பள்ளிவாசலில் ஏடாகூடம் வேண்டாம், பக்காத்தானுக்கு பெகிடா எச்சரிக்கை

மலாய்  என்ஜிஓ-வான பெகிடா, 901 பேரணி நடத்தும்போது கூட்டரசுப் பிரதேசப் பள்ளிவாசலில் ஏடாகூடமாக நடந்துகொள்ளக்கூடாது என்று பக்காத்தானை எச்சரித்துள்ளது. “அமைதிப் பேரணி நடத்துகிறீர்களா, நடத்துங்கள். ஆனால் பள்ளிவாசலில் வந்து தொல்லை கொடுக்கக்கூடாது. அதை பெகிடா பார்த்துக் கொண்டிருக்காது”, என்று பெகிடா உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் ஷியாரில் அப்துல் அசீஸ் கூறினார்.…

நீதிமன்றத்துக்கு வெளியில் 901 பேரணிக்கு போலீஸ் அனுமதி

திங்கள்கிழமை டூத்தா நீதிமன்ற வளாகக் கார் நிறுத்துமிடத்தில் பக்காத்தான் ரக்யாட் "901அன்வார் விடுதலைப் பேரணி" நடத்த போலீசார் அனுமதி அளிக்க இணங்கியுள்ளனர். இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் இரு தரப்பினரும் ஒரு மணி நேரம் நடத்திய பேச்சுகளைத் தொடர்ந்து இந்த இணக்கம் காணப்பட்டது. போலீசாருடனான பேச்சுகளில் பிகேஆர் பேராளர்களுக்குத்…

901 ஆர்ப்பாட்டத்தில் சேர வேண்டாம் என வெள்ளிக்கிழமை தொழுகை உரை…

தெரு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதின் மூலம் "மோசமான தவறை" செய்ய வேண்டாம் என கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகைகளில் கலந்து கொண்டவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாட்டாளர்களுடன் "ஒத்துழைக்கின்றவர்கள்', "முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டுக்கும் எதிராக கடுமையான தவறைச் செய்கின்றனர்" என ஜாக்கிம் எனப்படும் இஸ்லாமிய…

“தொகுதியில் இல்லாத வாக்காளர்கள்” என அறிவிக்கப்படுவதற்கான முயற்சியில் தோல்வி

தாங்கள் "தொகுதியில் இல்லாத வாக்காளர்கள்" என பதிவு செய்யப்பட வேண்டும் என பிரிட்டனில் வேலை செய்யும் ஆறு மலேசியக் குடி மக்கள் செய்து கொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. டாக்டர் தியோ ஹுன் சியோங் சமர்பித்த அந்த விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த நீதிபதி ரோஹானா யூசோப்,…

பிகேஆர்:அம்னோ சொல்லிக்கொடுத்ததை ஹசன் அலி ஒப்புவிக்கிறார்

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, 901 அன்வார் விடுதலை பேரணி குறித்து சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள ஹசன் அலி தெரிவித்த கருத்துகளைச் சாடியுள்ளார்.பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் நாளான திங்கள்கிழமை அப்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “ஹசன் அலியின் கண்களும்…

இப்ராஹிம் அலி இந்த முறையும் பதுங்கி விடுவாரா ?

"ஆர்ப்பாட்டங்கள் இனிமேலும் பொருத்தமாக இருக்காது" என நீங்கள் சொன்ன வார்த்தை எங்கே போனது ? இப்ராஹிம் அலி அவர்களே அதனையே நீங்கள் காப்பாற்றவில்லை." 901 பக்காத்தானுடன் மோதுவதற்கு பெர்க்காசா திட்டமிடுகிறது என்எம்என்டி: அந்த பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி 1990ம் ஆண்டுகளின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் பிரபலமாக திகழ்ந்த அரசியல்வாதியான…

அன்வார்: “நான் ஜெயிலில் இருக்கும் போது இடைக்காலப் பிரதமர்” பொறுப்பேற்பார்

அடுத்த தேர்தலில் எதிர்த்தரப்புக் கூட்டணி ஆட்சிக்கு வந்து அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஜெயிலுக்குள் இருந்தால் பக்காத்தான் ராக்யாட் இடைக்காலப் பிரதமர் ஒருவரை நியமிக்கும். இவ்வாறு அடுத்த சில நாட்களில் தமக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மலேசியாகினிக்கு அளித்த…

