ஹஸ்னுல் : `பி.கே.ஆரைச் சந்தித்தேன், ஆனால் ‘புதிய கட்சி ஒன்றைத்…

பேராக் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் சுல்கர்னைன் அப்துல் முனைம், கடந்த டிசம்பரில் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்சியைத் தேடுகிறார் என்ற கூற்றை மறுத்தார். தனது அரசியல் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து இன்னும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்றார் அவர். “நான் அரசியலில் இருக்கும் எனது…

வேலையின்மை பிரச்சினை : ‘நிலைமை நிலையானதாக இருக்கும்’ என்ற எதிர்பார்ப்பை…

இந்த ஆண்டு நடுப்பகுதியில் வேலையின்மை விகிதம் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் திணைக்களத்தின் அமைச்சர் (பொருளாதார விவகாரங்கள்) முஸ்தபா முகமது கூறியதை, ஈப்போ பாரத் எம்.பி. எம்.குலசேகரன் கண்டித்தார், போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டது என்று அவர் கூறினார். மலேசியாவின் அந்நிய நேரடி முதலீடு…

‘அகோங்கின் கருத்து அத்தகையதென்றால், அரசாங்கத்தின் நிலைப்பாடு சரியானதல்ல’

நாடாளுமன்ற இடைநீக்கம் தொடர்பான விவகாரத்தில், இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு "தவறானது" என்பதைக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சி வாதிடுகிறது. இன்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். அன்வர் கூற்றுப்படி, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத்…

அஸிஸ் : 1969 அல்லது 2021, நாடாளுமன்ற இடைநிறுத்தம் நல்ல…

1969-ல், இனப் பதட்டங்கள் காரணமாக நாடாளுமன்றத்தை இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்தது அப்போது நல்ல யோசனையல்ல; எனவே, இப்போது அதை மீண்டும் செய்யக்கூடாது என்று அரசியலமைப்பு வல்லுநர்கள் தெரிவித்தனர். பேராக்கில், இப்போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும், முன்னாள் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அப்துல் அஸிஸ் பாரி,…

பள்ளி மூடல் கொள்கைகளை விளக்கவும் – பத்து காவான் எம்.பி.

தனது தொகுதியில் உள்ள கெங் கூன் சீனப்பள்ளியில், 16 கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியதை அடுத்து, பத்து காவான் எம்.பி. கஸ்தூரி பட்டு பள்ளி மூடல் கொள்கையைத் தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். 15 மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியர் சம்பந்தப்பட்ட நேர்மறையான வழக்குகள் இருந்தபோதிலும், அப்பள்ளி இன்னும் திறந்திருக்கிறது.…

பினாங்கு டிஏபி தேர்தல் : ராம்கர்பால் உட்பட பதவியிலிருந்த மூவர்…

இன்று, பினாங்கு டிஏபி தேர்தலில், பதவியிலிருந்த மூவர் தோல்வியடைந்தனர், அவர்களில் புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்-உம் ஒருவர். மற்ற இருவர், முன்னாள் தஞ்ஜோங் எம்.பி. ங் வெய் ஆய்க் மற்றும் முன்னாள் மாநில நிர்வாக கவுன்சிலர் டேன்னி லாவ் ஹெங் கியாங். முதல் 15 இடங்களைப்…

‘தம்பி’ என்பதற்கு டிபிபி-யின் வரையறை என்ன? – இந்திய சமூக…

மலேசியாவில் உள்ள இந்தியச் சமூகத்தை அவமதித்ததாகக் கூறப்படும் டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா (டிபிபி) திணைக்களத்தின் இணையதளத்தில், 'தம்பி' என்ற வார்த்தையின் வரையறை குறித்து ஓர் இந்தியச் சமூக ஆர்வலர் இன்று டிபிபி-யை விமர்சித்தார். ‘தம்பி’ என்ற வார்த்தைக்கு, “எங்களை விட இளையக் கெல்லிங் ஆட்களுக்கான அழைப்பு” என்று…

கோவிட்-19 : 1,327 புதியத் தொற்றுகள் பதிவு

நாட்டில் இன்று மதியம் வரையில், 1,327 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. 5 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன. 356 தொற்றுகளுடன், அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகள் உள்ள மாநிலமாக சிலாங்கூர் உள்ளது, அதைத் தொடர்ந்து சரவாக் (276) மற்றும் பினாங்கு (205) மாநிலங்கள் உள்ளன.…

மனோன்மணி மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டு, மலேசியத் தமிழர் தேசியப் பேரவை…

