மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
அனுவார்: இன அரசியலுக்கு டிஏபியே காரணம் என்பதை வரலாறு காண்பிக்கிறது
இன அரசியல் தோன்றியதைத் தெரிந்துகொள்ள வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்கிறார் அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா. இன அரசியல் உருவானதற்குக் காரணமே டிஏபிதான் என்கிறார் அவர். அக்கட்சி தோற்றுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன அரசியலும் தோன்றியது. “டிஏபி தோன்றுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே அம்னோ உருவாகிவிட்டது.....அப்போதெல்லாம் இனங்களுக்கிடையில் …
கெட்கோ நில விவகாரம், லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவர் கைது
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) , கம்போங் செராம்பாங் இண்டா அல்லது லாடாங் கட்கோ நில உரிமையாளர் மற்றும் விற்பனை விவகார வழக்குத் தொடர்பாக விசாரணை செய்ய, லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவரைக் கைது செய்துள்ளது. இன்று காலை சுமார் 11 மணியளவில், ரெனா.துரைசிங்கம் மற்றும் ரெனா.இராமலிங்கம்…
கேவியஸ் : கேமரன் மலை வேட்பாளர் விஷயத்தில் பி.என்.-னின் முடிவை…
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விஷயத்தில், பாரிசான் நேசனல் உச்சமன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் தாம் மதித்து, ஏற்கவுள்ளதாக மக்கள் முற்போக்குக் கட்சியின் தேசியத் தலைவர், எம்.கேவியஸ் கூறியுள்ளார். பாரிசான் நேசனல் உச்சமன்றம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், பொதுத் தேர்தல் வெற்றியை…
டிஎபி வேட்பாளர்கள் கிளந்தானில் போட்டியிடுவர்
அடுத்த பொதுத் தேர்தலில் டிஎபி கிளந்தான் மாநிலத்தில் அதன் வேட்பாளர்களை களமிறக்கக்கூடும். கடந்த 31 ஆண்டுகளில் இது முதல்தடவையாக இருக்கும். டிஎபி அதன் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கிளந்தான் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் வான் அப்துல் ரஹிம் வான் அப்துல்லா தெரிவித்தார். காலாஸ் மற்றும்…
முன்னாள் ஐஜிபி காலிட் பொதுப் போகுவரத்து பாதுகாப்பை உயர்த்துவார் என்று…
கடந்த செப்டெம்பர் 5 இல் பதவி ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜிபி காலிட் அபு பாகார் இன்று பிரசாரனாவின் தலைவாராக வேலையைத் தொடங்கினார். இன்று வேலையில் சேர்ந்த காலிட், அங்கு நடைபெற்ற ஒரு கையொப்பமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், அவர் சமூக ஊடகங்களிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பிரசாரனாவின்…
பினாங்கு வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ரிம2.6பில்லியன் செலவிடப்பட்டது என்று வலியுறுத்துகிறார்…
பினாங்கு மாநில வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு புத்ரா ஜெயா போதுமானவற்றை செய்யவில்லை என்று கூறப்படுவதை இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜுனய்டி துவாங்கு ஜாபார் மறுத்துள்ளார். மத்திய அரசாங்கம் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து பினாங்கில் வெள்ளப் பிரச்சனையைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ரிம2.58பில்லியன் செலவிட்டுள்ளதாக அவர் கூறினார்.…
ஜிஇ14: கெராக்கானின் தொகுதிகள் பரிமாற்றம்
கெராக்கான் 14வது பொதுத் தேர்தலில் ஐந்து தொகுதிகளை பிஎன் பங்காளிக்கட்சிகளுடன் மாற்றிக்கொள்ளத் திட்டமிடுவதாக அதன் தலைவர் மா சியு கியோங் கூறினார். “அதற்கான பேச்சுகள் பிஎன் உயர்நிலையில் நடக்கின்றன. இறுதி முடிவைப் பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் ரசாக் அறிவிப்பார்”, என நெகிரி செம்பிலான் கெராக்கான் பேராளர் கூட்டத்தைத் …
வான் ஜுனாய்டி: சரவாக்கில் மகாதிர் பேச்சுக்கு மதிப்பில்லை
டாக்டர் மகாதிர் முகம்மட்டின் வாரக்கடைசி கூச்சிங் பயணத்தால் சரவாக் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்கிறார் பார்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து (பிபிபி) உச்சமன்றத் தலைவர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார். “அதனால் எந்தத் தாக்கமுமில்லை”, என இயற்கைவள, சுற்றுசூழல் அமைச்சரான வான் ஜுனாய்டி இன்று கோலாலும்பூரில் கூறினார்.…
