சிலாங்கூரில் நாட்டின் முதலாவது பெண் சட்டமன்றத் தலைவர் நியமனம்

டிஏபி-இன் ஹன்னா இயோ (சுபாங் ஜெயா), சிலாங்கூர் சட்டமன்றத் தலைவராகி ஒரு வரலாறு படைத்துள்ளார். பிகேஆரின் நிக் நஸ்மி நிக் அஹ்மட் (ஸ்ரீசித்தியா) சட்டமன்றத் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிலாங்கூர் அரசு இன்று காலை அதன் ஆட்சிக்குழுவை அறிமுகப்படுத்தியது. மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அவரது…

தர்மேந்திரனின் தகப்பனாருக்கு “இரகசிய” அழைப்பு

போலீஸ் தடுப்புக் காவலில் இறந்து போன என். தர்மேந்திரனின் குடும்பத்தினருக்கு தமது அதிகாரி ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டது வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்ப்பதற்காக அல்ல, உதவு வழங்குவதற்காகத்தான் என்று பிரதமர் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். "அடிப்படை மனித உரிமை அனைவரின் உரிமையாகும். இதன் அடிப்படையில்தான்…

பெர்சே: பெர்சே 4.0 பேரணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை

பெர்சே 4.0 பேரணியை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுவதைத் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் பெர்சே 2.0 அமைப்பு மறுத்துள்ளது. பேரணி ஏற்பாடு செய்யும் நோக்கம் எதுவும் தங்களுக்கு இல்லை என பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் வொங் சின் ஹுவாட்(கீழே) மலாய் மெயில் நாளேட்டிடம் கூறினார். அதற்குப் பதிலாக…

வேதாவின் நியமனத்துக்கு என்ஜிஓ-கள் ஆதரவு

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் அமைச்சரவையில் பி.வேதமூர்த்தியை ஒரு துணை அமைச்சராக நியமனம் செய்திருப்பதை இந்திய என்ஜிஓ-கள் அடங்கிய குழு ஒன்று வரவேற்றுள்ளது. வேதமூர்த்தி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பலர் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அவரின் சகோதரர் உதயகுமார் அதைக் கடுமையாகக் குறைகூறியதுடன் அவர் “புதிய சாமிவேலு” என்றும்…

தடுப்புக்காவல் மரணம் பற்றி விசாரிக்க தனி போலீஸ் வாரியம் ஏற்கத்தக்கதல்ல

தடுப்புக் காவல் மரணங்களைத் தடுக்க போலீசிலேயே தனி வாரியம் அமைக்கும் ஆலோசனை அபத்தமானது என்று ஒதுக்கித் தள்ளும் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், தேவை போலீஸ் புகார்கள் மற்றும் ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும் சுயேச்சை ஆணையம் (ஐபிசிஎம்சி) தான் என்பதை வலியுறுத்தியுள்ளார். இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி)…

பக்காத்தான் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா, பாஸ் உறுப்பினர் தாம்ரின் அப்துல் காப்பார், எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம்,சமூக ஆரவலர் ஹிஷாமுடின் ரயிஸ், மாணவப் போராளி சஃபான் ஆனாங் ஆகியோர் தேச நிந்தனை கருத்துகளைத் தெரிவித்தார்கள் என இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். இன்று முன்னேரம் கேஎல் செஷன்ஸ்…

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் டிஏஎபி-க்கு மூன்று இடங்கள்தான்

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில், டிஏபியும் பிகேஆரும்  தலா மூன்று இடங்களையும் பாஸ் நான்கு இடங்களையும் பெற்றிருக்கும். சிலாங்கூர் சுல்தான், ஆட்சிக்குழுவில் 10 பேரில் அறுவர் மலாய்க்காரர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதால் டிஏபிக்கு ஏற்கனவே உறுதிகூறியதுபோல் நான்கு இடங்கள் கொடுக்க முடியவில்லை என சிலாங்கூர் பக்காத்தான் ரக்யாட் வட்டாரங்கள்…

நஜிப்பின் போக்கைச் சாடுகிறார் ஜைனுடின்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அம்னோவில் சிலர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது சேர்ந்து கொண்டிருப்பவர் முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின். ஜைனுடின்,  ‘ஜம்கத்தா (Zamkata)’  என்னும் தம் வலைப்பதிவில், மக்கள் செல்வாக்குள்ள தலைவராக தம்மைக் காண்பித்துக்கொள்ள நஜிப் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் அவரை…

