கோ சூ கூன்: மலாய்க்காரர்கள் தேர்வு செய்யப்படாதது மலேசிய உணர்வுக்கு…

டிஏபி கட்சித் தேர்தலில் மத்திய நிர்வாகக் குழுவுக்கு மலாய்க்காரர்கள் தேர்வு செய்யப்படாதது மலேசிய உணர்வுக்கு முரணானதுஎன கெரக்கான் தலைவர் கோ சூ கூன் வருணித்துள்ளார். நேற்றைய தேர்தல் டிஏபி நிலையைக் காட்டி விட்டதாக பிரதமர் துறை அமைச்சருமான அவர் சொன்னார். "அது ஆளும் கூட்டணி பின்பற்றுகின்ற, அனைத்து மக்களுடைய…

கர்பால் டிஏபி தலைவராகவும் லிம் குவான் எங் தலைமைச் செயலாளராகவும்…

எதிர்பார்க்கப்பட்டது போல டிஏபி மத்திய நிர்வாகக் குழு கர்பால் சிங்-கைத் தொடர்ந்து கட்சித் தலைவராகவும் லின் குவான் எங்-கை  தலைமைச் செயலாளராகவும் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து அந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 20 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களில் மூவரைத்…

‘கன்னத்தில் அறையப்பட்டது மீது நடவடிக்கை எடுக்க இன்னும் எவ்வளவு காலம்…

"இத்தகைய சம்பவங்கள் மீது உடனடியாக தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். அப்போது தான் மற்ற ஆசிரியர்கள் சட்டத்தை மீறுவதற்கு அஞ்சுவர். பெற்றோர்களுக்கு மீண்டும் பணம் கொடுக்க யாரும் முயலாமல் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்." வீ: ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரம் மாநிலக் கல்வித் துறைக்கு…

பாஸ் புத்ராஜெயாவைக் கைப்பற்ற பிஎன் குளறுபடிகளை நம்பியிருக்கவில்லை

அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்குப் போதுமான சொந்த வலிமையை பாஸ் கட்சி பெற்றுள்ளது. அது பிஎன் -னில் காணப்படும் பலவீனங்களையும் உட்பூசல்களையும் நம்பியிருக்கவில்லை என அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். திரங்கானு, டுங்குனுக்கு அருகில் டாத்தாரான் பாக்கா-வில் பேரணி ஒன்றை பாஸ் ஆன்மீகத் தலைவர்…

உங்கள் கருத்து: தீபக் சொல்லிய குற்றச்சாட்டுக்களை போலீஸ் விசாரிக்குமா ?

"திட்டங்களைப் பெறுவதற்காக நஜிப்புக்கும் அவரது குடும்பத்துக்கும் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டதற்காகவும் தீபக் மீது எம்ஏசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்." தீபக்-கிற்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது பார்டிமாவ்ஸ்2020: டிஏபி தலைவர் கர்பால் சிங் மிக முக்கியத்துவம் வாய்ந்த சட்ட சித்தாந்தத்தை நிலை நிறுத்த முயலுகிறார் என்பது நிச்சயம்.…

டிஎபி தேர்தல்: முதல் இடத்தில் கிட் சியாங்

இன்று பினாங்கில் நடைபெற்ற டிஎபி கட்சியின் புதிய மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு தேர்வில் கட்சியின் ஆலோசகரான  லிம் கிட் சியாங் 1,606 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். அடுத்து, பினாங்கு மாநில முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான லின் குவான் எங் 1,576 வாக்குகளைப் பெற்று இரண்டாவது…

‘தீபக் மீது போலீசில் புகார் செய்யப்படும்’

கம்பள வணிகரான தீபக் ஜெய்கிஷன், குற்றம் பற்றி அறிந்திருந்தும் அதனைச் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தவறி விட்டதாக பினாங்கில் அவர் மீது போலீசில் புகார் செய்யப்படும். "ஒரு கொலை பற்றி அவருக்கு தெரிந்துள்ளது. ஆனால் அது பற்றி புகார் செய்யவில்லை. அதனால் அவர் சட்டத்தின் கீழ் குற்றம்…

‘தீபக் கூறிய விஷயங்கள் அல்தான்துயா வழக்கை மீண்டும் திறப்பதை அவசியமாக்கியுள்ளது’