நாடறிந்த கல்வியாளரும் மாணவர்களால் போற்றப்படும் பேராசிரியருமான முனைவர் மனோன்மணி மீது, இந்து ஆகம அணி இயக்கத்தைச் சேர்ந்த அருண் துரைசாமி, அண்மையில் தொடுத்திருக்கும் அடிப்படையற்ற காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டுகளை மலேசியத் தமிழர் தேசியப் பேரவை கண்டிக்கிறது. அருண் துரைசாமியும் இந்து ஆகம அணியும் அண்மையக் காலமாக அது சார்ந்த பணிகளைக்…

ஜீவி காத்தையா அவர்களுக்கு ஒரு நினைவஞ்சலி

நேற்று இரவு, ஜொகூர் பாரு, கங்கார் பூலாயில் தொழிற்சங்கவாதியும் சமூகச் செயற்பாட்டாளருமான ஜீவி காத்தையா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், காரைநகர் நட்புறவு மையத்தில் நடந்தேறிய இந்நிகழ்ச்சியில், பொது இயக்கத் தோழர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். மிகக் குறுகியக் கால ஏற்பாட்டில்,…

இன்று 1,671 புதிய நோய்த்தொற்றுகள், சிலாங்கூர், பினாங்கு, சபாவில் பாதிப்புகள்…

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் நிலவரப்படி, 1,671 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. பினாங்கு, சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் புதிய தொற்றுகள் அதிகரித்துள்ளன. சிலாங்கூரில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை, நேற்றுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் சபாவில்,…

பெர்லிஸ் ஜே.பி.ஜே. துணை இயக்குநரை எம்.ஏ.சி.சி. தடுத்து வைத்தது

கையூட்டு வாங்கியது மற்றும் குற்றங்கள் செய்த லாரி ஓட்டுநர்களைப் பாதுகாத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு உதவ, பெர்லிஸ் சாலை போக்குவரத்துத் துறையின் (ஜே.பி.ஜே.) துணை இயக்குநர் இரண்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார். கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இன்று தடுத்து வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெர்லிஸ் மலேசிய ஊழல்…

ஷாரீர்: ‘ஷாஹிடான் கூற்றுப்படி, பெர்லிஸில் ஜிஇ15 சுவாரஸ்யமாக இருக்கும்’

15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), பெர்லிஸ் அம்னோ, தேசிய முன்னணியிலிருந்து விலகி, தேசியக் கூட்டணியுடன் இணையும் என்றால், அது ஒரு புதிய அரசியல் சூழ்நிலையைத் திறக்கும் என்று அம்னோ மூத்தத் தலைவர் ஷாரீர் சமாட் கூறினார். அடுத்த தேர்தலுக்கு முன்னதாக, பெர்சத்துவுடனான உறவுகளைக் கட்சி துண்டித்துவிடும் என்ற உச்சமன்ற…

சிங்கப்பூரில் தூதரக ஆணையரை நியமிக்க புத்ராஜெயாவுக்கு வலியுறுத்து

11 மாதங்களாக காலியாக இருக்கும், சிங்கப்பூர் தூதரக ஆணையரை விரைந்து நியமிக்குமாறு வெளியுறவு அமைச்சுக்கு வலியுறுத்தப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரக அலுவலகத்தில் நெரிசல் குறித்த அறிக்கையைத் தொடர்ந்து, ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் தான் ஹோங் பின் இதனைத் தெரிவித்தார். சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின்படி, மலேசியர்கள் தங்கள்…

ஜிஇ15-ல் அம்னோ ஒத்துழைப்பு குறித்து உறுதிபாடு இல்லை, அன்வார் விளக்கம்

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர் அன்வர் இப்ராஹிம், அம்னோ தலைவர்கள் சிலருடனான தனது சமீபத்திய சந்திப்பு குறித்து, இன்று கூட்டணி உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார். இந்த விவகாரம் பின்னர் பி.எச்.-ஆல் விவாதிக்கப்பட்டது, ஆனால் எதிர்க்கட்சி கூட்டணி ஜிஇ15-ல் அம்னோவுடன் இணைந்து செயல்படும் என்பது பற்றிய எந்த உறுதிப்பாடும் செய்யப்படவில்லை. பி.எச்.…

