மாணவர்களின் மருத்துவச் சோதனைக்கு ரிம100 கட்டணமா? மறுக்கிறது அமைச்சு

அரசாங்கப் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்காக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதற்கு ரிம 100 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டிருப்பதைச் சுகாதார அமைச்சு மறுக்கிறது. முழு தங்குவசதி கொண்ட பள்ளிகள் உள்பட எல்லா அரசாங்கப் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவச் சோதனைக்கான கட்டணம் ரிம1தான் எனச் சுகாதார…

டாக்டர் எம் : எனக்கு தெரிந்து பேரரசர் பணிக்குத் திரும்பிவிட்டார்

தனக்கு தெரிந்து, பேரரசர் சுல்தான் முகமட் V பணிக்குத் திரும்பிவிட்டதாக, பிரதமர் டாக்டர் மகாதிர் கூறினார். இன்று, கோலாலம்பூரில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுடனான கூட்டத்திற்குத் தலைமை தாங்கியப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். பதவி விலகல் தொடர்பாக, பேரரசரிடம் இருந்து, தான் எந்தவொரு அதிகாரப்பூர்வக் கடிதத்தையும்…

கேமரன் மலை இடைத்தேர்தல் – ஹராப்பான் வேட்பாளராக எம் மனோகரன்

கேமரன் மலை இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக, டிஏபி எம் மனோகரன் அறிவிக்கப்பட்டார். “கேமரன் மலையில், 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட எம் மனோகரன், மீண்டும் போட்டியிடுவார்,” என்று கோலாலம்பூரில், இன்று, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரான துன் டாக்டர் மகாதிர் அறிவித்தார். மஇகா-வின் பாரம்பரிய தொகுதியான கேமரன்…

மூத்த ரிபோர்மாசிகாரர்கள் ‘மகாதிர் ஜிஇ15வரை’ பிரதமராக இருப்பதை விரும்பவில்லை

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஈராண்டுகள் மட்டுமே பிரதமராக இருக்கலாம்.   அதன் பிறகு பொதுத் தேர்தலுக்குமுன் ஒப்புக்கொண்டபடி பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை மூத்த ரிபோர்மாசிகாரர்கள் அடங்கிய ஒரு குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஒட்டாய் ரிபோர்மாசி என்றழைக்கப்படும் அக்குழு, கடந்த வார இறுதியில் பெர்சத்து…

துணை எம்பி: சுல்தான் முகம்மட் V பதவி விலகுகிறார் என்பது…

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் முகம்மட் V விரைவில் பதவி விலகுவார் என்று கூறும் வதந்திகள் சமூக உடகங்களில் பரவலாகி வருகின்றன. அது குறித்து கிளந்தான் துணை மந்திரி புசார் முகம்மட் அமார் நிக் அப்துல்லாவிடம் கேட்டதற்கு மாநில அரசு அதன் தொடர்பில் எந்தத் தகவலையும் பெறவில்லை என்றார்.…

கையூட்டு கேட்ட ‘உதவியாளரு’க்கு எதிராக சைட் சித்திக் போலீசில் புகார்

இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சித்திக் சைட் அப்துல் ரஹ்மான், அவரின் உதவியாளர் என்று கூறிக்கொண்டு ஜோகூர், மூவாரில் உள்ள பள்ளி நிர்வாக வாரியங்களிடம் பள்ளிக்கு நிதி பெற்றுத் தருவதற்குக் கையூட்டு கேட்ட ஆசாமிக்கு எதிராக போலீசில் புகார் செய்யவுள்ளார். “என்னுடைய மூவார் அலுவலகத்திடம் அந்த வேடதாரி குறித்து…

எண்ணெய் விலை குறித்து அமைச்சரவை இன்னும் முடிவு செய்யவில்லை

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தலைமையில் நேற்று கூடிய வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல் விலைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என நம்பப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. “அதன் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”, எனத் தகவலறிந்த வட்டாரமொன்று மலேசியாகினியிடம் தெரிவித்தது. மலேசியாகினி நிதி அமைச்சர் லிம் குவான்…

சொஸ்மா, பொகா சட்டங்களை வைத்துக்கொள்வது அநியாயம்: சுவாராம் சாடல்

உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் 2012 பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் (சொஸ்மா), 1959 குற்றச்செயல் தடுப்புச் சட்டம்(பொகா) ஆகியவை சில திருத்தங்களுடன் தொடர்ந்து வைத்துக்கொள்ளப்படும் என்று கூறியதை மனித உரிமை ஆணையம் சுவாராம் கண்டித்துள்ளது. பக்கத்தான் ஹரப்பான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் பின்வாங்குவதாகதாகவும் பிஎன் அரசாங்கம்…