தியன், தாம்ரின், ஹேரிஸ் மீண்டும் கைது

பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா, பாஸ் உறுப்பினர் தாம்ரின் அப்துல் காஃபார் மற்று எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் ஆகியோரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். தாம் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய தாம்ரின், போலீசார் தமது வீட்டிலிருப்பதாகவும், அவர்கள் இரவு மணி 7.5 க்கு தமது வீட்டிற்கு…

‘வாக்காளர் பட்டியலில் வாக்காளர் படத்தைச் சேர்க்க வேண்டும்’

வாக்களிக்க வருவோரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வாக்காளர்களின் படங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்வது பற்றி தேர்தல் ஆணையம் (இசி) அலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சாபாவில் சட்டவிரோதக் குடியேறிகள்மீது நடைபெறும் அரச ஆணைய விசாரணையில் விசாரணையை நடத்தும் அதிகாரி மனோஜ் குருப் (இடம்) இந்த ஆலோசனையை முன்வைத்தார். இது, ஒரே…

என்ஜிஓ: பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல

13வது பொதுத் தேர்தலை அடுத்து தொடர்ச்சியாக பேரணிகள் நடத்தப்படுவது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல என்று  ஒரு என்ஜிஓ-வான சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கூறியது. மக்கள் தங்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் தொடர்பில் பெரிய இடைவெளி நிலவுவதை உணர்ந்து பேரணிகள் மூலமாக அரசாங்கத்துக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொள்கிறார்கள் என்று அதன் பேச்சாளர் …

தேர்தல் மோசடி தொடர்பில் ரபிஸியைச் சந்திக்க இசி தயார்

மே 5 பொதுத்தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாக புகார் செய்யும் அல்லது அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்கும் தரப்பு எதுவானாலும், அது பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியாக இருந்தாலும்கூட அவர்களைச் சந்திக்க தேர்தல் ஆணையம் (இசி) தயாராக உள்ளது. ஆணையம் அதன் கடமையைச் செய்யவில்லை என்ற தப்பான எண்ணம் ஏற்பட்டு…

ஐந்தாண்டுகளில் அரசாங்கம் கார் விலைகளைக் குறைக்கும்

பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளித்ததுபோல், இன்னும் ஐந்தாண்டுகளில் அரசாங்கம் கார்களின் விலைகளை 20-இலிருந்து 30 விழுக்காடுவரை குறைக்கும் என அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட்  தெரிவித்துள்ளார். . தம் அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய முஸ்தபா, “ஒரே முறையில் கார் விலைகள் குறைக்கப்படாது”,…

தர்மேந்திரன் இறப்பு தொடர்பில் போலீஸ்காரர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்

போலீஸ் காவலில் இருந்த என். தர்மேந்திரனின் இறப்பு மீதான புலன் விசாரணை தொடர்பில் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணையில் போலீசார் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள், எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) துணை இயக்குனர் ஹாடி…

இரண்டு தடவை வாக்களித்த பாகிஸ்தானியர் ; வாக்காளர் பட்டியலில் பெயர்…

சந்தேகத்துக்குரிய வழியில் மலேசிய அடையாள அட்டையைப் பெற்ற பாகிஸ்தான் குடிமகன் ஒருவர், மலேசிய பொதுத் தேர்தல்களில் இரண்டு தடவை வாக்களித்துள்ளாராம். அவருடைய பெயர் இன்னமும் வாக்காளர் பட்டியலில் உள்ளதாம். 1992-இல், கோட்டா கினாபாலுவில் ஒரு உணவகத்தில் அடையாள அட்டையைப் பெற்றதாகக் கூறிய அப்துல் லத்திப் ஜுமானி, சிலாங்கூரில் அம்பாங்கிலும்…

ஆட்சிக்குழுப் பட்டியலுக்கு சிலாங்கூர் சுல்தான் ஒப்புதல்

சிலாங்கூரில் 2013-18 தவணைக்கான மாநில ஆட்சிக்குழு பட்டியலுக்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்ஷா ஒப்புதல்  கொடுத்திருப்பதாக  மந்திரி புசார்  அப்துல் காலிட் இப்ராகிம் இன்று அறிவித்தார். இதனை அடுத்து  நாளைக் காலை மணி 9.30க்கு மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர்கள்   கிள்ளான் இஸ்தானா ஆலம் ஷாவில் பதவி…

