பிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள்…

பிளஸ் மலேசியா பெர்கட்டின் (Plus Malaysia Bhd) கீழ்ழுள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கவரிக் கட்டணம் பிப்ரவரி 1 முதல் 18 சதவீதம் மலிவாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், 2058 ஆம் ஆண்டு வரை அதில் அதிகரிப்பு இருக்காது எனவும் சொல்லப்பட்டுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், அரசாங்கம்…

தை பொங்கல் வாழ்த்து – சேவியர் ஜெயக்குமார்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. விவேகமான உழைப்புடன், விழிப்புணர்வோடு மக்கள் ஒன்று பட்டு செயல் பட்டால் நாம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் வழி நன்னிலையை பெற இயலும் என்கிறார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார். தை புத்தாண்டு…

யுனிமெப் துணை வேந்தர், தேர்வு வாரியம் நீக்கப்பட வேண்டும்-சந்தியாகு வலியுறுத்து

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, யுனிவர்சிடி மலேசியா பெர்லிஸ்(யுனிமெப்) தயாரித்திருந்த தேர்வுத் தாளில் சர்ச்சைக்குரிய வினாக்களுக்கு இடமளித்த அப்பல்கலைக்கழக துணை வேந்தர் பாட்லிஷா அமாட்டும் தேர்வு வாரியமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இன உறவுகள் தொடர்பான கேள்வித் தாளில் 60வது வினா மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…

அமைச்சரவை உத்தரவுகளை மீறியதற்காகத்தான் மஸ்லி நீக்கப்பட்டாராம்

மலேசியா இன்சைட் செய்தி ஒன்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் அமைச்சரவை முடிவுக்கேற்ப நடந்துகொள்ளத் தவறினார் என்றும் அதனால்தான் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்றும் கூறுகிறது. டிசம்பர் 27-இல் மஸ்லிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று காணக்கிடைத்ததாக அச்செய்தித்தளம் கூறிற்று. அக்கடிதத்தில் ஜாவி பாடம், பள்ளிகளில் இலவச இணையச் சேவை,…

ஜாவி விவகார முடிவெடுப்புகளில் பள்ளி வாரியங்களையும் சேர்க்குமாறு மனு!

சீன அமைப்பு காங்கிரஸ் ரத்து செய்யப்பட்ட போதிலும், டாங் ஜியாவோ சோங் மற்றும் பல தமிழ் குழுக்களின் பிரதிநிதிகள் கடந்த 2.1.2020-ல் கல்வி அமைச்சகத்திற்கு ஒரு மகஜரை அனுப்பியுள்ளனர். இதில், ஜாவி பிரச்சினையில் முடிவெடுப்பவர்களில் ஒருவராக பள்ளி வாரியங்களையும் சேர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

அரசியார் தாய்மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறார்

ராஜா பெர்மைசூரி ஆகோங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டரியா தாய்மொழியில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்வதோடு மற்றொரு மொழியையும் கற்றுக்கொள்வது நல்லதுதான் என்று கூறுகிறார். நேற்று அவருடைய டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்ட அரசியார், மக்கள் மெண்டரின் அல்லது தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்துகொள்வதால் “இழக்கப்போவது எதுவுமில்லை” என்றார். “நாம்…

கிமானிஸில் நஜிப்புக்கு நல்ல வரவேற்பு : எப்படி என்று வாரிசான்…

கிமானிஸ் இடைத் தேர்தலில் வாரிசான் கட்சி வேட்பாளர் கரிம் பூஜாங்குக்கு, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எத்தனையோ பிரச்னைகளுக்கிடையிலும் இன்னமும் மக்களிடையே பிரபலமாக விளங்குவது எப்படி என்று ஆச்சரியப்படுகிறார். “கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளை எதிர்நோக்கும் ஒருவர் இங்கு வருகிறார், மக்கள் இன்னமும் அவரை ‘போஸ்’…

கிமானிஸ் இடைத் தேர்தல்: 70 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என இசி…

தேர்தல் ஆணையம் கிமானிஸ் இடைத் தேர்தலில் 70 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களிப்பார்கல் என எதிர்பார்க்கிறது. இன்று காலை அந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவுக்கு வந்தது. அது பார்டி வாரிசான் சாபா(வாரிசான்)-வின் கரிம் பூஜாங்குக்கும் பாரிசான் நேசனல்( பிஎன்) முகம்மட் அலாமினுக்குமிடையிலான நேரடிப் போட்டிதான் என்பது உறுதியாகி…

பி.எஸ்.எம். : மஸ்லி – கருப்புக் காலணிகளுக்கு அப்பால்….

