வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் வாசகர்கள் அனைவருக்கும் செம்பருத்தி இணையத்தளத்தின் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 'இல்லங்கள்தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள்தோறும் தங்கட்டும் இன்பங்கள்!' மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளைபொருள்களை வைத்து புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று இறைவனை…

மக்கள் எழுச்சியும் ‘சீ.. சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்ற…

"அம்னோ அதிர்ஷ்டக் குலுக்கை நடத்தியது, அரங்கத்துக்கு ஆதரவாளர்களை வாகனங்களில் கொண்டு சென்றது, அத்துடன் வந்தததற்காக பணமும் கொடுத்தது- பேராசை பிடித்த ஆட்சிக்கு ஆதரவு அதனால் தான்" சிலாங்கூர் பிஎன்: கேஎல்112ல் கலந்து கொண்டவர்கள் 'கட்சி ஊழியர்கள்' பெர்ட் தான்: சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் அவர்களே,…

“112 பேரணியில் பிள்ளைகள் முடியாது; நஜிப் நிகழ்வில் முடியுமா ?”

பிரதமருடைய நேற்றைய நிகழ்வில் பிள்ளைகளையும் மாணவர்களையும் அனுமதித்து விட்டு மெர்தேக்கா அரங்கில் நிகழ்ந்த மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அவர்களைத் தடை செய்த அரசாங்கத்தின் இரண்டு வகையான தரம் கண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று செமினியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பங்கு கொண்ட நிகழ்வில் பிள்ளைகளும் மாணவர்களும் காணப்பட்டதை மிபாஸ் எனப்படும் மலேசிய…

சிலாங்கூர் பிஎன்: கேஎல்112 பங்கேற்பாளர்கள் ‘கட்சி ஊழியர்கள்’

நேற்று நடைபெற்ற மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டது பற்றி சிலாங்கூர் பிஎன் கவலைப்படவில்லை. மாறாக பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் மற்ற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கட்சி ஊழியர்கள் என அது கூறியது. "நாங்கள் கவலைப்படவில்லை. அதற்கு மிகவும் எளிதான காரணம் இது தான்: அந்தக் கூட்டத்தில்…

அம்னோவுக்கு ஊடகங்கள் முக்கியமானவை என்கிறார் நஜிப்

மக்களுடைய உணர்வுகளையும் அவாக்களையும் அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் இடையராக (intermediary) ஊடகங்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். அரசாங்கத்துக்கு எதிராகக் கூறப்படுகின்ற குறைகளையும் கண்டனங்களையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும். அப்போது தான் அரசாங்கம் மேம்பாடுகளைக் கொண்டு வர முடியும். "மக்களுடைய  நன்மைகளை நோக்கமாகக்…

கேஎல்112 பேரணி உண்மையில் “வரலாற்றில் இன்று நிகழ்வாகும்”

"நாட்டு வளங்கள் தங்களுக்கு முழுக் கட்டுப்பாட்டை வழங்கும் மாற்றங்களை மலேசியர்கள் விரும்புவது தெளிவாகி விட்டது. அவர்கள் பிச்சைகளை நம்பியிருக்க விரும்பவில்லை." "எழுச்சி" பேரணிக்கு மெர்தேக்கா அரங்கில் 100,000 பேர் கூடினர் ஜான் பியரே: மற்ற தெரு ஆர்ப்பாட்டங்களும் அரசியல் கூட்டங்களும் பெரிய அளவில் எதிர்ப்புக் கூட்டங்களும் நடத்தப்படலாம். ஆனால்…

தை பிறந்து விட்டது; வழி பிறக்க விவேகம் தேவை!, சேவியர்

நாட்டில் தைப் பொங்கல் புத்தாண்டை  கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் இனிய தைப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. தை பிறந்து விட்டது, வழி பிறக்க வேண்டும். அதற்கு ஆண்டவன் துணையும், மக்களின் விவேகமும், விழிப்புணர்வும் தேவை!…

பேரணி பற்றிய செய்தியைப் பரப்புங்கள் என அன்வார் வேண்டுகோள்

மக்கள் எழுச்சிப் பேரணிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் மெர்தேக்கா அரங்கத்தில் கூடிய வேளையில் அந்த நிகழ்வு பற்றிய தகவலைப் பரப்புமாறு வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். "வரும் தேர்தலில் வாக்களிக்கும் வெளிநாட்டு மலேசியர் என்ற முறையில் மலேசியாவில் நிகழ்கின்ற…

