சம்பந்தப்பட்ட தம்பதியினர் அந்தக்கொலையில் ஈடுபட்டிருந்ததை சூழ்நிலை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹெங் ஹியூ லின் (Heng Heow Lin) கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொள்ளும்போது, 2023-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் சியாவ் பெய் சி (Seow Pei Chie) மற்றும்…
நஜிப்: நாட்டின் கட்டமைப்பு வசதிகள் பிஎன் ஏற்படுத்தியவை
இந்த நாட்டில் அனைத்து பெரிய கட்டமைப்பு வசதிகளும் கடந்த காலத்தில் பிஎன் ஏற்படுத்தியவை என்பதை பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொது மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். மே 5ம் தேதி வாக்களிப்பதற்கு முன்னர் மக்கள் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும். "கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA)…
முக்ரிஸ்: பாஸ் முஸ்லிம் அல்லாத வேட்பாளரை நிறுத்துவது பெரிய விஷயமல்ல
"13வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி தனது வேட்பாளர்களாக முஸ்லிம் அல்லாத தனிநபர்களை நிறுத்தும் வியூகம் பிஎன் -னுக்கு பெரிய மருட்டல் அல்ல." இவ்வாறு கெடா அம்னோ தொடர்புக் குழுத் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர் சொல்கிறார். மலாய் வேட்பாளர்களை நிறுத்துவது என தனது தோழமைக் கட்சியான டிஏபி…
கிட் சியாங்: டாக்டர் மகாதீர் மீது தேச நிந்தனை, அவதூறு…
டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக தமது வலைப்பதிவில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது தேச நிந்தனை, கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டை சுமத்துவதற்குச் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லுக்கு 'வாய்ப்பு' கொடுக்கப்பட வேண்டும் என லிம் கிட்…
பிரதமர் சீக்கியர்களுக்கு 4 மில்லியன் ரிங்கிட் வழங்கினார்
வைசாகி கொண்டாட்டங்களை ஒட்டி பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 10 சீக்கிய அமைப்புக்களுக்கு மொத்தம் 3.84 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளார். பாயான் பாரு, சுபாங், ஷா அலாம் ஆகியவற்றில் புதிய குருத்துவாரைக் கட்டுவது, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள குருத்துவாரை விரிவுபடுத்துவது ஆகியவை அந்த ஒதுக்கீடுகளுக்கான…
ஆர்ஓஎஸ், டிஏபி மீதான விசாரணையைத் தேர்தலுக்குப் பின்னர் தள்ளிவைத்தது
சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கடந்த ஆண்டின் டிஏபி கட்சித் தேர்தல் மீதான விசாரணையை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தள்ளிவைத்துள்ளது என டிஏபி தேசிய ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் அந்தோனி லோக் இன்று தெரிவித்தார். “நாங்கள்தாம் அவ்வாறு (விசாரணையைப் பொதுத் தேர்தலுக்குப்பின்னர்) வைத்துக்கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டோம்”, என்று லோக் கூறியதாக சின்…
மந்திரி புசார் பதவி இரண்டு தவணைக்கு மட்டுமே- ஜோகூர் பக்காத்தான்…
ஜோகூரில் மந்திரி புசாராக இருப்பவர் இரண்டு தவணைகளுக்கு மட்டுமே அப்பதவி வகிப்பார் என்று பக்காத்தான் ரக்யாட் உறுதியளித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மாநில தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்த உறுதிமொழி தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜோகூர் மாஜு டான் பெர்கபாஜிகான் (Johor Maju dan Berkebajikan) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அவ்வறிக்கை, பக்காத்தான்…
நுருல் இஸ்ஸா நிகழ்வில் பெர்சே அம்பிகா
வாக்காளர் பட்டியல் குறைபாடு போன்ற கவலைகள் இருந்தாலும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா, எப்படியோ முயன்று பெர்சே அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை தம் கூட்டம் ஒன்றுக்கு அழைத்து வந்திருந்தார். நேற்றிரவு பங்சாரில் ஒரு சிறிய இடத்தில் அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 400 பேர் இடித்துப்…
