ஹிஷாம்: அஸ்மின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது நானல்ல

நேற்றிரவு எம்பிகளும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுவதை அம்னோ முன்னாள் உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் மறுத்தார். “நான் நேற்றிரவு (எதிரணி எம்பிகளை அழைத்துக்கொண்டு) அஸ்மினைச் சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுவது உண்மையல்ல. அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது நானல்ல. “அம்னோ ஒழுங்கு…

பேராக் எக்ஸ்கோ பால் யோங்-கை பணி இடைநீக்கம் செய்க- வழக்குரைஞர்…

பேராக் மந்திரி புசார் அஹமட் பைசல் அசுமா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பால் யோங்கை இடைநீக்கம் செய்ய வேண்டும் என பிரபல வழக்குரைஞர் ஹனிப் காத்ரி அப்துல்லா   வலியுறுத்தினார். “ ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி குறித்து மந்திரி புசார் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்கிறபோது…

‘பிரதமர் பதவி விலகுவார்’ என்பது பொய்யான செய்தி- பிஎம்ஓ அதிகாரி

பிரதமர் துறை அலுவலக (பிஎம்ஓ) அதிகாரி ஒருவர், சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் டாக்டர் மகாதிர் விரைவில் தம் பதவி விலகலை அறிவிப்பார் என்ற செய்தியை மறுத்துள்ளார். தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அப்படி ஒரு செய்தி பரவி வருகிறது. “அது ஒரு பொய்யான…

மகாதிர்: அதிக பட்சம் 2,000 வாக்குகளில் தோற்கலாம் என்று எதிர்பார்த்தோம்

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என மகாதிர் முகம்மட் கூறினார். ஆனால், அது படுதோல்வியாக அமையும் என்பது அவர் எதிர்பார்க்காத ஒன்று. “தஞ்சோங் பியாய் மக்களின் முடிவை ஏற்கிறேன். எதிர்க்கட்சி வெற்றி பெறும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. “2,000 வாக்குகளில் வெற்றிபெறக் கூடும்…

ஹிஷாம்: பிஎன் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது

பாரிசான் நேசனல் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அது தீர்வுகாண வேண்டிய பிரச்னைகள் நிறையவே உள்ளன என்கிறார் முன்னாள்   அம்னோ   உதவித் தலைவர்   ஹிஷாமுடின் உசேன். “இது ஒரு நல்லதொரு தொடக்கம். ஆனால், போக வேண்டிய தூரம் அதிகம். பிஎன் ஒன்றும் குறைகளற்ற கட்சி அல்ல.…

ரபிசிக்கும் நுருலுக்கும் சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும்- அன்வார் வலியுறுத்து

ரபிசி ரம்லியும் நுருல் இசாவும் பிகேஆரில் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்து முன்னர் அவர்களுக்குச் சற்றே அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். ரபிசி நிதிமன்ற வழக்குகளில் வெற்றிகண்ட பின்னரும் தீவிர அரசியலுக்குத் திரும்பாமல் இருக்கிறாரே என்று வினவப்பட்டதற்கு அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.…

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்: சீன வாக்காளர்கள் ஹரப்பானைக் கைவிட்டார்கள்

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்துள்ள ஒன்பதாவது தேர்தலாகும். அதேவேளை, கேமரன் மலை, செமிஞ்யி, ரந்தாவுக்குப் பின்னர் ஹரப்பான் தோல்விகண்ட நான்காவது தேர்தலும் அதுதான். இதற்குமுன் நடந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் பிஎன்னுக்கு மலாய் ஆதரவு கணிசமான அளவுக்கு அதிகரித்து வந்ததைக் காண…

பேராக் அரசு பணியாளர்களுக்குச் சிறப்புத் தொகையாக ஒரு மாதச் சம்பளம்

பேராக் அரசுப் பணியாளர்களுக்கு ஆண்டு இறுதிக்குள் ஒரு மாதச் சம்பளம் அல்லது குறைந்தது ரிம2,000 சிறப்பு நிதி உதவியாக வழங்கப்படவுள்ளது. இந்த நற்செய்தியை அறிவித்த பேராக் மந்திரி புசார் அஹமட் பைசல் அசுமு, Orang Besar Jajahan-களும் இச்சிறப்பு உதவியைப் பெறுவார்கள் என்றார். அது தவிர்த்து பயிற்சிபெறாத ஆசிரியர்களுக்கு,…

