‘கர்வமிக்க’ முக்ரிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், ஜோகூர் அம்னோ…

ஜோகூர் அம்னோ இளைஞர் பிரிவு, கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டருக்கு வணக்கம் தெரிவிக்க மறுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியது. அச்சம்பவத்தைக் காண்பிக்கும் காணொளி ஒன்று, காலஞ்சென்ற பகாங் ஆட்சியாளர் சுல்தான் அஹமட் ஷா அல்-முஸ்டா’இன் பில்லாவுக்கு இறுதி…

ஜோகூர் சுல்தானை அவமதித்தாரா முக்ரிஸ்?

கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்மாயிலுக்கும் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமுக்கும் வணக்கம் செலுத்தாமல் அவர்களைக் கடந்து செல்வதைக் காண்பிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயிலின் டிவிட்டர் பக்கத்திலும் அது…

ரோஸ்மா அவரது சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளபடி அவருடைய சொத்து விவரத்தை அறிவித்தாக வேண்டும். அதிகாரிகளின் அறிவிக்கையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரோஸ்மா செய்துகொண்ட மனுவை நிராகரித்த கோலாலும்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மட் ஜைனி மஸ்லான், சொத்து விவரத்தை அறிவிப்பது…

அமைச்சரவை மாற்றம் வந்தால் மாபுஸ் பதவி விலகத் தயார்

மனிதவள துணை அமைச்சர் மாபுஸ் ஒமார், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அமைச்சரவையில் மாற்றம் செய்து தம்மைப் பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டால் தாம் பதவி விலகத் தயார் என்கிறார். கொடுக்கப்பட்ட பொறுப்பைச் சரியாக செய்யாத ஒருவரை அமைச்சரவையிலிருந்து நீக்கும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு என்றாரவர். “ஒரு அமைச்சரிடம் பலவீனம்…

பெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீவைத்த சம்பவத்தில் தொடர்புள்ள முக்கிய நபர்…

கடந்த மார்ச் மாதம் பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி சைனுல் அபிடினின் காருக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புள்ள முக்கியமானவர் என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபரை பெர்லிஸ் போலீசார் கைது செய்துள்ளனர். சைனி என்ற பெயரில் அறியப்படும் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என…

நோன்பு நேரத்தில் உணவருந்துவோரைப் பிடிப்பதற்கு மாறுவேடத்தில் அமலாக்க அதிகாரிகள் செகாமாட் முனிசிபல் மன்றம் (எம்பிஎஸ்) அதன் எல்லைக்குள் நோன்பு நேரத்தின்போது உணவருந்தும் முஸ்லிம்களைப் பிடிப்பதற்கு அதன் அமலாக்க அதிகாரிகளைச் சமையல்காரர்களாவும் மேசைப் பணியாளர்களாகவும் உணவகங்களில் நிறுத்தி வைத்துள்ளது. இதற்காகவே உணவக வேலை தெரிந்தவர்களாகப் பார்த்து அது அமலாக்க அதிகாரிகளாக…

இப்ராகிம் அலியின் புதிய கட்சியில் அம்னோ முன்னாள் உறுப்பினர்கள்

இப்ராகிம் அலி அவரது புதிய அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார். அப்பட்டியலில் முன்னாள் அம்னோ தலைவர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர். நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் இப்ராகிம் அலி, மூன்று தவணைகள் ஜெம்போல் எம்பி ஆக இருந்தவரும் முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை அமைச்சருமான முகம்மட் காலிட் முகம்மட்…

கூண்டுக்குள் இருந்த குரங்கைச் சுட்டதற்காக தந்தையும் மகனும் கைது

காணொளி ஒன்றில் பதிவான ஒரு கூண்டுக்குள் இருக்கும் ஒரு குரங்கைத் துப்பாக்கியால் சுடும் சாம்பவம் தொடர்பில் ஒரு தந்தையையும் அவரின் மகனையும் போலீசார் கைது செய்தனர். அவ்விருவரும் சித்தியவான், தாமான் கெனாங்கானில் அவர்களின் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் கார்ப்பராட் தொடர்புத் தலைவர் அஸ்மாவதி அஹமட்…

இந்தோனேசியத் தேர்தல் கலவரத்திற்குக் காரணம் இன, மத உணர்வே!

