நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
லொக்மான்: நான் இனவாதி அல்ல; என்னைப் போன்றவர்களே அமைதியைக் கட்டிக்காக்கிறோம்
சுங்கை கண்டீஸ் பிஎன் வேட்பாளர் லொக்மான் நூர் ஆடம், தாம் ஒரு இனவாதி அல்ல என்றும் மலாய்க்காரர் மற்றும் முஸ்லிம்களின் அரசமைப்புப்படியான விவகாரங்கள் மீறப்படாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் ஒரு கண்காணிப்பாளர் என்றும் கூறினார். சமூகக் கலவரங்களைத் தவிர்க்க மலாய்க்காரர் மற்றும் முஸ்லிம்களின் அரசமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம் …
சைம் டர்பி தலைவராக ஸெட்டி நியமிக்கப்பட்டார்
சைம் டர்பி புரோப்பர்டி பெர்ஹாட், முன்னாள் மத்திய வங்கியின் கவர்னர் டாக்டர் ஸெட்டி அக்தர் அஜீசை இன்று புதியத் தலைவராக நியமித்தது. தற்போது, பெர்மோடாலான் நேசனல் பெர்ஹாட்-இன் (பி.என்.பி.) தலைவரான ஸெட்டி, கடந்த ஜூன் 30-இல் ஓய்வு பெற்ற அப்துல் வாஹிட் ஒமார்-க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். சைம் டர்பி…
இந்தியாவில் ஆனந்தாவின் ஊழல், மெக்சிஸ் கருத்துரைக்க இயலாது
ஏர்செல்-மெக்சிஸ் வழக்கு தொடர்பில் கருத்துரைக்க இயலாது என்று மெக்சிஸ் பெர்ஹாட் இன்று தெரிவித்தது. புர்சா மலேசியாவிடம் தாக்கல் செய்த ஆவணத்தில், அந்நிறுவனத்திடமிருந்து எந்தவொரு உத்தியோகப்பூர்வ ஆவணங்களையும் பெறவில்லை என்றும், அதற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி தெரியாது என்றும் தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான மெக்சிஸ் மோபைல் தெரிவித்துள்ளது. இந்த…
ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 18 உயர்மட்ட அரசு ஊழியர்கள் நீக்கப்பட்டனர்,…
ஹரப்பான் அரசாங்கத்தை அமைத்ததிலிருந்து 18 உயர்மட்ட அரசு அதிகாரிகளை அவர்களின் பதவியிலிருந்து நீக்கியுள்ளது என்று நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுயி கியோங் இன்று கூறினார். நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலிருந்து நீக்கப்பட்ட 18 அதிகாரிகள் ஒருவர் பிரதமர் துறையைச் சேர்ந்தவர்.. "பொது நலம்" கருதி…
மகாதிர்: முடிந்தால் ஒரு நாளைக்கு 36 மணி நேரம் வேலை…
பிரதமர் மகாதிர் தம்மால் முடிந்தால் ஒரு நாளைக்கு 36 மணி நேரம் வேலை செய்வேன் இன்று கூறினார். "முடிந்த அளவுக்கு எனது வேலை நேரத்தை நான் விரிவுப்படுத்துகிறேன். நான் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் வேலை செய்கிறேன். "கூடுதலான நேரத்தை ஒரு நாளுக்கு, ஒரு…
அஸ்மின் அன்வாரை எதிர்த்துப் போட்டியிடுவாரா?
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எதையும் எளிதில் வெளியில் சொல்ல மாட்டார். கட்சித் தேர்தல் விசயத்திலும் அவர் அப்படித்தான். இன்று பிற்பகலில் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரா என்று அவரிடம் வினவப்பட்டது. அதற்கு அவர் பொருளாதார விவகார அமைச்சர் என்ற முறையில் அளவுமீறி வேலை இருப்பதாகக் …
உங்கள் கருத்து: முன்பு பிஎன் நாடாளுமன்றம் வருவதில்லை, இப்போது ஹரப்பானா?