இடைத் தேர்தல்: நஜிப் வருகை கூட்டத்தில் சலசலப்பு

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் இன்று நண்பகல் வரை 43 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் மதிப்பிடுகிறது. கேமரன மலை, ரந்தாவ் இடைத்தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவு ஆனால், சண்டாகான் இடைத் தேர்தலைவிட அதிகம். பிற்பகலில் மழை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வாக்களிக்க வருவோருக்கு ஒரு…

பத்து எம்பி கார்மீது முட்டை வீச்சு

பிகேஆர் எம்பி பி.பிரபாகரன், நேற்றிரவு தன்னுடைய கார்மீது முட்டைகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் புகார் செய்துள்ளார். ஜாலான் ஈப்போவில் பப்பாரிச் உணவகத்துக்குப் பின்புறத்தில் அவரது டொயோட்டா வெல்பாயர் கார் நிறுத்தபட்டிருந்தது. “நான் உணவகத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால் கார் ஓட்டுனரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறி விட்டேன்.…

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்: வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடக்கிறது

மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் இன்று வாக்களிப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2018 பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் குறுகிய பெரும்பான்மையில் அத்தொகுதியை வென்றது. அதனிடமிருந்து அத் தொகுதியைத் தட்டிப் பறிக்க தேசிய முன்னணி (பிஎன்) பாஸுடன் இணைந்து முவாபகாட் நேசனல் என்னும் கூட்டணியை…

நான் இப்போது பிஎன்னில் இல்லை: வாக்காளர்களுக்கு மகாதிர் நினைவூட்டல்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தாம் இன்னுமும் எதிர்க்கட்சியான பிஎன்னின் தலைவர்தான் என்று எண்ணி மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். பிஎன் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பல பொய்களை உரைத்து மக்களைக் குழப்ப முயல்வதாக அவர் கூறினார். “நீலநிற ஆடை உடுத்தி நான் பிரதமர் அத்துடன்…

உங்கள் கருத்து: ஹரப்பான் அதன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமா என்பதை…

பெயரிலி 770241447347646: தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் பிரச்சார காலம் ஒன்றிரண்டு நாள்களில் முடிவுக்கு வந்து விடும் என்பதால் பக்கத்தான் ஹரப்பான் ஆதரவைத் திரட்டுவதற்கு வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட வேண்டும். இன்றைய நிலையில், அங்கு நிலைமை அதற்குச் சாதகமாக இல்லை. பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவரின் கொள்கைகளின்…

பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டம்: அஸ்மினுக்கு அழைப்பு இரத்தானதால் கட்சியில்…

டிசம்பர் 8-இல் பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைக்கப்போவது யார் என்ற கேள்வி பிகேஆர் இளைஞரிடையே சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டத்தைக் கட்சித் துணைத் தலைவர் தொடக்கி வைப்பதுதான் வழக்கம். அதனால் அஸ்மின் அலிதான் டிசம்பர் 6 கூட்டத்தைத் தொடக்கி வைப்பார் என்று…

மேடான் போலீஸ் தலைமையகம் மீது தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்; அறுவர்…

இந்தோனேசிய நகரமான மேடானில் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் குண்டுகளால் தன்னைத் தகர்த்துக் கொண்டதில் அறுவர் காயமடைந்தததாக போலீசார் தெரிவித்தனர். இஸ்லாமிய போராளி ஒருவன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்மீது தாக்குதல் நடத்தி ஒரு மாதம் ஆகும் வேளையில் இது நடந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட…

