நாடாளுமன்றத்தில் துணை அமைச்சர் மயங்கி விழுந்ததால் மன்ற நடவடிக்கைகள் நிறுத்ப்பட்டன

இன்று காலை நாடாளுமன்றத்தில் தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் எட்டின் ஷியாஸ்லீ திடீரென்று மயங்கி விழுந்ததை அடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறிது நேரம் நிறுத்தி அமைக்கப்பட்டது. வீடமைப்பு, ஊராட்சி துணை அமைச்சர் ராஜா கமருல் பஹ்ரின் , பிஎன் -ஜெம்போல் எம்பி சலிம் ஷரிப்பின் கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டிரிந்தபோது…

எதிர்வாதம் செய்ய நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு

நஜிப் அப்துல் ரசாக், எஸ்ஆர்சி நிதியில் ரிம42 மில்லியனை மோசடி செய்தததாக அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் 7 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எதிர்வாதம் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுத் தரப்பு பெக்கான் எம்பிமீது சுமத்திய குற்றச்சாட்டுகளைச் செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மட் நஸ்லான் முகம்மட் கசாலி, குற்றச்சாட்டுகளுக்கு எதிராக…

இடைத் தேர்தல்: மசீச செராமாவுக்குச் சேரும் கூட்டம் ஹரப்பான் செராமாவுக்குக்…

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் பிரச்சார வேலைகள் இரண்டாம் வாரத்துக்குள் அடியெடுத்து வைக்கின்றன. நேற்று மசீச தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பெக்கான் நானாஸ் மார்க்கேட்டுக்கு முன்புறம் நடந்தது. அதற்கு ஆறு-நிமிடத்தில் நடந்து செல்லக்கூடிய தூரத்தில் ஹரப்பான் கூட்டம் யு மிங் சீனப் பள்ளிக்கு முன்புறம் நடந்தது. மசீச கூட்டத்துக்குச்…

பெய்ஜிங் சென்று கொண்டிருந்த எம்எச்360 கேஎல்ஐஏ-க்குத் திரும்பி வந்தது

மலேசிய விமான நிறுவன விமானமொன்று கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்டுச் சென்ற சில மணி நேரங்களில் அது மீண்டும் கேஎல்ஐஏ-க்கே திரும்பியது. எம்எச் 360 நேற்று மாலை மணி 6.30க்கு கேஎல்ஐஏ-இலிருந்து புறப்பட்டது. பின்னிரவு மணி 12.20க்கு அது சீனா சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்காமல்…

கோபிந்த்: பெர்னாமா, ஆர்டிஎம் சீரமைக்கப்படும், ஆனால் ஆள்குறைப்பு இருக்காது

ஊடகத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் வேளையில் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாவும் அரசுக்குச் சொந்தமான ஒலி/ஒளிபரப்பு நிறுவனமான ஆர்டிஎம்-மும் அதிலிருந்து விலகி இருக்க முடியுமா? அவையும் சீரமைக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார் தகவல், பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ. சீரமைப்புச் செய்யப்படும் வேளையில் ஆள்குறைப்பு இருக்காது என்றும் அவர்…

அதிருப்தி என்றாலும் அடிநிலை உறுப்பினர்கள் ஹரப்பான் வெற்றிக்குப் பாடுபடுவார்கள்- குவான்…

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பெர்சத்து வேட்பாளருக்காக தேர்தல் பணி செய்வதில் டிஏபி அடிநிலை உறுப்பினர்களுக்கு அவ்வளவாக மனநிறைவு இல்லை என்பதை ஒப்புக்கொண்ட லிம் குவான் எங், என்றாலும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகள் “ஒன்றுபட்ட வெற்றிக்காக ஒன்றுபட்டு உழைக்கத்தான் வேண்டியுள்ளது” என்றார். “அதிருப்தி நிலவுவதை மறுக்கவில்லை, ஆனாலும்…

சைபுடின்: ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை

சர்ச்சைக்குரிய சமய விரிவுரையாளர் டாக்டர் ஜாகி நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதில்லை என்ற   மலேசியாவின் முடிவில்   மாற்றமில்லை  என்று   வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா   நேற்றிரவு கூறினார். அவரைத் திருப்பி அனுப்பாததற்கான காரணத்தை விளக்கி வெளியுறவு அமைச்சு இந்திய அரசாங்கத்துக்கு அதிகாரப்பூர்வ கடிதமொன்றை எழுதும் என்றும் அவர் சொன்னார்.…

பேராக் எம்பி-இன் காணொளி: பக்கத்தான் தலைவர் மன்றம் விவாதிக்கும்

பேராக் மந்திரி புசார் அஹ்மட் பைசல் அஸுமு பங்காளிக் கட்சியான டிஏபி-யைக் குறைகூறும் சர்ச்சைக்குரிய காணொளி குறித்து பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மன்றம் விவாதிக்கும். இதைத் தெரிவித்த பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான், டிஏபி இஸ்லாத்துக்கு எதிரி என்றும் மலாய்க்காரர்களின் எதிரி என்று…

