எதிர்க்கட்சி ஆதரவாளரான ஊனமுற்றவருக்கு உதவி நிறுத்தப்பட்டதை மொங், சரி என்கிறார்

எதிர்க்கட்சி ஆதரவாளரான குடியானவர் பூருஸிஸ் லெபி-க்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை நிறுத்துமாறு விவசாயத் துறைக்குத் தாம் உத்தரவிட்டதை சரவாக் மாநில விவசாயத் துணை அமைச்சர் மொங் டாஹாங், சரி எனச் சொல்லியிருக்கிறார். பூருஸிஸுக்கான உதவிகளை நிறுத்துமாறு சமூக நலத் துறைக்கு தாம் ஆணையிட்டதையும் புக்கிட் பெகுனான் சட்ட மன்ற…

தூய்மையான ஆளுமை கோரி ‘திறன் மிக்க’ மகளிர் பேரணி

தூய்மையான நல்ல ஆளுமை கோரி மார்ச் 18ம் தேதி பெட்டாலிங் ஜெயா சாலைகளில் 5,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாகச் சென்று பொதுத் திடல் ஒன்றில் ஒன்று கூடுவர். நாங்கள் 5,000 பெண்களை எதிர்பார்க்கிறோம். நாங்கள் மூன்று இடங்களில் கூடி ஆஸ்தாக்கா திடலை நோக்கி நடந்து  செல்வோம்," என ஏற்பாட்டாளரான…

பெட்ரோனாஸ் ஆதாயம் சரிவு, நிச்சயமற்ற சூழ்நிலைகள் குறித்து எச்சரிக்கை

கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முடிந்த மூன்று மாதங்களில் பெட்ரோனாஸுக்கு கிடைத்த ஆதாயம் 15.6 பில்லியன் ரிங்கிட் ஆகும். 2010ம் ஆண்டு அதே காலத்தில் பதிவான ஆதாயம் 23.7 பில்லியன் ரிங்கிட் ஆகும். அந்த ஆதாயச் சரிவு 34 விழுக்காட்டு வீழ்ச்சியைக் குறித்தது. அந்தத் தகவல் பெட்ரோனாஸ்…

எதிர்த்த இருவர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டனர்

பாஹ்ரோல்ராஸியும் இஸ்மாயில் சாலேயும் ஆட்சி மன்ற உறுப்பினர் நியமனங்களை ஏற்றுக் கொள்வர்.  அதனால் கெடா பாஸ்-ஸில் எழுந்த தலைமைத்துவ நெருக்கடி தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் ஆட்சி மன்ற உறுப்பினர்களைக் கண்காணிக்க நடவடிக்கைக் குழு ஒன்றை அமைக்க பாஸ் மத்தியக் குழு ஒப்புக் கொண்டதில் தாங்கள் மன நிறைவு…

பிஆர்1எம் மறுக்கப்பட்டதால் ஓராங் அஸ்லி ஆத்திரம்

வருமானம் ஏதுமில்லாத நிலையிலும், தம் பிஆர்1எம் மனு நிராகரிக்கப்பட்டதை அறிந்து ஓர் ஓராங் அஸ்லி கொதிப்படைந்துள்ளார். ஹுலு லங்காட் கம்போங் ஓராங் அஸ்லி பூலாவ் கெம்பாவைச் சேர்ந்த தேவி மாலாம், 54, அந்த உதவித் தொகை பெற தகுதி பெறவில்லை என்று நிதி அமைச்சு தமக்குக் கடிதம் அனுப்பி…

மோட்டார் சைக்கிளோட்டியை போலீஸ்காரர் “உதைத்தது” தொடர்பில் பொது மக்கள் ஆத்திரம்

சாலைத் தடுப்பு ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு 14 வயதான மோட்டார் சைக்கிளோட்டியை "உதைத்தாக" கூறப்படும் போலீஸ்காரர் ஒருவருடைய படங்களை இணையத்தில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர். அந்தச் சம்பவத்தில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி கடுமையாகக் காயமடைந்துள்ளார். வன்முறை எனக் கூறப்படும் அந்தச் சம்பவம் மீது ஆயிரக்கணக்கான மக்கள்…

லினாஸை மக்கள் ஏற்றுக் கொண்டதாகக் கூறும் அரசாங்கக் கருத்துக் கணிப்பு…

குவாந்தான் கெபெங்கில் அரிய மண் தொழில் கூடம் அமைவது மீது கருத்துத் தெரிவித்தவர்களில் 97 விழுக்காட்டினர் ஒப்புதல் அளித்தனர் என்று கூறும் கருத்துக்கணிப்பின் "ஆதாரம் துல்லிதம்" ஆகியவை குறித்து கெரக்கான் இன்று ஐயம் தெரிவித்துள்ளது. அந்தக் கருத்துக் கணிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வழி முறை பற்றி அந்தக் கட்சியின் இளைஞர்…

பேருந்து விபத்தில் இரு இந்திய சுற்றுப்பயணிகள் பலி,20பேர் காயம்

கோலாலம்பூருக்கு அருகில், கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் 22 இந்திய சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து தடம்புரண்டதில் இருவர் உயிரிழந்தனர்,மேலும் 20பேர் காயமடைந்தனர். கெந்திங் மலையிலிருந்து வந்துகொண்டிருந்த அப்பேருந்து காலை மணி 8 வாக்கில் குறுகலான வளைவில் திரும்ப முனைந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததாக போலீசார் தெரிவித்தனர். “சாலைத்தடுப்பில் மோதி அது…

பாஸ்:லினாஸ் கழிவு அபாயமிக்கது என்பதை நஜிப் ஒப்புக்கொள்கிறார்

லினாஸ் ஆலையில் உருவாகும் கழிவுப்பொருள்கள் மக்கள் அதிகம் வசிக்காத இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொட்டப்படும்  என்று அரசாங்கம் அறிவித்திருப்பது ஆலையிலிருந்து வெளிவரும் கழிவு அபாயமிக்கது என்பதை அரசாங்கம் அறிந்துள்ளதைக் காட்டுவதாக பாஸ் கூறியுள்ளது. கழிவுப்பொருள் கொட்டுமிடம் மாற்றப்படுவதை வைத்து கழிவுப்பொருள் அபாயமிக்கது என்று முடிவு செய்துவிட வேண்டாம் என்று பிரதமர்…