அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பின் (RSF) 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு பெற்ற 88-வது இடத்திலிருந்து தற்போது 95-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த மலேசியா, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மலேசியா…
இயோ: டிபிகேஎல்-லுக்கு இலவச சட்ட உதவி ஏன்?
தாமான் ரிம்பா கியாரா மேம்பாடு தொடர்பான சச்சரவில் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்)த்துக்குப் பிரபல வழக்குரைஞர் இலவச சட்ட உதவி வழங்குவதற்குக் கூட்டரசுப் பிரதேச அமைச்சு அளித்துள்ள விளக்கம் நியாயமாகப் படவில்லை என்கிறார் செகாம்புட் எம்பி ஹன்னா இயோ. நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார ஊராட்சி அமைப்பு டிபிகேஎல்தான். அதற்கு…
நாடாளுமன்றக் கூட்டங்களுக்குமுன் நெகாரா கூ, ருக்குன்நெகாரா- பிஎன் எம்பி
ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்குமுன் நெகாரா பாட வேண்டும், ருக்குன்நெகராவை வாசிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார். அப்பரிந்துரையை முன்வைத்த ஜெம்போல் நாடாளுமன்ற உறுப்பினர் சலிம் ஷரிப் (பிஎன்) எம்பிகளிடையே நாட்டுப்பற்று உணர்வு மேலோங்க அவ்வாறு செய்வது அவசியம் என்றார்.
நைஜீரிய மாணவர் மரணம் மீதான விசாரணை ஜனவரியில்
சில மாதங்களுக்குமுன், பிஎச்டி பட்டம் பெறுவதற்காக பயின்று கொண்டிருந்த நைஜீரிய மாணவர் ஒருவர் குடிநுழைவுத் துறையால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மரணமடைந்தார். அவர் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிய கோலாலும்பூர் கொரோனர் நீதிமன்றம் மரண விசாரணையை ஜனவரியில் நடத்தும். தாமஸ் ஓரியோன்ஸ் இவான்சிஹா மரணம்மீதான விசாரணை ஜனவரி 2,3,7,8,9 ஆகிய நாள்களில்…
புத்ரா ஜெயா பினாங்கைப் புறக்கணிக்கவில்லை- குவான் எங்
நிதி அமைச்சர் லிம் குவான் எங் , புத்ரா ஜெயா நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை பினாங்கு மாநிலத்தை ”மாற்றான் பிள்ளை” அல்லது “புறக்கணிக்கப்பட்ட பிள்ளை”போல் நடத்துகிறது என்று கூறப்படுவதை மறுத்தார். சொல்லப்போனால் ஒதுக்கீடு கூடியுள்ளது. இன்று அவரது நாடாளுமன்ற தொகுதியில் வெளியிட்ட அறிக்கையில் லிம், 2017-இல் பினாங்குக்கு நிதி…
ஆளுக்கொரு நியாயம் கூடாது- ஸுரைடா
பிகேஆர் உதவித் தலைவர் ஸுரைடா கமருடின் சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியானின் அரசியல் செயலாளர் ஜக்கரியா அப்டுல் அஹமிட்-டை நீக்குவதென்று கட்சி செய்துள்ள முடிவைக் குறைகூறினார். ஊழல் மற்றும் கையூட்டுக் குற்றங்களுக்காக அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. எம்ஏசிசி ஒரு கடிதம் வாயிலாக தெரிவித்த ஆலோசனையின்படி அம்முடிவு…
கூட்டங்களுக்கு வந்திருந்தால் ஜக்கரியா நீக்கப்பட்டதற்குக் காரணம் தெரிந்திருக்கும்- ஸுரைடாவுக்கு ஃபாமி…
சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியானின் முன்னாள் அரசியல் செயலாளர் ஜக்கரியா அப்டுல் ஹமிட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை அறியாமல் குறைகூறிய கட்சி உதவித் தலைவர் ஸுரைடா கமருடின் கட்சிக் கூட்டங்களுக்குத் தொடர்ந்து வந்திருந்தால் காரணம் தெரிந்து கொண்டிருப்பார். பிகேஆர் தொடர்பு இயக்குனர் ஃபாமி பாட்சில் இதனை இன்று…
கட்சி மாறியவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்- ஜாஹிட்
கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் அதற்காக மனம் வருந்தித் திரும்பி வந்தால் அம்னோ அவர்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக உள்ளது எனக் கட்சித் தலைவர் அஹமட் ஜாஜிட் ஹமிடி கூறினார். நேற்றிரவு, ஷா ஆலமில் முவாஃபகாட் நேசனல் கூட்டத்தில் அவர் அதைத் தெரிவித்ததாக மலேசியன் இன்சைட் கூறியது. அம்னோவிலிருந்து வெளியேறிச் சென்றவர்களைப்…
ஹாடி: கொல்லைப்புற வழியாக அரசாங்கம் அமைப்பதை பாஸ் விரும்பவில்லை
கொல்லைப்புற வழியில் அரசாங்கம் அமைக்கலாம் என்று பாஸுக்கு அழைப்பு வந்ததாம் ஆனால், அதை நிராகரித்து விட்டதாம். அப்துல் ஹாடி ஆவாங் கூறினார். நேற்றிரவு நடைபெற்ற முவாஃபகாட் நேசனல் சிலாங்கூர் கூட்டத்தில் பேசியபோது பாஸ் தலைவர் ஹாடி அந்த அழைப்புப் பற்றித் தெரிவித்ததாக மலேசியன் இன்சைட் செய்தி ஒன்று கூறியது.…
சிங்கப்பூரில் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற கொடூர முறைகள் கையாளப்படுகின்றன- எல்எப்எல் குற்றச்சாட்டு
சிங்கப்பூர் சிறைத் துறை(எஸ்பிஎஸ்) தூக்குத்தண்டனையை நிறைவேற்றச் சட்டவிரோதமான, கொடூரமான முறைகளைக் கையாளுகிறது என்றும் அதற்கு “மறுக்கவியலாத” ஆதாரங்கள் இருப்பதாகவும் உரிமைகளுக்குப் போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பு (எல்எப்எல்) கூறிக்கொள்கிறது. ஆதாரங்களை உடனடியாக அது வெளியிடாது. தகவலளித்த வட்டாரத்தைப் பாதுகாக்க வேண்டியுள்ளதாக எல்எப்எல் ஆலோசகர் என்.சுரேந்திரன் கூறினார். அதற்குமுன் அது குறித்து…
அமனாவில் தலைவர்களைக் கவிழ்க்கும் முயற்சி இல்லை- சலாஹுடின்
பல மாநிலங்களிலும் அமனா கட்சித் தேர்தல் சுமூகமாக நடந்து வருகிறது. பெரிய பிரச்னைகள் இல்லை, தலைவர்களைக் கவிழ்க்கும் முயற்சியும் இல்லை என அதன் துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் கூறினார். “கட்சித் தேர்தல் அமைதியாகவும் இணக்கமான முறையிலும் நடந்து வருகிறது. தலைவர்களைக் கவிழ்க்கும் முயற்சி எல்லாம் கிடையாது. இன்று…
தப்பி ஓட முயன்ற கொள்ளையன்மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு
குவாந்தானில் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் கொள்ளையிடும் கும்பல் ஒன்றின் தலைவன் என்று ஐயுறப்படும் ஒருவன் போலீஸ்மீது காரை மோதித் தப்பிச் செல்ல முயன்றான். அவனைச் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்ற போலீசார் நேற்றுக் காலை மணி 10க்குக் கைது செய்ததாக குவாந்தான் போலீஸ் தலைவர் ஏசிபி முகம்மட்…
ஷாஹிடானின் ‘ஒற்றுமை அரசாங்கம்’ பரிந்துரையை அம்னோ ஆதரிக்கவில்லை
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் பெர்சத்து கட்சியும் எதிர்க்கட்சிகளான அம்னோ, பாஸ் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கலாம் என்ற கருத்தை முன்வைத்த ஆராவ் எம்பி-யை அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா சாடினார். அது ஷாஹிடானின் தனிப்பட்ட கருத்து என்றும் அக்கருத்தில் அம்னோ-பாஸ் கூட்டணியான முபாகாட் நேசனலுக்கோ…
சோஸ்மா கைதிகளின் குடும்பத்தார் நாடாளுமன்றத்துக்கு வெளியில் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடினர்
சோஸ்மா சட்டத்தின்கீழ்த் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தார், டிஏபி, பிஎஸ்எம், சுவாராம் ஆகியவற்றின் ஆதரவுடன் இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஒன்றுகூடி விசாரணையின்றித் தடுத்துவைக்க வகை செய்யும் சோஸ்மா சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.. டிஏபி தலைவர்கள், தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம்…
அமைச்சரவை மாற்றம் குறித்து அச்சம் கொள்கிறாரா, குவான் எங்?
நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிடம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மற்றம் குறித்து ஒரு கேள்வி கேட்டதற்குப் பதிலளிக்க மறுத்தார். இன்று கோலாலும்பூரில், செய்தியாளர் கூட்டமொன்றில் அவரிடம் அது தொடர்பான கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. அவர் அதற்குப் பதிலளிக்காமல் “அடுத்த கேள்விக்குப் போகலாமா?”, என்றார். அதற்கு…
நாடாளுமன்றம் வராதிருக்கும் எம்பிகள் குறித்து பிரதமர் வருத்தம்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு வராதிருக்கும் எம்பிகளிடம் பேசுவார். நேற்று மக்களவைக் கூட்டம் வழக்கம்போல் அல்லாமல் தாமதித்தே தொடங்கிற்று. காரணம் அவையில் போதுமான உறுப்பினர்கள் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டங்களில் கலந்துகொள்வதில் அக்கறை காட்டாமலிருப்பதைப் பிரதமர் குறைகூறினார். “இப்படி நடப்பது இரண்டாவது தடவை. எம்பிகளிடம் இது…
அஸ்மின்தான் தொடக்கிவைக்க வேண்டும்- பிகேஆர் இளைஞர் துணைத் தலைவர்
டிசம்பர் 5-இல் கூடவுள்ள பிகேஆர் இளைஞர் காங்கிரஸைக் கட்சித் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலிதான் தொடக்கி வைக்க வேண்டும் என்று இளைஞர் துணைத் தலைவர் ஹில்மான் இதாம் வலியுறுத்தியுள்ளார். அதுதான் வழக்கமாகும். “கட்சியின் வழக்கப்படி துணைத் தலைவர்தான் (பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைக்க வேண்டும்”,…
ஹரப்பான் தேர்தல் அறிக்கையைக் குப்பைக் காகிதமாக நினைக்கக் கூடாது –…
பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையைக் குப்பைக் காகிதமாக நினைத்துவிடக்கூடாது என்பதை தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் அவர்களின் வாக்குகளின் மூலம் உணர்த்தி இருக்கிறார்கள் என டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு கூறினார். “தங்கள் வாக்குகளால் கூட்டரசு அரசாங்க அளவில் மாற்றத்தை உண்டுபண்ண முடியாது என்பதை…
‘நான் இஸ்தானா சென்று வந்தேனா?’ , அப்பட்டமான பொய்- அன்வார்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் இன்று காலை இஸ்தானா நெகராவில் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்- முஸ்டபா பில்லா ஷா-வைச் சென்று கண்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடாம் பேசிய அன்வார், “அது ஒரு பொய்யான செய்தி. அதைப் பொருள்படுத்தாதீர்கள்.இன்று காலை இங்குதான் (நாடாளுமன்றத்தில்)…
போதுமான எம்பிகள் இல்லை என்பதால் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதில் தாமதம்
இன்று காலை நாடாளுமன்றக் கூட்டம் வழக்கம்போல் தொடங்கி முதல் அங்கமாக கேள்வி நேரத்தில் ஹசான் பஹாரோம்(தம்பின் -ஹரப்பான்) அவரது கேள்வியைக் கேட்கலாம் என்று கூறப்பட்டு அவரும் கேள்வி கேட்க எழுந்தார். அப்போது அப்துல் ரஹ்மாட் முகம்மட்(லிப்பிஸ்- பிஎன்) இடைமறித்து “கூட்டம் தொடங்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லை” என்பதைச்…
ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் : மாற்றத்திற்கான அதிகாரம் மக்கள் கைகளிலேயே!
சிவா லெனின் | கடந்த 23 ஆண்டுகளாக, ஜொகூர் மாநிலத்தின் தென்பகுதியில், மனித உரிமை மற்றும் அரசியல் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து வரும் செம்பருத்தி தோழர்கள் இயக்கம், அதன் 23-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, ‘செம்பருத்தி நட்புறவு விருந்து’ நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளது. [caption id="attachment_180005" align="aligncenter" width="960"] ஒருங்கிணைப்பாளர்களில்…
அஸ்மின் இன்று பகல் முன்று மணிக்கு கட்சி எம்பிகளைச் சந்திக்கிறாராம்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கட்சி எம்பிகளைச் சந்திக்கப் போவதாக பரப்பரப்பூடும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி அச்செய்தியை வெளியிட்டிருக்கும் த ஸ்டார் ஆன்லைன் பிற்பகல் மூன்று மணிக்கு அச்சந்திப்பு நடப்பதாக தெரிவித்தது. “இம்முறை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்திலேயே பகல் மணி 3க்குச்…
மலேசியாவில் உள்ள அகதிகளுக்கு வேலை? அமைச்சரவை முடிவு செய்யும்
மலேசியாவில் அகதிகளாக தங்கியுள்ளவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்களா என்பதை அமைச்சரவை அடுத்த மாத வாக்கில் முடிவு செய்யும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் இன்று மக்களவையில் கூறினார். “அவ்விவகாரத்தை விவாதிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அது டிசம்பர் 10க்கும் டிசம்பர் 15க்குமிடையில் முடிவு செய்துவிடும் என்று நம்புகிறேன். முடிவு…
கணக்குத் தணிக்கை அறிக்கையில் திருத்தம் செய்ய நஜிப் கூட்டம் கூட்டினார்-அலி…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் சில பகுதிகளை அகற்றுவது பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தைக் கூட்டியதாக இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த அரசாங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர் நஜிப்தான்…
