பிரதமர் பதவிக்கு நிக் அசிஸ், ஹாடி பொறுத்தமானவர்கள், ஹசான் அலி

எதிர்வரும் திங்கள்கிழமை அன்வார் இப்ராகிம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டால், கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் பாஸ்சின் முன்னாள் உதவித் தலைவர் ஹசான் அலி. வயது ஒரு கூறாக இருக்குமானால், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி…

தமிழ்ப்பள்ளிகளின் நிலப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: சேவியர்

தற்போது முக்கிய பிரச்சனையாக உள்ள தமிழ்ப்பள்ளிகளின் நிலப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார். இதுவரை தமிழ்ப்பள்ளிகளின் பெயரில் பதிவுசெய்யப்படாமல் உள்ள நிலங்களை அந்தந்த தமிழ்ப்பள்ளிகளின் பெயரில் பதிவு செய்வதற்கு சிலாங்கூர் அரசாங்கம் மூலம் நடவடிக்கை…

உத்துசான் அன்வாருடைய இன்னொரு முன்னாள் தோழரைக் களமிறக்குகிறது

நாடு கடந்து வாழும் வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதினை அடுத்து அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா அன்வாருக்கு எதிராக அவருடைய இன்னொரு முன்னாள் தோழரை- இப்போது அன்வாருடைய சமய நம்பிக்கைகளை இலக்காகக் கொண்டு பேட்டி கண்டுள்ளது. அபிம் எனப்படும் Angkatan Belia Islam Malaysia அமைப்பை அன்வாருடன் இணைந்து…

அம்னோ உயர் தலைவர்களே என் எதிரிகள் என்கிறார் அன்வார்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு நெகிரி செம்பிலானில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அம்னோ உயர் தலைவர்களின் பலவீனங்களை எடுத்துக் காட்டி சாடினார். "அம்னோ உறுப்பினர்களும் கீழ் நிலையில் உள்ள அம்னோ தலைவர்களும் என் எதிரிகள் அல்ல. அம்னோ உயர் தலைவர்களே என் மீது எல்லாக் கோணங்களிலிருந்தும் அவதூறுகளை…

பெல்டா குடியேற்றக்காரர்கள்: “இசா சாமாட்டை KPFB-லிருந்து விலக்கி வையுங்கள்”

Koperasi Permodalan Felda Bhd (KPFB) என்ற கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் இருக்க முடியாது என மலேசிய கூட்டுறவு ஆணையத்துக்கு தெரிவித்துள்ள பல பெல்டா குடியேற்றக்காரர்கள் இப்போது அந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்கின்றனர். இசா நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்து இந்த மாதத்தில்…

“நான் சிறையிலடைக்கப்பட்டால், அது பக்கத்தானை வலுப்படுத்தும்”, அன்வார்

தமக்கு எதிரான குதப்புணர்சி II வழக்கில் நீதிமன்றம் திங்கள்கிழமை தமக்கு எதிராக தீர்ப்பளித்தால் அது அவருடைய கட்சிக்கு கூடுதல் வலுவைக் கொடுக்கும் என்று பக்கத்தான் எதிரணியின் தலைவர் அன்வார் கூறினார். இரண்டு ஆண்டுகளாக நடந்த அந்த வழக்கில் ஜனவரி 9 இல் அளிக்கப்படும் தீர்ப்பைத் தொடர்ந்து அமைதியின்மை ஏற்படுவதற்கான…

போலீசார் அன்வார் 901 பேரணி தொடர்பில் “கலகத் தடுப்பு” நடவடிக்கைகளை…

வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. அதனை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பேரணிக்கு எதிராக சமூக ஊடக இயக்கத்தை போலீசார் தொடங்கியுள்ளனர். போலீஸ் படையின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்திலும் டிவிட்டர் பக்கத்திலும்…

