மார்ச் 1 முதல், பள்ளிகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும்

இந்த மார்ச் மாதம் தொடங்கி, பள்ளி அமர்வுகள் கட்டங்கட்டமாகத் துவங்கும் எனக் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் இன்று அறிவித்தார். பாலர்பள்ளி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பள்ளி அமர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும். மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கானப் பள்ளி…

மலேசியாகினி நன்கொடை பிரச்சாரம் இலக்கை அடைந்தது

மலேசியாகினி, அதன் RM500,000 நிதி திரட்டும் இலக்கை ஐந்து மணி நேரத்திற்குள் அடைந்துள்ளது. அதன் வாசகர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துகளைப் பகிர்ந்தமைக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்று தீர்ப்பளித்த ஃபெடெரல் நீதிமன்றம், மலேசியாகினி இணையத்தளச் செய்தி நிறுவனத்திற்கு RM500,000 தண்டம் விதித்து தீர்ப்பளித்தது. அந்தத் தண்டத்தைச் செலுத்த நிதி திரட்டும் பிரச்சாரத்தை…

இன்று 2,936 புதிய நோய்த்தொற்றுகள், ஜொகூரில் பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்தது

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,936 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஜொகூர் 730 புதிய நோய்த்தொற்றுகளுடன் கடுமையான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 978 நேர்வுகளுடன் சிலாங்கூர் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையில், இறப்புகள் இன்று 13-ஆக பதிவாகியுள்ளன.…

உண்மையான அவசரநிலை இன்று தொடங்குகிறதா? – எஸ் அருட்செல்வன்

கருத்து l முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) தோமி தாமஸ் எழுதிய புத்தகத்திற்காக, கெராக்புடாயா பதிப்பகத்தின் கணினிகளைக் கைப்பற்றி காவல்துறை ஏன் அரசாங்கப் பணத்தை வீணடிக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதியதை அவர் ஒருபோதும் மறுத்ததில்லை. அப்புத்தகம் மிகச் சிறப்பாக விற்பனையானது, அதில் அவர் மிகவும் பெருமிதம் கொண்டிருப்பார் என்று…

தோமி தாமஸ் புத்தக வெளியீட்டாளரின் கணினியைக் காவல்துறை பறிமுதல் செய்தது

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தாமஸ் எழுதிய நினைவுக் குறிப்பு புத்தகத்தின் வெளியீட்டாளர் மீதான விசாரணையைத் தொடர்ந்து, கெராக்புடாயா நிறுவனத்திடமிருந்து இரண்டு கணினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியாகினியிடம் பேசிய கெராக்புடாயா நிறுவனர் சோங் தோன் சின், என் கதை : தரிசில் தேடும் நீதி (My Story:…

RM500,000 தண்டம் : மலேசியாகினி பொதுமக்களின் உதவியை நாடுகிறது

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பான RM500,000 தண்டத்தைத் திரட்ட உதவுமாறு மலேசியாகினி பொதுமக்களை அணுகுகிறது. சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் கோரிய RM200,000-ஐ விட அதிகமான தொகையை, அடுத்த புதன்கிழமை (பிப்ரவரி 24), மூன்று வேலை நாட்களுக்குள் செலுத்த வேண்டும். செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில், வாசகர்கள்…

நீதிமன்ற அவமதிப்பு : மலேசியாகினிக்கு RM500,000 தண்டம் விதிக்கப்பட்டது

மலேசியாகினி இணையத்தள செய்தி நிறுவன வாசகர்களின் கருத்துகள், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, RM500,000 தண்டம் விதிக்கப்பட்டது. இன்றைய வழக்கு விவகாரத்தின் போது, ஃபெடரல் நீதிமன்றம் அத்தண்டனையை வழங்கியது. முன்னதாக 6 -1 என்ற பெரும்பான்மை முடிவில், தனது வாசகர்களின் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளுக்கு மலேசியாகினி பொறுப்பேற்க வேண்டுமென…

