கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
கடந்த 11 நாட்களில் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த மூன்றாவது…
பொறியிலாளர் பி கருணாநிதி கடந்த இரண்டு வாரங்களில் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த மூன்றாவது நபர் ஆவார். அவரது மரணம் பற்றி நேற்றிரவு தம்பினில் உள்ள அவரது குடும்பத்தாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. நேற்றிரவு மணி 9.45 வாக்கில் தொலைபேசி வழி அந்தத் தகவல் கருணாநிதி குடும்பத்துக்கு தெரிவிக்கப்பட்டது என…
டிஏபி : தர்மேந்திரனைப் பற்றி ஸாஹிட்டுக்கும் IGP-க்கும் கவலை இல்லை
தர்மேந்திரன் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்ததில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் போலீஸ்காரர்களை இடைநீக்கம் செய்வது போலீஸ் படையின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் எனக் கூறியதின் மூலம் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி 'மனித நேயமற்ற பொறுப்பற்ற' போக்கைக் காட்டியுள்ளதாக டிஏபி சொல்கிறது. அத்தகைய இரக்கமற்ற கருத்துக்கள் ஸாஹிட் உள்துறை…
நஜிப்: இசி நாடாளுமன்றத்தின் கீழ் வைக்கப்படும்
இப்போது பிரதமர் துறையின் பார்வையில் இயங்கும் இசி என்ற தேர்தல் ஆணையத்தை நாடாளுமன்றத்தின் கீழ் வைப்பதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்துள்ளார். "அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இசி-யின் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட மாட்டாது. அத்துடன் இசி மீதான மக்கள் நம்பிக்கையும் வலுப்படுத்தப்படும்,"…
போலீஸ்காரர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்: தர்மேந்திரன் மனைவி
போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த தர்மேந்திரனின் மரணத்துடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் போலீஸ்காரர்கள் இன்னும் இடைநீக்கம் செய்யப்படாதது குறித்து தர்மேந்திரனுடைய மனைவி ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என அவர் கோரினார். "அவர்கள் என் கணவரைக் கொலை செய்துள்ளனர். அவர்கள் லாக்கப்பில் இருக்க…
உதயகுமார் இந்தியர்களுக்காக சிறை செல்லத் தயார்
இண்ட்ராப் நிறுவனர் பி.உதயகுமார், இந்தியர் நலனுக்காக சிறை செல்லவும் தயார் என்று அறிவித்துள்ளார். சட்டமுறையில் நியாயம் கிடைக்கும் என்பதில் அவருக்கு நம்பிக்கை போய் விட்டது. கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்கு எதிராக தாம் எதிர்வாதம் செய்யப்போவதில்லை என்றாரவர். நீதிமன்றம் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்க போதுமான…
தப்பாக எடுத்துரைக்கப்பட்டது என்கிறார் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர்
குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட், கறுப்புப் பட்டியலிடப்பட்ட மலேசியர்களின் கடப்பிதழ்கள் 1959/63 குடிநுழைவுச் சட்டம் பிரிவு 8 அல்லது கடப்பிதழ் சட்டப்படி இரத்துச் செய்யப்படும் என்று தாம் கூறியதாக வந்துள்ள செய்தியை மறுக்கிறார். மலேசியாகினியிடம் பேசிய அலியாஸ், மலாய்மொழி நாளேடான பெரித்தா ஹரியான் தாம் கூறியதைத்…
பாஸ்போர்ட் விவகாரம் மீது தலைமை இயக்குநரைச் சந்திக்க பெர்சே விரும்புகின்றது
வெளிநாடுகளில் நாட்டின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதற்காக 6564 மலேசியர்களுடைய பாஸ்போர்ட்டுக்கள் ரத்துச் செய்யப்படும் என குடிநுழைவு தலைமை இயக்குநர் அலியாஸ் அகமட் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் அவரைச் சந்திக்க பெர்சே விரும்புகின்றது. அதற்காக அவருக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்றை பெர்சே அனுப்பும் என்று அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன்…
நஜிப்: கட்சிப் பதவிக்கான சவாலை எதிர்நோக்கத் தயார்
எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தல்களில் தமது பதவிக்கு விடுக்கப்படும் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கோடி காட்டியுள்ளார். "நல்லது, அம்னோ ஜனநாயகக் கட்சி. ஆகவே எனக்குத் தெரியாது. மற்ற கட்சிகளைப் போல அல்லாமல் அம்னோ திறந்த கட்சி என்பதை நாம் ஒப்புக்…
‘அலியாஸ் அவர்களே தயவு செய்து பாஸ்போர்ட் சட்டத்தைப் படியுங்கள்’
உங்கள் கருத்து : 'அகோங்/அல்லது மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுகின்றவர்களுக்கு மட்டுமே தேச நிந்தனைச் சட்டம் பொருந்தும்' வெளிநாடுகளில் 'நாட்டின் தோற்றத்துக்கு' களங்கம் விளைவிக்கின்றவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர். சோபிமோர்: முதலாவதாக வெளிநாடுகளில் பேரணிகளில் கலந்து கொண்டதற்காக மலேசிய பிரஜை ஒருவருடைய பாஸ்போர்ட்டை குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர்…
ஸாஹிட் பதவி துறக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை
உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி பதவி துறக்க வேண்டும் எனக் கோரி உள்துறை அமைச்சுக்கு வெளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் நோக்கத்துடன் அண்மைய காலமாக அரசியல்வாதிகளும் சமூகப் போராளிகளும் கைது செய்யப்பட்டதாக கூறிக் கொண்டு அதற்காக ஸாஹிட் பதவி விலக வேண்டும் என…
நுருல்: அன்வார், கிட் சியாங் ஆகியோரும் சாபா கறுப்புப் பட்டியலில்…
லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், சாபா குடிநுழைவுத்துறையின் கறுப்புப் பட்டிலில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் ஆகீயோரின் பெயர்களும் இருக்கும் என நம்புகிறார். நேற்றிரவு கோட்டா கினாபாலு விமான நிலையத்தில் தம்மைத் தடுத்து நிறுத்திய குடிநுழைவுத்…
ஆர்ஒஎஸ் இயக்குநர் ‘பொய்யர்’ என டிஏபி வருணனை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தல்கள் மீதான தனது விசாரணைகள் தொடர்பில் கட்சிக்கு எதிராக 'விருப்பம் போல் குற்றச்சாட்டுக்களை' அடுக்கும் 'பொய்யர்' என டிஏபி ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலக இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மானை வருணித்துள்ளது. விசாரணைகள் நிறைவு பெறுவதற்கு முன்னரே அந்தப்…
இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வேதா யோசனையை ஸாஹிட் ஒப்புக்…
போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பில் விசாரிக்கப்படும் போலீஸ் அதிகாரிகள் படையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி தெரிவித்த யோசனையை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி ஒப்புக் கொள்கிறார். "அந்தக் கருத்து நியாயமானது என நான் நினைக்கிறேன்," என காஜாங்கில் இன்று…
பலிகடா ஆக்கப்பட்டதாகக் கூறிக்கொள்கிறார் கீர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசாங்கம் கைச்சுத்தமானது எனக் காண்பித்துக்கொள்ள தாம் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ. அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 12-மாதச் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியதை அடுத்து இன்று தம் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருந்த கீர், கூட்டரசு…
சாப்வான் இரண்டு நாட்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் விடுதலை
மாணவர் போராளி முகமட் சாப்வான் அனாங், 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகை செலுத்திய பின்னர் இன்று விடுவிக்கப்பட்டதாக அவரது மனைவி மஸ்துரா அபு பாக்கார் தெரிவித்துள்ளார். இன்று காலை மணி 10.30 வாக்கில் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் சாப்வானை அவரது இளைய சகோதரர் ஜாமீனில் எடுத்ததாக மஸ்துரா…
சிஇசி தேர்தல் குறித்து டிஏபி உறுப்பினர் பலருக்குத் தெரிவிக்கப்படவில்லை
