ஷாரிசாட் தேர்தலைவிட்டு ஒதுங்கி இருப்பது நல்லது,மசீசா இளைஞர்கள்

அடுத்த மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ள மகளிர்,குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜாலில், தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே நல்லது என மசீச இளைஞர் பகுதி தெரிவித்துள்ளது. ஏப்ரல் 8-இல், அமைச்சர் பதவியைத் துறக்கும் ஷாரிசாட்டின் முடிவை மசீசா இளைஞர் பகுதி துணைத் தலைமைச் செயலாளர் லோ…

முன்னாள் ஐஜிபி:நான் குற்றவாளி அல்ல என விடுவிக்கப்பட்டவன்……

போலீஸ் படை முன்னாள் தலைவர் மூசா ஹசான், ஜோகூரில் ரகசியக் கும்பல் தலைவன் ஒருவனைப் பாதுகாத்ததாகக் கூறப்படுவதையும் சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்லுடன் சேர்ந்து வணிகக் குற்றப்புலன் விசாரணைத் துறை(சிசிஐடி) முன்னாள் தலைவர் ரம்லி யூசுப்பை ஒரு வழக்கில் சிக்க வைக்க சதிசெய்ததாகக் கூறப்படுவதையும் மறுத்துள்ளார். குழப்பத்தை உண்டுபண்ணும்…

ஹிஷாம்: “போலீஸ் முறைகேட்டை” நிரூபியுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்

ஊழல் புலனாய்வு ஒன்றை மறைப்பதற்கு நாட்டின் மிகவும் வலிமையான போலீஸ் அதிகாரியும் சட்டத் துறைத் தலைவரும் ரகசியக் கும்பல் தலைவர் ஒருவரும் கூட்டாகச் சதி செய்ததாகக் கூறப்படுவது மீது ஆதாரங்களைக் காட்டுமாறு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஜோகூர் ரகசியக் கும்பல் தலைவர் கோ…

அகோங் 12 வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரைத் தொடக்கி…

12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்தை யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு ஹாலிம் முவாட்ஸாம் ஷா இன்று தொடக்கி வைத்தார். அந்தத் தொடக்க நிகழ்வில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர், துணைப் பிரதமர் முஹைடின் யாசின், அமைச்சர்கள், அரசதந்திரிகள்…

ஏஜிக்கு எதிராக சிவராசா அவசரத் தீர்மானம் கொண்டு வருவார்

பிகேஆர் சுபாங் எம்பி ஆர்.சிவராசா,நேற்று மலேசியாகினியில் வெளியிடப்பட்டிருந்த சட்டத்துறைத் தலைவர் கனி பட்டேய்ல் இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்செயல்களின் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசரத் தீர்மானம் கொண்டுவரப்போவதாகக் கூறினார். 12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. விரைவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இதுவே…

முதுநிலை என்எப்சி அதிகாரி மீது இன்று குற்றம் சாட்டப்படலாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் முதுநிலை அதிகாரி ஒருவர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தகவலைத் தெரிவித்த ஒரு வட்டாரம், குற்றச்சாட்டுக்களில் பெரும் பணம் சம்பந்தபட்டுள்ளதாக கூறியது. அந்த வழக்கு தற்போது கிரிமினல் நீதிமன்ற பதிவகத்தில் பதிவு…