கருத்து | மலேசியாகினியில், மஸ்லி மாலேக் குறித்து வெளியான அனைத்து கருத்துகளையும் படித்தப் பின்னர்; இதனை எழுத எனக்கு உத்வேகம் வந்தது, கண்டிப்பாக இதுவும் அதே தொனியில் முடியும் என நான் நம்புகிறேன். மஸ்லி மாலேக்கின் திடீர் பதவி விலகல் என்னைப் போலவே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரைப்…

தற்காப்பு அமைச்சர் மகன்மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு

தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபுவின் மகன் அஹமட் சைபுல் இஸ்லாம்மீது இன்று கோலாலும்பூர் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வழக்கைக் காண்பதற்கு நீதிமன்றத்தில் நிறைய பேர் கூடி இருந்தனர். மெஜிஸ்ட்ரேட் முகம்மட் அய்ஸாட் அப்துல் ரஹிம், அரசாங்கத் தரப்பில் அஹ்மட் சைபுல் போதைப் பொருள் உட்கொண்டிருந்தார் என்பதற்குப்…

அமைச்சர் பதவி பறிக்கப்படுவது பற்றி முகம்மட்டின் கெதாபி கவலைப்படவில்லை

அடுத்து அமைச்சர் பதவியை இழக்கப்போவது சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் முகம்மட்டின் கெதாபி என்றொரு வதந்தி உலவுகிறது. ஆனால், அது குறித்து அவர் கவலை கொள்ளவில்லை. அவருடைய அடைவுநிலை “மோசமாக உள்ளது” என்று கூறப்படுவது உண்மையா என்று செய்தியாளர்கள் வினவியதற்கு அது உண்மை அல்ல என்றார். “கடந்த ஆண்டில்…

ஹரப்பானின் செல்வாக்குமிக்க தலைவரின் கையாள்தான் மஸ்லி-இன் இடத்தில் நியமிக்கப்படுவார்- அனுவார்…

கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் நிலையை எண்ணி இரத்தக் கண்ணீர் வடிக்கிறார் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா. தலைவர்கள் ஆடும் அரசியல் சதுராட்டத்துக்குப் பலியாகி விட்டாரே அந்த பெர்சத்து எம்பி என்று அங்கலாய்க்கிறார் அனுவார். பார்க்கப்போனால் அவர் ஒன்றும் மோசமான அமைச்சர் அல்ல என்று கூறிய அனுவார்,…

மஸ்லி பதவி விலகலா?

கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் புத்ரா ஜெயாவில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்திக்கச் சென்றுள்ளார். அச்சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்த அரசாங்க வட்டாரமொன்று அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை. “சந்திப்பு நடப்பதை மட்டுமே உறுதிப்படுத்த முடியும். மற்ற விவரங்கள் தருவதற்கில்லை”, என்றந்த வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.…

மூவார் ஆற்று நீரில் மாசு : 35ஆயிரம் வீடுகள் பாதிப்பு

மூவார் ஆற்றில் அம்மோனியா மிகுந்த அளவு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 35 ஆயிரம் வீடுகளுக்குக் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. 9 மாதங்களுக்கு முன்னர் பாசிர் கூடாங் சுங்கை கிம் கிம்-மில் கடும் மாசுபாடு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் தடைப்பட்டது நினைவிருக்கலாம். இப்போது மூவாரில். இப்பிரச்னைக்கு முடிவுகாண ஜோகூர் நீர்…

சாக்கடை அரசியல், அதிகாரப் போராட்டம் வேண்டாம், தேவை சீரமைப்புகளே: ஹரப்பானுக்கு…

பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சாக்கடை அரசியலும் இன, சமய வாதங்களும் பெருக இடமளித்துக் கொண்டிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே கடிந்து கொண்டிருக்கிறது. “ஹரப்பான் ஆட்சி ஏற்று 19 மாதங்களுக்குமேல் ஆகி விட்டது. அரசாங்கத்திலும் அரசியலிலும் சீரமைப்புச் செய்யப்போவதாக அது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளில்…