கம்பள வணிகரான தீபக் ஜெய்கிஷன் வெளியிட்டுள்ள தகவல்களைத் தொடர்ந்து மங்கோலிய மாது அல்தான்துயா கொலை வழக்கு மீதான விசாரணையை மீண்டும் தொடங்குமாறு பிகேஆர் ஆதரவு பெற்ற புக்கு ஜிங்கா என்ற அரசு சாரா அமைப்பு  சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் தரப்புக்களைச் சுட்டிக்காட்டி தீபக் அண்மையில் விடுத்துள்ள அறிக்கை…

ஐந்து வேட்பாளர்கள் விலகினர் 1,823 பேர் வாக்களித்தனர்

பினாங்கில் நிகழும் டிஏபி-யின் 16வது பேரவையில் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவுக்கான தேர்தலிலிருந்து ஐந்து வேட்பாளர்கள் விலகிக் கொண்டனர். மொத்தம் 1,823 பேராளர்கள் வாக்களித்தனர். சூங் சியூ ஒன், ஜெயபாலன் வள்ளியப்பன், தியோ கோக் சியோங், வயலட் யோங் வூய் வூய், எர் தெக் ஹுவா ஆகியோர் அந்த…

கொண்டோ சர்ச்சை: லியு மீது கமலநாதன் ரிம1 மில்லியன் வழக்கு

பத்து மலை கொண்டோமினிய விவகாரத்தில் தம்மைப் பற்றி சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு தெரிவித்த கருத்துகளுக்காக அவரிடம் ரிம1 மில்லியன் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் ஹுலு சிலாங்கூர் எம்பி பி.கமலநாதன். மஇகா புத்ரா தலைவரான கமலநாதன், நேற்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்தார். கமலநாதன்…

பெர்க்காசா: 13வது பொதுத் தேர்தலில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு…

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு மலாய் உரிமை நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா ஆதரவு தெரிவித்துள்ளது நாட்டை ஆளும் கூட்டணி அந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று வலுவான அரசாங்கத்தை அமைக்க பெர்க்காசா உதவும் என அதன் தலைவர் இப்ராஹிம் அலி இன்று வாக்குறுதி அளித்தார்.…

அன்வார் பிரதமராவதை ஆதரிக்கும் கர்பால், பாஸ் முக்கியமான நண்பன் என்றார்

டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங், பக்காத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடன் பினாங்கில் டிஏபி-இன் 16வது தேசியப் பேரவைக்கூட்டத்துக்கு வந்திருக்கிறார் என்று தெரிகிறது. பேரவையைத் தொடக்கிவைத்து உரையாற்றிய அவர், 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், பிகேஆர்…

உத்துசானுக்குப் பாடம் கற்பிக்க ரிம70 ஆயிரம் தண்டம் போதாது

உங்கள் கருத்து: “இப்படிப்பட்ட அபத்தங்களைச் செய்தால் உத்துசானின் பிரசுர உரிமம் பறிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருக்க வேண்டும்”. கர்பாலுக்கு இழப்பீடாக ரிம70ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு உத்தரவு விஜய்47: மாற்றரசுக் கட்சியினர் பலர்மீது அவதூறு கூறி அதற்காக தண்டமும் கட்டியுள்ளது உத்துசான் மலேசியா என்பது உண்மைதான். ஆனால், அதற்கெல்லாம்…

மசீச-வும் கெரக்கானும் சந்தர்ப்பவாதிகள் எனக் குலசேகரன் சாடுகிறார்

கிளந்தானில் அண்மையில் எழுந்துள்ள ஆண்-பெண் பிரிவினை, கல்வாத் பிரச்னைகளுக்கு டிஏபி  மீது கண்டனங்களைத் தொடுத்துள்ள மசீச-வும் கெரக்கானும்  'எங்கள் கொல்லைகள் மீது குப்பைகளை எறிவதற்கு முன்னர் தங்கள் கொல்லைப் புறத்தைக் கவனிக்க வேண்டும்' என டிஏபி உதவித் தலைவர் எம் குலசேகரன் சாடியுள்ளார். 2003ம் ஆண்டு ஈப்போவில் இஸ்லாமியச்…

மாணவர்கள் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்யலாம் என்கிறார் ஒர் அமைச்சர்

பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வெளியில் அரசியல் நடவடிக்கைகளில் சேர்ந்து கொள்ளலாம். பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பதும் அவற்றுள் அடங்கும். அந்தத் தகவலை உயர் கல்வி அமைச்சர் முகமட் காலித் நோர்டின் நேற்றிரவு வெளியிட்டார். 1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லுரிச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மாணவர்கள் அரசியல் கட்சிகளில்…

‘தீபக் வெளியிட்ட தகவல்கள் மீது ஏன் ஆழ்ந்த மௌனம் ?’