‘சிலர் எல்லைமீற விரும்பினாலும் பேரணிகள் அமைதியாகவே நடக்கும்’

கண்டனக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சிலர் எல்லைமீறிச் செல்ல முடியாமல் இருப்பது குறித்து வெறுப்புற்றிருந்தாலும் தேர்தல் மோசடிக்கு எதிராக நடத்தப்படும் பேரணிகள் எப்போதும் அமைதிப் பேரணிகளாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். “நாம் (பேரணிகளில்) ஊர்வலம் செல்லப்போவதில்லை என அறிவித்தவுடன் ஏமாற்றமடைந்த சில…

மின்தடை ஏற்பட்ட மேலும் ஒரு இடம் பற்றி பிகேஆர் போலீசில்…

பொதுத் தேர்தலின்போது கெடாவில் ஒரு வாக்களிப்பு மையத்தில் நிகழ்ந்த மின் தடை குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டிருப்பதாக  பிகேஆர்  இயக்குனர் ரபிஸி ரம்லி இன்று தெரிவித்தார். கெடா, சிடிமில் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தபோது மின் தடை ஏற்பட்டதாக  ரபிஸி கூறினார். அது கூலிம் பண்டார் நாடளுமன்றத் தொகுதியில் உள்ள…

கேஎல்ஐஏ2 தாமதம்: எம்ஏஎச்பி ‘பொய்யர்கள்’ என பக்காத்தான் குற்றச்சாட்டு

புதிய குறைந்த கட்டண விமானப் பயண முனையமான கேஎல்ஐஏ2-இன் கட்டுமானச் செலவையும் அது ஏன் கட்டிமுடிக்கத் தாமதமாகிறது என்பதையும் போக்குவரத்து அமைச்சும் மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) டும் தெரியப்படுத்த வேண்டும் என பக்காத்தான் ரக்யாட் கோரியுள்ளது மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில் அம்முனையம் இவ்வாண்டு…

பேரணி தொடர்பில் பக்காத்தான் தலைவர்கள் நால்வர்மீது குற்றச்சாட்டு

பக்காத்தான் தலைவர்கள் நால்வர்- பேராக்கில் இருவர், நெகிரி செம்பிலானில் ஒருவர், பினாங்கில் ஒருவர்- மாற்றரசுக் கட்சி பேரணி  நடத்தியதன் தொடர்பில் அந்தந்த மாநில செஷன்ஸ் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டனர்.  பேரணி பற்றி 10 நாள்களுக்கு முன்கூட்டியே போலீசுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என 2012ஆம் அமைதிப் பேரணி சட்ட(பிஏஏ) த்தின்கீழ் அவர்கள்மீது…

யாஸிட் மீண்டும் கைது : காரணம் தெரியாமல் மனைவி தவிப்பு

2012-ஆம் ஆண்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்(சொஸ்மா) சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்ட யாஸிட் சுபாட், ஏழு நாள் கழித்து மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்பில் அவரின் மனைவி சோமல் முகம்மட்டைத்  தொடர்புகொண்டு விசாரித்தபோது கைது செய்யப்பட்டதற்கான காரணம் அவருக்கும் தெரியவில்லை. “போலீசார் காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து புக்கிட்…

போலீஸ் காவல் மரணங்கள் குறித்து வேதா மெளனம் காப்பது ஏன்?,…

போலீஸ் காவலில் இருக்கும்போது நேரும் இறப்புகள் குறித்து துணை அமைச்சர் பி. வேதமூர்த்தி “வாயை இறுக்கமாக மூடிக்கொண்டிருப்பது” அந்த வகை மரணங்கள் நிற்க வேண்டும் என்ற இண்ட்ராபின் கோரிக்கை கைவிடப்பட்டிருக்கிறது என்பதைத்தான் காண்பிக்கிறது. ஈப்போ பாராட் டிஏபி எம்பி எம்.குலசேகரன் இவ்வாறு சாடியுள்ளார். என். தர்மேந்திரன், 31,  மே…

வேதமூர்த்திக்கு வேண்டும் நாவடக்கம்!

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 26, 2013. புதிதாக துணை அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் வேதமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்பது தெரிய வேண்டிய ஒன்று. அவர் மட்டுமே இந்தியர்களின் தீர்க்கதரிசியெனவும், அவர்களின் உரிமைகளையும்,, நலன்களையும் தேவைகளையும் இரட்சிக்க வந்த இறை தூதர் என்ற  கற்பனையில் மிதந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு…