அம்ப்ரின்: 1எம்டிபி அறிக்கை மீது எல்லாவற்றையும் நாளை விளக்குவேன்

1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கை மாற்றப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து நாளை பொதுக் கணக்குக் குழு(பிஏசி)வைச் சந்திக்கையில் விவரமாய் விளக்கப் போவதாக முன்னாள் தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் கூறினார். “டிசம்பர் 4-இல்(நாளை) முழுக் கதையையும் சொல்வேன். எல்லாவற்றையும் விளக்குவேன். அதன்பின் அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்”, என்று அம்ப்ரின்…

பிஎன்னைக் கலைக்கவும் புதிய கூட்டணி அமைக்கவும் மசீச-வில் தீர்மானம்

இன்று மசீச ஆண்டுக் கூட்டத்தில் பிஎன்னைக் கலைக்கவும் புதிய கூட்டணி அமைக்கவும் கட்சிக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய கூட்டணி பொருத்தமான நேரத்தில் உருவாக்கப்படும் என்று மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார். நிறைய கருத்துப் பரிமாற்றத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்துக்குக் கூட்டத்தில் கலந்து ஒரே…

வழிபாட்டுத் தலக் கட்டுமானச் சட்டம் தயாராகிறது- ஜூரைடா

வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு, வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கு அரசு ஒப்புதல் பெறுவதைக் கட்டாயமாக்கும் சட்டமொன்றை வரைந்து வருகிறது. இதனைத் தெரிவித்த அதன் அமைச்சர் ஜுரைடா கமருடின், அச்சட்டத்தின்படி இப்போதுள்ள வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். “சொந்த நிலத்தில் அமைந்திராத வழிபாட்டுத் தலங்களை இடமாற்றம் செய்யுமாறு…

அன்வார் : வேதமூர்த்தியின் அமைச்சர் பதவி, பிரதமரைப் பொறுத்தது

பி வேதமூர்த்தியின் அமைச்சர் பதவி, பிரதமர் டாக்டர் மகாதிரைப் பொறுத்தது என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். வேதமூர்த்தியைப் பதவி விலகச் சொல்லும் இப்ராஹிம் அலியின் வலியுறுத்தல் தொடர்பில் அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார். “கோவில் பிரச்சனையை நாம் முதலில் தீர்க்க வேண்டும்; இனப் பிரச்சனை எழாமல், சூழலை…

இந்திய அமைச்சர்கள் ‘மிகவும் அதிகம்’, பெர்காசா கூறுகிறது

பக்காத்தான் ஹராப்பான் அமைச்சரவையில், இந்திய அமைச்சர்களுக்கான கோட்டாவை மீண்டும் ஆய்வு செய்யுமாறு, பெர்காசா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. “தற்போது, இந்தியர்களில் 4 அமைச்சர்களும் ஒரு துணை அமைச்சரும் இருக்கின்றனர், ஆக மொத்தம் 5…. இந்திய மக்கள் தொகை 7 விழுக்காடுதான், அதனோடு ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்,”…

இனவாதப் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம், பெர்க்காசாவுக்கு முகைதின் எச்சரிக்கை

உள்துறை அமைச்சர், முகைதின் யாசின், நாளை கோலாலம்பூரில் நடைபெறவுள்ள பேரணியில், இனவெறி தூண்டும் வகையிலான எந்தவொரு அறிக்கையையும் வெளியிட வேண்டாம் எனப் பெர்காசா பிரிபூமி அமைப்பிற்கு (பெர்காசா) நினைவுறுத்தியுள்ளார். "பொது ஒழுங்கிற்குக் கேடு விளைவிக்கும் அல்லது இன உறவுகளில் பதட்டத்தை ஏற்படுத்தும் எந்தவொரு அறிக்கையையும் நடவடிக்கையையும் தவிர்க்கவும். "இப்பேரணி…

கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் தேவை- டிஏபி இளைஞர்கள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சித் தாவுவதைத் தடுக்க பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் சட்டமியற்ற வேண்டும் என்று டிஏபி இளைஞர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். டிஏபி இளைஞர் தலைவர் பதவிக்காலம் முடிந்து வெளியேறும் வொங் கா வோ, அதுபோன்ற சட்டத்தைக் கொண்டுள்ள இந்தியா, தைவான், உகாண்டா, பாப்புவா நியு கினி முதலிய…

கோவில் பிரச்சனை : தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் 4…

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், யுஎஸ்ஜே 25-இல் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கோவில் சம்பவம் தொடர்பாக, 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நான்கு புலனாய்வு ஆவணங்களைப் போலிஸ் திறந்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் தொடர்பில், தாங்கள் பெற்ற போலிஸ் புகார்களைத்…