கேமரன் மலையில் மனோகரன் போட்டியிடுவதையே சுங்கை கோயான் பெர்சத்து விரும்புகிறது

கடந்த பொதுத் தேர்தலில் கேமரன் மலையில் போட்டியிட்ட எம்.மனோகரனே எதிர்வரும் இடைத்தேர்தலிலும் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளராக அத்தொகுதியில் களமிறக்கப்பட வேண்டும் என்று பெர்சத்து சுங்கை கோயான் கிளை பரிந்துரைத்துள்ளது. மனோகரனுக்கு ஆதரவு தெரிவித்து அக்கிளை டிசம்பர் 28ஆம்  தேதி எழுதிய கடிதமொன்றை மலேசியாகினி கண்டது. சுங்கை கோயான் ,…

ஈராண்டுகளில் பிரதமர்  மாற்றம்- மகாதிர்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பரிந்துரைக்கப்பட்ட   ஈராண்டாண்டுகளுக்குமுன்பே பிரதமராக விரும்புவதாய் என்றும் கூறியதில்லை என்றார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். திங்கள்கிழமை சின் சியு டெய்லி நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் மகாதிர் இதனைத் தெரிவித்தார். தம்மைப் பொறுத்தவரை “ஈராண்டுகளில்” பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பது உறுதி என்பதையும் அவர்…

விற்பவர் வாங்குவோர் நலன்களைக் கருத்தில்கொண்டு பெட்ரோல் விலைகள் நிர்ணயிக்கப்படும்

பெட்ரோல் விலைகள் நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் நிர்ணயம் செய்யப்படும். இதைத் தெரிவித்த பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அரசாங்கம் பெட்ரோல் விலைகளைக் குறைக்க விரும்பினாலும் அதற்குமுன் சிலவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றார். “நாங்கள் (அரசாங்கம்) பெட்ரோல் விலையைக் குறைக்கத்தான் விரும்புகிறோம் ஆனால், அதை விற்பவர்களும் ஆதாயம் காண…

பெர்சத்து உதவித் தலைவர் பேச்சு சரியா? அமைச்சரவை விவாதிக்கும்

ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அரசாங்க வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தப்பில்லை என்று தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் ரஷிட் அப்துல் ரஹ்மான் பேசியது சரியா என்று அமைச்சரவை அதன் வாராந்திரக் கூட்டத்தில் விவாதிக்கும். இதை இரண்டு அமைச்சர்கள் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினர். இப்போது பெர்சத்துவின் ஒரு உதவித் தலைவராக உள்ள…

2019 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலேசியாஇன்று வாசகர்கள், நண்பர்கள் அனைவரும், பிறக்கவிருக்கும் 2019-ம் ஆண்டில்  அனைத்து வளங்களையும் பெற, எங்களின் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். சகோதரத்துவத்தை வளர்ப்போம்! சமத்துவத்தை வழுபடுத்துவோம்!!

‘எப்படியாவது வெற்றி பெறுவதே’ முக்கியம் என்று பெர்சத்து விபி கூறக்…

“நேர்வழியோ குறுக்கு வழியோ எப்படியாவது” வெற்றி பெறுவதே முக்கியம் என்பதால் அதற்காக கட்சி அரசாங்க வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பெர்சத்து உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறியிருப்பதைக் கேட்டு பெர்சே அதிர்ச்சி அடைந்தது. ரஷிட்டின் கூற்று பக்கத்தான் ஹரப்பான் சீரமைப்புச் செய்வதில் உண்மையிலேயே அக்கறை…

ஒரு முழு தவணைக்கும் மகாதிர் பிரதமரா?

  பெர்சத்து ஆண்டுப் பொது கூட்டம்: மகாதிர் ஒரு முமு தவணைக்கும் பிரதமராகத் தொடர வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்கள் பொதுக் கூட்டத்தில் தெரிவித்திருந்த கருத்துகள் பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். இது போன்ற முன்மொழிதல்கள் ஒன்றும் புதிதல்ல…

ஜிஇ15வரை மகாதிர் பிரதமராக இருக்க வேண்டும்: பெர்சத்து ஏஜிஎம்-மில் பேராளர்கள்…

புத்ரா ஜெயா பெர்சத்து ஆண்டுக் கூட்டத்தில் டாக்டர் மகாதிர் முகம்மட் இத்தவணை முழுக்க பிரதமராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது. கிளந்தான் பேராளரும் பாச்சோக் தொகுதித் தலைவருமான சுல்கிப்ளி சக்கரியா அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததாக கூட்டத்தில் கலந்துகொண்ட சில வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.…

