மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற நிலை நிலவியபோதிலும், நெகிரி செம்பிலானில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது நெகிரி செம்பிலான் மன்னர் துங்கு முஹ்ரிஸ் அவர்களின் முடிவு மற்றும் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்று பாக்காத்தான் ஹரப்பான் தலைவரான அன்வார்…
கிட் சியாங்: ரம்லி களமிறக்கப்படுவது பிஎன்னுக்குச் சாதகம் ஹரப்பானுக்குப் பாதகம்
கேமரன் மலை இடைத் தேர்தலில் பாரிசான் நேசனல் (பிஎன்), ரம்லி முகம்மட் நூரைத் தனது வேட்பாளராகக் களமிறக்குவதால் பக்கத்தான் ஹரப்பானின் வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதாக டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். போலீஸ் அதிகாரியாக சிறந்த பணியாற்றி ஓய்வு பெற்றவரான ரம்லி, கேமரன் மலையின் தவப்…
கேமரன் மலையில் முன்னாள் ஓராங் அஸ்லி போலீஸ் அதிகாரி பிஎன்…
ஜனவரி 26 கேமரன் மலை இடைத் தேர்தலுக்கு முன்னாள் போலீஸ் அதிகாரியான ரம்லி முகம்மட் நூர்தான் தனது வேட்பாளர் என்பதை பிஎன் உறுதிப்படுத்தியது. நேற்றிரவு நடைபெற்ற பிஎன் உயர் தலைமைத்துவக் கூட்டத்தில் அவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதாக ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது. இதனிடையே, மஇகா அத்தொகுதியில் போட்டியிடாததற்கு…
போட்டியிடுவதில்லை என்ற முடிவில் மஇகா உதவித் தலைவர் அதிருப்தி
ஜனவரி 26 கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ம இகா தலைமைத்துவம் எடுத்த முடிவால் கட்சி உதவித் தலைவர் டி.மோகன் அதிருப்தி அடைந்துள்ளார். என்றாலும், வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு என்ற தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் கருத்தை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து விலக மத்திய செயல்குழு செய்த முடிவை…
அமைச்சர்: தண்ணீர் கட்டணம் உயரலாம், ஆனால் ‘மக்களுக்குச் சுமையாக இராது’
நாட்டில் நீர் விநியோகத் தொழிலை அரசாங்கம் திருத்தி அமைத்து வருவதால் இவ்வாண்டில் நீர் கட்டணம் கட்டம் கட்டமாக உயர்த்தப்படலாம். பயனீட்டாளர் நலன் காக்கவும் அவர்களுக்குத் தரமான நீர் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் கட்டண உயர்வு அவசியமாகிறது என நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார்.…
கேமரன் மலையில் பல்முனைப் போட்டி?
ஜனவரி 26 கேமரன் மலை இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள வேளையில் இதுவரை ஐந்து வேட்புமனுக்கள் விற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் அந்த மனு பாரங்களை வாங்கிச் சென்றதாக பகாங் இசி இயக்குனர் ஜம்ரி ஹமில் தெரிவித்தாக…
பினாங்கு பிகேஆர் தலைவர் நியமன விசயத்தில் அபிப், சைபுடின் நசுத்தியோன்…
பெர்மாத்தாங் பாவ் எம்பி நுருல் இஸ்ஸா திடீரென்று பதவி விலகியதை அடுத்து காலியான பினாங்கு பிகேஆர் தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதன் தொடர்பில் பிகேஆர் தலைவர்கள் இருவரிடையே கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. அவ்விவகாரத்தில் அவசரப்படாமல் “பொறுமையாக இருப்பீர், கட்சித் தலைவரின் அதிகாரத்தை மதிப்பீர்” என்று அறிவுறுத்திய தலைமைச்…
கேமரன் மலை இடைத்தேர்தல் : பி.எஸ்.எம். போட்டியிடாது
ஜனவரி 26-ல் நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத்தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) போட்டியிடாது என அக்கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார். கட்சி விரும்பும் குணாதிசயங்களைக் கொண்ட வேட்பாளர்கள் இல்லாததால், அங்கு இம்முறை போட்டியிடப்போவதில்லை என்று அவர் சொன்னார். “கேமரன் மலையைச் சார்ந்த, அங்குள்ள…
‘என்னுடன் சமாதானமாகப் போங்கள், ஹராப்பானை நான் வீழ்த்தி காட்டுகிறேன்’, கேவியஸ்…
கேமரன் இடைத்தேர்தல் : எதிர்வரும் இடைத்தேர்தலில் மஇகா அல்லது அம்னோ தலைவர்களில் யாரை நிறுத்துவது என்று பிஎன் தலைவர்கள் குழம்பிக்கிடக்கும் இவ்வேளையில், மைபிபிபி தலைவர் எம் கேவியஸ், தன்னை வேட்பாளராக நிறுத்தி, தன்னுடன் இணைந்து பணியாற்றுவதே அக்கூட்டணி வெற்றிபெற ஒரே வழி என்று கூறியுள்ளார். தங்களுக்குள்ளேயேப் ‘போராட்டம்’ நடத்துவதற்குப்…
கேமரன் மலை தேர்தல்: மஇகா விலகிக் கொண்டதாக ஒரு வட்டாரம்…
ஜனவரி 26-இல் நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூட்டணியின் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யும் பொறுப்பை பிஎன் தலைமையைத்துவத்திடம் விட்டுவிட்டதாகவும் ஒரு வட்டாரம் கூறுகிறது. இன்று காலையில் நடந்த கட்சியின் மத்தியச் செயளவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்த வட்டாரம் கூறிற்று. அக்கூட்டத்தில்…
உடல்நலம் குன்றியுள்ள பகாங் சுல்தானை அகோங்காக நியமிக்கலாம், வரலாற்று நிபுணர்…
15ஆவது பேரரசர் சுல்தான் முகமட் V தமது பதவி விலகல் குறித்து செய்துள்ள முடிவைத் தொர்ந்து, அடுத்த அகோங் யார் என்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. சுழல்முறை பட்டியல்படி, பகாங் சுல்தான் அஹமட் ஷா அடுத்து வருகிறார்; அவருக்கு அடுத்து ஜோகூரின் சுல்தான் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர்…
கேஎல்ஐஏ2-இல் முன்பு எலி இப்போது தேனீ- ஏர் ஏசியா போஸ்…
இரண்டாவது கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையக் கட்டிடம் ஒன்றில் தேன்கூடு ஒன்றிருப்பதைச் சுட்டிக்காட்டி கேஎல்ஐஏ2 நிர்வாகத்தைச் சாடியுள்ளார் ஏர் ஏசியா தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ். டிவிட்டரில் அதைப் பதிவிட்ட பெர்னாண்டஸ், கட்டிடத்தில் தேன்கூடு இருக்கும் படத்தையும் பகிர்ந்து கொண்டார். “கேஎல்ஐஏ2-இல் முன்பு புழுக்கள், காணப்பட்டன. பிறகு…
ஊழல் குற்றத்துக்காக பினாங்கில் கூட்டரசு அரசாங்க நிறுவனத்தின் இயக்குனர் கைது
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), கூட்டரசு அரசாங்க அதிகாரி ஒருவரை அதிகாரமீறலில் ஈடுபட்ட குற்றதுக்காக கைது செய்துள்ளது. அரசாங்க நிறுவனம் ஒன்றின் இயக்குனரான அந்நபர், 58, காலை மணி எட்டுக்கு பினாங்கு எம்ஏசிசி அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டார். அந்த இயக்குனர் மாநில அரசின் பாலர் பள்ளித் திட்டத்துக்கான குத்தகை தன்…
இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை பிஎன் வியாழக்கிழமை அறிவிக்கும்
பிஎன் கேமரன் மலை இடைத் தேர்தலில் களமிறக்கப் போகும் அதன் வேட்பாளரை வியாழக்கிழமை அறிவிக்கும் என அம்னோ ஆன்லைன் கூறிற்று. கோலாலும்பூரில் அம்னோ தலைமையகம் அமைந்துள்ள புத்ரா உலக வாணிக மையத்துக்குப் பக்கத்தில் உள்ள ஸ்ரீபசிபிக் தங்கு விடுதியில் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வு நடைபெறும். ஜனவரி 26 இடைத்…
இஸ்தானா நெகராவில் ஆட்சியாளர்கள் கூட்டம்
மாநில ஆட்சியாளர்களின் கூட்டம் இப்போது கோலாலும்பூர் இஸ்தானா நெகாராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யாங் டி பெர்துவான் ஆகோங்காக இருந்த சுல்தான் முகம்மட் V பதவி விலகியதை அடுத்து இக்கூட்டம் நடைபெறுகிறது. சுல்தான் முகம்மட் V, 2016 டிசம்பர் 13-இல் நாட்டின் 15வது பேரரசராக ஆட்சியாளர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது…
கேமரன் மலையைக் கொடுக்குமாறு அம்னோ கேட்டதில்லை
கேமரன் மலை இடைத் தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாக அம்னோ கூறவே இல்லை என்பதை உறுதிப்படுத்திய மஇகா தலைமைச் செயலாளர் எஸ்.வேல்பாரி, அது அத்தொகுதியை மஇகாவிடமே கொடுத்து விட்டது என்றார். அம்னோ ஒரே கோரிக்கையை மட்டும் முன்வைத்ததாக வேல்பாரி இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்” களமிறக்கப்பட…
