7 நாடுகளைச் சேர்ந்த 90 எம்.பி.க்கள் மலேசிய நாடாளுமன்றத்தை மீண்டும்…

ஏழு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 90 எம்.பி.க்கள், விரைவில் நாடாளுமன்றம் தடையின்றி அமர அனுமதிக்க வேண்டும் என்று பேரரசரையும் பிரதமரையும் வலியுறுத்தினர். இன்று ஒரு கூட்டு அறிக்கையில், அரசாங்கத்தின் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கும், அவசரகால நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முக்கியக் கொள்கைகள் குறித்த முடிவெடுக்கும் செயல்முறைக்கு…

அபிராமியின் குளிர்கால ஒலிம்பிக் கனவு ஈடேறப் பொதுமக்கள் நன்கொடை

ஒன்பது வயதான தேசியப் பனி சறுக்கு நட்சத்திரம் ஸ்ரீ அபிராமியின், குளிர்கால ஒலிம்பிக்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றக் கனவை நனவாக்க, பொதுமக்கள் வழங்கிய நிதியால் அவரது தந்தை நெகிழ்ந்து போனார். நன்கொடை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த 55 வயதான சந்திரன் பாலகிருஷ்ணன், தற்போது லாட்வியா, ரிகாவில்…

சிறைக்கட்டறையில் பாலியல் வல்லுறவு : 11 காவல்துறை அதிகாரிகள் பதவியிறக்கம்,…

மிரி காவல் நிலையக் கட்டறையில், 16 வயது சிறுமி சம்பந்தப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பாக, 11 மூத்த மற்றும் கீழ்நிலை காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர். புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறை (ஜிப்ஸ்) இயக்குநர் ஸம்ரி யஹ்யா கூறுகையில், அதிகாரிகள் தங்கள்…

தேசியக் கல்வி நடவடிக்கை மன்றம் உருவாக்கப்பட வேண்டும் – மஸ்லி…

அரசாங்க, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வித்துறை வல்லுநர்களைக் கொண்ட ஒரு தேசியக் கல்வி நடவடிக்கை மன்றம் அமைப்பதை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும். கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில், நாட்டின் கல்வி நெருக்கடிக்குத் தீர்வு காண, அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட 12 திட்டங்களில் இதுவும் ஒன்று என்று முன்னாள் கல்வி…

கிளாந்தானில் எஸ்.பி.எம். மாணவர்கள் சம்பந்தப்பட்ட நேர்மறையான வழக்குகள் அதிகரித்தன

கிளாந்தான், மச்சாங்கில் உள்ள ஒரு மதப் பள்ளியில், எஸ்.பி.எம். தேர்வு எழுதவுள்ள மாணவர்களை உள்ளடக்கிய ‘பங்கால் சங்கோங்’ திரளையில், கோவிட் -19 தொற்றின் நேர்மறையான பாதிப்புகள் இன்று 64-காக அதிகரித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூராட்சி, வீட்டுவசதி மற்றும் சுகாதார ஆட்சிக்குழு தலைவர், டாக்டர் இசானி ஹுசின் கூறுகையில், பள்ளியின் ஊழியர்கள்,…

இன்று 2,176 புதிய நோய்த்தொற்றுகள், 10 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, நண்பகல் வரை மொத்தம் 2,176 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கையில், மொத்தம் 1,618 நேர்வுகள் மலேசியர்களும் 557 நேர்வுகள் மலேசியர் அல்லாதவர்களும் சம்பந்தப்பட்டது. ஜனவரி 5-க்குப் பிறகு, மிகக் குறைந்த புதிய தினசரி…

கிளந்தானில் 41 எஸ்.பி.எம். மாணவர்களுக்கு நேர்மறை கோவிட் -19

கிளந்தான், மாச்சாங்கில் உள்ள ஓர் உறைவிடப் பள்ளியில், எஸ்.பி.எம். தேர்வு எழுதவுள்ள 41 மாணவர்களுக்குக் கோவிட் -19 தொற்று கண்டுள்ளது இன்று உறுதி செய்யப்பட்டது. மாநிலச் சுகாதாரத் துறை இயக்குநர், டாக்டர் ஸைனி ஹுசின் கூறுகையில், அனைத்து மாணவர்களும், கோத்தா பாரு, ஜூப்லி பேராக் மண்டபம் மற்றும் கிளாந்தான்…