பெர்சத்து ஓர் இனவாதக் கட்சிதான் என்கிறார் மகாதிர்

பூமிபுத்ராக்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பதை அடிப்படையாகக் கொண்ட கட்சி பெர்சத்து. ஆகவே அது ஓர் இனவாதக் கட்சி என்பதை அக்கட்சியின் தலைவர் டாக்டர் மகாதிர் ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், அக்கட்சி இன-அடிப்படையற்ற கட்சிகளுக்கு, பிகேஆர், அமனா மற்றும் டிஎபி போன்ற கட்சிகளுக்கு, எதிரானதல்ல என்பதை அவர் வலியுறுத்தினார். பெர்சத்து ஒரு…

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் மலேசியாகினியைப் போல் தேர்தல் ஆணையம் வேகமாக…

சரிபார்க்கப்படாத தேர்தல் முடிவு குறிப்புகளைப் பெற்றவுடன் தேர்தல் ஆணையம் (இசி) அந்த முடிவுகளை உடனே வெளியிடும், அப்போதுதான் இசி மலேசியாகினியைப் போல் வேகமாக இருக்க முடியும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸ்ஹார் அஸிஸான் ஹருண் கூறுகிறார். நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பல நடவடிக்கைகளில் ஒன்று சரிபார்க்கப்படதா பாரம்…

யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துகள், சேவியர்

நாடெங்கும் யூபிஎஸ்ஆர் சோதனையில் சிறந்த தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துகள். குறிப்பாக, தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  தேர்வில் சிறந்த முன்னேற்றம் அடைந்து வருவது பாராட்டுக் குறியது. சிலாங்கூரில் 8 ஏ-க்கள் பெற்ற 104 மாணவர்களில் வழக்கம் போல் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி முன்னணியில் உள்ளது. அதில்  25 மாணவர்கள் 8…

பக்காத்தான் ஹராப்பானால் கேமரன் மலையை வெல்ல முடியும், அஸ்மின் நம்பிக்கை

கேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானால் அத்தொகுதியைக் கைப்பற்ற முடியும் என்று பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார். கேமரன் மலை இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர், ஒரு குறிப்பிட்டக் கட்சியைதான் சார்ந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது, அவர் ஹராப்பான் சார்பில் போட்டியிடுவார் என்று…

மசீச இளைஞர் : குவான் எங்-ஐ விட, சிறந்த ஆலோசனைகளை…

நிதியமைச்சர் லிம் குவான் எங் வெளியிட்ட பொருளாதாரக் கொள்கைகளை விட, சிறந்த ஒன்றைத் தங்களால் உறுதியாக உருவாக்க முடியும் என மசீச இளைஞர் பிரிவு கூறியுள்ளது. அதற்காக புதியக் குழுவொன்றை உருவாக்கி ஆலோசனைகள் வழங்க - குறிப்பாக பொதுமக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வழிவகைகளைக் கண்டறிய, தயாராக இருப்பதாக கட்சியின்…

பிஎன்னில் இருப்பதா, இல்லையா? மசீச நாளைக்குள் முடிவு செய்யும்

மசீச நாளை அதன் ஆண்டுக் கூட்டத்தில் பிஎன்னில் தொடர்ந்து இருப்பதா அல்லது அக்கூட்டணியைக் கலைக்கச் சொல்வதா என்று முடிவு செய்யும். மசீச துணைத் தலைவர் டாக்டர் மா ஹங் சூன் இன்று இதைத் தெரிவித்தார். “சீனர் சமூகம் பிஎன்னிலிருந்து விலகுவதை விரும்புகிறது . அதே வேளை பிஎன்னை நிறுவிய…

டாக்டர் மகாதிர் : இலவச மருத்துவம் நாட்டை திவாலாக்கும்

நேற்றிரவு, மலேசிய மருத்துவச் சங்க (எம்எம்ஏ) ஏற்பாட்டிலான விருந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் டாக்டர் மகாதிர், மருத்துவச் சேவைக்கான அதிக செலவுகள் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு பெரும் சுமையைக் கொடுக்கிறது என்று தெரிவித்தார். "அரசாங்கம் இலவச மருந்துகளை வழங்கினால், விரைவில் நாங்கள் திவாலாகிவிடுவோம்," என்று கூறிய அவர், “மருத்துவத்தில்…

மகாதீர் : வேதமூர்த்தியும் மஸ்லியும் சிறப்பாகவே செயல்படுகின்றனர்

பி வேதமூர்த்தி மற்றும் மஸ்லி மாலிக் இருவரும் தங்கள் கடமைகளில் சிறந்து விளங்குகின்றனர் என்று நம்புவதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார். “ஆமாம் (நான் மனநிறைவு கொள்கிறேன்), அவர்கள் சிறப்பாகவே பணியாற்றுகின்றனர்,” என்று நேற்றிரவு, கோலாலம்பூரில், மலேசிய மருத்துவச் சங்கம் (எம்எம்ஏ) வழங்கிய ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’…