RM1.4 பில்லியன் சூரியத் திட்டத்திற்கு ஒப்புதல் கோருகிறார் ஜொகூர் மந்திரி…

கோத்தா திங்கி, பெங்கெராங்கில், RM1.4 பில்லியன் மதிப்புள்ள சூரிய ஆற்றல் பூங்காவிற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற ஜொகூர் தொடர்ந்து முயற்சிக்கும். மலேசியாவின் பெரிய அளவிலான சூரியக் (எல்.எஸ்.எஸ்) கொள்முதல் திட்டத்தின் கீழ், ஒதுக்கீடு முழுமையாக எடுக்கப்பட்டிருந்தாலும், மாநில அரசுக்கு சிறப்பு ஒதுக்கீடு கிடைக்கும் என்று ஜொகூர் மந்திரி…

நஜிப்பின் கேலிக்கு, கே.ஜே. பதில் : அவருக்கும் எனக்கும் தெரியும்…

தடுப்பூசியைப் பெறுவதற்கு, முனைமுகப் பணியாளர்களுக்கு வழிவிடுவது ஒரு குற்றமா என்று முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் கேள்வி எழுப்பினார். மார்ச் 6-ஆம் தேதி, நிர்ணயிக்கப்பட்ட தனக்காக தடுப்பூசியை நஜிப் இரத்து செய்ததை வெளிப்படுத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீனின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நஜிப்…

பிரதமர் அறிவித்த உதவி தொகுப்பு போதாது – முன்னாள் நிதியமைச்சர்

முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங், மந்தநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க, பிரதமர் முஹைதீன் யாசினின் அண்மைய உதவி தொகுப்பு போதுமானதாக இல்லை என்றார். RM20 பில்லியன் பொருளாதார "அதிகாரமளித்தல்" திட்ட அறிவிப்பு குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார். "2020-ஆம் ஆண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில்…

`முழுமையான பி.கே.பி.க்குத் தேவை இருக்காது` – பிரதமர்

நாட்டில் முழுமையான அல்லது ஒரு மாநிலத்தை உள்ளடக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) அரசாங்கம் இனி செயல்படுத்தத் தேவையில்லை என்று பிரதமர் கூறினார். தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தைச் செயல்படுத்தப்படுவதனால், முழுமையான பி.கே.பி.க்குத் தேவை இருக்காது என்று முஹைதீன் யாசின் கூறினார். "பி.கே.பி. இனி வட்டாரம் மற்றும்…

வேலை இழந்த பி40, RM1,000-க்கும் குறைவான வருமானம் பெறும் பி.பி.ஆர்.…

வருமானத்தை இழந்த பி40 குழுவினர், ஒரு முறை RM500 ரொக்க உதவியையும், RM1,000 மற்றும் அதற்கும் குறைவான வருமானம் பெறும் மக்கள் பராமரிப்பு உதவி (பிபிஆர்) பெறுநர்கள், கூடுதலாக RM500-ஐ, வரும் ஜூன் மாதம் முதல் பெறுவார்கள். வருமானத்தை இழந்த 2.4 மில்லியன் பெறுநர்களுக்கு, இந்த RM1.2 பில்லியன்…

கெடா, பேராக், நெகிரி செம்பிலானில் பி.கே.பி.பி. அமல்படுத்தப்படும்

கெடா, பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) அமலுக்கு வரவுள்ளது. இத்தகவலை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று அறிவித்தார். "இருப்பினும், கெடா மாநிலத்தில், கோல முடா மற்றும் கூலிம் மாவட்டங்களிலும், நெகிரி செம்பிலான் சிரம்பானிலும், இன்னும் சில…

32 உறுப்பினர்கள் எம்.ஏ.சி.சி.-ஆல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் – ஜேபிஜே உறுதிப்படுத்தியது

‘ஆபரேஷன் சுகாட்டில்’ ஊழல் நடந்ததாக, சந்தேகத்தின் பேரில் தனது 32 உறுப்பினர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று கைது செய்ததை, சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) உறுதிப்படுத்தியது. அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் போன்ற எந்தவொரு கூறுகளிலிருந்தும் திணைக்களம் எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யும் முயற்சியில்,…

சுங்கை பெட்டாணியில் கோயில் உடைப்பைத் தள்ளிவைக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்

சுங்கை பெட்டாணி, ஜாலான் அவாமில் உள்ள ஒரு கோயில் உடைபடும் நிலையில் உள்ளது. மார்ச் 15-ம் தேதி, கோயிலை 3 நாட்களுக்குள் காலி செய்யுமாறு உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து கோயில் நிருவாகம் அறிவிப்பை பெற்றது. [caption id="attachment_190044" align="aligncenter" width="640"] கே.குமரேசன்[/caption] இருப்பினும், சுங்கை பெட்டாணி நகராட்சி மன்றம் (எம்.பி.எஸ்.பி)…