‘காலி இருக்கைகள், அமைச்சர்கள் எங்கே?’ கேகேஎஸ்எஸ்எஸ்: நாடாளுமன்ற அமர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. அப்படி இருக்கும்போது அமைச்சர்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் இருக்க முடியாது. தயை செய்து நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அது எம்பிகள் மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் இடமாகும். மற்ற கூட்டங்களை நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு அப்பாற்பட்ட நேரங்களில் …
மகாதிர்: அரசாங்கத்தையே கெடுத்து விட்டார் நஜிப்; அதைச் சரிசெய்ய நாளாகும்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அரசாங்க இயந்திரத்தையே “கெடுத்துச் சுட்டிச்சுவராக்கி” விட்டார் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குற்றஞ்சாட்டியுள்ளார். அதனால்தான் பல அரசாங்க அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பதாகவும் எல்லாவற்றையும் சரிசெய்து அரசாங்கம் பழைய நிலைக்குத் திரும்ப நாளாகும் என்றும் …
அடுத்தத் திங்கள்கிழமை ஜிஎஸ்டியை அகற்ற அரசாங்கம் திட்டமிடுகிறது
ஜிஎஸ்டியை அகற்றுவதற்கான முன்மொழிதலை அடுத்தத் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் லியு வுய் கியோங் இன்று கூறினார். ஜிஎஸ்டிக்கு மாற்றாக செயல்படுத்தப்படவிருக்கும் விற்பனை மற்றும் சேவைகள் வரி (எஸ்எஸ்டி) மசோதாவும் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். பேரரசரின் உரை மீதான…
பலாகோங் இடைத் தேர்தல்: பாஸ் ஒதுங்கிக் கொள்ளும், மசீச அதன்…
சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலில் ஒதுங்கிக் கொண்டது போல சிலாங்கூரின் இன்னொரு இடைத் தேர்தலும் பாஸ் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொள்ளலாம். அந்த விவகாரம் இன்னும் விவாதிக்கப்படு வந்த போதிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இந்த இடைத் தேர்தலிலும் பங்கேற்காமல் இருப்பதை விரும்புகின்றனர் என்று பாஸின் உதவித் தலைவர் முகமட் அமர்…
ஹரப்பான் தோற்க வேண்டும் என்பதற்காகவே பாஸ் சுங்கை கண்டீசில் போட்டியிடவில்லையாம்
பாஸ் சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் களமிறங்கி வாக்குகளைச் சிதறடிக்க விரும்பவில்லை என அக்கட்சி தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார். சிலாங்கூர் சட்டமன்ற இருக்கைக்காக நடக்கும் இடைத் தேர்தலில் மக்கள் ஹரப்பானைத் தோற்கடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நஸ்ருடின் இன்று முகநூலில் பதவிட்டிருந்தார். “அத்தோல்வி தேர்தல் வாக்குறுதிகளை …
நஜிப் பிறந்த நாள் கொண்டாடினார்: எம்எச் 17-ஐ நினைவுகூர்ந்தார்
ஒருபுறம் நீதிமன்ற வழக்குகள் மறுபுறம் கூட்டரசு அமலாக்கப் பிரிவுகளின் விரிவான விசாரணைகள் இவற்றுக்கிடையிலும் நேரத்தை ஒதுக்கி முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்றிரவு தம் 65வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதில் அவரின் குடும்பத்தாரும் 2014-இல் எம்எச்17 விமான விபத்தில் கொல்லப்பட்ட பயணிகளின் குடும்பத்தார் சிலரும் கலந்து …
யுஇசி சான்றிதழை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சுமார் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை சான்றிதழை (யுசிசி) அங்கீகரிக்க புத்ரா ஜெயா மேற்கொண்டுள்ள திட்டத்திற்கு கோலாலம்பூரில் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். முகநூலில் காமிஸ் (காபுங்கான் மகாசிஸ்வா இஸ்லாம் செ-மலேசியா) பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ ஆர்ப்பாட்டக்காரர்கள் "ஹிடுப் ராக்யாட்" மற்றும் "பண்தா யுஇசி" என்று கூச்சலிடுவது…
சுங்கை கண்டிஸ்-ஐ கைப்பற்ற புத்ரா எம்.ஐ.சி. லொக்மான் அடாமிற்கு உதவும்
சுங்கை கண்டிஸ் சட்டமன்ற இடைத்தேர்தலில், பாரிசான் நேசனல் வெற்றியை உறுதிசெய்ய, சிலாங்கூர் ம.இ.கா. புத்ரா பிரிவு இந்திய இளைஞர்களை அணுகும். அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 4-ம் தேதி வாக்களிக்க, இளம் வாக்காளர்கள் ஊர் திரும்பவும் தாங்கள் ஆவன செய்யவுள்ளதாக புத்ரா பிரிவின் தலைவர் சசி முனியாண்டி கூறியுள்ளார். “சுங்கை கண்டிஸ்…
சுங்கை கண்டீஸ் பரப்புரைகளில் மசீச பங்கேற்கவில்லையா? மறுக்கிறது பிஎன்