மெர்தேக்கா அரங்கத்துக்கு உள்ளும் புறமும் 100,000 பேர்

மக்கள் எழுச்சிப் பேரணி தொடங்கிய போது மெர்தேக்கா அரங்கத்துக்கு உள்ளும் புறமும் 100,000 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மழை பெய்யவில்லை. வானத்தில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. தேசிய கீதம் பாடப்பட்டதுடன் பேரணி தொடங்கியது. அரங்கதிற்கு வெளியில் காத்திருக்கும் மக்கள் செவி மடுப்பதற்கு உதவியாக ஒலிபெருக்கி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.…

‘பிஎன் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் ஆனால் மக்களுக்கு நன்றி சொல்லுங்கள்

"அது மக்கள் பணம். பிரதமர் நஜிப் ரசாக் அல்லது அம்னோ/பிஎன் பணம் அல்ல அது. உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்" 100 ரிங்கிட் அன்பளிப்பில் பிஎன் தலைவர்களைச் சம்பந்தப்படுத்துமாறு பள்ளிக்கூடங்களுக்கு ஆணை அடையாளம் இல்லாதவன்#19098644: விரக்தி அடைந்த ஒரு கட்சி  இந்த நாட்டில் சட்டமியற்றும்…

கோலாலம்பூரில் 20,000 பேர், பேரணிக்கு முன்னதாக கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கிறது

முக்கியமான பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பக்காத்தான் ராக்யாட்டின் வலிமையைக் காட்டுவதற்கான நிகழ்வு எனக் கருதப்படும் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் கோலாலம்பூரில் கூடுகின்றனர். அந்தப் பேரணியில் அதிகமான மக்கள் கூடுவர் என ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். அதன் வழி இன்னும் முடிவு செய்யாமல் இருக்கும்…

சபாஷ் நடவடிக்கைகள் ஒப்படைக்கப்படுவதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தனது நடவடிக்கைகளை உடனடியாக சிலாங்கூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அதற்கு நெருக்குதல் கொடுக்கும் பொருட்டு பிகேஆர் நாளை கையெழுத்துக்களைத் திரட்டும் இயக்கத்தைத் தொடங்குகின்றது. "சபாஷ் கௌரவமாக பின்வாங்குவதற்கு நெருக்குதல் தொடுக்கும் பொருட்டு தண்ணீரைப் பயன்படுத்தும் ஒரு மில்லியன் பயனீட்டாளர்களிடமிருந்து…

புலனாய்வு செய்வதற்கு என்ன இருக்கிறது என வினவுகிறார் துணை முதலமைச்சர்…

பினாங்கு துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மான் அரசாங்க ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்ட காமத் துன்புறுத்தல் விவகாரத்தை மூடி மறைப்பதற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்த தமது உதவியாளர் மீதான பூர்வாங்க அறிக்கையில் 'எதனையும்  நிரூபிக்கவில்லை' எனக் கூறியிருக்கிறார்.…

‘அல்லாஹ்’ சர்ச்சை மீது எழுந்துள்ள உட்பூசலைத் தீர்க்க பாஸ் முயலுகிறது

"மலாய் பைபிள்களில் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது பாஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள முரண்பாடான எண்ணங்களைச் சரி செய்வதற்கு அந்த வார்த்தையை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்த அனுமதிக்கலாம் என 2010ம் ஆண்டு கட்சி செய்த முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்." அந்தக் கருத்தை பாஸ் கட்சியின் உலாமா…

ஊழியர் சேம நிதி, ஒய்வூதிய நிதி ஆகியவை FGV பங்குகளில்…

FGV எனப்படும் Felda Global Ventures Holdings நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதின் மூலம் இபிஎப் என்ற ஊழியர் சேம நிதிக்கும் KWAP என்ற ஒய்வூதிய நிதி நிறுவனத்துக்கும் மொத்தம் 75 மில்லியன் ரிங்கிட் 'காகித' இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பிகேஆர் கூறிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்…

சபாஷ் விரைவில் வரலாறு ஆகி விடும்

"மற்றவர்களுடைய தண்ணீர் தேவைகளை நீங்கள் தொடர்ந்து மறுத்து வந்தால் மக்களுடைய ஆத்திரத்தை எதிர்கொள்ள வேண்டும்" சபாஷ்-க்கு வழங்கப்பட்ட சலுகையை மீட்டுக் கொள்ள சிலாங்கூர் முயலுகிறது தோலு: கிள்ளான் பள்ளத்தாக்கில் சில பகுதிகளில் இப்போது நிலவுகின்ற தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்கள் சிலாங்கூரை ஆட்சி புரியும் பக்காத்தான் ராக்யாட் மீது…