கேமரன் மலைக்கு அமைச்சர்களின் படையெடுப்பு
கேமரன் மலை இடைத் தேர்தலுக்கு இன்னும் 20 நாள்கள் உள்ளன. ஆனால், அதற்குள் அத்தொகுதியை நோக்கி அமைச்சர்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதிலிருந்து அத்தேர்தல் எவ்வளவும் முக்கியமானது என்பதை உணரலாம். பிஎன் கடந்த இரு தேர்தல்களிலும் குறுகிய பெரும்பான்மையில் அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மே 9-இல்,…
கிளந்தான் எம்பி: எங்கள் சுல்தான் ஆகோங் ஆக விரும்பியதில்லை
கிளந்தான் மந்திரி புசார் அஹமட் யாக்கூப், மாநில ஆட்சியாளர் ஐந்தாம் சுல்தான் முகம்மட்டுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் ஆகும் விருப்பம் என்றும் இருந்ததில்லை என்றார். “தொடக்கத்திலிருந்தே துவாங்குக்கு யாங் டி பெர்துவான் ஆகோங் ஆவதில் விருப்பம் இல்லை என்பது எனக்குத் தெரியும். “ஆனாலும், மன்னர் ஆனதும் அவர் தம்…
அடுத்த யாங்டி பெர்த்துவான் அகோங், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மத் V, இன்று பதவி விலகியதைத் தொடர்ந்து, மலேசிய கூட்டமைப்பின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாளை, மலாய் அரசர்கள் இதுகுறித்து கலந்துபேச ஒன்று கூடவுள்ளதாக மலேசியாகினிக்குத் தகவல் வந்துள்ளது. ஆனால், நாட்டின் அடுத்தப் பேரரசர் யார் எனும் முடிவு உடனடியாக…
‘பணி நிமித்தமே அமைச்சர்கள் கேமரன் மலைக்குச் சென்றனர், பிரச்சாரத்திற்காக அல்ல’
கேமரன் மலை இடைத்தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அங்குச் சென்ற துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், தனது வருகையை நியாயப்படுத்தி பேசியுள்ளார். தேசியப் பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்.) தலைவர் என்ற முறையிலேயே தான் அங்குச் சென்றதாகவும், அரசியல் பிரச்சாரங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை…
மாட்சிமை தங்கியப் பேரரசர் பதவி விலகினார்
சுல்தான் முகமது V, 15-வது யாங் டி-பெர்த்துவான் அகோங் பதவியில் இருந்து இன்று விலகினார். இஸ்தானா நெகாராவின் பத்திரிகை அறிக்கையின் வழி, அரச நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், வான் அஹ்மட் டஹ்லான் அப்துல் அஜீஸ் அதனை இன்று அறிவித்தார். மேலும், தனது ஆட்சியின் போது ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்கத்திற்குப்…
நான் கேமரன் மலையில் போட்டியிட்டால் அனேகமாக மஇகா போட்டியிடாது -கேவியெஸ்
மைபிபி தலைவர் எம். கேவியெஸ் எதிர்வரும் கேமரன் மலை இடைத் தேர்தலில் தாம் போட்டியிட்டால் அதன்பிறகு பிஎன் மஇகா வேட்பாளரை அங்குக் களமிறக்காது என்று நம்புகிறார். “நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் பிஎன் அந்த இடத்தை மஇகாவுக்குக் கொடுக்காது. இது என் கருத்து. அது தப்பாகவும் இருக்கலாம். “நான் நான்காண்டுகளாக…
ஹரப்பான் கேமரன் மலையில் பிஎன்னைக் குறைத்து மதிப்பிடாது
பக்கத்தான் ஹரப்பான் எதிர்வரும் கேமரன் மலை இடைத் தேர்தலில் பிஎன் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிடாது என்கிறார் ஹரப்பான் செயலகத் தலைவர் சைபுடின் அப்துல்லா. ஜனவரி 26 இடைத் தேர்தல் முதல்முறையாக 14வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிபெற்ற ஒரு தொகுதியில் நடைபெறும் தேர்தலாகும் என்றாரவர். “மேலும் இதுவே பிஎன்…
‘அடிப் மரணத்தில் இனவாத ஊகத்தை லொக்மான் நிறுத்த வேண்டும்’, சேவியர்
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடம், தீயணைப்பு வீரர் முஹம்மட் ஆடிப் முகமது காசிம் மரணத்தில், ‘இனவாத ஊகங்க’ளை நிறுத்த வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். ஆடிப் மரணம் மீதான விசாரணை தொடங்கப்பட்டு, மரணத்திற்கான சான்றுகள் - ஏதேனும் இருந்தால் –…
























