பெர்சே மாற்று இடங்களைப் பற்றி யோசிக்க விருக்கிறது

எதிர் வரும் பெர்சே 3.0 பேரணிக்கு மாற்று இடத்தை உள்துறை அமைச்சர் வழங்க முன் வந்திருப்பது மீது விவாதிக்க நாளை இரவு பெர்சே கூட்டமைப்பு கூடுகிறது. பெர்சே அமைப்பு தூய்மையான நேர்மையான தேர்தல்களுக்காக போராடுகிறது. அந்தக்  கூட்டத்தின் முடிவு வரும் வரைக்கும் மெர்தேக்கா சதுக்கத்தில் பெர்சே 3.0 பேரணியை…

நஜிப் ஸ்கோர்ப்பியோன் நீர்மூழ்கிகள் பற்றிய கேள்விகளைத் தவிர்க்கிறார்

இரண்டு ஸ்கோர்ப்பியோன் ரக நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்படதின் தொடர்பில் உயர் நிலை மலேசிய அதிகாரிகளுக்கு தரகுப் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது சம்பந்தமாக பிரான்ஸில் சுவாராம் சமர்பித்துள்ள வழக்கு மீதான கேள்விகளுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதில் அளிக்க மறுத்து விட்டார். அந்த விஷயம் மீது கருத்துரைக்குமாறும் அவர்…

நஜிப் சந்தர்ப்பவாத சீர்திருத்தவாதி என்கிறார் புத்தக ஆசிரியர் ஒருவர்

2010ம் ஆண்டு வெளியிட்ட "மலேசிய தான்தோன்றி: சிரமமான காலத்தில் மகாதீர் முகமட்" என்ற தமது புத்தகத்தின் மூலம் உள்துறை அமைச்சில் சிவப்புக் கொடிகளை உயர்த்திய பேரி வெயின், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீர்திருத்தவாதி என்னும் தோற்றம் தேர்வு செய்யப்பட்ட ஒன்று என வருணித்துள்ளார். நஜிப்புக்கு முன்பு பிரதமராக…

ராபிஸி: இலவசக் கல்விக்கு மேலும் 3 பில்லியன் ரிங்கிட் மட்டுமே…

அரசாங்கம் முழுமையான இலவசக் கல்வியை வழங்குவதற்கு ஆண்டு ஒதுக்கீட்டில் கூடுதலாக 3 பில்லியன் ரிங்கிட்டை சேர்த்தால் போதும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார். அந்தத் தொகை, மாணவர்களுடைய வாழ்க்கைச் செலவுகள், தற்போது பொதுப் பல்கலைக்கழக மாணவர்கள் செலுத்தும் கட்டணங்கள், தனியார் பல்கலைக்கழகங்களுக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகைகள்…

இசி தலைவர்: எங்கள் வாக்காளர் பட்டியல் உலகில் மிகவும் தூய்மையானது

வாக்காளர் பட்டியல் மீது பல புகார்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் உலகில் மிகத் தூய்மையான வாக்காளர் பட்டியலை மலேசியா பெற்றுள்ளதாக இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிச் முகமட் யூசோப் பிரகடனம் செய்துள்ளார். நேற்று சின் சியூ நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் அவ்வாறு பிரகடனம் செய்த  அவர்,…

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கூறி மாணவர் ஒருவர் தண்டிக்கப்பட்டார்

எதிர்க்கட்சி ஆதரவு அமைப்புக்களுடன் தொடர்புடையது எனக் கூறப்பட்ட வாக்களிப்பு விழிப்புணர்வு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெர்லிஸ் மலேசிய பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு 66 நாட்களுக்குக் கல்வியிலிருந்து நீக்கமும் 100 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பினாங்கு, கெடா, பெர்லிஸ் ஆகியவற்றைச் சேர்ந்த 14 மாணவர் அமைப்புக்களுடன் கங்காரில்…

தற்காப்பு அமைச்சர்: பிரஞ்சு ஸ்கார்ப்பியோன் விசாரணையில் நான் கலந்து கொள்ள…

மலேசியா  ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகளை கொள்முதல் செய்தது தொடர்பிலான பிரஞ்சு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன் என தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியிருக்கிறார். தமது அமைச்சு அந்த விசாரணைக்குப் பேராளர் யாரையும் அனுப்பாது என்றும் அவர் அறிவித்தார். கோலாலம்பூரில் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் ஸாஹிட் அவ்வாறு…