பிகேஆர் இளைஞர் உதவித் தலைவர்: அன்வார் செய்த நியமனங்களை மதிப்பீர்

பிகேஆரின் மேலிட பொறுப்புகளுக்கு அன்வார் இப்ராகிம் அண்மையில் செய்த நியமனங்களைக் கட்சி உறுப்பினர்கள் ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் உதவித் தலைவர் சைட் பாட்லி ஷா சைட் ஒஸ்மான் வலியுறுத்தினார். பிகேஆர் அமைப்பு விதிகள் சில பதவிகளுக்கு ஆள்களை நியமனம் செய்யும் அதிகாரத்தைக் கட்சித் தலைவருக்கு வழங்குகின்றன.…

முகைதின்: புதிய பூமிபுத்ரா திட்டம் எல்லா இனங்களின் வளர்ச்சிக்கும் உதவ…

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் மைய கொள்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்படுத்தப்படும் புதிய பூமிபுத்ரா திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகவும் எல்லா மலேசியருக்கும் நன்மை பயப்பயப்பதாகவும் இருத்தல் வேண்டும் என்று பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் கூறினார். “அக்கொள்கை பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்குமானால் அப்படிப்பட்ட பூமிபுத்ரா திட்டம் நமக்கு…

சிவராஜ் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தீர்ப்புக்கு எதிராக மஇகா…

மஇகா தன் உதவித் தலைவர் சி.சிவராஜ் அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தகுதி இழப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதற்கு எதிராக நீதிமுறை மேல்முறையீடு செய்யவுள்ளது. ஊழல் நடவடிக்கைகள்தான் 14வது பொதுத் தேர்தலில் சிவராஜ் கேமரன் மலையில் வெற்றிபெற வழிவகுத்தன என்ற தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பை இசி “சொந்தமாக…

‘நான் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறேன்’ – அஸ்மினுக்கு அன்வார்…

பிகேஆர் பதவி நியமனங்கள் குறித்த அஸ்மின் அலியின் அறிக்கைக்குப் பதிலளித்த அன்வார் இப்ராஹிம், கட்சியில் தான் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். “நான் அனைவரையும் அரவணைக்க விரும்புகிறேன், அவருக்கு (அஸ்மின்) ஒருசிலர் வேண்டாம். “தலைமைப் பொறுப்புகளில் எனக்கு அனைவரும் சேர்ந்திருக்க வேண்டும்…. அதுதான் வித்தியாசம்,” என்று அவர்…

பிகேஆர் பதவி நியமனங்களுக்கு அஸ்மின் மறுப்பு

பிகேஆர் துணைத் தலைவர் முகம்மது அஸ்மின் அலி, நேற்றிரவு அறிவிக்கப்பட்ட கட்சியின் பிரதான தலைமை பதவி நியமனங்களை மீண்டும் மதிப்பீடு செய்ய, கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம்-ஐ வலியுறுத்தியுள்ளார். கட்சி உறுப்பினர்களின் விருப்பமான, ‘நியாயமான மற்றும் சமமான பிரதிநிதித்துவம்’ என்ற கொள்கையை, அந்த நியமனங்கள் பிரதிபலிக்கவில்லை என அவர்…

மலாய்க்காரர்களின் நலன்களைப் பெர்சத்து பாதுகாக்கும் – டாக்டர் மகாதீர்

இந்த நாட்டில் மலாய்க்காரர்களின் நலன்களைப் பாதுகாக்க, ஒரு மலாய் கட்சி தேவை என அச்சமூகம் இன்னும் நம்புவதால், பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து), மலாய்க்காரர்களுக்கான கட்சியாக உருவானது என அக்கட்சியின் தலைவர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். “அவர்கள் (மலாய்க்காரர்கள்) அவர்களைப் பாதுகாக்க ஒருவர் தேவை என…

‘சிம்மாசனத்தை கைவிட்டு’, முழு நேர அரசியல்வாதியாக மாறுங்கள், திஎம்ஜே-வுக்கு கைருட்டின்…

முன்னாள் அம்னோ தலைவர், கைருட்டின் அபு ஹசான், ஜொகூர் பட்டத்து இளவரசரை (திஎம்ஜே), முழு நேர அரசியலில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார். அம்னோ மூத்தத் தலைவரான தெங்கு ரசாலி ஹம்ஸா மற்றும் முன்னாள் போக்குவரத்து துணை அமைச்சர் தெங்கு அஸ்லான் இப்னி சுல்தான் அபு பக்கார் (பஹாங் சுல்தான்…