மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற நிலை நிலவியபோதிலும், நெகிரி செம்பிலானில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது நெகிரி செம்பிலான் மன்னர் துங்கு முஹ்ரிஸ் அவர்களின் முடிவு மற்றும் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்று பாக்காத்தான் ஹரப்பான் தலைவரான அன்வார்…
ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ‘விடுமுறையா’, அன்வாருக்கு உடன்பாடில்லை
டிசம்பர் 9 பேரணியில் கலந்துகொள்வோருக்கு வசதியாக கிளந்தான் அரசு ‘சிறப்பு விடுமுறை’ அறிவித்திருப்பதில் அன்வார் இப்ராகிமுக்கு உடன்பாடில்லை. அனைத்து வகை பாகுபாடுகளுக்கும் எதிரான அனைத்துலக ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதில்லை என்ற புத்ரா ஜெயா முடிவைக் கொண்டாடுவதற்காக அப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் அது பூமிபுத்ராக்களின் சலுகைகள் பறிக்கப்படுவதற்கு…
ஊழியர், முதலாளிமார் ஒப்புதலின்றி பிடிபிடிஎன் சம்பளத்தில் பிடித்தம் செய்ய முடியாது
தேசிய உயர்க் கல்விக் கடன் கழகம் (பிடிபிடிஎன்) அதனிடம் கடன் வாங்கியவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பிரச்னைகளை எதிர்நோக்கும் என மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) கூறுகிறது. வேலைவாய்ப்புச் சட்டம் 1955-இன்படி வேலையாள் ஒருவரின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அவரின் ஒப்புதல் தேவை என்று எம்டியுசி தலைவர்…
1எம்டிபி அறிக்கையில் சட்டவிரோதமான மாற்றங்கள் செய்ததற்காக அருள் கந்தா மீது…
1எம்டிபி மீதான அரசாங்க கணக்காய்வு அறிக்கையில் சட்டவிரோதமான மாற்றங்கள் செய்தார் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து 1எம்டிபியின் முன்னாள் தலைவர் அருள் கந்தா நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் எம்எசிசி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அறிக்கையில் திருத்தங்கள் செய்ய உத்தரவிட்டார் என்ற கூறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் நஜிப்பும் குற்றச்சாட்டப்படலாம் என்று…
ஹிண்ட்ராஃப் எழுச்சி நாளில் நாடெங்கும் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது
ஹிண்ட்ராஃப் எழுச்சி நாளில் நாடெங்கும் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது என்று ஹிண்ட்ராஃப் தேசியச் செயலாளர் முனியாண்டி பொன்னுசாமி தெரிவித்தார். உலக அரசியல் வரலாற்றில் மலேசியாவிற்கென்று குறிப்பிடத்தக்க சிறப்புகள் பல உண்டு. அவற்றுள், பல இன மக்களாக வாழ்ந்தாலும் மலேசியர்கள் உயர்த்திப் பிடிக்கும் ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். அடுத்ததாக, ஒரே கூட்டணியே தொடர்ந்து அறுபது…
ஐசெர்ட் பேரணி: டிசம்பர் 9-இல் கிளந்தானில் விடுமுறை
பாஸ் கட்டுப்பாட்டில் உள்ள கிளந்தான் அரசு, டிசம்பர் 8-இல் கோலாலும்பூரில் பேரணி நடைபெறுவதால் மறுநாளான டிசம்பர் 9-ஐ ஒரு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. விடுமுறை அளித்தால் கிளந்தான் மக்கள் கோலாலும்பூரில் நடக்கும் மாபெரும் பேரணியில் கலந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும் என்று மந்திரி புசார் அஹமட் யாக்கூப் கூறினார். எல்லாவகை…
இருக்கை காலி என்ற நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக சிவராஜா வெளியேற்றப்பட்டார்
இன்று பின்னேரத்தில், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசுப் மஇகா உதவித் தலைவர் சி. சிவாராஜாவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற உத்தரவிட்டார். கேமரன் மலை நாடாளுமன்ற இருக்கை பற்றிய மேல்முறையீடு நடவடிக்கைகள் முடிவடையும் வரையில் அது காலியாக இருக்கும் என்ற தேர்தல் நீதிமன்றத்தின் பிரகடனத்தைத் தள்ளி…
ஐஜிபி: ஆலயக் கலவரம் தொடர்பில் இதுவரை 99பேர் கைது
சுபாங் ஜெயா ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயக் கலவரம் தொடர்பில் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கைதானவர் எண்ணிக்கை 99. இதனைத் தெரிவித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் முகம்மட் பூஸி ஹருன், நவம்பர் 26 மற்றும் 27-இல் ஆலயக் கலவரம் தொடர்பில் கைதான இவர்கள்…