பேராக்கைக் கைப்பற்ற 15வது பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டியதில்லை- ஹமிடி

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, 15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே பேராக் மாநில அரசைக் கவிழ்க்க முடியும் என்று நினைக்கிறார். பேராக மந்திரி புசார் அஹ்மட் பைசல் அஸுமு பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சியான டிஏபி குறித்து குறைசொல்லும் காணொளி ஒன்று இணயத் தளங்களில் வலம் வந்து…

எல்டிடிஇ-தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு நியாயமான விசாரணை கிடைக்காமல் போகலாம்-…

தமிழீழ விடுதலைப் புலி (எல்டிடிஇ) இயக்கத்துடன் தொடர்புள்ள குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவருக்கும் இதர பதின்மருக்கும் நியாயமான விசாரணை கிடைக்காமல் போகலாம் என்று வழக்குரைஞர்கள் அஞ்சுகின்றனர். அவர்களின் வழக்கில் குற்றவியல் நடைமுறை நெறிமுறைகள் (சிபிசி) மற்றும் சாட்சியச் சட்டம் பின்பற்றப்படாது. மாறாக, பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்)…

அன்வார்: ஹரப்பானில் ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது

பக்கத்தான் ஹரப்பானில் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஒத்துழைப்பு வலுவாக உள்ளதாகக் குறிப்பிட்ட பிகேஆர் தலைவர் அன்வார் இpராகிம் கூட்டணி தமக்களிக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். கூட்டணியில் உள்ள பங்காளிகளை நண்பர்களாகக் கருதுவதாக அன்வார் கூறினார். எல்லாரோம் 14வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற ஒன்றித்துப் போரிட்டவர்கள். அந்த ஒத்துழைப்பு உணர்வு…

“கேள்வி கேட்பதற்காக” கம்போடிய தலைவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்- சைபுடின் அப்துல்லா

மலேசிய அதிகாரிகள் கம்போடிய எதிர்கட்சி உதவித் தலைவர் மூ சோசுவா-விடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறார்களே தவிர அவரைக் கைது செய்யவில்லை என்று வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார். கம்போடிய பிரதமர் ஹன் சென்னுக்கு எதிரானவர்களைக் கைது செய்யும்படி கம்போடியா மலேசிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தததாகக் கூறப்படுவதையும்…

ஜோ லோ-வுக்காக போருக்குச் செல்லலாம், ஆனால் வெற்றி கிடைக்காது -மகாதிர்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மலேசியச் சட்டத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் ஜோ லோவைப் பிடித்துவர கமுக்கமான ஏற்பாடுகளைச் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றார். அதிகாரிகளுக்கு ஜோ லோ இருக்கும் இடம் தெரிந்தால் ‘மொசாட் (இஸ்ரேலிய உளவுத் துறை) உத்திகளை’க் கையாண்டு அவரைப் பிடித்து வரலாமே…

கம்போடிய எதிர்க்கட்சித் தலைவர் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டார்

மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் கம்போடிய எதிர்க்கட்சியான கம்போடிய மீட்புக் கட்சியின் (சிஎன்ஆர்பி) உதவித் தலைவர் மூ சோசுவாவைத் தடுத்து வைத்திருப்பாக ராய்ட்டர்ஸ் அறிவித்துள்ளது. கம்போடிய மீட்புக் கட்சி கம்போடியாவில் தடை செய்யப்பட்ட கட்சியாகும். தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி அச்செய்தியை வெளியிட்டிருந்த ராய்ட்டர்ஸ், நாடு கடத்தப்பட்ட சிஎன்ஆர்பி) தலைவர்கள் -…

கேலிச் சித்தரங்கள் மூலம் இனவாதத்தை எதிர்க்க ஒரு நூல், ஜுனார்…

இனவாதம் சிந்தனையைத் தரம் தாழ்த்துகிறது, நாட்டு நிர்மாணிப்புக்கு அது ஒரு பெருந் தடங்கல் என்று உரக்க உரைக்கிறார் கேலிச்சித்திர ஓவியர் சுல்கிப்ளி எஸ்எம் அன்வார். ஜுனார் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அவர், தன் கருத்தைப் பறைசாற்ற "Cartoons against racism"( இனவாத  எதிர்ப்புக்  கேலிச் சித்திரங்கள்) என்ற…