மஇகா: பிரதமர் விருப்பப்படியே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எப்படிப்பட்ட தகுதிகளை எதிர்பார்க்கிறோரோ அத்தகுதிகளைக் கொண்ட வேட்பாளர்களையே மஇகா 14வது பொதுத் தேர்தலில் அதன் வேட்பாளர்களாக நிறுத்தும். இதனைத் தெரிவித்த கட்சித் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் வேட்பாளர் பட்டியல் ஒன்றை நஜிப்பிடம் கொடுத்திருப்பதாகக் கூறினார். ஆனால், அது இறுதியானது அல்ல தேவைப்பட்டால் அதில் …
நியுஜென் கட்சி தன்னுடன் இணைவது குறித்து ஹரபான் விவாதிக்கும்
பக்கத்தான் ஹரபான் தலைவர் மன்றம் அக்டோபர் 2-இல் கூடும்போது, அது எதிரணிக் கூட்டணியில் சேரும் நியுஜென் கட்சியின் விருப்பம் குறித்து விவாதிக்கும் என ஹரபான் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா கூறினார். எதிரணிக் கூட்டணியில் சேர விருப்பம் கொண்டுள்ள “உண்மையான” எதிர்க்கட்சிகளை ஹரபான் வரவேற்பதாக சைபுடின் கூறினார். அதேவேளையில் …
பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்தியர்களுக்கு அதிகமான இடங்களை ஒதுக்குங்கள்
பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு அதிகமான இடங்களை ஒதுக்க வேண்டுமென, இந்தியர்கள் அரசாங்கத்தைக் கேட்பதாக, மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை விரிவுரையாளர், பேராசிரியர் எம்.இராஜேந்திரன் தெரிவித்தார். பொதுப் பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் இருக்கும் ஒதுக்கீட்டு முறை (கோட்டா) இந்தியச் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்றார் அவர். "பொதுப்…
மகாதீர் : பெரும்பான்மை சபா, சரவாக் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை
சபா மற்றும் சரவாக், மலேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ளதில் அதிருப்தி அடைந்திருக்கும் அம்மாநில மக்களின் மனோநிலையை ஆய்வு செய்யவுள்ளதாக, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் உறுதியளித்துள்ளார். “நிறைய பேர் மகிழ்ச்சியாக இல்லை. 1963 மலேசிய உடன்படிக்கையை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.” “அனைத்தையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்,…
அஸ்மின்: பீர் 2017 விழா நடத்தலாம், ஆனால் விதிகளுக்கு கட்டுப்பட்டிருக்க…
பீர் விழாக்களில் இதர இனங்கள் பங்கேற்கும் உரிமையை மாநில அரசு மதிக்கிறது, ஆனால் அவ்வாறான நிகழ்ச்சிகள் ஊராட்சிமன்றங்களின் விதிகளுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் அஸ்மின் அலி கூறினார். "மாநில அரசின் நிலைப்பாடு இதுதான்: பொறுப்புள்ள அரசாங்கம் என்ற முறையில் இதர இனங்களின்…
நஜிப்: இந்தியாவில் ஜிஎஸ்டி 28விழுக்காடு, மலேசியாவில் 6விழுக்காட்டுக்குக் குய்யோ முறையோ…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வரிகட்டுவது மலேசியர்களுக்குப் பிடிக்காத விசயம் என்பது அரசாங்கத்துக்கு நல்லாவே தெரியும் என்றார். இன்று மஇகா தேசியப் பேராளர் கூட்டத்தில் உரை நிகழ்த்திய நஜிப், மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவரது உரையில் இந்திய மாணவர்களுக்குக் கிடைக்கும் தேசிய உயர்க்கல்விக் கடன் (பிடிபிடிஎன்) போதுமானதாக …
மகாதிர்: மலேசியா அமைதிப்பூங்காவாக விளங்கியது ஏமாற்றுக்காரன், திருடன் கொள்ளையன் வரும்வரையில்
பக்கத்தான் ஹரபான் நிர்வாகத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், மலேசியர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பைப் பரிமாறிக்கொள்வதில்லையே தவிர, தங்களுக்கு நல்வாழ்வு கொடுத்துள்ள நாட்டை மிகவும் நேசிக்கிறார்கள் என்றார். மத்திய கிழக்கில் ஈராக், சீரியா, ஏமன் போன்ற நாடுகளில் ஒரே இனத்தவர் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும் …
என் பூர்விகம் கேரளா அல்ல, ஆனாலும் நானே இந்தியர்களின் மேம்பாட்டுத்…
