2026-ஆம் ஆண்டு மலேசிய விளையாட்டுப் போட்டிகளை (Sukma) நடத்தும் சிலாங்கூர் மாநிலத்திற்கு, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரடி நிதியுதவி எதையும் வழங்காது; மாறாக விளையாட்டு வசதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று அதன் அமைச்சர் டாக்டர் தௌபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார். 22-வது சுக்மா மற்றும் 2026 சிலாங்கூர் பாரா…
உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான மறு பயிற்சிக்கு 22 மில்லியன் ரிங்கிட் ஏன்…
ஒப்பந்தம் ஒன்றுக்கு ஈடாகக் கல்வி அமைச்சர் முஹைடின் யாசினுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதை அமெரிக்க விளையாட்டுக் கல்லூரி (USSA) மறுத்துள்ள போதிலும் டிஏபி அந்தப் பேரம் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றது. ஆயிரம் உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர்களுக்கு மறு பயிற்சி அளிப்பதற்கு அம்னோவுடன் தொடர்புடையது எனக்…
பாஸ் உலாமா கர்பாலிடம் சொல்கிறது: ‘எங்களை நீங்கள் மாற்ற முடியாது’
'அல்லாஹ்' சர்ச்சைக்கு முடிவு கட்டுமாறு பாஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும் பாஸ் உலாமா தலைவர் ஹருண் தாயிப், பாஸ் கட்சி தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-குடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வருகிறார். கர்பாலின் கோரிக்கையை…
‘தேர்தலில் பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது’
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுதல் என்பது “நடவாத காரியம்” என்று கூறும் ஓர் ஆய்வு அதன் விளைவாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகலாம் என்றும் கூறுகிறது.. யுனிவர்சிடி மலாயா ஜனநாயக மற்றும் தேர்தல் மையம் (Umcedel) முந்தைய தேர்தல் முடிவுகளையும் நடப்பு…
சபாஷ் பிரச்னையில் சுல்தான் தலையிட வேண்டும் என பிகேஆர் இளைஞர்…
சிலாங்கூர் மாநிலத்தின் தண்ணீர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு நீர் வளச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவன நடவடிக்கைகளை சிலாங்கூர் அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கு உதவி செய்யும் பொருட்டு சுல்தான் அதில் தலையிட வேண்டும் என சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவு விரும்புகிறது. "சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவும் சிலாங்கூர் பக்காத்தான்…
மை கார்டுகள் கிடைக்காதது மீது வழக்குப் போட நாடற்ற மூவருக்கு…
மூன்று நாடற்ற இந்தியர்கள் தங்களுக்கு மை கார்டுகள் (MyKads) கொடுக்கப்படாதது மீது நீதித் துறை மறு ஆய்வுக்கு விண்ணபித்துக் கொள்வதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. நீதிபது ஸாலேஹா யூசோப், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் சமர்பித்த பூர்வாங்க ஆட்சேபத்தை நிராகரித்து நீதித்துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பதாரர்கள்…
‘வாக்காளர் பற்றிய விவரங்கள் பிரதமருக்கு எப்படிக் கிடைத்தன?’
