கைரி: என்எப்சி தாமதத்தால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட ஆடம்பர அடுக்கு…

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஒன்று 10 மில்லியன் ரிங்கிட் பெறும் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றைக் கொள்முதல் செய்தது ஒரு வியூக நடவடிக்கை என ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதின் கூறுகிறார். என்எப்சி உற்பத்தி தாமதமடைந்ததால் National…

செக்ஸ் ஒளிநாடா: “தவறான தகவல்” கொடுத்தது மீது போலீஸ் அன்வாரை…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது வழக்குப் போட பிஎன் -னும் அம்னோ-வும் அரசாங்க  எந்திரத்தைப் பயன்படுத்த முயலுகின்றன. அந்த முயற்சி இன்னொரு அரசியல் அடக்குமுறை என பிகேஆர் வருணித்தது. "மற்றவரைப் புண்படுத்தும் பொருட்டு தவறான தகவலை" வழங்கியதற்காக குற்றவியல் சட்டத்தின் 182வது பிரிவின் கீழ் போலீஸ் விசாரணை…

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட வாய்ப்பில்லை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று பலமாக ஆருடம் கூறப்பட்டிருந்தாலும், நஜிப் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசரின் அதிகாரப்பூர்வ அலுவல் அட்டவணை உள்பட  பல்வேறு கூறுகள் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்பதைத்தான் காண்பிக்கின்றன. Read More

“தேர்தல் வெற்றிவரை ஒதுக்கீடுகளைப் பிடித்துவைத்துக்கொள்வதும் ஊழல்தான்”

அரசாங்க ஒதுக்கீட்டில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு மீதியை வேட்பாளர் வெற்றி பெற்றதும் தருவதாகக் கூறுவதையும் வாக்குகளை விலைகொடுத்து வாங்கும் செயலாகத்தான் கருதவேண்டும் என்கிறது ஊழல்-தடுப்புக் கண்காணிப்பு அமைப்பான டிரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்). Read More

பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படாது

பல்வேறு நாளேடுகளும் ஆருடம் கூறியிருப்பதுபோல் இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைத்தாலும்கூட பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட மாட்டாது. இதனைத் தெரிவித்த முதலமைச்சர் லிம் குவான் எங், அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தலை நடத்தினால் சட்டமன்றத்தைக் கலைப்பது பற்றித் தாம் ஆலோசிக்கக்கூடும் என்றார். முந்தைய பொதுத் தேர்தல்…

மசீச: வெளிநாட்டு மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது

பொதுத் தேர்தலில் வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்படுவதைத் தான் ஆதரிக்கவில்லை என மசீச இன்று அறிவித்தது. அந்த மலேசியர்கள் “நாட்டு நடப்பை அறிய மாட்டார்கள்”என்பது அதன் வாதம். Read More

பிஎஸ்சியின் முன்பு சனிக்கிழமை சாட்சியமளிக்கிறார் அம்பிகா

சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தல் சீர்திருத்தங்கள் கோரும் பெர்சே 2.0 இயக்கத்தின் தலைவரும், அந்த இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் (PSC) முன்பு அவர் சாட்சியமளிக்க முடியாது என்று அக்குழுவின் தலைவரான மேக்சிமஸ் ஜோநிட்டி ஓங்கீலியால் அறிவிக்கப்படிருந்தவருமான அம்பிகா சீனிவாசன் அக்குழுவின் முன்பு நாளை…

மலேசிய செயல் திட்ட கூட்டமைப்பு அறிமுக விழா!

வளரும் நாடுகளின் மத்தியில் மலேசியா முன் நிலையில் நிற்பதாகவும் மூவின மக்கள் எதிர்காலத்தில் சிறப்பாக வாழ்வதற்காகவும் 21 இயக்கங்களின் ஆதரவோடு 15 கோட்பாடுகளை அறிமுகம் செய்யும் பொருட்டு மலேசிய செயல் திட்ட கூட்டமைப்பு அறிமுக விழா முதல் கட்ட நிகழ்ச்சி வரும் 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி…