2000 ஏக்கர் நிலம் எங்கே? குலா மீண்டும் கேட்கிறார்
-எம். குலசேகரன், ஏப்ரல் 13, 2013. மீண்டும் மீண்டும் நான் கேட்டுக்கொண்டே இருக்கும் கேள்விதான் இது. இருந்தாலும் பிரச்சனை தீராதவரையில் பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான நான் கேட்கவேண்டும் என்ற கட்டாயத்தில் கேட்கிறேன். 8 மாதம் ஆட்சியில் இருந்த பாக்கதான் கட்சியைப் பார்த்து நீங்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை…
விஜய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 14, 2013. இந்நாட்டு இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய விஜய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்விஜய சித்திரைப் புத்தாண்டு, இந்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெற்றியை அளிக்க வேண்டும். நாட்டில் செல்வங்களின் சீரழிவை தடுக்க வேண்டும். ஊக்கமுடன் ஒற்றுமையும், புரிந்துணர்வும்…
நாட்டில் வறுமையும் இல்லாமையும் அதிகரித்தால் அமைதி நிலவாது: அதற்கு பக்கத்தான்…
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 13, 2013 ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சில மாநிலங்களில் சிறிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு எவ்வளவு நேர்மையாக, உண்மையாக மக்களுக்குச் சேவையாற்ற முடியுமோ அதைச் செய்தோம். குறிப்பாக, சிலாங்கூர் மக்களுக்கு 5 ஆண்டுகள் சேவையாற்ற…
தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை ஹிண்ட்ராப் இன்னும் முடிவு செய்யவில்லை
13வது பொதுத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு இன்னும் முடிவு செய்யவில்லை. ஏனெனில் மலேசிய இந்திய ஏழைகளை உயர்த்துவதற்கு தான் வழங்கிய பெருந்திட்டத்துக்கு பிஎன், பக்காத்தான் ராக்யாட் அங்கீகாரத்துக்காக அவற்றுடன் ஹிண்டராப் இன்னும் பேச்சு நடத்திக் கொண்டிருப்பதாக அதன் தேசிய…
வேட்பாளர் நியமன நாளுக்கு இரண்டு நாள் முன்னதாக ஆர்ஒஎஸ் டிஏபி…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பினாங்கில் நடைபெற்ற டிஏபி கட்சியின் மூவாண்டுப் பேரவையில் மத்திய நிர்வாகக் குழுத் தேர்தல்களின் போது நிகழ்ந்த நிர்வாகக் குளறுபடி தொடர்பில் செய்யப்பட்டுள்ள புகார்கள் மீதான விசாரணையில் கலந்து கொள்ளுமாறு ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் டிஏபி-யைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதியிடப்பட்ட…
ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் கிறிஸ்துவர்கள் அதிருப்தி
தேர்தல் ஆணையம் மே 5 ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பை வைத்திருப்பதை கண்டித்த சரவாக் கிறிஸ்துவர்கள், தேர்தல் ஆணையம் தங்களைக் கவனத்தில் கொள்ளவில்லைபோல் தெரிகிறது என்று குறைபட்டுக்கொண்டனர். மலேசியா பல இனங்களையும் சமயங்களையும் கொண்ட நாடு என்பதையும் இங்கு மக்கள்தொகையில் சுமார் 10 விழுக்காட்டினர் கிறிஸ்துவர்கள் என்பதையும் ஆணையம் மறந்ததுபோலும் என்றவர்கள்…
BR1M பெற்றவர்களுக்கு பிஎன் தலைவர் நஜிப் கடிதம் அனுப்பியுள்ளார்
BR1M என்ற ஒரே மலேசியா உதவித் தொகை (BR1M) பெற்றவர்களுக்கு பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று அவர்களுக்கு அந்தக் கடிதங்கள் கிடைத்தன. "BR1M, அரசாங்கத்தின் அக்கறையைக் காட்டுகின்றது. உங்கள் நல்வாழ்வை உறுதி செய்ய வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் முயற்சியே அதுவாகும்." "வரும்…
பாஸ், ஆயர் ஈத்தாமில் முஸ்லிம்-அல்லாத ஒருவரைக் களமிறக்குகிறது
பாஸின் ஆயர் ஈத்தாம் வேட்பாளராக பாஸ் ஆதரவாளர் காங்கிரஸ் (பிஎஸ்சி) தலைவர் ஹு பாங் செள அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த இஸ்லாமிய கட்சியின் வேட்பாளராக முஸ்லிம்-அல்லாத ஒருவர் களமிறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் இன்று காலை ஜோகூர் பாருவில் அந்த அறிவிப்பைச்…