லாரி சாலைத் தடுப்பில் மோதி இரு போலீஸ் அதிகாரிகள் மரணம்

இன்று காலை ஜோகூரில், ஸ்ரீஆலாம், பாசிர் பூத்தே, ஜாலான் சங்கோங்கில் போக்குவரத்துச் சோதனைக்காக போலீசார் அமைத்திருந்த சாலைத் தடுப்பில் லாரி ஒன்ரு மோதியதில் போலீஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர், மேலும் மூவர் காயமடைந்தார். பாசிர் கூடாங் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சைபுல்லா முகம்மட், 32, தாமான் சைண்டெக்ஸ் போலீஸ்…

டிஏபி பிரதிநிதிக்கு எதிரான இரண்டு எல்டிடிஇ- தொடர்புக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன

சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரனுக்கு எதிராக அவர் தமிழீழ விடுதலைப் புலி (எல்டிடிஇ) தொடர்புள்ள பொருள்களை வைத்திருந்ததாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளைக் கைவிடுவதாக அரசுத் தரப்பு செய்துகொண்ட மனுவை ஏற்றுக்கொண்டது. டிபிபி அஸ்லிண்டா அஹாட் தாக்கல் செய்த மனுவை நீதிபதி மதிஹா ஹருல்லா…

வாகன நிறுத்துமிடங்களில் தச் அண்ட் கோ-வுக்கு விதிக்கப்படும் 10 %கூடுதல்…

வாகன நிறுத்துமிடங்களில் தச் அண்ட் கோ அட்டை மூலம் பணம் செலுத்தும்போது 10விழுக்காடு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது. இதற்குக் கட்டம் கட்டமாக முடிவு காணப்படும் என்று உள்நாட்டு வாணிக , கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சொங் சியெங் ஜென் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். என்றாலும், அதற்குச்…

வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்கு அனுமதி

2020 ஜனவரியிலிருந்து இந்தோனேசியாவின் கொஜெக்கும் உள்நாட்டு நிறுவனங்களின் டெகோ ரைட்டும் வாடகை மோட்டார்-சைக்கிள் சேவை நடத்த அனுமதிக்கப்படும். ஆறு மாதகாலத்துக்குப் பரிட்சார்த்த அடிப்படையில்  அச்சேவை நடைபெறும் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லொக் சியு பூக் கூறினார். “பொதுப் போக்குவரத்துக்கு முறையில் வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்கும் முக்கிய இடமுண்டு.…

ஜோ லோ-வின் கடப்பிதழை சைப்ரஸ் பறித்துக் கொள்ளுமா?

சைப்ரஸ் அதிபர் நிக்கோஸ் அனாஸ்டாசியாடெஸ் மலேசியாவிலிருந்து தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோவின் கடப்பிதழ் பறிக்கப்படலாம் என்பதைக் கோடி காட்டியுள்ளார். அது குறித்து சைப்ரஸ் மெயில் நாளேடு விவவியதற்கு “ஆமாம்” என்று அவர் பதில் அளித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1எம்டிபி மோசடியுடன் தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டும் ஜோ லோவுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியபோது…

உங்கள் கருத்து: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெளிப்படைத்தன்மை தேவை

பயங்கரவாத அமைப்புகள், சித்தாந்தங்களின் பட்டியலை போலீஸ் வெளியிட வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது ஏமாற்றுவேலையை  எதிர்ப்பவன்: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெளிப்படைத்தன்மை தேவை எதிர்ப்பாளி: ஸ்ரீலங்கா உள்நாட்டுப் போர் முடிந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன இப்போதுதான் சிலர் மலேசியத் தமிழர்களுக்கு அப்போருடனும் தமிழீழ விடுதலைப் புலி (எல்டிடிஇ)…

வாக்குறுதி கொடுத்ததுபோல் 1மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் -பக்கத்தான்

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் வாக்குறுதி அளித்ததுபோல் அதன் ஐந்தாண்டுக்கால ஆட்சியில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார். இப்போது சுமார் 640,000 வேலைகள் காலியாக உள்ளன. ஆனால், இளைஞர்களில் பெரும்பாலோர் அவற்றில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றாரவர். “கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவோம். இப்போதே 640,000…

ஹாடி: எதிரணிக்கு மசீச போன்ற தீவிரவாதமற்ற முஸ்லிம்-அல்லாத கட்சியும் தேவைதான்

தஞ்சோங் பியா இடைத் தேர்தலில் மசீச போட்டியிடுவதை ஆதரித்த பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்,  எதிர்ர்க்கட்சிக் கூட்டணிக்குத்   தீவிரவாதமற்ற முஸ்லிம் அல்லாதாரும் தேவைதான் என்றார். அப்படிப்பட்ட முஸ்லிம்-அல்லாதார் கட்சிகளில் மசீசவும் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், ஒரு நேரத்தில் பிஎன்னில் இரண்டாவது பெரிய கட்சியாக விளங்கிய மசீச …