்டால் தேர்தல் சுமூகமாக இருக்காது," என…

அல்டான்துயாவுக்குப் பணம் கொடுக்காததை எண்ணி ரசாக் வருந்தினாராம் பாலா கூறுகிறார்

அல்டான்துயா கொலை தொடர்பில் கைது  செய்யப்படுவதற்குமுன் அவர் கொல்லப்பட்டதை எண்ணி அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா மனம் வருந்தியதாக தனியார் துப்பற்றிவாளர்  பி.பாலசுப்ரமணியம் கூறினார். “அல்டான்துயாவுக்கு சேவைக்கட்டணமாக (கமிஷன்) யுஎஸ்$500,000  நான் கொடுத்திருக்க வேண்டும்”, என்று கைது செய்யப்பட்ட நாளில் ரசாக் குறிப்பிட்டதாக பாலசுப்ரமணியம்  நினைவுகூர்ந்தார். ஐந்தாண்டுகளுக்குமுன்…

‘சபா கள்ளக் குடியேறிகளுக்காக நான் ஆயிரக்கணக்கான அடையாளக் கார்டுகளை வழங்கினேன்’

"1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பிபிஎஸ் மாநில அரசாங்கத்தை வீழ்த்துவதில் உதவுவதற்காக சபா கள்ளக் குடியேறிகளுக்கு ஆயிரக்கணக்கான அடையாளக் கார்டுகளை வழங்குவதில்" தாமும் தமது குழுவும் உதவி செய்ததாக முன்னாள் இசா கைதி ஒருவர் கூறிக் கொண்டுள்ளார். அடையாளக் கார்டு திட்டத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்ட  பின்னர் 1995ம் ஆண்டு இசா…

சிறிலங்காவிற்கு சவால் மிகுந்த களமாக மாறியுள்ள ஐ.நா மனித உரிமைப்…

ஜெனீவா- ஐ.நா மனித உரிமை பேரவை சிறிலங்காவிற்கு சாவால் மிகுந்த இராஜதந்திரக்களமாக மாறியுள்ள நிலையில், அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் கருத்துக்கள் பொய்கள் நிறைந்த வழமையான பல்லவியாகவே அமைந்திருந்ததென ஜெனீவாவில்உள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் கருத்து தெரிவித்துள்ளனர். ( VIDEO ) புதன்கிழமை மூன்றாம்நாள் அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைச்சர்…

அன்வார்: கிட் சியாங், ஹாடி இருவரும் துணைப் பிரதமராகலாம்

அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் வெற்றி பெற்றால் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்கும் துணைப் பிரதமர்களாக நியமிக்கப்படலாம் என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். மலேசியச் சட்டம் இரண்டு துணைப் பிரதமர் இருப்பதைத் தடுக்கவில்லை என்று…

உண்மை நிலை: இனவாத அரசியல் இன்னும் ஒழியவில்லை

'அம்னோ அந்த ஆட்டத்தை முடிந்த அளவுக்கு விளையாடி விட்டது. அதன் விளைவுகளை அனைவரும் எதிர்நோக்க வேண்டும்' தவணைக்காலம் முடிகிறது, பினாங்கு பக்காத்தான் கரங்களில் தொடர்ந்து இருக்குமா ? கொகிட்டோ எர்கோ சம்: வெற்றிகரமாக பக்காத்தான் ராக்யாட்டுக்கு அளிக்கும் வாக்கு மலாய் அதிகாரம் இழக்கப்படுவதற்கு வழி வகுக்கும் என்னும் எண்ணத்தை…

சிலாங்கூர் பிஎன் -னில் பிளவு இல்லை, நாங்கள் ஒரே குழு…

சிலாங்கூரில் பிஎன் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமை ஏற்றுள்ளது உட்பூசல் நிலவுவதற்கான அறிகுறி எனச் சொல்லப்படுவதை அந்த மாநில பிஎன் துணைத் தலைவர்  நோ  ஒமார் மறுத்துள்ளார். சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு சாத்தியமான வேட்பாளர்கள் எனக் கூறப்பட்டுள்ள- தமக்கும் பிஎன் சகாவான முகமட் ஜின்…

சட்ட விரோதமாகக் கூடிய குற்றச்சாட்டிலிருந்து தியான் சுவாவும் 13 பேரும்…

2007ம் ஆண்டு பெர்சே பேரணியின் போது சட்டவிரோதமான கூட்டத்தில் பங்கு கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மற்று 12 பேரை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. நீதிபதி ஜக்சித் சிங் பாந்த் சிங்…

பொதுத் தேர்தலில் போட்டியிட மஇகா இளைஞர் பிரிவு ஆதரவு தேடாது

13வது பொதுத் தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதற்கு ஆதரவு தேட மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டி மோகன் விரும்பவில்லை. வேட்பாளாராக தெரிவு செய்யப்படும் யாரையும் அவர் ஆதரிப்பார். இருந்தாலும் தாம் பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளாராக நிறுத்தப்பட வேண்டுமா இல்லையா  என்பதை முடிவு செய்யும் பொறுப்பை…

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை மீது ஹிண்ட்ராப் ‘மிகுந்த ஏமாற்றம்’…