நாட்டின் பொதுத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல்கள் முடிந்த பின்னர்,  இந்தோனேசியாவில் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பில் இருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது. நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதில், இந்தோனேசியாவில் உள்ள கட்சிகள் மூன்று பிரச்சினைகளைக் கையாண்டுள்ளதாக, அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் முகம்மது அகுஸ் யூசுஃப் தெரிவித்தார்.…

வான் அஸிஸா : எஸ் ஜெயதாஸ்சின் மரணம், நமக்கு ஓர்…

நேற்று மாலை, சீர்திருத்த போராளி எஸ் ஜெயதாஸ் காலமானது குறித்து, துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் இன்று தனது துயரத்தைத் தெரிவித்தார். "1998 சீர்திருத்தப் போராட்டம் முதல், சகோதரர் ஜெயதாஸ் சற்குணவேல் பற்றி நான் அறிந்து வந்துள்ளேன். சில நாட்களுக்கு முன்பு, நானும் அன்வார்…

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ் அதிகாரிகளும் ஐந்து போலீஸ்காரர்களும்…

ஒரு வர்த்தகரிடம் கொள்ளையிடப்பட்ட சம்பவம்மீதான விசாரணைக்கு உதவியாக இரு போலீஸ் அதிகாரிகளும் ஐந்து சாதாரண போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டனர். இரு போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் மூவாரில் உள்ள அரச மலேசிய தொழில்நுட்பக் கல்லூரி இன்ஸ்பெக்டர், மற்றவர் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்…

பெர்சே : சண்டக்கானில் தேர்தல் குற்றங்கள் குறைந்துள்ளன

அண்மையில், சண்டக்கானில் நடைபெற்ற இடைத்தேர்தலில், தேர்தல் குற்றங்கள் குறைந்துள்ளதாக, தேர்தல் சீர்திருத்த அமைப்பான, பெர்சே கூறியுள்ளது. தேர்தல் காலத்தில், அரசாங்க சொத்துக்களின் துஷ்பிரயோகம், அரசாங்க சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், வாக்களிக்கும் நாளில் பிரச்சாரம் செய்தது போன்றவை உட்பட, 19 தேர்தல் குற்றங்கள் மற்றும் தவறான நடத்தையை, பெர்சே சபா…

ஜிஇ14-இல் பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகப் பேசிய யாபிம் டிஜி தற்காலிக…

இஸ்லாமிய பொருளாதார மேம்பாட்டு அற வாரியம்(யாபிம்) அதன் தலைமை இயக்குனர்(டிஜி) அபிபுல்லா சம்சுடினை இடைக்காலத்துக்குப் பணிநீக்கம் செய்துள்ளது. யாபிம் தலைவர் முகம்மட் டாவுட் பக்கார், இன்று ஓர் அறிக்கையில் கடந்த பொதுத் தேர்தலின்போது அப்போதைய எதிர்க்கட்சியான பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்கக் கூடாது என்று அபிபுல்லா காணொளி ஒன்றில் யாபிம்…

தற்காப்பு அமைச்சு நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜாஹிட்டும் விசாரணைக்கு…

முன்னாள் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தற்காப்பு அமைச்சின் நிலங்கள் சர்ச்சைக்குரிய முறையில் மாற்றிவிடப்பட்டது மீதான விசாரணைக்கு உதவ விரைவில் அழைக்கப்படுவார் என்று தெரிகிறது. “அதற்கான சாத்தியம் இருப்பதை மறுக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அழைக்கப்படுவார்கள்”, என்று எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கைகள்) அஸாம் பாக்கி…

’நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்வோம், வாரீகளா’ கிட் சியாங்குக்கு நஜிப்…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவரும் லிம் கிட் சியாங்கை நேருக்கநேர் “கட்டுப்பாடற்ற முறையில் விவாதமிட” தயாரா என்று சவால் விடுத்துள்ளார். இன்று ஃப்ரி மலேசியா டுடேயில் வெளியியான ஒரு நேர்காணலில் நஜிப் இச்சவாலை விடுத்தார். டிஏபி ஆலோசகர் அமைச்சர் பதவி எதையும்…

பினாங்கில் கடல் தூர்த்தல் திட்டங்களை நிறுத்த வேண்டும், 45 அரசு…

மூன்று செயற்கை தீவுகளை நிர்மாணிக்க, மாநிலத்தின் தெற்குக் கடலோரத் தூர்த்தல் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் எனும் பிரதமர் டாக்டர் மகாதீரை வலியுறுத்திவரும் பினாங்கு ஃபோரம் இயக்கத்திற்கு ஆதரவாக, இன்று நாற்பத்து ஐந்து அரசு சாரா அமைப்புகள் ஒன்று கூடின. இந்த அரசு சாரா அமைப்புகளைச் சார்ந்தவர்கள், பினாங்கு,…