‘அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் ஒரே நாடு மலேசியாவாகும்’

'அல்லாஹ் என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் ஒரே நாடு மலேசியா என கத்தோலிக்க வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜாய் அப்புக்குட்டன் கூறிக் கொண்டுள்ளார். சிறுபான்மை மக்களுடைய உரிமைகளை நாடு மதிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட அவர் இன்னொரு பிரிவு தனது சமயப் புத்தகங்களிலும் வெளியீடுகளிலும் உள்ள…

100 ரிங்கிட் அன்பளிப்பு: பிஎன் தலைவர்களை சம்பந்தப்படுத்துமாறு பள்ளிக்கூடங்களுக்கு ஆணை

மாணவர்களுக்கான 100 ரிங்கிட் ரொக்கத் தொகையை வழங்குவதற்கு பிஎன் தலைவர்களை அழைக்குமாறு ஜோகூரில் உள்ள சில பள்ளிக்கூடங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அந்த நிகழ்வை விளம்பரப்படுத்துவதற்கு பதாதைகளை வைக்குமாறும் அவற்றுக்கு ஆலோசனை  கூறப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு, பல்வேறு ஜோகூர் மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றின்…

மக்கள் எழுச்சிப் பேரணியைச் சுவராம் ஆதரிக்கும், கா. ஆறுமுகம்

நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணியைச் சுவராம் மனித உரிமைக்கழகம் ஆதரிப்பதோடு போலீஸ் எப்படி நடந்துக் கொள்கிறது என்பதையும் கண்காணிக்கும் என்கிறார் அதன் தலைவர் கா. ஆறுமுகம். பேரணியின் இடமாற்றம் குறித்து செம்பருத்தியிடம் கருத்துரைத்தபோது, “போலீஸ் உறுதியளித்தது போல் நடந்து  கொண்டால் பிரச்னை எதுவும் எழ வாய்ப்பில்லை”…

போலீஸ் நேர்மாற்றம்: புக்கிட் ஜலீல் அரங்கை பயன்படுத்துங்கள்

சனிக்கிழமை மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள் பிக்கிட் ஜலீல் தேசிய அரங்கத்தைப்பயன்படுத்த வேண்டும் என போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது. இன்று மாலை வெளியிட்ட பத்திரிக்கைக் குறிப்பு ஒன்றில் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகமட் சாலே அதனைத் தெரிவித்தார். ஏற்பாட்டாளர்கள் ஒரு மில்லியன் பேர் கலந்து கொள்வர் என…

மெர்தேக்கா அரங்கத்திற்கு ஏழு இடங்களிலிருந்து ஊர்வலம் புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது

சனிக்கிழமை மக்கள் எழுச்சிப் பேரணி அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்னதாக மெர்தேக்கா அரங்கத்துக்குச் செல்லும் ஏழு ஊர்வலங்களில் இணைந்து கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை அந்தப்  பேரணியின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பேரனி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அண்மைய உத்தரவுகளின் படி ஊர்வலம் தொடங்கும் இடங்களும்   அதற்கான பொறுப்பாளர்களும் வருமாறு: மலாயாப் பல்கலைக்கழக பள்ளிவாசல் நுருல்…

மசீச: ‘அல்லாஹ்’ சர்ச்சையில் நீதிமன்றத் தீர்ப்பை மதியுங்கள்

'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு எல்லா மலேசியர்களுக்கும் அரசமைப்பு உரிமை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்குமாறு அனைத்து மலேசியர்களையும் மசீச கேட்டுக் கொண்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நீதிபதி லாவ் பீ லான் வழங்கிய அந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டிய மசீச பிரச்சாரப்…

அனைத்துலகக் குழு ஒன்று தேர்தல் பார்வையாளராக பணியாற்ற முன் வந்ததை…

அனைத்துலக தேர்தல் பார்வையாளர்கள் குழு ஒன்று தனது சேவைகளை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க முன் வந்தது. 13வது பொதுத் தேர்தலுக்கு அந்தக் குழு வரவேற்கப்படுகின்றது. ஆனால் பார்வையாளர்களாக அல்ல. சுற்றுப்பயணிகளாக.....என அந்தக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. "அற்புதமான,  பணிவன்பு மிக்க, சிறந்த மக்களைக் கொண்ட இந்த அழகான நாட்டுக்கு வருவதற்கான…