ஒரு மேஜையில் 2-க்கும் மேற்பட்டவர்கள் அமர இன்று முதல் அனுமதி

இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் (பி.கே.பி.) கீழ் உள்ள மாநிலங்களில், உணவருந்த ஒரு மேஜையில் இருவருக்கு மேல் அமர அனுமதிக்கப்படுகிறது. மேலும், வாகனத்தின் கொள்ளளவு அடிப்படையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை இருக்கலாம் என்றும் பாதுகாப்பு அமைச்சர், இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. மற்றும் மீட்புநிலை பி.கே.பி.…

பி.கே.பி.பி. பகுதிகளில் திரையரங்குகளைத் திறக்க அரசாங்கத்திற்கு வலியுறுத்து

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) பகுதிகளில், சினிமா பொழுதுபோக்குத் துறையை மீண்டும் திறக்குமாறு, திறையரங்க உரிமையாளர் ஒருவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் (எல்.எஃப்.எஸ்) குழுமத்தின் உரிமையாளர், ஆர் துரைசிங்கம் பிள்ளை, பி.கே.பி.பி. அமலில் இருக்கும் மாநிலங்களில் கூட்டங்கள், திருமணங்கள் மற்றும் பிற சமூக ஒன்றுகூடல்களை…

தமிழினப்போராளி அமைச்சியப்பன் காலமானார்

தமிழினப்போராளி செ. அமைச்சியப்பன் இன்று (18.2.2021) மாரடைப்பால் காலமானார். சிலகாலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அன்னார் இன்று மாலை கேமரன் மலையிலுள்ள தனது இருப்பிடத்தில் காலமானார். தமிழர், தமிழ்மொழி, தமிழ்தேசியம் என்ற சொற்களுக்கு இலக்கணம் வகுக்கும் வகையில் உணர்வோடும் உரிமையோடும் தனது வாழ்க்கை பாதையில் பயணித்த அமைச்சு என்ற…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போடத் தவறும் முதலாளிகளுக்குச் சிறை

அரசாங்கம் தீர்மானித்தபடி, விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும். முதலாளிகள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் (திருத்தம்) சட்டம் 2019-ஐ (சட்டம் 446) மீறியதாகக் குற்றம் சாட்டப்படலாம்; இது…

இன்று 2,712 புதியத் தொற்றுகள், 25 இறப்புகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,712 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகளையும், 25 இறப்புகளையும் மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்தது. அண்மைய காலமாக இரட்டை இலக்க புள்ளிவிவரங்களில் இருந்த பேராக் (198) மற்றும் கெடா (182), இன்று மூன்று இலக்க பதிவைக் காட்டியுள்ளன. கடந்த…

பி.டி.பி.ஆர். 2.0: மிக நீண்ட நேரம், ஈக்காத்தான் இளைஞர் அமைப்பு…

இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் 2.0 (பி.டி.பி.ஆர்.) செயல்பாட்டை இரத்து செய்யுமாறு, மலேசிய ஈக்காத்தான் இளைஞர் மன்றம் (டி.பி.ஐ.எம்) கல்வி அமைச்சை வலியுறுத்துகிறது. அதன் துணைத் தலைவர் ஷாஹிர் அட்ணான், பி.டி.பி.ஆர். 2.0-இன் அதிகபட்ச காலம் மிக நீண்டது, நடைமுறைக்கு மாறானது மட்டுமல்லாமல், இயங்கலை கற்றலுக்கு யதார்த்தமானதாக இல்லை…

மக்களவையைக் கூட்ட அதிகமாக எம்.பி.க்கள் வலியுறுத்து

கோவிட் -19 பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்டத் தடைகளைத் தளர்த்தி, பல்வேறு பொருளாதாரத் துறைகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்களவையையும் கூட்டுமாறு பல எம்.பி.க்கள் வலியுறுத்துகின்றனர். இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், அவசரநிலை குறித்து பேரரசருக்கு ஆலோசனை வழங்கும் இருகட்சி சார்ந்த குழு, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதை…

சூரிய ஆற்றல் திட்ட ஊழல் வழக்கு – தற்காத்துக் கொள்ள…

சரவாக்கில், 369 கிராமப்புறப் பள்ளிகளில், சூரிய ஆற்றல் வழங்கல் மற்றும் நிறுவல் திட்டங்களுக்கான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியக் குற்றச்சாட்டில் தன்னைத் தற்காத்துக் கொள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி மொஹமட் ஜெய்னி மஸ்லான், மூன்று வழக்குகளுக்கும் முதற்தோற்றத்தை உருவாக்குவதில்…

‘தண்டம் விதிக்காமல், அன்னுவார் வழக்கை ஏன் ஏஜி-யிடம் கலந்தாலோசிக்க வேண்டும்?