கிமானிஸ் இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் விதிமுறைகளைப்…

சனிக்கிழமை கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம்(இசி) வலியுறுத்தியது. அன்றைய தினம் வேட்பாளர்கள் காலை மணி 9க்கும் 10க்குமிடையில் வேட்புமனுக்களைத் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என இசி தலைவர் அஸ்கார் அசிசான்…

2020-இல் என்ன எதிர்பார்க்கலாம்? டோல் கட்டணம், கட்சித் தேர்தல்கள், அன்வார்…

ஒரு புத்தாண்டு, ஒரு புதிய தசாப்தம் பிறந்து விட்டது. 2020இல் மலேசியா ஒரு வளர்ந்த நாடாக விளங்கும் என்பது டாக்டர் மகாதிர் முகம்மட் 30 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த ஒரு தொலைநோக்குத் திட்டம். ஒரு பெரிய கனவு. அக்கனவு இந்த 2020-இல் நனவாகப் போவதில்லை. என்றாலும், பிறந்துள்ள புத்தாண்டில்…

2020 புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்று நாம் 2019 ஐ விட்டு 2020 ஐ வரவேற்கிறோம். மலேசியாகினியில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும், உங்கள் அனைவருக்கும் குறிப்பாக எங்கள் வாசகர்களுக்கு, இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டில் மலேசியாவின் பயணத்தை பகிர்ந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த கடமையாக இருந்தது. ஒரு…

2020-ல் மலேசியர்களிடையே வலுவான ஒற்றுமைக்கு பேரரசர் அழைப்பு விடுக்கிறார்!

2020-ஆம் ஆண்டில், நாட்டின் தொடர்ச்சியான ஒற்றுமை மற்றும் செழிப்பை அனுபவிக்க வேண்டுமாயின், வலுவான ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் உருவாக்க அனைத்து மலேசியர்களும் பாடுபட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா பரிந்துறை விடுத்துள்ளார். ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நாட்டின் மீது பற்று,…

மக்களை பிளவு படுத்தும் கீழறுப்பு சக்திகளை ஒழிக்க புத்தாண்டிம் ஒன்று…

கடந்த தேர்தலில் மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கும் பொருளாதார ஏற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில் தேர்தல் வாக்குறிதிகள் இருந்தன. அவற்றை பூர்த்தி செய்யும் அளவுக்கு நிதிநிலைமையும் இனவாத அரசியல் தாக்காமும் தடைகளாக இருந்தன. ஆனால் அதனையும் தாண்டி, அரசியல், இனம், சமயம், மொழி போன்ற வேற்றுமைகளாலும் சில கீழறுப்பு…

‘நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளையும் விவசாயத்தையும் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்!’ –…

கேமரன் மலை விவசாயிகளின் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதை, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) மிகக் கடுமையாக கருதுகிறது. அச்செயலைக் கண்டிப்பதாக, பிஎஸ்எம் தலைமைச் செயலாளர்  சிவராஜன் ஆறுமுகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இதுபோன்ற மோசமான சம்பவத்திற்குப் பக்கத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம் மஇகா- வை மட்டும் குறை கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. மாறாக, பிஎச்…

வன்முறை மிரட்டல்களுக்கு விட்டுக் கொடுப்பதா? சுஹாகாம் வருத்தம்

மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), அதிகாரிகள் வன்முறை மிரட்டல்களுக்கு விட்டுகொடுப்பதை எண்ணி வருத்தமடைகிறது. காஜாங் போலீஸ் சீனக் கல்வி அமைப்பான டொங் சொங் ஜாவி விவகாரம் குறித்து விவாதிக்க கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த மாநாடு நடைபெறாமல் தடுக்க நிதிமன்றத் தடை உத்தரவு பெற்றதுதான் சுஹாகாமின் வருத்தத்துக்குக் காரணம்.…

கிமானிஸ் இடைத் தேர்தலில் அனிபாவின் மகன்கள் போட்டியிட மாட்டார்கள்

எதிர்வரும் கிமானிஸ் இடைத் தேர்தலில் அத்தொகுதியின் முன்னாள் எம்பி-ஆன அனிபா அமானின் இரு மகன்களின் பெயர்களும் சாபா அம்னோ வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அனிபாவின் மகன்களான அஹமட் பிர்டுஸுக்கும் அஹமட் ஜாக்ரிக்கும் இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லையாம். அனிபாவின் உதவியாளர் நோர்ஹைடி சே டான் தெரிவித்தார். ஜாக்ரி அம்னோவில்…