நஜிப் கழுத்தைச் சுற்றியுள்ள கழுகுகள்

இந்த விவகாரம் நஜிப்பின் நம்பகத்தன்மை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சியும் பெரிய முட்டுக் கட்டை ஆகும். அந்த ஜமீன்தார்கள் புதிய பொருளாதாரக் கொள்கையில் ஊறிப்போய் பயனடைந்தவர்கள். அவர்களுக்கு எப்படி விரைவாக பணக்காரராவது மட்டுமே தெரியும். நஜிப் உண்மை நிலைக்கும் கானல் நீருக்கும் இடையில் அல்லாடுகிறார்…

பொருளாதார மந்த நிலை குறித்த அச்சத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது

உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படக் கூடும் என்னும் அச்சத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "வால் ஸ்டீரிட் என்ற நியூயார்க் பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது உங்களுக்குத் தெரியும். ஆகவே நாம் சூழ்நிலையை மிகவும் அணுக்கமாக கவனிக்க வேண்டியுள்ளது," என அவர்…

சடலம் குறித்த தகராற்றில் புதிய திருப்பம்

இஸ்லாத்துக்கு மதம் மாறியவர் எனக் கூறப்படும் லாரன்ஸ் செல்வநாதனுடைய சடலத்தை அவரது நண்பர்கள் சுயமாக செயல்பட்டு உடலைத் தகனம் செய்து விட்டதால் லாரன்ஸின் குடும்பத்துக்கு புதிய பிரச்னைகள் தோன்றியுள்ளன. இறுதிச் சடங்களுக்காக லாரன்ஸின் சடலத்தை சிரம்பானில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குக் கொண்டு சென்ற அவரது நண்பர்கள் அந்த சடலத்தித்…

கோ: பினாங்கு முதலமைச்சர் குறித்து ஊகங்கள் வேண்டாம்

பினாங்கு முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் குறித்து ஊகிப்பதில் அளவுமீறி பரபரப்பு காண்பிக்க வேண்டாம் என்று பிரதமர்துறை அமைச்சர் கோ சூ கூன் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்கள், பிரதமர்  பொதுத்தேர்தல் தேதியை அறிவிக்கும்வரை காத்திருக்க வேண்டும். கெராக்கான் தலைவருமான கோ, கட்சிக்கென தனி வியூகம் இருப்பதாகவும் அது திட்டங்களிலும்…

ஹூடூட் சட்டம் கொண்டுவந்தால் மசீச அம்னோவைவிட்டு விலகிச்செல்லும்

மசீச, தன் ஹூடுட்-எதிர்ப்பு நிலைப்பாட்டை  மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அம்னோ, இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்தால் நீண்டகாலத் தோழமைக் கட்சியான அதைவிட்டுப் பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அது தெரிவித்தது. “அம்னோ ஹூடுட் சட்டத்தைக் கொண்டுவர முனைந்தால் மசீச அதற்கு உடந்தையாக இராது”, என்று கட்சித் தலைவர் டாக்டர் சுவா…

பிகேஆரும் தேர்தல் வேட்பாளர்களும்

பிகேஆர் ஒரு புதிய கட்சி என்பதால் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில்-2004 இலும் 2008 இலும்-வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பது அதற்குப் பெரும்பாடாக இருந்தது. அது, அப்போது. இப்போது அப்படி இல்லை என்கிறார் பினாங்கு பிகேஆர் தலைவர் மன்சூர் ஒஸ்மான். தகுதியான வேட்பாளர்கள் குவிந்து கிடக்கிறார்கள். யாரைத் தேர்வு…

இறந்தவர் முஸ்லிமா?

[2-ம் இணைப்பு] இன்று பிற்பகல் மணி 3.00 க்கு மரணமுற்ற லாரன்ஸ் செல்வநாதன், 33, என்பவரின் உடல் சிறம்பானிலுள்ள தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சடங்குகள் முடிவுற்ற பின்னர் அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், போலீசாரும் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகார இலாகா அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரை அவ்வாறு…

உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம், மகாதீர்

ஆளும் கூட்டணி ஊழல் நிறைந்தது என்னும் எண்ணத்தை மாற்றுவதற்கு உங்கள் தோற்றத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வளப்பத்தை செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்காதீர்கள் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பிஎன் தலைவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் உட்பட கோலா சிலாங்கூரில் கூடியுள்ள 400 பிஎன்…

