போலீஸ், பாஸ் அமால் பிரிவை எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்

"அமால் பிரிவு தொண்டர்களுக்கு, நீங்கள் செய்தது பாராட்டப்பட வேண்டிய பணியாகும்.  ஏளனம் செய்தவர்களை நாம் அடித்துத் துன்புறுத்த வேண்டியதில்லை. காரணம் நாம் அவர்கள் அளவுக்குத் தாழ்ந்து போகக் கூடாது." பக்காத்தான் செராமாவில் ஏளனம் செய்தவர் பிடிக்கப்பட்டார். நியாயமான சுதந்திரமான தேர்தல்: அது அமால் பிரிவு செய்துள்ள நற்பணியாகும். நல்ல…

அதிகச் செலவில் அலுவலகத்தைப் புதுப்பித்ததாகக் கூறப்படுவதை சேவியரும் ஹலிமாவும் மறுத்தனர்

சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் டாக்டர் ஹலிமா அலியும் தங்களது அலுவலகங்களை அதிகச் செலவில் புதுப்பித்துக் கொண்டதாக தங்களது முன்னாள் சகா ஹசான் அலி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். 2008ம் ஆண்டு கல்வி, உயர் கல்வி, மனித வள மேம்பாட்டுத் துறைக்கு பொறுப்பேற்ற பின்னர்…

ஹசான்: இரண்டு ஆட்சி மன்ற உறுப்பினர்கள் என்னை விட அதிகமாக…

சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி, தமது இரண்டு முன்னாள் சகாக்களான- டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் ஹலிமா அலியும்- தம்முடன் ஒப்பிடுகையில் தங்களது அலுவலகங்களை புதுப்பிப்பதற்குக் கணிசமான அளவு கூடுதலாகச் செலவு செய்துள்ளதாக கூறிக் கொண்டுள்ளார். "சிலாங்கூர் அரசாங்கம் என் செலவுகளையும் அதே நேரத்தில்…

காடிர்: உயர்தலைவர்கள் என்னை வெளியேற்றத் திட்டமிட்டனர்

அமானா துணைத் தலைவர் காடிர் ஷேக் ஃபாதிர், தாம் அம்னோவிலிருந்து விலகியதற்குக் அக்கட்சிக்குச் சொந்தமான ஊடகங்களில் விடாமல் வந்துகொண்டிருந்த தாக்குதல்களும் மிரட்டல்களும்தான் காரணம் என்கிறார். அம்னோவின் நீண்டகால உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான காடிர், “அதிகாரத்தில் உள்ளவர்களின் ஏற்பாட்டில்தான்” ஊடகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக் கூறினார். “அதனை அடுத்து அம்னோ தலைமைச்…

பணி ஓய்வுச் சட்டம் இவ்வாண்டில் வருமெனத் தோன்றவில்லை

தனியார்துறை பணிஓய்வு வயதை 55-இலிருந்து 60-க்கு உயர்த்தும் உத்தேச சட்டமுன்வரைவு இவ்வாண்டில் சட்டம் ஆகுமெனத் தெரியவில்லை என்கிறார் மனிதவள அமைச்சர் எஸ்.சுப்ரமணியம். அச்சட்ட முன்வரைவைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அலசி ஆராய வேண்டியிருப்பதாக அமைச்சர் கூறினார். “(அது)நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படமாட்டாது.அடுத்தக் கூட்டத்தில்தான் கொண்டுவரப்படும்”, என்று ஆங்கில…