"இது பிஎன் அரசாங்கத்தையே கேலிக் கூத்தாக்குகிறது. மற்ற நாடுகளில் இது போன்ற தகவல்கள் வெளியானால் விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டிருக்கும்" பாலாவுக்கான ரொக்கத்தை பிரதமரது சகோதரர் கொடுத்தார் என தீபக் கூறிக் கொள்கிறார் மஹாஷித்லா: அந்த மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு ஸ்கார்ப்பின் ஊழலில் தமக்குச் சேர வேண்டிய நியாயமான…

டிஏபி: ‘லைனாஸைக் காட்டிலும் அமைச்சரவை பொய் சொல்லும் சாத்தியமே நிறைய…

லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்புக் கூடத்திலிருந்து கழிவுப் பொருளை லைனாஸ் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவை மீது அமைச்சரவையும் லைனாஸும் விடுத்துள்ள முரண்பாடான அறிக்கைகள் தொடர்பில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கும் கருத்துத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையே பொய் சொல்லியிருக்க வேண்டும் என்றும்…

லைனாஸ் மீதான முரண்பாடான அறிக்கைகளுக்கு லியாவ் விளக்கம் தரவில்லை

லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு  கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுகள் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். என்றாலும் தற்காலிக நடவடிக்கை அனுமதியில் கழிவுகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது ஒரு நிபந்தனை அல்ல என அந்த ஆஸ்திரேலிய…

வீ: ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரம் மாநில…

கடந்த அக்டோபர் மாதம் துவா சொல்லாததற்காக கன்னத்தில் அறையப்பட்ட மூன்று ஒராங் அஸ்லி பிள்ளைகள் விவகாரம் கிளந்தான் மாநிலக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் இன்று தெரிவித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 23ம் தேதி நிகழ்ந்த அந்தச் சம்பவம் மீது ஏற்பட்டுள்ள முன்னேற்றம்…

டிஏபி பேராளர்கள் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களை அழியாத மையுடன்…

பினாங்கில் நாளை தொடங்கும் டிஏபி தேசியப் பேரவையில் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் வாக்களிப்பில் கலந்து கொள்ளும் பேராளர்கள் அழியாத மை பற்றி நேரடி அனுபவத்தைப் பெறுவார்கள். அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய 13வது பொதுத் தேர்தலுக்கு கட்சி உறுப்பினர்களை தயார்…

அனைத்து ஊடகங்களும் டிஏபி பேரவைக்கு வரவேற்கப்படுகின்றன

பினாங்கில் இந்த வார இறுதியில் நிகழும் 16வது மூவாண்டு டிஏபி பேரவையில் செய்திகளைச் சேகரிக்க எல்லா ஊடகங்களும் -நாளேடுகள் மாற்று ஊடகங்கள்- அனுமதிக்கப்படும். கட்சியின் புதிய மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் உட்பட அனைத்து நிகழ்வுகள் பற்றி எந்த ஊடகமும் செய்திகளை சேகரிக்கலாம் என அதன் தலைமைச்…

பக்காத்தான்: குற்றச்சாட்டுகள் தொடர்பில் நஜிப் தொடர்ந்து மெளனமாக இருக்கக்கூடாது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வணிகரான தீபக் ஜெய்கிஷன் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதில் அளித்து தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர், மலிவான அரசியல் விளம்பரம் தேடும் முயற்சிகளைக் கைவிட்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டும் என்று…

கர்பாலுக்கு ரிம50 ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு நீதிமன்றம் உத்தரவு

அம்னோவுக்குச் சொந்தமான நாளேடான உத்துசான் மலேசியா, அவதூறு வழக்கு ஒன்றில் குற்றவாளியென தீர்மானிக்கப்பட்டு டிஏபி தலைவர் கர்பால் சிங்குக்கு இழப்பீடாகவும் செலவுத்தொகையாகவும் ரிம70,000 கொடுக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நான்கு ஆண்டுகளுக்குமுன், பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலுக்கு முந்திய நாள், கர்பால் அங்கு செல்லவில்லை…