சிலாங்கூர் வாக்காளர்களுக்குப் பிரதமரும் சிலாங்கூர் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அனுப்பி வைத்த புத்தாண்டு வாழ்த்துக் கடிதம் தொடர்பில் மாற்றரசுக்கட்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று காலை தம் சேவை மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிலாங்கூர் டிஏபி செயலாளர் இயான் யோங் ஹியான் வா, தாமும் தம்…
உத்துசான் அன்வார் மீது அவதூறு கூறியுள்ளது என நீதிமன்றம் முடிவு
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறு கூறியதற்கு உத்துசான் மிலாயு (எம்) சென் பெர்ஹாட்டும் அதன் தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ் இஷாக்கும் பொறுப்பேற்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று முடிவு செய்துள்ளது. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா கடந்த ஆண்டு ஜுன் 17ம்…
இப்ராகிமுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு வேறு சட்டம்
உங்கள் கருத்து: ‘அவர் ஒவ்வொரு தடவையும் நிந்தனையாகவும் சினமூட்டும் வகையிலும் பேசித் தப்பித்துக்கொள்வது; 1மலேசியா என்பதெல்லாம் வெறும் பேச்சுத்தான் என்பதைக் காண்பிக்கிறது’ ‘பைபிளைக் கொளுத்து’ என்ற இப்ராகிம் அலியைச் சாடுகிறார் ஆயர் ஜெரார்ட் லூர்துசாமி: எரியப்போவது பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிதான். அவர் ஒவ்வொரு தடவையும் நிந்தனையாகவும் சினமூட்டும்…
லிங்: அரசு தரப்பு வழக்குரைஞர் உண்மையைக் கண்டு விலகி ஒடுகிறார்
PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதிக்கு நிலம் வாங்கியது தொடர்பில் அரசாங்கத்தை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக், தமக்கு எதிரான விசாரணையில் அரசு தரப்பு "உண்மையைக் கண்டு விலகி ஒடுவது" பற்றித் தாம் 'ஏமாற்றம்' அடைந்துள்ளதாக கூறியுள்ளார். கோலாலம்பூர்…
ஷாரிபா: ‘Listen, listen’ வீடியோ எதிர்க்கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தைக்…
சட்டக் கல்வி மாணவி ஒருவரைத் தாம் திட்டியதை காட்டும் வீடியோ இணையத்தில் வலம் வந்ததைத் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்க்கின் இப்போது தமது மௌனத்தைக் கலைத்துள்ளார். எதிர்க்கட்சிக்கு ஆதரவும் தேடும் பொருட்டு அந்த வீடியோ "படைப்பாற்றலுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக" அவர் கூறிக்…
கண்டிக்கப்படும் போது மகாதீர் வரலாற்றை மாற்றி எழுத முயலுகிறார்
'துங்குவை இழுப்பதின் மூலம் பொது மக்களுடைய கவனத்தைத் திசை திருப்பி மலாயாவின் சுதந்திர வரலாற்றையே திருத்த முயலவேண்டாம்' மெர்தேக்காவுக்கு முந்திய குடியுரிமை ஆர்சிஐ அமைக்க வேண்டும் என மகாதீர் யோசனை தேதாரேக்: சுதந்திரத்துக்கு ஈடாக மலாய்க்காரர் அல்லாதாருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டிருக்கா விட்டால் மலாயா வேறு விதமாக இருந்திருக்கும் என்பதை…
பாவனி : கல்வியை விற்காதே, அதை இலவசமாக்கு! (காணொளி இணைப்பு)
வீடாக இருக்கட்டும் நாடாக இருக்கட்டும் எங்கு தப்பு நடந்தாலும் அதனை மாணவர்கள் தட்டிக் கேட்க வேண்டும்; இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பது வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் நின்றுவிடாமல் செயலிலும் நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும் என்கிறார் சட்டக் கல்வி மாணவி கே.எஸ். பவானி. செம்பருத்தி இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே…
பிஎன் -னுக்கு பிரச்சாரம் செய்யுமாறு ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்ட செரியான்…
சரவாக்கில் பிஎன், வரும் தேர்தலில் ஆசிரியர்களை பிஎன் பிரச்சாரக் குழுக்களில் ஒரு பகுதியாக பயன்படுத்தக் கூடாது. "ஆசிரியர்களுடைய வேலை நமது பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதாகும்," என சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் சொன்னார். அரசியல் என வரும் போது ஆசிரியர்கள் நடுநிலையாக இருப்பது முக்கியமாகும் என்றார்…
சபா டிஏபி: சில தொகுதிகளில் 30 விழுக்காடு அந்நியர்கள்
