நான் பாஸ் போராட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன் என்கிறார் ஹசான்

பாஸ் "கட்சியின் போராட்டத்துக்கான" தமது பற்று உறுதியை முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி தெரிவித்துக் கொண்டுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் தாம் வேட்பாளராக நியமிக்கப்படும் விஷயத்தை "பெரிதுபடுத்துவதை" நிறுத்திக் கொள்ளுமாறு அவர் எல்லாத் தரப்புக்களையும் வேண்டிக் கொண்டார். "பாஸ் தலைவர்களுடைய பதில்களினால் என் கோட்பாடுகள் மருட்டலுக்கு…

ரசாக் பகிந்தாவிடம் நீர்மூழ்கி கொள்முதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

மங்கோலியரான அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு விசாரணைக்குப் பின்னர் மலேசியாவிலிருந்து காணாமல் போன அப்துல் ரசாக் பகிந்தா, நேற்றிரவு கோலாலம்பூரில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் காணப்பட்டார். அந்த வழக்கில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மேல் படிப்புக்காக லண்டனுக்குச் சென்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற அப்துல் ரசாக்,…

ஓராங் அஸ்லிகள் ஜோகூர் சட்டமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்

நேற்று ஜோகூர், கோத்தா இஸ்கண்டரில், ஜோகூர் சட்டமன்றத்துக்கு வெளியில் நூற்றுக்கணக்கான ஓராங் செலேத்தார்-கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜோகூர் நீரிணையை ஒட்டியுள்ள தங்கள் பாரம்பரிய நிலங்கள் இஸ்கண்டர் மலேசியா திட்ட மேம்பாட்டாளர்களிடம் கொடுக்கப்பட்டிருப்பதை எதிர்த்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  எட்டு கிராமங்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காலை மணி 11-க்கு மாநில…

ஊழல், எம்ஏசிசி-முகத்தைப் பார்த்து முறைக்கிறது

"அது தியோ பெங் ஹாக் விவகாரத்தைப் போல இருந்தால் அவர்கள் எதனையும் விட்டு வைக்க மாட்டார்கள். அந்த விவகாரத்தை ஆழமாக தீவிரமாக ஆராய்வர்." எம்ஏசிசி ஊழலைப் பார்த்துக் கண்ணை மூடிக் கொள்கிறது அலக்ஸ் ஜெப்ரி நாதன்: அபு காசிம் முகமட், குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்வதற்காக எம்ஏசிசி தலைவராக…

வேலை வாய்ப்பு:புதிய பட்டதாரிகள் எதிர்நோக்கும் இன்னல்கள்

மலேசியாவில் இளநிலை பட்டதாரிகளில் பாதிப்பேருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைப்பதில்லை என்று இணையத்தள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரிய வருகிறது. பட்டதாரிகள் (73விழுக்காடு) பொதுவில் ரிம1,800-இலிருந்து ரிம2,100வரை எதிர்பார்ப்பதாகவும் ஆனால் அவர்களில் 54 விழுக்காட்டினருக்குத்தான் அது சாத்தியமாகிறது என்றும் அவ்வாய்வு கூறுகிறது. 35 விழுக்காட்டினர் ரிம1,800-க்கும் குறைவாகத்தான்…

தாயிப் மாஹ்முட் ஊழல் விசாரணை மீது எம்ஏசிசி மௌனம் சாதிக்கிறது

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டுள்ள விசாரணையின் நடப்பு நிலை குறித்து கருத்துரைக்க அதன் முதுநிலை அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். காட்டுவள நிர்வாகம், நீடித்த மேம்பாட்டில் ஊழல் பற்றி விவாதிப்பதற்காக மலேசிய அனைத்துலக…

பிஎஸ்சி சந்திப்பு: பெர்சே பிரதிநிதிக்கு தடை

தேர்தல் சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்ற சிறப்புக்குழு (பிஎஸ்சி) பெர்சே 2.0 அதன் பரிந்துரைகளைத் தாக்கல் செய்வதற்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அதன் பிரதிநிதி வருத்தம் தெரிவித்தார். பெர்சே 2.0 வழிகாட்டி குழுவின் உறுப்பினர் டாக்டர் தோ கின் வூன் அவரின் எட்டு-கூறு பரிந்துரையைத் தனிப்பட்ட நபர் என்ற முறையில்…

முஸ்தாபா: ஹசானும் நஷாருதினும் அம்னோ வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர்

பாஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் அம்னோ வலையில் சிக்கிக் கொண்டு அதன் பல்லவிக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருப்பதாக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி சாடியுள்ளார். அவர் குறிப்பாக அண்மையில் பாஸ் கட்சிக்கு பாதகமான கருத்துக்களை வெளியிட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி, முன்னாள்…

அதிகமான இந்தியர்கள் BN-ஐ ஆதரிக்கத் தொடங்கியுள்ளதாக ஜோகூர் மஇகா கூறுகிறது

ஜோகூர் மாநிலத்தில் 2008ம் ஆண்டு பாரிசான் நேசனலுக்கு 45 விழுக்காடாக இருந்த இந்தியர் ஆதரவு இப்போது 75 விழுக்காடாக உயர்ந்துள்ளது என ஜோகூர் மஇகா கூறுகிறது. 2008 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த இந்தியர்கள் பிஎன்-னுக்கு மீண்டும் ஆதரவு தரத் தொடங்கியுள்ளதாக அதன் செயலாளர் எம் அசோகன் கூறுகிறார்.…

2009ம் ஆண்டு 150 பில்லியன் ரிங்கிட் கள்ளத்தனமாக நாட்டிலிருந்து வெளியேறியது

2009ம் ஆண்டு நாட்டிலிருந்து 150 பில்லியன் ரிங்கிட் (47 பில்லியன் அமெரிக்க டாலர்) சட்டவிரோதப் பணம் வெளியேறியுள்ளது. இதனால் சட்டவிரோதமாக அதிக அளவு மூலதனம் வெளியேறியுள்ள தலையாய நான்கு நாடுகளில் மலேசியாவும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே 2000-2008ம் ஆண்டு (9 ஆண்டுகள்) கால கட்டத்தில் 927 பில்லியன் ரிங்கிட்…

பெல்டா டிஜி-க்கு எதிராக பெர்காசா தலைமையில் 1,000 பேர் ஆர்ப்பாட்டம்

மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா, இன்று சுமார் ஆயிரம் பேருக்குத் தலைமையேற்று கூட்டரசு நில மேம்பாட்டு நிர்வாகத்தின் (பெல்டா) தலைமை இயக்குனர் சுல்கிப்ளி வகாப்புக்கு  எதிராக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது. பெல்டாவுக்குள் விசாரணை நடத்தி அதில் உள்ள “துரோகிகளை”க் களையெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.  “துரோகிகளில்” …

சிறையில் இருந்தாலும் நீதிக்காக போராடுவேன், அன்வார் சூளுரை

குதப்புணர்ச்சி வழக்கில் தம்மைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து கொடுஞ்சிறைக்குள் போட்டுப் பூட்டிவைத்தாலும்  நீதிக்கான தமது போராட்டம் ஓயாது என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். அவ்வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9-இல் தெரிவிப்பதாக நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், சிறைவாசம்…

கெடாவில் ஹூடுட் இல்லை என்ற கூற்றில் உண்மையில்லை, மசீச

கெடாவில் இப்போதைக்கு ஹூடுட் சட்டம் நடைமுறைக்கு வராது என்று பாஸ் கட்சி அறிவித்திருப்பதில் உண்மையில்லை; அது முஸ்லிம்-அல்லாதாரின் ஆதரவைப் பெறுவதற்காக சொல்லப்பட்டது என்கிறது அம்மாநில மசீச. “கெடாவில் முஸ்லிம்-அல்லாத வாக்காளர் ஆதரவு இறங்குமுகமாகவுள்ளதைப் பிடித்து நிறுத்தும்  நோக்கத்துடன் அவ்வாறு அறிவித்திருக்கிறார்கள்”, என்று கெடா மசீச தலைவர் சோங் இட்…

பொதுக் கூட்ட மசோதாவை எதிர்த்து வழக்காட பாஸ் கட்சிக்கு அனுமதி…

பொதுக் கூட்ட மசோதாவை எதிர்த்தும் அது நிறைவேற்றப்படுவதைத் தடுக்கவும் வழக்காடுவதற்கு அனுமதி கோரி பாஸ் சமர்பித்த விண்ணப்பம் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூர் உயர் நீதிமன்ற (முறையீட்டு, சிறப்பு அதிகாரப் பிரிவு) நீதிபதி ரோஹானா யூசோப், அந்த முடிவை அறிவித்தார். விண்ணப்பதாரர்களில் இருவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னும்…

அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு II: ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக நீண்ட காலமாகத் தொடரும் குதப்புணர்ச்சி வழக்கில் வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பும் தங்களது வாதத் தொகுப்புக்களை இன்று சமர்பித்து முடித்த பின்னர் நீதிபதி முகமட் அபிடின் முகமட் டியா,"…

கர்பால்-இராமசாமி மோதல் தீர்க்கப்பட்டது!

டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங்குக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி. இராசாமிக்கும் இடையிலான மோதல் தீர்க்கப்பட்டு விட்டது என்றும் டிஎபி தலைமைத்துவம் ஒன்றிணைந்த அணியாக 13 ஆவது பொதுத்தேர்தல் சவால்களை எதிர்கொள்ள முனோக்கிச் செல்லும் என்றும் இன்று காலையில் வெளியிடப்பட்ட…

அன்வார் ஜெயிலுக்குப் போனாலும் போகா விட்டாலும் நஜிப்புக்கு அவர் தலையிடிதான்

"எந்த வகையிலும் அது பிஎன் வாக்குகளை இழக்க வழி வகுத்து விடும். எதிர்தரப்புத் தலைவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டால் மதில் மேல் பூனையாக இருப்பவர்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களித்து விடுவர்." அன்வார் குற்றவாளியாக்கப்படுவார் என பிரிட்டனின் கார்டியன் பத்திரிக்கை ஆரூடம் கூறுகிறது பேஸ்: எல்லாம் தெரிந்த விஷயம்தான் - அன்வார்…

லிம், உத்துசானுக்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றி பெற்றார்

அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி ‘Kebiadapan Guan Eng’ என்னும் தலைப்பில் வெளியிட்ட கட்டுரை மூலம் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மீது அவதூறு கூறியுள்ளதாக பினாங்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்காக லிம்-முக்கு 200,000 ரிங்கிட் இழப்பீடும் 25,000…

என்எப்சி மீதான புகாரில் மூன்று அமைச்சர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்

சர்ச்சைக்குரிய என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூடத் திட்டத்தில் நிதிகளை "முறைகேடாக நிர்வாகம்" செய்யப்பட்டதாகக் கூறப்படுவதின் தொடர்பில் மூன்று  விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர்கள் மீது பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய ஜிங்கா 13 என்னும் அமைப்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி ) புகார் செய்துள்ளது.…

விலகிக் கொள்ளுங்கள் என சர்ச்சைக்குள்ளான அம்னோ தலைவர்களுக்கு அறிவுரை

அம்னோவுக்குச் சுமையாகி விட்ட கட்சித் தலைவர்கள் தாங்களாகவே விலகிக் கொள்ள வேண்டும் என அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகையத் தலைவர்கள் விலகிக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொள்ளும் வரையில் காத்திருக்கக் கூடாது என்றும் அது அறிவுரை கூறியது. "மிகவும்…

கேஎல்ஐஏ2 மென்மையான மண் பகுதிக்கு மாற்றப்பட்டது ஏன்?

கேஎல்ஐஏ2 மென்மையான மண் பகுதியில் அமைக்கப்பட்டு வருவது ஏன் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார். குறைந்த கட்டண விமான நிலையத்தை விரிவு செய்வதற்காக அமைக்கப்படும் கேஎல்ஐஏ2 என்ற விமான முனையத்தை நிர்மாணிப்பதற்கு 2008ம் ஆண்டு புதிய பெருந்திட்டம் வரையப்பட்டது. அதன் விளைவாக  அந்தப்…

பாசிர் மாஸில் இப்ராகிம் அலிக்கு எதிராக பாஸ் உதவித் தலைவர்…

பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி வசமுள்ள பாசிர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் அதன் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப்பை களம் இறக்க எண்ணியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளந்தான் பாஸ் மாநிலத் தொடர்புக்குழு, அடுத்த பொதுத் தேர்தலுக்கான தொடக்கநிலை வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து விட்டதாக சீன நாளேடான சின் சியு…

சட்டச் சீரமைப்பு ஆணையத்துக்கு வழக்குரைஞர் மன்றம் வரவேற்பு

சட்டம் வரைதல் சம நோக்குடனும் நியாயமாகவும் நவீனமாகவும் திறமையாகவும் செய்யப்படுவதற்கு உதவ சுயேச்சையாக செயல்படும் சட்டச் சீரமைப்பு ஆணையம் அமைக்கும் திட்டத்தை மலேசிய வழக்குரைஞர் மன்றம் வரவேற்றுள்ளது. “ஆராய்ச்சிகளையும் பொதுமக்களுடன் ஆலோசனைகளையும் மேற்கொண்டு நாடாளுமன்றத்துக்குத் தக்க பரிந்துரைகளைச் செய்ய சுயேச்சையாக இயங்கும் சட்டச் சீரமைப்பு ஆணையம் ஒன்று தேவை…