பினாங்கு என்ஜிஓகளின் போக்கு முதல்வருக்குப் புரியவில்லை

பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங், சுயேச்சையாக செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் அரசுசாரா அமைப்புகள் சில, மாநில அரசின் கொள்கைகளைக் குறைசொல்வதையே வாடிக்கையாகக் கொண்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டங்களின்போது அவற்றின் பிரதிநிதிகள் விவகாரங்களைப் புரிந்துகொண்டவர்கள்போலத்தான் காணப்படுகிறார்கள்.ஆனால், அதன்பின்னர் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் அந்தப் புரிதலைப் பிரதிபலிக்கவில்லை.…

“போலீசுக்குக் கையூட்டுக் கொடுக்க முயன்றதாக NFC தலைவர்மீது குற்றம் சுமத்துக”

நேசனல் ஃபீட்லாட் கார்பரேஷன் (NFC) தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயிலைக் கைது செய்து போலீசுக்கும் எம்ஏசிசி அதிகாரிகளுக்கும் கையூட்டுக் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சுமத்த வேண்டும் என்று பிகேஆர் கேட்டுக்கொண்டிருக்கிறது.   “முகம்மட் சாலே (ஷாம்சுபரின் இஸ்மாயிலுக்கு) வழங்கிய ரிம1.755மில்லியன் போலீஸ், எம்ஏசிசி அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுப்பதற்காக வழங்கப்பட்டதாகும்…

பினாங்கில் 48 புதிய கவுன்சிலர்கள் நியமனம்:ஒருவர் செய்தியாளர்

பினாங்கு மாநில அரசு 2012-2013-க்கு 48 புதிய முனிசிபல் கவுன்சிலர்களை நியமனம் செய்துள்ளது.அவர்களில் ஒருவர் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றின் நிருபரான எஸ்.குணாளன். கொம்டாரில், கவுன்சிலர் பெயர்களை அறிவித்த பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ, குணாளன், 46, 1990-இலிருந்து டிஏபி உறுப்பினர் என்றார். அவர், பிறை தாமான்…

குற்றச்சாட்டுகளை மறுக்க போலீஸ் இணையத்தை நாடியுள்ளது

யூபிஎஸ்ஐ என்ற Universiti Pendidikan Sultan Idris பல்கலைக்கழகத்தில் கல்விச் சுதந்திரம் கோரி  மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது தாங்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுவதை நிராகரிப்பதற்கு போலீசார் நான்கு வீடியோ ஒளிநாடாக்களை இணையத்தில் சேர்த்துள்ளனர். PDRMsia என்னும் பயனாளி அந்த வீடியோக்களை யூ டியூப் இணையத் தளத்தில்…

‘குழப்பமான சூழ்நிலைகளில்’ கண்ணீர் புகைக் குண்டுகள் துங் ஷின் மருத்துவமனைக்குள்…

துங் ஷின் மருத்துவமனை வளாகத்துக்குள் கூடிய பெர்சே 2.0 பங்கேற்பாளர்களைக்  கலைக்கும் நோக்கத்துடன் அந்த மருத்துவமனையின் பல மாடிகளைக் கொண்ட கார் நிறுத்துமிடத்தின் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இரசாயனம் கலக்கப்பட்ட நீர் பாய்ச்சப்பட்டது என சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறிக் கொண்டுள்ளார். "மிகவும் குழப்பமான…

புதிய கூலிம் மாவட்ட அதிகாரி மதுபான தடையை நீக்குகிறார்

அரசியல் களத்தில் இருபுறமுள்ளவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட கூலிம் மாவட்ட அதிகாரி முகமட் சொஹ்டி சாஆட் தமக்கு முன்பு பதவி வகித்தவர் அறிமுகம் செய்த மதுபான தடையை நீக்கப் போவதாக அறிவித்துள்ளார். கூலிமுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி மாற்றப்பட்ட  சொஹ்டி, ஜனவரி…

டிஏபி ஒழுங்கு வாரியம் “டெய்லர்-கேட்”விவகாரத்தை விசாரிக்கும்

பேராக்கை சிறிதுகாலம் பக்காத்தான் ரக்யாட் ஆண்டபோது மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த பேராக் டிஏபி செயலாளர் இங்கா கொர் மிங், தம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தினார் என்று கூறப்படுவது பற்றி விசாரிக்கும்படி கட்சியின் ஒழுங்கு வாரியத்துக்கு டிஏபி தலைமை உத்தரவிட்டுள்ளது. நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற மத்திய செயல்குழுக் கூட்டத்தில்…