பெர்சே: தேர்தலில் அமைதிகாக்கும் உறுதிமொழியா, அதற்கு வேறு இடம் செல்லுங்கள்
வரும் தேர்தலில் அமைதிகாக்க உறுதிகூறும் ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும் என்று முன்னாள் டிஏபி உதவித் தலைவர் துங்கு அசிஸ் இப்ராகிம் விடுத்துள்ள கோரிக்கையை பெர்சே இயக்கக்குழு நிராகரித்துள்ளது. ஏனென்றால், தேர்தல்கள் அமைதியாக நடப்பதைத்தான் பெர்சே என்றுமே வலியுறுத்தி வந்திருக்கிறது என்று அக்குழு கூறிற்று. எனவே, துங்கு அசிஸ் தேர்தலில்…
செக்ஸ் வீடியோ கறை படிந்த பிஎன் பிரச்சாரத்தின் தொடக்கம்
"அது உண்மையாக இருந்தாலும் எந்தத் தாக்கமும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் பல முறை அந்தத் 'தந்திரத்தை' பயன்படுத்தி விட்டார்கள்" இன்னொரு செக்ஸ் வீடியோ இந்த முறை ஒரு பாஸ் தலைவர் எனக் கூறப்பட்டது அடையாளம் இல்லாதவன்#36465711: அம்னோவுக்கு எதுவும் விளங்கவே இல்லை. அது தொடர்ந்து செக்ஸ் வீடியோக்களை…
போலீஸ்: பொதுத் தேர்தலின் போது சொஸ்மா தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது
13வது பொதுத் தேர்தலில் சொஸ்மா என அழைக்கப்படும் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது எனப் போலீஸ் உறுதியளித்துள்ளது. பிரச்சாரத்தின் போது தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்துகின்றவர்கள் மீது மட்டுமே அந்தப் புதிய சட்டம் பயன்படுத்தப்படும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் செயலகத்தை…
‘அது அம்னோவின் அப்பட்டமான அவதூறு’ என்கிறார் முஸ்தாபாவின் வழக்குரைஞர்
பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் அஸ்முனி அவி, அந்த செக்ஸ் வீடியோவில் காணப்படும் மனிதர் தமது கட்சிக்காரர் எனக் கூறப்படுவதை மறுத்துள்ளார். முஸ்தாபா தம்மை அவரது பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் அவர் சொன்னார். அவர் அவி அண்ட் கோ என்னும் வழக்குரைஞர் நிறுவனத்துக்குத் தலைமை தாங்குகிறார்.…
சிலாங்கூர் மந்திரி புசார் : பெர்சே முதலில் ‘உண்மைகளை அறிந்து…
சிலாங்கூர் பராமரிப்பு அரசாங்கம் என்ற முறையில் மாநில நிர்வாகம் மீது 'சந்தேகம்' கொள்வதற்கு முன்னர் பெர்சே உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என அதன் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கேட்டுக் கொண்டிருக்கிறார். காலித்-தின் பராமரிப்பு அரசாங்கம் பல விதிமுறைகளை மீறியுள்ளதாகக் கூறி 'பெயர் குறிப்பிட்டு அவமானப்படுத்தும்"…
செக்ஸ் வீடியோவுடன் தனக்கு தொடர்பு இல்லை என்கிறது பிகேஆர்
அண்மையில் வெளியான செக்ஸ் வீடியோவுடன் பிகேஆர் உறுப்பினர்களை பல வலைப் பதிவாளர்கள் தொடர்புபடுத்தி எழுதியிருப்பது அபத்தமானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என பிகேஆர் இன்று வருணித்துள்ளது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட கிரிமினல் ஒருவர் (வலைப்பதிவாளர் பாப்பாகோமோ) அந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் சொன்னார். அத்தகைய…
செனபோன் மலேசியாவுக்குள் நுழைய சட்ட நடவடிக்கை எடுக்கிறார்
மலேசியாவுக்குள் தாம் நுழைவதற்கு மறுப்புத் தெரிவிக்கும் குடி நுழைவுத் துறை நோட்டீசை ரத்துச் செய்து நாட்டுக்குள் நுழைய அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளும் நீதித் துறை மறு ஆய்வு விண்ணப்பத்தை ஆஸ்திரேலிய சுயேச்சை செனட்டர் நிக் செனபோன் தாக்கல் செய்துள்ளார். அவரது வழக்குரைஞர் ரஞ்சித் சிங் வழியாக அந்த விண்ணப்பம்…
சுங்கை சிப்புட்டில் சாமிவேலு சாதிப்பாரா?
தேர்தல் கண்ணோட்டம் : மஇகா முன்னாள் தலைவர் ச.சாமிவேலு, கடந்த பொதுத் தேர்தலில் கைமாறிப்போன சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை பிஎன்னுக்கு மீட்டுத்தர முடியும் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். இதற்காகவே கடந்த சில மாதங்களாக அதையே தம் படை வீடாக்கிக் கொண்டிருக்கிறார். நேற்று மலேசியாகினியுடன் தொலைபேசிவழி உரையாடிய…