நிதி அமைச்சரைவிட மேலான திட்டங்களை எங்களால் கொண்டுவர முடியும்- மசீச…

நிதி அமைச்சர் லிம் குவாங் என்ன பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார், அவற்றைவிட மேலான திட்டங்களை உருவாக்கிக் காட்டப்போவதாக மசீச இளைஞர் பகுதி சூளுரைத்துள்ளது. அதற்காக ஒரு புதிய குழுவை அமைக்கப் போவதாக மசீச இளைஞர் அணியின் புதிய தலைவர் நிக்கோல் வொங் கூறினார். அக்குழு மக்கள் வருமானத்தைப்…

இன, சமயச் சச்சரவுகளைக் கிளறி விடாதீர்: தலைவர்களுக்கு சுல்தான் நஸ்ரின்…

துணைப் பேரரசர் சுல்தான் நஸ்ரின் ஷா, நாட்டில் உள்ள பல்வேறு இன, சமயத்தாரிடையே வன்முறைகளையும் வெறுப்பையும் தூண்டிவிடும் வகையில் நடந்துகொள்ளாதீர்கள் என மக்களுக்குக் குறிப்பாக தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். அரசியல் போட்டாபோட்டியின் விளைவாக நாட்டின் நல்லிணக்க நிலை கெடுவதைக் கண்டு வருத்தமடைவதாக அவர் கூறினார். “வெற்றி அடைந்ததால் சில அரசியல்…

புத்ரா ஜெயாவால் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்க இயலாது- மகாதிர்

புத்ரா ஜெயா தன்னால் முடிந்தவரை மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க பாடுபடுகிறது என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். ஆனால், எல்லாவற்றையும் இலவசமாக வழங்க இயலாது. “நாங்கள் (பக்கத்தான் ஹரப்பான்) எங்களின் தேர்தல் அறிக்கையில் மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க முடிந்தவரை பாடுபடுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம்.…

சீபீல்ட் கோவில் நிலத்தை வாங்குவதற்கு நிதி திரட்டுகிறார் வின்சென்ட் டான்

  சீபீல்ட் மாகா மாரியம்மன் கோவில் அமைந்திருக்கும் நிலத்தைப் பொதுமக்கள் வாங்குவதைச் சாத்தியமாக்க பிரபல வணிகர் வின்சென்ட் டான் நிதி திரட்ட முனைந்துள்ளார். இதன் மூலம் அந்தக் கோவில் இப்போது இருக்கும் நிலத்திலேயே இருக்க முடியும் என்று அவர் கூறினார். மேலும், த ஸ்டார் ஒன்லைன் செய்திப்படி, பெர்ஜெயா…

கோவில் கலவரம்: 42 பேர் கைது

  கடந்த திங்கள்கிழமை நடந்த கலவரத்திற்குப் பின்னர், சுபாங் ஜெயா, சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் கிட்டத்தட்ட வழக்கமான நிலைக்குத் திரும்பியுள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் முகம்மட் பூஸி ஹருண் கூறுகிறார். நேற்று, சில கும்பல்கள் அங்கே கூடின என்றாலும், அசாம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை என்றாரவர்.…

கேமரன் மலை நாடாளுமன்ற இருக்கை காலி, நீதிமன்றம் தீர்ப்பு

  கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் கேமரன் மலை நாடாளுமன்ற இருக்கையைக் காலி செய்து இன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு மறு தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது. அத்தொகுதி தேர்தலில் ஊழல் நடவடிக்கைகள் இருந்தன. அது பிஎன் வேட்பாளர், மஇகா உதவித் தலைவர் சி. சிவராஜா, மே 9 பொதுத் தேர்தலில் வெற்றிபெறச் செய்தது…

கோவில் கலவரம் – இனவெறி மற்றும் அடுத்தவரைச் சாடும் மனப்பான்மையை…

கருத்து | சுபாங் ஜெயா, சீஃபீல்ட் கோவில் கலவரம் பற்றி பல கருத்துகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் ஒரு சொந்தக் கதையைக் கூறிவருகின்றனர். இக்கலவரத்திற்குக் காரணம் அம்னோ மற்றும் பாஸ் எனச் சொல்லி, மலாய்க்காரர் அல்லாதவர்கள் சமூக வலைத் தளங்களில் பரப்பிவரும் செய்திகளையும் சாபங்களையும் நான் படித்தேன். அதேசமயம், புதிய…