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை மீது ஹிண்ட்ராப் 'மிகுந்த ஏமாற்றம்' தெரிவித்துள்ளது. அது மலேசிய இந்திய சமூகத்தின் நலன்களைப் புறக்கணித்து விட்டதாக அது கூறியது. "எங்கள் ஏமாற்றம் ஆழமானது, கவலை அளிக்கிறது- அதற்கு அது சொல்லியிருப்பது காரணமல்ல, மாறாக அது சொல்லாமல் விட்டது தான்." "பக்காத்தான் தனது வாக்குறுதிகளில்…

‘மாற்றரசுக் கட்சிகளில் பிகேஆர்தான் பெரிய கட்சியாக இருக்கும், டிஏபி அல்ல’

எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் பிஎன் தொடர்ந்து ஆட்சியில் இருக்குமானால் எதிர்தரப்பில் மிகப் பெரிய கட்சியாக பிகேஆர்தான் இருக்கும் என்கிறார் டிஏபி தேசிய விளம்பரப் பகுதித் தலைவர் டோனி புவா. பக்காத்தான் ரக்யாட்டில் டிஏபிதான் மிகப் பெரிய கட்சியாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மறுத்து அவர்…

BR1M பாரோ மன்னர்களின் செயலைப் போன்றதல்ல : பாத்வா மன்றம்

மத்திய அரசாங்கத்தின் 1மலேசியா மக்கள் உதவி (BR1M) எகிப்திய பாரோ மன்னர்களின் செயல்களைப் போன்றது என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறியுள்ளதை தேசிய பாத்வா மன்றம் மறுத்துள்ளது. பிரிமின்வழி அரசாங்கம் பொதுமக்களுக்கான கடமையைத்தான் செய்கிறது என்றும் அதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது என்றும் மன்றத் தலைவர் அப்துல்…

மஇகா இளைஞர் பிரிவு: ரித்துவான் தீ மீது உள்துறை அமைச்சு…

Universiti Pertahanan Nasional என்னும் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளர் ரித்துவான் தீ அண்மையில் எழுதிய ஒரு கட்டுரை இந்திய சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதாகக் கூறிக் கொண்ட மஇகா இளைஞர் பிரிவு அவருக்கு 'ஒரு பாடம்' கற்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. சினார் ஹரியானில் கடந்த வாரம்…

இந்திய மலேசியர்கள் யாருடைய ‘வைப்புத்தொகையும்’ அல்ல : எம். மனோகரன்

ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசுகிறார் ஒரு சுவாரசியமான, என்றும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதில், 13வது பொதுத் தேர்தலின் முடிவு குறித்து ஆருடம் கூறப்படாத நாளோ பொழுதோ இல்லை எனலாம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஒன்றைச் சொல்வது பிறகு பல்டி அடிப்பது என்றிருப்பதால் நிறைய ஆதரவை…

பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் முன்னாள் அம்னோ பொருளாளருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்

Fiscal Capital Sdn Bhd என்ற நிறுவனத்தின் வழியாக 60 பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் முன்னாள் அம்னோ தலைமைப் பொருளாளர் அப்துல் அஸிம் முகமட் ஜாபிடிக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றின் மீது ஆறு தொலைத் தொடர்பு switch-களை கொள்முதல் செய்ததில் ஏமாற்றியதாகவும் மோசடி செய்ததாகவும் ஆவணங்களைப் போலியாக தயாரித்தததாகவும் 12…

பிலிப்பினோ ஊடுருவல்காரர்கள் “தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்”

சபா கடலோரப் பகுதியில் இம்மாதத் தொடக்கத்திலிருந்து தாங்கள் ஆக்கிரமித்துள்ள கிராமத்திலிருந்து தங்களை வெளியேற்றுவதற்குப் படைபலத்தை மலேசியப் போலீசார் பயன்படுத்தினால் எதிர்த்துப் போராடப் போவதாக பிலிப்பினோ ஊடுருவல்காரர்கள் அறிவித்துள்ளனர். "நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம்," என சுலு சுல்தான் என தம்மை சுயமாகப் பிரகடனம் செய்து கொண்டுள்ள…

எப்படி காரியத்தைச் சாதிப்பது டாக்டர் மகாதீர் பாணி

"நீங்கள் பிரதமராக இருந்தாலும் சரி அல்லது பெட்ரோனாஸ் ஆலோசகராக இருந்தாலும் சரி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் திறந்த டெண்டர் வழியாக கிடைத்தால் தவிர பெட்ரோனாஸ் குத்தகைகளில் சம்பந்தப்படவே கூடாது" டாக்டர் மகாதீர்: என் புதல்வருடைய பெட்ரோனாஸ் குத்தகைகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை மிலோசெவிக்: மலேசிய அரசியலில் மய்யமாக அவர் இருந்த…

அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு பிடிஎன்…

பிடிஎன் என அழைக்கப்படும் தேசிய குடியியல் பிரிவு வழங்கும் சர்ச்சைக்குரிய பயிற்சிகளை அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்ற உறுப்பினர் துன் பைசால் இஸ்மாயில் அஜிஸ் ஆதரித்துள்ளார். 1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாங்கள் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற போது அரசாங்கக் கொள்கைகளை தாமும் தமது சகாக்களும்…