சமய உணர்வுகளைத் தூண்டி விடாதீர்: அம்னோவுக்கு லிம் எச்சரிக்கை

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்,  முஸ்லிமாக மதம் மாறிய ஒருவரின் உடல் பெளத்த சமயச் சடங்குகளுடன் அடக்கம் செய்யப்படவிருந்ததை வைத்து சமய உணர்வுகளைக் கிளறிவிட வேண்டாம் என அம்னோவை எச்சரித்துள்ளார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிரபலப்படுத்திவரும் 1மலேசியா கோட்பாட்டைப் பார்க்கும்போது அம்னோ மிதவாதக் கட்சிபோல் காட்சியளிக்கிறது…

புக்கிட் குளுகோரில் போட்டியிட வாரீர்: தெங்குக்கு கர்பால் சவால்

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வருமாறு பினாங்கு மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோவுக்கு வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார். புக்கிட் குளுகோர் நடப்பு எம்பியான கர்பால், தெங்,(பாகானில்) டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கையும் (தஞ்சோங்கில்) மாநில…

ஆட்சிமாற்றத்தை மதிக்கத் தயாரா? நஜிப்புக்கு கிட் சியாங் கேள்வி

13வது பொதுத் தேர்தல் முடிவை, அதன் விளைவாக ஆட்சிமாற்றம் ஏற்படுவதாக இருந்தாலும், பிஎன்னும் அம்னோவும் மதிக்கும் எனப் பிரகடனம் செய்யத் தயாரா என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் சவால் விடுத்துள்ளார். அவ்வாறு கூறுவது மலேசியாவை “உலகின் தலைசிறந்த ஜனநாயமாக்க” விரும்புவதாக…