கடந்த ஆண்டு டிசம்பர் 15-இல் நடைபெற்ற டிஏபி தேசிய காங்கிரசில் கலந்துகொள்ள தகுதிபெற்ற உறுப்பினர்கள் பலருக்குக் கூட்டம் பற்றித் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இது சங்கப் பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்) அலுவலகம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாக ஆர்ஓஎஸ் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் கூறினார். கூட்டம் பற்றிய அறிவிக்கைகளைப்…
குற்றச்செயல்களைத் தடுக்க மோட்டார்சைக்கிள்-அற்ற பகுதிகள்
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நகரங்களில் மோட்டார்சைக்கிள்-அற்ற பகுதிகளை உருவாக்க போலீஸ் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கும். நேற்று, எஸ்ட்ரோ அவானியில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ள பல்வேறு “கடுமையான” நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்றார். “தெருக்…
“உண்மை கசக்கிறது. அதனால் மலேசியாகினியைத் தடை செய்யுங்கள்”
"சுல்கர்னெயின் அறிக்கை மலேசிய இளம் பத்திரிக்கையாளர் மன்றத்தின் (KWMM) நிலைக்களன்களாக இருக்க வேண்டிய இதழியல் துறையையும் சுதந்திரமான ஊடக முறையையும் கேலிக் கூத்தாக்கியுள்ளது." "மலேசியாகினியை தடை செய்யுங்கள் அல்லது அதற்கு கட்டுப்பாடுகளை விதியுங்கள்" இனி என்ன ?: மலேசியாகினி செய்திகளை வெளியிடுவதில் பாகுபாடு காட்டுவதாகவும் அதனால் நாட்டின் நிலைத்தன்மையை…
அம்னோ எம்பி: 13வது பொதுத் தேர்தல் பிஎன் கூட்டணியின் ‘பலவீனத்தை’…
பிஎன் கூட்டணியில் காணப்படுகின்ற 'பலவீனத்தை' அண்மைய 13வது பொதுத் தேர்தல் அம்பலப்படுத்தி விட்டதாக அம்னோ பூலாய் எம்பி நூர் ஜஸ்லான் கூறுகிறார். தேர்தல் பிரச்சாரச் செய்திகளை வழங்குவதற்கு பிஎன் -னைக் காட்டிலும் பக்காத்தான் ராக்யாட் சமூக ஊடகங்களை மிகவும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது என அவர் கோலாலம்பூரில் சொன்னார்.…
‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’
பொதுத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (30.05.2013) சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று இன்று பின்னேரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில்…
கீர் தோயோ குற்றவாளி என்ற தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது
மேல்முறையீட்டு நீதிமன்றம், முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ, ஷா ஆலமில் விலைமிக்க இரண்டு வீட்டு மனைகளையும் ஒரு வீட்டையும் பெற்றதில் ஊழல் செய்துள்ளார் என்ற தீர்ப்பை நிலைநிறுத்தியுள்ளது. நீதிபதி அபு சாமா நோர்டின் தலைமையில் கூடிய மூவரடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமுகமாக அத்தீர்ப்பை வழங்கியது.…
சம்பந்தப்பட்ட போலீசாரைப் பணி இடைநீக்கம் செய்ய வேதா கோரிக்கை
தடுப்புக் காவலில் நிகழ்ந்த என். தரமேந்திரன் மரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட மென்மையான நடவடிக்கையைச் சாடிய பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி, இப்படிப்பட்ட நடவடிக்கை போலீஸ்மீதுள்ள மக்களின் நம்பிக்கையைக் குறைத்து விடும் என்று கூறியுள்ளார். கொலை என்பது பிணையில் விடமுடியாத ஒரு கடுமையான…
ஜிஎஸ்டி அண்மைய எதிர்காலத்தில் அமல்படுத்தப்படாது
பொருள், சேவை வரியை அண்மைய எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எண்ணவில்லை. ஏனென்றால், அந்த வரியால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் வரியின் விகிதாசாரம் பற்றியும் அது இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அதன்மீது ஒரு முடிவுக்கு வருமுன்னர், அரசியல்வாதிகள், தனியார் துறையினர், பொதுமக்கள் ஆகிய தரப்புகளுடன் அரசாங்கம் கலந்து ஆலோசித்து வருவதாக இரண்டாவது…


