குவாந்தானில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சல் வாக்காளர்களாக மாறியுள்ளனர்

குவாந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் 3950வாக்காளர்கள் இராணுவ, போலீஸ் வாக்காளர்களாக மாற்றப்பட்டிருப்பதாக குவாந்தான் எம்பி பவுசியா சாலே கூறுகிறார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பவிசியா, வாக்காளர்கள் அனைவருமே 30 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் என்பதால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார். “30 வயதுக்குமேல் இராணுவத்தில் அல்லது…

ஏஜி,மூசாமீது நடுவர் மன்றம் அமைக்கும் அவசரத் தீர்மானம் நிராகரிப்பு

சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசான் ஆகியோர் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுக்கும் அவசரத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் நிராகரித்தார். சுபாங் எம்பி ஆர்.சிவராசா (பிகேஆர்),பதிவு செய்த அத்தீர்மானம் திட்டவட்டமாக எதையும்…

குப்பைக்கொட்டுமிடங்களில் அரசியாரை வரவேற்கும் பதாகைகளைக் கண்டு எம்பிபிபி எரிச்சல்

பேரரசியார் துவாங்கு ஹமினா ஹமிடுன் நாளை,  தங்கக் கட்டிகளையும் நாணயங்களையும் வாங்கி விற்கும் நிறுவனமான பப்ளிக் கோல்ட் இண்டர்நேசனல் பெர்ஹாட்(பிஜிஐபி)டின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதற்காக பினாங்கில் பல இடங்களில் பேரரசியாருக்கு வரவேற்பு கூறும் பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. ஆனால், பதாகைகளில் சில “பொருத்தமற்ற”  இடங்களில் காணப்படுவது…

“கல்வியில் வஞ்சிக்கப்படும் மலேசிய இந்தியர்கள்” – ஹிண்ட்ராப் கருத்தரங்கம்

பாலர்பள்ளி துவங்கி பல்கலைக்கழகம் வரை இனரீதியான இருவேறு கல்வி கொள்கைகளினால் மிகவும் பாதிக்கப்பட்ட  நிலையில் நம் இந்திய மாணவர்கள் கல்வியில் வஞ்சிக்கப்படுவதை நடுநிலையிலிருந்து சிந்திக்கும் எவராலும் மறுக்க இயலாது. இக்கொள்கையின் விளைவு இன்று நம் இன மாணவர்கள் எதிநோக்கும் கல்வி பாரபட்சம். இந்தக் கல்வி அவலநிலையினால் நம் எதிர்கால…

வெள்ளை ஷரிசாட்டையும் குடும்பத்தையும் காப்பாற்றாது

உங்கள் கருத்து: “அம்னோவில் பலரும் கட்சி தங்களைப்  பாதுகாக்கும் என்று நம்புகிறார்கள். ஏனென்றால், கட்சித் தலைவர்களில்  பலர் அவர்களைப் போல, சிலர் அவர்களைவிடவும் மோசமான தப்புகளைச் செய்தவர்கள்தானே.” என்எப்சி தலைவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார் டாக்: ‘கவ்கேட்’ வழக்கு இப்படித்தான் இருக்கும்.முகம்மட் சாலே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாரா. ஆம், நிறுத்தப்பட்டார். இனி.…

ரபிடா:அதுவா பதவி விலகல்?

மகளிர், குடும்ப,சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலில் ‘பதவிவிலகுவதாக’ அறிவித்ததில்  தியாகம் என்பது எதுவும் இல்லை எனச் சாடியுள்ளார் முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ரபிடா அசீஸ். ஷரிசாட் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் அவரது அமைச்சர் பதவி அவரின் செனட்டர் பதவிக்காலம் ஏப்ரல் 8-இல் முடிவடையும்போது தானாகவே முடிவுக்கு…

அந்தப் பணத்தை பின் தொடர்ந்து செல்லுங்கள் உண்மை வெளியாகும்

"ஷாங்ரிலா ஹோட்டலில் பரிவர்த்தனைகள் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த ஆதாரத்தைக் காட்டுங்கள். அத்துடன் எல்லாம் முடிந்தது." திருமண நிச்சயதார்த்த விருந்துக்குப் பிரதமர் பணம் கொடுத்தார் சரவாக் டயாக்: நல்லது. அந்த பில்லுக்குப் பணம் கட்டியது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகும். பிரதமர் அலுவலகம் அல்ல. அந்தப் பணம்…

நிச்சயதார்த்த விருந்துக்குப் பிரதமர் பணம் கொடுத்தார்:ஹோட்டல் விளக்கம்

ஷங்ரிலா ஹோட்டல் கோலாலம்பூர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் அவரின் மகள் நிச்சயதார்த்த விருந்துக்குப் பணம் கொடுத்தார் என்றும் அரசாங்கம் அல்ல என்றும் விளக்கமளித்துள்ளது. “அந்நிகழ்வு ஜூன் 17-இல் நடந்தது.அதற்கான பணத்தை ஜூன் 30-இல் மாண்புமிகு பிரதமர்தான்  முழுமையாக செலுத்தினார்.பிரதமர் அலுவலகம் அதைச் செலுத்தவில்லை”, என்று அது ஒரு…

அவைத்தலைவர்: என்எப்சி மீது விவாதம் தேவையில்லை

மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, நேசனல் ஃபீட்லோட் செண்டர்(என்எப்சி) விவகாரம் பற்றி  விவாதிக்க வேண்டும் என்று கோரும் அவசர தீர்மானம் ஒன்றை நிராகரித்தார்.அவ்விவகாரம்  நீதிமன்ற விசாரணையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அத்தீர்மானத்தைக் கொண்டுவந்த ஜுரைடா கமருடின்(பிகேஆர்-அம்பாங்), என்எப்சி தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டிருப்பது தமக்குத்…

அவசரத் தீர்மானத்தில் ஏஜிமீது நடுவர் மன்றம் அமைக்கக் கோரிக்கை

சட்டத்துறைத் தலைவர்(ஏஜி)அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசான் ஆகியோர் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று பேரரசரிடம் பிரதமர் கோரிக்கை விடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அவசரத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. அதைப் பதிவுசெய்த சுபாங் எம்பி…

நோ ஒமார் என்எப்சி சர்ச்சை குறித்து கருத்துரைப்பதைத் தவிர்த்தார்

நேற்றிரவு விவசாயம்,விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சுக்குச் சென்ற பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) சர்ச்சை பற்றிய விளக்கத்தைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அமைச்சர் அமைச்சர் நோ ஒமார் அந்த விவகாரத்தைத் தொடாதது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அக்கூட்டத்தில் நோ, பிஎன் எம்பிகளின் தொகுதிகளுக்கான அமைச்சின் நிதிப்…