மவுண்ட் எஸ்கின் சுரங்கப்பாதை ஒரு பண விரய திட்டம் -என்ஜிஓ

மவுண்ட் எஸ்கின் சுரங்கப்பாதை அமைப்பது ஒரு நல்ல திட்டம் அல்ல என்று கூறும் பினாங்கு அரசுசாரா அமைப்பு ஒன்று (என்ஜிஓ) அது ஏன் நல்லதல்ல என்பதற்குப் பல காரணங்களை முன்வைத்துள்ளது. அது வரிசெலுத்துவோர் பணத்தை விரயமாக்கும் திட்டம் என்று குறிப்பிட்ட பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் மொகிதின் அப்துல்…

கெராக்கான் தலைவருக்கு எதிராக மஸ்லி உதவியாளர் போலீசில் புகார்

மலேசியாவில் ஆசிரியர் பணிபுரிய சவூதி அராபிய ஆசிரியர்கள் அழைத்துவரப்படுவதாக கூறிய கெராக்கான் தலைவர் டோமினிக் லாவ் சாய்-க்கு எதிராக நேற்று ஒரு போலீஸ் புகார் செய்யப்பட்டது. அவரது கூற்று தீய நோக்கம் கொண்டதெனவும் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் மீது எதிர்மறையான தோற்றத்தை உண்டுபண்ணி…

250 போலீசார் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்துக்காக கைது

அப்துல் ஹமிட் படோர் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் பொலீஸ் பதவி ஏற்றது முதல் போலீஸ் படையில் 250க்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைதாகி இருக்கிறார்கள். இத்தகவலை வெளியிட்ட உள்துறை துணை அமைச்சர் அசிஸ் ஜம்மான், போலீஸ் துறையில் நிலவும் தவறான செயல்கள் குறித்துத் தகவல் அளிக்கும் அதிகாரிகலுக்கு வெகுமதி…

தஞ்சோங் பியாய்:  முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது

தஞ்சோங் பியாய்  இடைத் தேர்தலில் 280 போலீஸ் வீரர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக இன்று ஒரு வாக்களிப்பு மையம் திறக்கப்பட்டது. தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் அடக்கம்- ஒன்று, பெக்கான் நானாஸ், இன்னொன்று குக்குப். பெக்கான் நானாஸ் போலீஸ் தலைமையகத்தில் அமைந்துள்ளது வாக்களிப்பு மையம். முன்கூட்டி…

தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதை நிறுத்த மாட்டாராம் வழக்குரைஞர்

மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவது அரசமைப்புப்படி சரியா என்று கேள்வி கேட்பதை நிறுத்தப்போவதில்லை என்று சூளுரைத்த வழக்குரைஞர் முகம்மட் கைருல் அசாம் அப்துல் அசிஸ் அடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகக் கூறினார். நேற்றைய கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பால் எல்லா முடிந்துபோனதாக நினைக்கவில்லை என்றாரவர். “தாய்மொழிப் பள்ளிகள்…

லிம்: மசீச ஒதுங்கிக் கொண்டால் டிஏஆர்யுசி-க்கு அரசு நிதி

புத்ரா ஜெயா துங்கு அப்துல் ரஹமான் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு(டிஏஆர்யுசி) குறைந்தது ரிம30 மில்லியன் நிதிஉதவி அளிக்கத் தயாராகவுள்ளது ஆனால், அது மசீச-வின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி வர வேண்டும். அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி மையங்களுக்கு அரசாங்க நிதி வழங்க முடியாது என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம்…

உழைப்பாளி

உழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார்! ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது! உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே! உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே! உள்ளவெப்பம் ஒன்று…

இந்திய கூட்டுறவுக் கழகங்களின் சாபக்கேடும் – விமோசனமும் – இராகவன்…

இந்நாட்டில் இந்தியர்களுக்கென பல கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன. என்.எல்.எஃப்.சி.எஸ். எனப்படும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், நேசா கூட்டுறவுக் கழகம், கே.பி.ஜே. எனப்படும் தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் மற்றும் மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகம் போன்றவை இவற்றுள் முன்னணி வகிக்கின்றன. அமரர் துன் சம்பந்தன் தோற்றுவித்த…