இப்போதெல்லாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் கிண்டல் செய்யாமல் இருக்க முடியவில்லை. மகாதிரும் அப்படியே. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நஜிப்பை இடித்துரைக்கிறார். இன்று கோலாலும்பூர் புத்ரா உலக வாணிக மையத்தில் மஇகா தேசியப் பேராளர் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய நஜிப் இந்தியர்களுக்கு நிறைய செய்திருப்பதாக …
இந்தியர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை, இனவாதமா?, கேட்கிறது எம்டியுசி
மலேசியாவில் 74 விழுக்காட்டு இந்திய இளைஞர்கள் வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இந்த விபரத்தை மெடேக்கா ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வேலை தேடிச் செல்பவர்களின் இனம் என்ன என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கிறது. இதன் அடிப்படையில், இந்நாட்டு குடிமக்களாகிய இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாக மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்…
சரவாக்கில் நுழைய, பிகேஆர் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு
சரவாக்கில், பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த ஓர் இரவு விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற கோலா செபெதாங் சட்டமன்ற உறுப்பினர், சுவா யீ லின் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். மிரி, ஈஸ்ட்வூட் வேலி கோல்ப் & கன்ட்ரி கிளப்பில் நடந்த அந்நிகழ்வில், குடிநுழைவுத் துறை மற்றும் போலிஸ் அதிகாரிகள் நுழைந்து, யீ லின்னை…
தாக்கியுடின்: 14ஆவது பொதுத்தேர்தலில் பாஸ் 100 இருக்கைகளுக்கு போட்டியிடும்
எந்த ஓர் அரசியல் கட்சியுடனும் பிணைப்பும் ஒப்பந்தமும் இல்லாத நிலையில், பாஸ் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் அதிகமான இருக்கைகளுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது என்று கட்சியின் தலைமைச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் கூறுகிறார். பாஸ் கட்சி நகர்புற மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் பாஸ் அதிகமான நகர்புற…
நஜிப்: மலேசியர்களின் ஒற்றுமைக்கு 1மலேசியா நெகாராகு ஒரு புதிய விடியல்
மலேசியர்களை ஒன்றுபடுத்துவதற்கு 1மலேசியா நெகாராகு பொதுக்கொள்கை ஒரு புதியத் தொடக்கமாக வரக்கூடும் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். இப்பொதுக்கொள்கையின் கீழ் மக்கள் ஒற்றுமையின்மைக்கு ஊக்கமளிக்கும் சிந்தனைகளை வீசியெறியந்து விட்டு மலேசியா அனைவருக்கும் சொந்தமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். 1மலேசியா நெகாராகுவின் கீழ்…
சிறுபான்மையினர் கட்சி ஹரபானில் சேர விருப்பம்: 30 தொகுதிகள் வெல்வதற்கு…
நியுஜென் கட்சி பக்கத்தான் ஹரபான் கூட்டணியில் சேரும் விருப்பத்தை . வெளியிட்டிருக்கிறது. அக்கட்சியால் பிஎன் வசமுள்ள சிறுபான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற தொகுதிகளில் குறைந்தது 25-ஐ பக்கத்தான் வெல்ல உதவ முடியும் என்று அது உறுதியாகக் கூறியது. அத்துடன் ஹரபான் குறுகிய வெற்றிபெற்ற 12 இடங்களைத் தக்க வைத்துகொள்ளவும் அது …
பாஸுக்கு விட்டுக்கொடுப்பதால் அம்னோ போர்னியோவை இழக்கலாம்: முன்னாள் ஐஜிபி எச்சரிக்கை
முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) ஒருவர், பாஸுக்கு அதிகப்படியான சலுகைகளைக் கொடுக்கும் அம்னோ அதன் காரணமாக சாபா, சரவாக்கில் ஆதரவை இழக்கலாம் என்று எச்சரித்துள்ளார். அம்னோ தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக ஹுடுட் சட்டத்தை அமல்படுத்தும் பாஸின் கோரிக்கைகளுக்குப் பணிந்துபோனால் கூட்டரசு அரசாங்கம், அந்தக் கிழக்கு …
கெடாவில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள்: எம்பி அறிவிப்பு
கெடாவின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் (ஆடிபி) கடல் பெருக்கின்போதும் பலத்த மழையின்போதும் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். எடுத்துக்காட்டுக்கு, 2015இல் சுங்கை மூடாவில் ரிம1.4 பில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தால் கோலா மூடா மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப் பிரச்னை ஏற்படுவது தடுக்கப்பட்டது என கெடா மந்திரி …