பாரிசான் நேசனல்(பிஎன்), அதன் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான மசீச சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தல் பரப்புரைகளில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுவதை மறுத்துள்ளது. வெளிப்பார்வைக்கு மசீச இடைத்தேர்தல் வேலைகளில் பங்கேற்காததுபோல் தெரியலாம் ஆனால், உண்மையில் மசீசவும் பங்கேற்றுள்ளது என பிஎன் துணைத் தலைவர் முகம்மட் ஹசான் கூறினார். “பிஎன் கட்சித் …
போலீஸ் படை திருத்தி அமைக்கப்படும்
ஆண்டு இறுதிக்குள் போலீஸ் படையைத் திருத்தி அமைக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் முகம்மட் பூஸி ஹருனை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் த ஸ்டார், மூன்று போலீஸ் சிறப்புக் குழுக்கள்- தீயொழுக்கம், சூதாட்டம், குண்டர்தன- சிறப்புக்குழு, திட்டமிட்டுக் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் மீதான சிறப்புக்குழு, …
ஜோகூர் அரசு எதிரணிக்கு உரிய மதிப்பளிக்க வேண்டுமாம்: சிலாங்கூர் சட்டமன்றத்…
“சிலாங்கூர் சட்டமன்றத் தலைவர் இங் சுவி லிம், ஜோகூர் எதிரணித் தலைவர் ஹஸ்னி முகம்மட்டுக்கு அம்மாநில அரசு கொடுக்கும் ரிம1,000 மாத அலவன்ஸ் “மிகவும் குறைவானது” என்கிறார். அது மாநில எதிரணித் தலைவர் பதவிக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்பதைக் காண்பிக்கிறது.மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் இங் அவ்வாறு கூறினார்.…
ஆகஸ்ட் 31க்குப் பிறகு ஆவணமற்ற குடியேறிகள்மீது நடவடிக்கை
ஆகஸ்ட் 31 தொடங்கி ஆவணங்கள் வைத்திருக்காத குடியேறிகள்மீது குடிநுழைவுத்துறை நடவடிக்கை எடுக்கும். இதனைத் தெரிவித்த அதன் தலைமை இயக்குனர் முஸ்டபார் அலி, குடிநுழைவுத்துறை அதன் நடவைக்கைகளை முடுக்கிவிட்டு சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்யும் என்றார். ஆவணமற்ற குடியேறிகளை வேலைக்கு வைத்துள்ளவர்களும் சேர்த்தே கைது செய்யப்படுவார்கள் என்றாரவர். “தாமே சரணடையும் …
சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலில் முக்கோணப் போட்டி
சுங்கை காண்டிஸ் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் நியமனம் முடிவுற்றது. இந்த இருக்கைக்கு மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார். அவர்கள் முகமட் ஸாவாவி அஹமட் மக்னி (பக்கத்தான் ஹரப்பான்), லோக்மான் நூர் ஆடம் (பிஎன்) மற்றும் மூர்த்தி கிருஷ்ணசாமி (சுயேட்சை). சமய ஆசிரியரான…
‘தங்காப் இராமசாமி’, பினாங்கில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் கண்டனக் குரல்
இன்று பினாங்கில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் மலாய் முஸ்லிம்கள் அரசுசாரா அமைப்புகளின் ஒரு கூட்டத்தினர் இஸ்லாமிய சமய போதகர் ஸக்கீர் நாய்க்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வரும் பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி. இராமசாமிக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர். மலாய் உடையும்…
சிஐஎ-க்கு அனுப்பப்பட்ட கடிதம்: கடும் நடவடிக்கை வேண்டும், பேட்ரியட் வலியுறுத்துகிறது
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பிரதமர் இலாகா சிஐஎ-க்கு அனுப்பிய கடிதம் ஒரு நம்பிக்கைத் துரோகமான மற்றும் இராசத் துரோகமான செயல் என்று பெர்சத்துவான் பேட்ரியட் கெபங்சாஆன் (பேட்ரியட்) கூறுகிறது. இச்செயலை இன்றைய அரசாங்கம் உடனடியாக விசாரித்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க…
விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட விசாரணையில் ஒத்துழைக்க இராமசாமி தயார்
பினாங்கு மாநில 2-வது துணை முதல் அமைச்சர் பி.இராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீதில் விசாரணை மேற்கொள்ளும் போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவுள்ளதாக இன்று உறுதியளித்தார். இராமசாமி மீதான விசாரணை அறிக்கையைத் திறந்து விட்டதாக போலிஸ் தலைவர் மொஹமட் ஃபுஸி ஹருன் கூறியதைத் தொடர்ந்து, அவர்…
இங்-கின் மறைவு, ஹராப்பானுக்குப் பேரிழப்பு
பலாகோங் சட்டமன்ற உறுப்பினர் ஏடிஇங் தியான் சீ, இன்று அதிகாலை ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரின் மறைவு பக்காத்தான் ஹராப்பானுக்கு மாபெரும் இழப்பு. பக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூர், டிஏபி நடவடிக்கை பிரிவில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்த அவரின் பிரிவு, சிலாங்கூர் மக்கள், குறிப்பாக பலாகோங் பகுதி…
