கோவிட் -19 செந்தர இயங்குதல் நடைமுறையை (எஸ்ஓபி) மீறியதாகக் கூறப்படும் அன்னுவார் மூசாவின் வழக்கை, காவல்துறை ஏன் சட்டத்துறைத் தலைவருக்கு (ஏஜி) அனுப்ப வேண்டும் என்று புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பினார். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் சைபுல் அஸ்லி கமருதீனின் செயலை "முட்டாள்தனம்"…

சேவியர் : தினகரன் குடும்ப நண்பர், உதவியாளர் அல்ல

தனக்கு பழக்கமான பேராக் பி.கே.ஆர். துணைத் தலைவர் எம் ஏ தினகரனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்ததைத் தொடர்ந்து, பி.கே.ஆர். துணைத் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்றக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இன்று ஓர் அறிக்கையில், தினகரன் குடும்ப அறிமுகம்…

இன்று 2,998 புதிய நோய்த்தொற்றுகள், மொத்த மரண எண்ணிக்கை 1000-ஐ…

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,998 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இறப்புகள் இன்று 22-ஆக அதிகரித்துள்ளன (நேற்று 8 இறப்புகளுடன் ஒப்பிடும்போது), மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,005. "சிலாங்கூரில்…

‘டிடேக் டிவி’ கல்வி நிகழ்ச்சி, இயங்கலைக் கற்றலுக்கு உதவும் –…

இல்லமிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு, குறிப்பாக இணைய வசதி இல்லாதவர்களுக்கு, கல்வி அமைச்சின் புதிய முயற்சியான ‘டிடேக் டிவி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி உதவும் என பிரதமர் முஹிடின் யாசின் நம்பிக்கை தெரிவித்தார். கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இல்லமிருந்து கற்றல் கற்பித்தலில்…

‘அனைத்து எம்.பி.க்களும் தடுப்பூசிகளைப் பெற்ற பிறகு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க எந்தக்…

எம்.பி.க்கள் தடுப்பூசி பெற்ற பிறகு, மக்களவையை ஒத்திவைக்க எந்தக் காரணமும் இல்லை என்று கோத்த கினாபாலு நாடாளுமன்ற உறுப்பினர் சான் ஃபூங் ஹின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கும் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தைப் பெறுபவர்கள் குழுவில், அனைத்து எம்.பி.க்களும் சட்டமன்ற உறுப்பினர்களும்…

சாலைத் தடுப்புகளில் என்னென்ன தகவல்களை வழங்கலாம்

சாலை தடுப்பில், ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணைப் பெற்ற போலீஸ்காரர் ஒருவர், அவருக்குப் "பழகலாமா" என்றக் குறுஞ்செய்தியை அனுப்பிய சம்பவம், மற்றவர்களிடையே காவல்துறையிடம் என்னென்ன தகவல்கள் கொடுக்கலாம், தவிர்க்கலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது. மலேசியாகினி தொடர்பு கொண்ட வழக்கறிஞர் ஒருவர், சாலைத் தடுப்புகளில் நிறுத்தப்பட்டால், உங்கள் தொலைபேசி எண்ணை…

பேராக் பி.கே.ஆர். துணைத் தலைவரை எம்.ஏ.சி.சி. தடுத்து வைத்தது

பேராக் பி.கே.ஆர். துணைத் தலைவர் எம் ஏ தினகரனை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளதாக, கட்சியின் சில உள் வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று காலை, சாட்சியமளிக்க எம்.ஏ.சி.சி. அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அவரைக் கைது செய்ததாக மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்பட்டது. பேராக் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான விசாரணைக்கு…

இன்று 2,720 புதிய நோய்த்தொற்றுகள், 8 மரணங்கள்

கோவிட் 19 | இன்று பிற்பகல் நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 2,720 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்,  எட்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன, இது தொற்றுநோயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை 983 ஆக உயர்த்தியது. இன்று 5,718 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…