எம்ஏசிசி அதன் முன்னாள் தலைவரிடம் இன்று விசாரணை
எம்ஏசிசி முன்னாள் தலைவர் சுல்கிப்ளி அஹமட் இன்று புத்ரா ஜெயாவில் உள்ள ஊழல்தடுப்பு ஆணையத் தலைமையகத்துக்கு வந்திருந்தார். 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சுல்கிப்ளி காலை மணி 10.25க்கு புத்ரா ஜெயா அலுவலகம் வந்தபோது…
டிசம்பர் 8-இல் இரண்டு பேரணிகள்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் , வரும் சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் மனித உரிமை ஆணைய(சுஹாகாம்)த்தின் 2018 மனித உரிமை தின நிகழ்வைத் தொடக்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மலேசிய பிரதமர் ஒருவர் சுஹாகாமின் மனித உரிமை தின நிகழ்வில் கலந்து கொள்வது அதுவே முதல் முறையாக இருக்கும். மகாதிர்…
அபாண்டியும் கந்தாவும் பிஎசியால் அழைக்கப்படுவர்
நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவிடம் (பிஎசி) விளக்கமளிக்க விரைவில் அழைக்கப்படவிருக்கும் சிலரில் சட்டத்துறை முன்னாள் தலைவர் முகம்மட் அபாண்டி அலியும் ஒருவர். 1எம்டிபி கணக்காய்வு அறிக்கை குறித்து அழைக்கப்படவிருக்கும் இன்னும் மூவரில் 1எம்டிபி முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, எம்எசிசி முன்னாள் தலைமை…
நஸ்ரி ஐசெர்ட்-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள மாட்டார், அரசாங்க முடிவில் அவருக்குத்…
பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசீஸ், சனிக்கிழமை கோலாலும்பூரில் நடைபெறும் எல்லாவகை இனப் பாகுபாட்டுக்கும் எதிரான அனைத்துலக ஒப்பந்தம் (ஐசெர்ட்) தொடர்பான பேரணியில் கலந்துகொள்ள மாட்டார். அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கப் போவதில்லை என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பது முழுத் திருப்தி அளிப்பதாக அந்த அம்னோ…
ஐஜிபி: சுபாங் ஜெயா ஆலயத் தகராறு தொடர்பில் இதுவரை 83…
சுபாங் ஜெயா இந்து ஆலயச் சச்சரவு தொடர்பில் கைதானவர் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது. அனைவரும் உள்நாட்டவர் என்றும் நவம்பர் 26, 27ஆம் நாள்களில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் கூறினார். நேற்று 68 பேர்…
மாபுஸ்: பேரணி தேவையில்லை, பணத்தைப் பள்ளிப் பிள்ளைகளின் செலவுக்குப் பயன்படுத்தலாம்
அமனா எம்பி மாபுஸ் ஒமார், ஐசெர்ட்- எதிர்ப்புப் பேரணிக்கு ஏற்பாடு செய்வோருக்கு நிதி நிர்வாகம் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார். அரசாங்கம் ஐசெர்ட் -டில் கையொப்பமிடுவதில்லை என்று முடிவு செய்து விட்டதால் கோலாலும்பூரில் டிசம்பர் 8-இல் பேரணி நடத்த வேண்டிய அவசியமே இல்லை என பொக்கோக் சேனா எம்பி…
ஐசெர்ட் பேரணியை நஜிப் ஆதரிக்கிறார்
எதிர்வரும் சனிக்கிழமையன்று, அனைத்து வகையான இனவாதப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சர்வதேச மாநாட்டிற்கு (ஐசெர்ட்) எதிரான பேரணியில், தனது ஆதரவாளர்களைக் கலந்துகொள்ளும்படி நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டார். முஸ்லீம்களும் மலாய்க்காரர்களும் வெற்றிகரமாக இணையும் ஒரு பேரணி என்ற வரலாற்றை அது உருவாக்க வேண்டும் என்று அந்த முன்னாள் பிரதமர் சுட்டிக்…
’ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்கும் வாக்குறுதியை ஹரப்பான் நிறைவேற்றும்’
பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கையில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது வெறும் பேச்சல்ல என்று மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறினார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஆற்றல் அரசாங்கத்துக்கு உண்டு என்று கூறிய அமைச்சர் இப்போது மனிதவளம் போதுமான அளவில் இல்லாதிருப்பதுதான் பிரச்னை என்றார்.…
உதவியாளர்: 1எம்டிபி வரலாற்றுப் பாடத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று மஸ்லி கூறவே…
கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் 1எம்டிபி விவகாரம் பள்ளி வரலாற்றுப் பாடத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்திகள் தவறானவை என்று அமைச்சரின் உதவியாளர் ஷாருல் அமான் முகம்மட் சாரி கூறினார். “பொந்தியான் எம்பி(அஹமட் மஸ்லான்)-இன் கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த மஸ்லி, 1எம்டிபி விவகாரம் மலேசிய வரலாற்றில் இடம்பெறும்…
ஜொகூர் மாநில அரசு பட்ஜெட் : தேவை அடிப்படையிலானது, இன…
ஜொகூர் மாநிலப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், 2019 வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது, இந்தியர்கள் மீது அக்கூட்டணிக்கு அக்கறை இல்லை என்பதையேக் காட்டுகிறது எனும் குற்றச்சாட்டை, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் மறுத்துள்ளார். பாரிசான் நேசனல் ஆட்சியின் போது, இந்தியச் சமூகத்திற்கு 8…
சீபீல்ட் தோட்ட கோவிலை நிலைநிறுத்தக் கோடீஸ்வரர்கள் நன்கொடை
சுபாங் ஜெயா சீபீல்ட் தோட்ட ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்தக் கோடீஸ்வரர் வின்சன்ட் டானுடன் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மற்றும் சுமார் 200 பொது மக்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்குச் சீபில்ட் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வருகை…
மலேசியத் தமிழ்க்கல்வி தேசிய மாநாட்டில், 11 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன
கடந்த வாரம், பினாங்கில் நடைபெற்ற மலேசியத் தமிழ்க்கல்வி தேசிய மாநாட்டில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, 11 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன. மலேசியத் தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்கான 11 தீர்மானங்கள் :- இந்தியர்கள் அதிகமாக வாழுமிடங்களில் புதிய ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளை நிறுவ வேண்டும். தமிழ்ப்பள்ளிகளை மேற்பார்வையிட, கூடுதலாக ஒரு துணைக் கல்வி…
கலவரம் பற்றிய விசாரணைக்கு உதவ சந்தேகப் பேர்வழிகள் ஆலயத்துக்குக் கொண்டு…
சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 25-இல் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் இன்று போலீஸ் விசாரணைக்கு உதவ ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். லாக்-அப் உடை அணிந்த அவர்கள் பிற்பகல் மணி 12.45க்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு 1.10 அளவில்…
ஜாஹிட்: பிஎன்னைக் கலைக்கச் சொல்லும் உரிமை மசீச-வுக்குக் கிடையாது
பிஎன் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, மசீச பிஎன்னைக் கலைக்க வேண்டும் என்று சொல்வது ஏன் என்பதைத் தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் ஆனால், அது தன்னிலை உணர்ந்து பேச வேண்டும் என்றும் கூறினார். மசீச அதன் ஆண்டுக் கூட்டத்தில் பிஎன் கூட்டணியைக் கலைக்கும் அதிகாரத்தைக் கட்சித்…
மலேசியத் தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்காக முதல் தேசிய மாநாடு
கடந்த 26 மற்றும் 27 நவம்பரில், பினாங்கு மாநில அரசு மற்றும் பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்க ஏற்பாட்டில், மலேசியத் தமிழ்க்கல்வி தேசிய மாநாடு, பினாங்கு, செப்ராங் ஜெயா, தி லைட் தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. ‘புதிய மலேசியாவில் தமிழ்க்கல்வியின் எதிர்காலம்’ எனும் கருப்பொருளில், மொத்தம்…
அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் சுய நலனை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல
அரசாங்கத்துக்கும் அதன் பணியாளர்களுக்கும் கடமையைச் செய்வதற்காக அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர அவர்களின் சுயநலத்துக்காக அல்ல என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நினைவுறுத்தினார். புத்ரா ஜெயாவில் பிரதமர் துறையின் மாதாந்திர பணியாளர் கூட்டத்தில் பேசிய மகாதிர், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் நாடு முன்னேற்றம் அடையாது. சமுதாயத்தில் ஒழுக்கமும் கெடும்…