கிளந்தானில் ஹூடுட் சட்டத்துக்கு அன்வார் ஆதரவு

கிளந்தானில் ஹூடுட் சட்டம் செயல்படுத்துவதைத் தனிப்பட்ட முறையில் தாம் ஆதரிப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். அது முஸ்லிம்-அல்லாதாரின் உரிமைகளை மீறாது என்றும் அதில் நீதி நிர்வாகத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். “கொள்கை அளவில் அதை அங்கு செயல்படுத்தலாம் என்றே நம்புகிறேன்.நீதி நிர்வாகம்…

சட்டவிரோத பேரணி வழக்கைக் கைவிடுக என்ற கோரிக்கை நியாயமானதே

சட்டவிரோத பேரணிகள் தொடர்பான வழக்குகளைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் கைவிட வேண்டும் என்பது “நியாயமான வேண்டுகோள்” என்கிறார் நடப்பில் சட்ட அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் மலேசிய தினச் செய்தியில் அறிவித்த பல சீரமைப்புகளில் பொது இடப் பேரணி தொடர்பான…

முஹைடின்: நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு ஆறு மாத காலக்கெடு வழங்கப்படும்

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பரிந்துரைகளை வழங்குவதற்கு ஆறு மாதம் அவகாசம் கொடுக்கப்படும். அந்தத் தகவலை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று வெளியிட்டார். நாடாளுமன்றம் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி மீண்டும் கூடும் போது அந்தக் குழுவை அமைப்பதற்கான மசோதா சமர்பிக்கப்படும். அந்தக்…

பினாங்கில் பிரதமருடைய அற நிதி நன்கொடை நிகழ்வு ‘கடத்தல்’ எனக்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அற நிதி நன்கொடை நிகழ்வு ஒன்றுக்காக வரும் ஞாயிற்றுக் கிழமை பினாங்கிற்கு செல்கிறார். அந்த நிகழ்வு முதலில் மாநில அரசாங்கம் மற்றும் உள்ளூர் சீன மொழி நாளேடு ஒன்றின் ஆதரவுடன் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததால் பிரதமர் அந்த நிகழ்வை 'கடத்தி விட்டார்' என அங்கு…

மாட் சாபுவுக்கு பன்னாட்டு ஆதரவு

அமைதிக்காகவும் பேச்சுரிமைக்காகவும் போராடும் பன்னாட்டு அரசுசார்பற்ற அமைப்பு (என்ஜிஓ) ஒன்று, போலீசை சிறுமைப்படுத்தினார் என்று அண்மையில் கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்ட பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவின் வாயைக் கட்டிப்போட சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகக் கூறியுள்ளது.  வரலாற்று நிகழ்வுகள், பொதுவிவாதத்துக்கும் சர்ச்சைக்கும் இடமளிப்பவை. அதனால் இக்குற்றச்சாட்டு,…

நஜிப், ரோஸ்மா விண்ணப்பம் அடுத்த வியாழக்கிழமை விசாரிக்கப்படும்

அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் தாங்கள் சாட்சிகளாக ஆஜராவதைக் கட்டாயப்படுத்தும் சப்பீனாவைத் தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் சமர்பித்துள்ள விண்ணப்பத்தை அடுத்த வியாழக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் செவி மடுக்கும். நீதிபதி அறையில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் சந்தித்த பின்னர்…

மெக்டொனால்ட்: அன்வார் வழக்கைப் போன்று உலகில் வேறு எதுவும் இல்லை

56  மணி நேரம் கழித்து குதத்திலிருந்து எடுக்கப்பட்டு  48 மணி நேரம் திறந்த சூழலில் வைக்கப்பட்ட பின்னர் மரபணுவை இரசாயன நிபுணர் மீட்க முடிந்திருப்பது, அந்த முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உலகில் நீண்ட காலத்தைக் கொண்ட கண்டு பிடிப்பாக அது இருக்கும். குதத்திலிருந்து எடுக்கப்பட்ட 113 மணி நேரத்துக்குப்…

மலாய்க்காரர்கள் பினாங்கில் தங்கள் குரல் ஓங்கி ஒலிக்க பிகேஆருக்கு வாக்களிக்க…

பினாங்கு சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள பாரிசான் நேசனிலின் ஒரே பங்காளிக்கட்சியான அம்னோ, ‘டிஏபி தலைமையிலான’ மாநில அரசில் மலாய்க்காரர் பிரதிநிதித்துவம் குறைவு என்று அடிக்கடி குறைகூறுவதுண்டு. ஆட்சிக்குழுவில் இரண்டு மலாய்க்கார்கள் மட்டுமே உள்ளனர்-இருவரும் பிகேஆர் உறுப்பினர்கள். அந்த வகையில் பினாங்கில் இருப்பது  டிஏபி அரசுதானே தவிர பக்காத்தான் ரக்யாட் அரசல்ல…

ஜோகூர் மந்திரி புசாராக அப்துல் கனி-க்குப் பதில் காலித் நோர்டின்!

வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடப்பு ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மானுக்குப் பதில் புதியவர் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் வலுவடைந்து வருகின்றன. அதனால் அந்த மாநில பிஎன் இன்னொரு சுற்று உட்பூசலில் மூழ்கும் வாய்ப்புக்கள் கூடியுள்ளன. 1995ம் ஆண்டு முதல் மந்திரி புசாராக இருந்து வருகின்ற…

பாக் லா-வுக்கும் நஜிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள்

 "சீர்திருத்தங்கள் குறித்து பாக் லா உண்மையான போக்கைக் காட்டினார். ஆனால் அதனை அமலாக்குவதற்கான உறுதி இல்லை. அதே வேளையில் நஜிப், சீர்திருத்தங்கள் பற்றி எப்போதும் உண்மையாக நடந்து கொண்டதில்லை. ஆகவே அதனைப் பின்பற்றுவது வேறு விஷயம்."     நான் வலிமையை காட்டியிருக்க வேண்டும் என பாக் லா…

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இணைவதாக பக்காத்தான் ராக்யாட் அறிவித்தது

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் பக்காத்தான் ராக்யாட் பங்கு கொள்ளும். கோலாலம்பூரில் பக்கத்தான் தலைமைத்துவ மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அதனை அறிவித்தார். தேர்தல் சீர்திருத்தங்கள் மீது தான் கொண்டுள்ள கடப்பாட்டை அரசாங்கம் நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பளிக்க பக்காத்தான் கூட்டணி…

அன்வார்: நஜிப், அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல

நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென தாம் அனுப்பிய சப்பீனாவை தள்ளுபடி செய்வதற்கு நஜிப் அப்துல் ரசாக விண்ணப்பித்துக் கொண்டிருப்பது "ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல" என்று அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். தோற்றத்தை சரிப்படுத்த பிரதமர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் அது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சப்பீனா அனுப்பப்பட்டால் குதப்புணர்ச்சி வழக்கு ll சாட்சியமளிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும்…

விசாரணையின்போது சித்திரவதை செய்ததாக போலீஸ்மீது வழக்கு

மூன்றாண்டுகளுக்குமுன் பிரபாகர் பாலகிருஷ்ணா, செய்யாத குற்றத்துக்காக இவ்வளவு துன்பத்தை அனுபவிப்போம் என்பதைக் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார். 2008 டிசம்பர் 23-இல் போலீசாரால் அவரும் இன்னொருவரான சாலமன் ராஜ் சந்திரனும் பிடித்துச் செல்லப்பட்டனர். அது ஒரு வழக்கமான  போலீஸ் சோதனைதான் விரைவில் முடிந்துவிடும் என்றவர் நினைத்தார். ஆனால் அடுத்த…

நஜிப், ரோஸ்மா சபீனாவை தள்ளுபடி செய்வதற்கு விண்ணப்பித்துள்ளனர்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் தாங்கள் சாட்சிகளாக நீதிமன்றத்தில் ஆஜராவதைக் கட்டாயப்படுத்தும் சபீனாவை தள்ளுபடி செய்வதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் விண்ணப்பித்துக் கொண்டுள்ளனர். அந்தத் தகவலை நஜிப்பையும் ரோஸ்மாவையும் பிரதிநிதிக்கும் நான்கு வழக்குரைஞர்களில் ஒருவரான சலேஹுடின்…

அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துவதை ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு…

உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப இருக்குமானல் கை விரலில் அழிக்க முடியாத அந்த மையை போடுவதால் ஆரோக்கியத்திற்கு எந்தக் கேடும் விளையாது என ஆசிய தேர்தல்களை கண்காணிக்கும் சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய கட்டமைப்பு கூறுகிறது. அழிக்க முடியாத அந்த மையின் முக்கிய கலப்புப் பொருளான சில்வர்…