என்எப்சி முழுக் கடனையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்- நிதி அமைச்சு

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) இன்னும் கொடுபடாமலிருக்கும் கடன்தொகையான ரிம253.6 மில்லியனை முழுமையாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என நிதி அமைச்சு கூறியது. இத்தொகை வட்டி, தாமதச் செலுத்தத்துக்கான தண்டம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. கடன் தொகை முழுவதையும் திரும்பப் பெற நிதி அமைச்சு விரும்புவதாகவும் அது பற்றிச் சட்டத்துறைத் தலைவர்…

மற்ற சமயங்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பதைப் பல்கலைக்கழகங்களில் தொடங்குவதே நல்லது-…

யயாசான் டாக்வா இஸ்லாமியா (யாடின்) தலைவர் நிக் ஒமார் நிக் அப்துல் அசீஸ், இஸ்லாம் தவிர்த்து மற்ற சமயங்களின் கல்வியைப் பல்கலைக்கழகங்களில் தொடங்குவதே நல்லது என்கிறார். மலேசிய இளைஞர் மன்றம் (எம்பிஎம்) பள்ளிகளில் சமயக் கல்வியை அறிமுகப்படுத்தலாம் அது மாணவர்கள் இஸ்லாத்துடன் மற்ற சமயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள…

சீரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 39 மலேசியர் நாடு திரும்ப விருப்பம்

சீரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 65 மலேசியரில் 39 பேர் போலீசைத் தொடர்புகொண்டு நாடு திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளனர். அவர்களில் பத்து ஆடவர்கள் வயது வந்தவர்கள், 12பேர் சிறுவர்கள், அறுவர் பெண்கள் என்று புக்கிட் அமான் பயங்கரவாத- எதிர்ப்புப் பிரிவு தலைமை உதவி இயக்குனர் ஆயோப்…

‘மே18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ , ஜொகூர்பாரு மாநகரில் 10-ஆம்…

கடந்த 2009, மே18-ம் நாள் இலங்கை அரசு நடத்திய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தங்கள் இன்னுயிரை ஈந்த அப்பாவி பொதுமக்களை நினைவு கோரும் நிகழ்ச்சி, நேற்றிரவு ஜொகூர் பாரு மாநகரில் நடந்தேறியது. ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், தொடர்ந்து 10-ம் ஆண்டாக நடந்த இந்த ‘மெழுகுவர்த்தி ஏந்தல் நினைவஞ்சலி’ நிகழ்ச்சியில்…

பெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீ வைத்தவன் கைது

மார்ச் 22-இல் பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி சைனுல் அபிடின் காருக்குத் தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரைப் போலீஸ் கைது செய்துள்ளது. வேலையில்லாத அந்நபர் சனிக்கிழமை இரவு மணி 2.45க்கு ஆராவ், கம்போங் ஜெலம்போக்கில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் என பெர்லிஸ் போலீஸ் தலைவர் நூர்…

பகாங்: எண்ணெய் உரிமப் பணத்தை புத்ரா ஜெயா பரிசீலனை செய்ய…

பகாங் அரசு அம்மாநிலத்துக்கு எண்ணெய் உரிமப் பணம்   அல்லது     “வாங்  இசான்(கருணை  நிதி) கொடுப்பது பற்றி புத்ரா ஜெயா பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்பில் விரைவில் ஒரு கடிதம் அனுப்பப்படும்  என்றும்  எவ்வளவு கொடுப்பது என்பதைக் கூட்டரசு அரசாங்கத்தின் முடிவுக்கே விட்டு விடுவதாகவும்…

பாங்கி கோயில் சாலையை எம்பிகேஜே தலையிட்டுத் திறந்து வைத்தது

ஒரு மேம்பாட்டாளரும் பாங்கி தோட்டத்து முன்னாள் ஊழியர்களும் சர்ச்சையிட்டுக் கொண்டிருக்கும் லாடாங் பாங்கி ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்துச் செல்லும் சாலையை காஜாங் முனிசிபல் மன்றம்(எம்பிகேஜே) தலையிட்டுத் திறந்து வைத்துள்ளது. ஆலயத்துக்குச் செல்லும் சாலையை மூடி கேட்டுக்குப் பூட்டும் போட்டு வைத்திருந்தார் மேம்பாட்டாளர். எம்பிகேஜே அதிகாரிகளும் மாவட்ட போலீசும் நேற்று மாலை…