மலேசியா நொடித்துப் போகாது என்று இட்ரிஸ் ஜாலா இப்போது கூறுகிறார்

மலேசியா நொடித்துப் போகாது என பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா இப்போது கூறுகிறார். உதவித் தொகைகள் குறைக்கப்படாவிட்டால் கடன் நெருக்கடியில் மூழ்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளைப் போன்ற நிலையை மலேசியாவும் அடையக் கூடும் என அவர் கடந்த ஆண்டு எச்சரித்திருந்ததற்கு முரணாக இன்றைய கருத்து அமைந்துள்ளது. 2020க்குள் உயர்ந்த…

ரிம500 மில்லியன் இழப்பு: கேள்விக்குப் பதில் வேண்டும், எம்பி இங்கே

கிட்டத்தட்ட ரிம500 மில்லியன் சம்பந்தப்பட்ட முறைகேடுகள் குறித்து கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால், அவ்விவகாரத்தை மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்எசிசி) விசாரிக்க வேண்டும் டிஎபி புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே கூ ஹாம் கோரியுள்ளார். அமைச்சு நடைமுறைகளைப் பின்பற்றியிருந்தால் இப்பெரும் தொகையைப்…

தனிப்பட்ட சுதந்திரத்துக்கு போராடுவது “நாகரீகமற்றது”, டாக்டர் மகாதீர்

பெரும்பான்மை மக்களுடைய உரிமைகளும் பண்புகளும் சிறுபான்மை பிரிவுகளுடைய கோரிக்கைகளுக்கு மேலாகக் கருதப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று கூறியிருக்கிறார். உண்மையில் தனிப்பட்ட  சுதந்திரம் என்ற பெயரில் பெரும்பான்மையோரின் பண்புகளுக்கு சிறுபான்மைப் பிரிவுகள் சவால் விடுப்பது "நாகரீகமற்றது" என்றார் அவர். அவர் சே டெட்…

அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை 1363% அதிகரிப்பு, நுருல் இஸ்ஸா அதிர்ச்சி

லெம்பா பந்தாய் தொகுதியில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது குறித்து அதன் எம்பி-யான நுருல் இஸ்ஸா அன்வார் கவலை தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 2ம் தேதி வெளியிடப்பட்ட அந்தத் தொகுதிக்கான மிக அண்மைய வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை 2,180 என குறிக்கப்பட்டுள்ளது. அந்த…

“என்எப்சி கடனில் ஓர் ஆடம்பர கொண்டோ வாங்கப்பட்டது”

அரசாங்க நிதியில் செயல்படும் National Feedlot Corporation (என்எப்சி)-னில் நிதி தவறாக பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறைகூறிவரும் பிகேஆர் , என்எப்சி அதன் துணை நிறுவனமொன்றுக்குக் கடனாகக் கொடுத்த பணத்தில் கோலாலம்பூர், பங்சாரில் ரிம9.8மில்லியனுக்கு  ஓர் ஆடம்பர கொண்டோமினியம் வாங்கப்பட்டிருப்பதாகக் கூறியது. கொண்டோ வாங்கப்பட்ட பணம், கூட்டரசு அமைச்சர் ஒருவரின் கணவர் மற்றும்…

புதிதாக பதிவு செய்ய பக்காத்தான் முயன்றதா? மறுக்கிறது ஆர்ஓஎஸ்

பக்காத்தான் ரக்யாட் அக்கூட்டணியைப் பதிவுசெய்ய அதன் பிரதிநிதியை அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படுவதை சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்) தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் மறுத்துள்ளார். உத்துசான் மலேசியாவுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், பக்காத்தான் தலைவர்களான பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், பாஸ் தேர்தல் இயக்குனர் டாக்டர் ஹத்தா ரம்லி,…

“பெயரளவுக்கு” சேர்க்கும் காலம் மலையேறி விட்டது: நோர் முகமட்

பூமி கோட்டாவை நிரப்புவதற்காக பெயரளவுக்கு பூமிபுத்ராக்களைச் சேர்த்துக் கொண்டு தங்கள் நிறுவனங்களில் "குறிப்பிட்ட பதவிகளில் அமர்த்தி உண்மையான பூமிபுத்ரா பங்கேற்பை அனுமதிக்காத" தனியார் நிறுவனங்களை பிரதமர் துறையில் பொருளாதாரத் திட்டப் பிரிவுக்குப் பொறுப்பாக உள்ள அமைச்சர் நோர் முகமட் யாக்கோப் சாடியிருக்கிறார். "தனியார் துறை 'பெயரளவுக்கு' பூமிபுத்ராக்களைச் சேர்க்கும்…