இன்று 2,464 புதிய நோய்த்தொற்றுகள், ஜனவரி 11-க்குப் பிறகு மிகக்…

கோவிட் 19 | நாட்டில் இன்று, இன்று நண்பகல் வரை மொத்தம் 2,464 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளும் 7 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி 11-க்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும். இன்றைய இறப்புகள் சரவாக் (3), சிலாங்கூர் (2), சபா…

சாலைத் தடுப்புகளில் பாலியல் துன்புறுத்தல் – சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை அடையாளங்கண்டது

வெவ்வேறு சாலைத் தடுப்புகளில், தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படும் அதன் உறுப்பினர்களை அடையாளம் கண்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. புக்கிட் அமான் தரநிலைகள் இணக்க ஒருமைப்பாட்டுத் துறை (ஜிப்ஸ்) இயக்குநர், ஸம்ரி யஹ்யா, கோலாலம்பூர் மற்றும் புக்கிட் அமான் ஜிப்ஸ் அணியினரின் உதவியுடன், கடமையில்…

எம்.பி. குவாந்தான் : பாலியல் துன்புறுத்தல் மசோதாவை விரைவுபடுத்தவும்

காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர், பாலியல் துன்புறுத்தல் மசோதாவை விரைவில் சீராக்க வேண்டுமென்றக் கோரிக்கையைச் சட்டமியற்றுபவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபுசியா சல்லே கூறுகையில், பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் அதிகாரிகள், கடைசி தற்காப்புக் கோட்டையாக இருக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது.…

‘சிறைக்கட்டறையில் கற்பழிப்பு’ – ஜுரைடா உள்துறை அமைச்சை கடிந்துகொண்டார்

மிரி மத்தியக் காவல்நிலையக் கட்டறையில், 16 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம் போன்று, மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஜுரைதா கமருதீன் உள்துறை அமைச்சை வலியுறுத்தினார். பாலியல் வன்முறையைச் செய்ததற்காகக் குற்றவாளியின் மீதும், அலட்சியம் காட்டியதற்காகக் கடமையில்…

சாராணி : ‘அம்னோ, பாஸ் இடங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்’

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் (ஜி.இ.), அம்னோ வென்ற தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று பேராக் அம்னோ தொடர்பு குழுத் தலைவர் சாராணி மொஹமட் பெர்சத்து கட்சியிடம் தெரிவித்தார். அடுத்த ஜி.இ.15-இல், அந்த அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடங்களிலும் அம்னோ மீண்டும் போட்டியிடும் என்று பேராக் மந்திரி…

டாக்டர் ஆதாம் : 3-வது அலைத் திரளைகளில் 527 பணியிடம்…

கடந்த செப்டம்பர் 20 முதல் நேற்று வரையில், நாட்டில் கோவிட் -19 தொற்றுநோயின் மூன்றாவது அலைகளில் பதிவான மொத்தம் 852 திரளைகளில், 527 திரளைகள் பணியிடங்கள் சார்ந்த திரளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. திரையிடப்பட்ட பணிக்குழுக்களில், மொத்தம் 315,100 பேரில் கோவிட் -19 தொற்றுக்கு  78,906 பேர் சாதகமான…

யு.என்.எச்.சி.ஆர். : மலேசியா அகதிகளைத் திருப்பி அனுப்பக்கூடாது

அகதிகளைத் தங்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் மலேசியாவின் நோக்கத்தை, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (யு.என்.எச்.சி.ஆர்) ஆட்சேபித்துள்ளார். தற்போது குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,200 மியான்மர் நாட்டினரை, அந்நாட்டின் 3 இராணுவக் கப்பல்களில், மலேசியா திருப்பி அனுப்பவுள்ளது என்று வெளியான செய்திகளைத் தொடர்ந்து…

இன்று 3,499 புதிய நோய்த்தொற்றுகள், செயலில் உள்ள வழக்குகள் சற்று…

கோவிட் 19 | நாட்டில் இன்று, இன்று நண்பகல் வரை மொத்தம் 3,499 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 51,558 செயலில் உள்ள பாதிப்புகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன, நேற்று இருந்ததை விட 21 குறைவு. இன்று ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன,…

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க, மறுபயன்பாட்டு பைகள் விற்பனையில் தமிழ்ப்பள்ளி தலைமையாசியர்

பினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர், சங்கா சின்னையா, தனது பள்ளியின் 83 ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வாங்க,  மீண்டும் பயன்படுத்தக்கூடியத் துணிப் பைகளை விற்பனை செய்து RM20,000-க்கும் அதிகமான தொகையைச் சேகரித்துள்ளார். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தபோது, தனது…

‘டாக்டர் எம் இடைக்காலப் பிரதமராக இருக்க வேண்டும்’, இந்தப் பிரச்சினை…

டாக்டர் மகாதீர் மொஹமட் இடைக்காலப் பிரதமராக இருக்க வேண்டும் என்றத் திட்டம் இனி தோன்றத் தேவையில்லை; ஆனால், எதிர்க்கட்சியினர் பொதுத் தேர்தலில் (ஜி.இ.) வென்றால், அந்த முன்னாள் பிரதமருக்கு அப்பதவியை வகிக்க வாய்ப்புள்ளது என்று அமானா மூலோபாய இயக்குநர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மத் தெரிவித்தார். ஜி.இ.15-இல் வெற்றி பெற,…

பெட்ரோலின் விலை 3 காசுகளும், டீசலின் விலை 4 காசுகளும்…

இன்று தொடக்கம், பெட்ரோலின் சில்லறை விலைகள் லிட்டருக்கு 3 காசுகளும், டீசலின் விலை 4 காசுகளும் உயர்ந்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட இந்த விலை பிப்ரவரி 19 வரை தொடரும். ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகள் லிட்டருக்கு முறையே RM1.96 மற்றும் RM2.26-ஆகவும், டீசலின் விலை RM2.15-ஆகவும் இருக்கும்…

சார்லஸ் : தடுப்பூசி போடுவதற்கு முன்பு பாட்தி-களுக்கு மன்னிப்பு வழங்குங்கள்

கோவிட் -19 தடுப்பூசி திட்டம், சட்டவிரோதக் குடியேறிகள் (பாட்தி) மீது மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், அவர்களுக்குப் பொது மன்னிப்பு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ அழைப்பு விடுந்துள்ளார். கடந்த ஆண்டு, கோவிட் -19 சோதனையைச் செய்ய முன்வந்தால், நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உறுதியளித்தப்…

1,200 குடிநுழைவு கைதிகளை மியான்மர் கடற்படையிடம் ஒப்படைக்கவுள்ளது மலேசியா

பிப்ரவரி 1-ம் தேதி, ஆட்சி கவிழ்ப்பு நடத்திய மியான்மர் இராணுவ அரசாங்கம், மூன்று கடற்படைக் கப்பல்களை அனுப்பி தங்கள் நாட்டினரை அழைத்துச் செல்ல முன்வந்ததை அடுத்து, மலேசியா 1,200 மியான்மர் கைதிகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பவுள்ளது என்று இரு நாடுகளின் அதிகாரிகளும் இரண்டு வட்டாரங்களும் ராய்ட்டர்ஸ் -இடம் தெரிவித்தன.…

இம்மாத இறுதியில் பிரதமர் முதல் நபராகத் தடுப்பூசியைப் பெறுவார்

இந்த மாத இறுதியில், மலேசியாவிற்குத் தடுப்பூசிகள் வந்து சேர்ந்ததும், பிரதமர் முஹைதீன் யாசின் கோவிட் -19 தடுப்பூசியை முதலில் பெறுவார். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரும், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான கைரி ஜமாலுதீன் இதனை உறுதிப்படுத்தினார். "ஆம், ஃபைசர் (Pfizer) தடுப்பூசி…

1988-ஆம் ஆண்டு அம்னோ தலைவர் அந்த ‘இரகசியக் கணக்கை’ விளக்கலாம்…

கட்சி சம்பந்தப்பட்ட இரகசிய வங்கி கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து, கடந்த கால அம்னோ தலைவர்கள் அதிகம் அறிந்திருக்கலாம் என்று அம்னோ தகவல் தலைவர் ஷாரில் ஹம்டான் தெரிவித்தார். சில அம்னோ தலைவர்கள் வங்கிக் கணக்கு இருப்பதைப் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கூறியதை அடுத்து அவர் இவ்வாறு…

2021 சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்

மலேசியாகினி அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் 2021 சீனப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இன்று எருது ஆண்டின் வருகை. முந்தைய எலி ஆண்டு, மலேசியர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒரு கடினமான ஆண்டாக இருந்தது. இந்தப் புதிய ஆண்டில், கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போரில் நாடும் உலகமும் வெல்லும் என்று…