சபாவில் பதிவு செய்யப்பட்ட 946,442 வாக்காளர்களில் 5.2 விழுக்காட்டினர் புருணை, பிலிப்பீன்ஸ், இந்தோனிசிய அல்லது பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். சில தொகுதிகளில் அந்த விகிதம் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கலாம் என சபா டிஏபி சொல்கிறது. "அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டு பின்னர் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களா அவர்கள்…
‘பிஎன் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள், டாக்டர் மகாதீருக்குப் பதில் சொல்ல…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு அம்னோ, மசீச, மஇகா, ஆட்சியாளர் மாநாடு ஆகிய தரப்புக்கள் பதில் அளிக்க வேண்டும். ஏனெனில் அந்த அறிக்கை இந்த நாட்டின் மூன்று முக்கிய இனங்களுக்கு இடையிலான சமூக ஒப்பந்தத்தையே கீழறுப்புச் செய்கிறது என அரசமைப்பு சட்ட நிபுணர்…
லிம்: தேர்தலைத் தள்ளி வைக்க RCI சட்டப்பூர்வ காரணமாக இருக்க…
அந்நியர்கள் குடிமக்களாக்கப்பட்டது மீது சபா அரச விசாரணை ஆணையத்தில் (ஆர்சிஐ) தெரிவிக்கப்பட்டுள்ள Read More
இப்ராஹிம் அலி ‘பைபிள்களை எரியுங்கள்’ எனக் கூறியுள்ளதை ஆயர் சாடுகின்றார்
இறைவன் என்பதற்கு 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்தும் பைபிள்களை எரிக்குமாறு பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி விடுத்துள்ள வேண்டுகோள் "மலேசியாவில் சிவில் விவாதங்களின் எல்லைகளை மீறிச் செல்லும் இனவெறி அறிக்கை: என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார். "இப்ராஹிமின் இனவெறிக் கருத்துக்கள் பகிரங்கமாக சொல்லப்பட்டுள்ளதால்…
‘நீங்கள் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே விரைவாகக் குடியுரிமை’
"பாகிஸ்தானிய இந்திய குடிமக்கள் உடனடியாக மலேசியர்களாகினர்" "குடியுரிமை கொடுக்கப்பட்ட இந்தோனிசியர்களும் Read More
தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா-விற்குத் தகுதியில்லை!
பாரதி: கோமாளியாரே! இன்று தமிழரைப் பிரதிநிதிக்கும் தகுதியை மஇகா இழந்து விட்டது என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? கோமாளி: அம்னோவை ஆதரித்து அடி பணியும் வரை தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா- வால் முடியாது என்பதில் ஐயமில்லை. இன்று வெகுவாக பேசப்படும் பவானி வசனம் “கேள், கேள், கேள்” என்பதுதான்…
மெர்தேக்காவுக்கு முந்திய குடியுரிமை மீது ஆர்சிஐ-யை அமைக்க வேண்டும் என…
மலேசியா சுதந்திரம் பெற்றதற்கு முன்னர் மலாயாக் கூட்டரசில் இருந்த ஒரு மில்லியன் அந்நியக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டதை ஆய்வு செய்ய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்கலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் யோசனை கூறியிருக்கிறார். என்றாலும் அது வெறும் யோசனையே என்று அவர்…
பவானி: சர்ச்சைக்குரிய கருத்தரங்குக்குச் செல்லுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்
யுனிவர்சிடி உத்தாரா மலேசியா (யுயுஎம்) தங்கு விடுதிகள் சில அங்கு தங்கியிருந்த மாணவர்களை சுவாரா வனிதா 1மலேசியா (SW1M)-வின் கருத்தரங்குக்குக் கண்டிப்பாக செல்ல வேண்டும், இல்லையென்றால் தங்குவிடுதிகளிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்திருந்ததாகக் கூறுகிறார் மாணவி கே.எஸ்.பவானி. அப்படி இருக்க, பல்கலைக்கழகம் கடந்த மாதம் நடந்த கருத்தரங்குக்கு மண்டபம் மட்டுமே…
மாஹ்புஸ் இன்னும் ஒரு வாரத்தில் தீபக்கை சந்திப்பார்
சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிப்பதாக பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளிக்க வேண்டும் என கம்பள வியாபாரி தீபக் யெய்கிஷன் விடுத்துள்ள கோரிக்கை குறித்து நடுவர் பணியாற்றுவதற்காக பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் தீபக்கை இன்று தொடக்கம் அடுத்த ஒரு வாரத்துக்குள் தாம் சந்திக்கப் போவதை பாஸ் உதவித்…
‘பொதுத் தேர்தலுக்குமுன் ஆவி வாக்காளர்களைத் துடைத்தொழியுங்கள்’
சாபாவில் குடியேற்றக்காரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கியதாகக் கூறப்படுவதை விசாரித்துவரும் அரச Read More