பிகேஆர்: “நஜிப்பை வீழ்த்துவதற்கு ஆயுதங்கள் தயார் நிலையில்’ இருப்பதைப் புத்தகம்…

அம்னோ விவகாரங்களுடைய பரிதாபகரமான நிலைக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது பழி போடப்பட்டாலும் அந்த மலாய் தேசியவாதக் கட்சியின் சிரமங்களுக்கு அதன் கூட்டுத் தோல்வியே காரணம் என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறுகிறார். Kesilapan-kesilapan Najib (நஜிப்பின் தவறுகள்) என்ற தலைப்பைக் கொண்ட அந்தப்…

மகாதிர்: வலைப்பதிவுகள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழி

வலைப்பதிவுகள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழி. அரசியல் தலைவர்கள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழியாக வலைப்பதிவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “கட்சிகளில் கருத்துகளைச் சொல்ல இடமளிக்காதபோது நம் கருத்துகளை வெளியிட வலைப்பதிவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கட்சிகளில் அவர்கள் (தலைவர்கள்) சில நேரங்களில் எதையும் செவிமடுக்க…

பிரதமர் முன்னாள் எம்பிகள் சந்திப்பு: நாடாளுமன்றக் கலைப்பின் அறிகுறியா?

சீன நாளேடு ஒன்றில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பணி ஓய்வுபெற்ற பிஎன் எம்பிகளை இன்று சந்திப்பார் என்று வெளிவந்திருக்கும் செய்தி விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற வதந்திக்கு மேலும் வலுச்சேர்ப்பதுபோல் அமைந்துள்ளது. 13-வது  பொதுத் தேர்தல் தொடர்பில் சந்தித்துப் பேச எல்லா…

அழியா மை இப்போதே வேண்டும், பக்காத்தான் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி)-இல் இடம்பெற்றுள்ள பக்காத்தான் ரக்யாட் எம்பிகள், இன்று அக்குழு நான்காவது தடவையாகக் கூடிப்பேசும்போது உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய சீரமைப்புகளை உடனே அமல்படுத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு (இசி) அழுத்தம் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.  “அழியா மை, முன்கூட்டிய வாக்களிப்பு போன்ற பரிந்துரைகளை இசி உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்…

‘கெமாஸ் கோல்ட்’ வாக்யூ மாட்டிறைச்சியைப் போன்று விலை உயர்ந்தது

மலேசியர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்கின்றனர். போதுமான விநியோகம் இல்லாததும் இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சி விலை அதிகமாக இருப்பதும் சாதாரண மனிதருக்கு பெரும் சுமையாக இருந்தது. இவ்வாறு சமூக மேம்பாட்டுக்கான ஆய்வு மய்யம் கூறுகிறது. அதனால் 2008-ம் ஆண்டு கால் நடை வளர்ப்புக்காக அரசாங்கம் என்எப்சி என்ற தேசிய விலங்குக்…

‘நானும் கடுமையாக உழைக்கிறேன்; எனக்கும் அரசாங்கத் திட்டம் தேவை

"ஷாரிஸாட் அவர்களே, உங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக நீங்கள் முடிவு எடுக்கக் கூடாது. நீங்கள் பொது மக்களுடைய பிரதிநிதி. அது போன்று நடந்து கொள்ளுங்கள்." ஷாரிஸாட்: என் குடும்பத்தை தாக்க வேண்டிய அவசியமில்லை டாக்டர் ஜேக்கப் ஜார்ஜ்: அரசாங்க நிதிகள் பயன்படுத்தப்படும் போது இயக்குநர்கள் குழு ஒன்றுக்குச் சொந்தமான ஒரு…

ஸ்ரீஅண்டலாஸ் தொகுதி மக்களின் 7 கோரிக்கைகள், சேவியர்

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும்  அவரின் அமைச்சரவை சகாக்களும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற தொகுதியில் இவ்வாண்டு தீபாவளியை கொண்டாட வருவதை வருக வருக என்று வரவேற்கிறேன் என்று கூறுகிறார் அச்சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான சேவியர் ஜெயக்குமார். "கடந்த 42 மாதங்களாக என்னுடன்…