மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
பைரின் அறிக்கை என்னவாயிற்று? பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் வாரிசான்…
சாபா சட்டவிரோதக் குடியேறிகள் பிரச்னையைக் கவனிக்க அமைக்கப்பட்ட மாநில நிரந்தரக் குழு பிரச்னைகளுக்குத் தீர்வுகளை எடுத்துரைக்கும் அதன் அறிக்கையை வெளியிடாமல் இருப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் சாபாவுக்குள் நுழைந்து, பின்னர் தீவகற்ப மலேசியாவில் பிடிபட்டிருப்பதாகக் கூறப்படுவதால் அந்த அறிக்கையை வெளியிடுவது அவசியமாகிறது …
‘நச்சு அரசியலைத் துடைத்தொழிப்போம்!’ – ஊதா பேரணியைச் சித்தி அஸ்மா…
டாக்டர் சித்தி அஸ்மா முகமட் அலி மென்மையானவர் என்று எல்லோராலும் அறியப்பட்டவர்; எதிர்ப்பைத் தெரிவிக்க பேரணியைக் கூட்டும் அம்பிகா சீனிவாசன், மரியா சின் அப்துல்லா போல் அனுபவம் மிக்க ஆர்வலர் இல்லை சித்தி ஹஸ்மா. ஆனால், இன்று மாலை, கோலாலம்பூரில் சுமார் 1,000 பேர் முன்னிலையில் அவர் நின்றிருந்தார்.…
லிம் கிட் சியாங்: பாஸ் ஐந்து மாநிலங்களைப் பிடிக்கும் என்பது…
அடுத்தப் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி ஐந்து மாநிலங்களைப் பிடிக்கும் என்று ஜம்பமடித்துக்கொள்கிறது. அது நடக்காது என்கிறார் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங். பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அடுத்தப் பொதுத் தேர்தலில் ஐந்து மாநிலங்களைக் - கிளந்தான், திரங்கானு, கெடா,…
வேதமூர்த்தி : சார்லஸ் சந்தியாகு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்
கடந்த வாரம், ஜசெக-வின் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, தனக்கு எதிராக, அவதூறான கருத்துகளைச் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததற்கு மன்னிப்பு கோர வேண்டுமென ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி கேட்டுக்கொண்டார். “என் வழக்குறைஞர் கார்த்திகேசன் வழி, நான் சார்லஸ்சுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். எனக்கெதிரான தனிப்பட்ட அவரது கருத்துகளுக்கு,…
புவாட்டின் தற்காப்புக்குப் பாய்ந்து வந்தது ஜாசா
சிறப்பு விவகாரத்துறை (ஜாசா), அதன் தலைமை இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷி அரச ஆணைய விசாரணை தொடர்பில் தெரிவித்த கருத்து சாட்சியை மிரட்டுவதாக உள்ளது எனக் கூறப்படுவதை மறுக்கிறது. அரசாங்கத்துக்காக பிரச்சாரப் பணிகளைச் செய்துவரும் ஜாசாவின் தலைமை இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷி, ஆர்சிஐ-இல் பேங்க் நெகராவின் முன்னாள் …
புவாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வழக்குரைஞர் ஆர்சிஐ-இடம் வலியுறுத்து
சிறப்பு விவகாரத்துறை(ஜாசா) தலைமை இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷிக்கு எதிராக போலீஸ் செய்யுமாறு டாக்டர் மகாதிர் முகம்மட்டின் வழக்குரைஞர், போரெக்ஸ் மீதான அரச விசாரணை ஆணையத்தின் செயலாளரிடம் வலியுறுத்துவார். புவாட் நேற்று விடுத்திருந்த அறிக்கையால், பேரரசரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஆணையத்தின் கெளரவத்தையும் புனிதத்தையும், தகுதியையும் மாசுபடுத்தி விட்டார் …
குவான் எங்: சீனப்பள்ளிக்கு செல்வதிலிருந்து நான் தடுக்கப்பட்டதற்கு விளக்கம் வேண்டும்
புக்கிட் மெர்தாஜாம், சுங்கை லெம்புவிலுள்ள ஒரு சீனப்பள்ளிக்கு நிதி உதவி அளிக்க தம்மை போகவிடாமல் தடுத்தது ஏன் என்று கல்வி அமைச்சு விளக்க அளிக்க வேண்டும் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். தம்மை அப்பள்ளிக்குப் போக விடாமல் தடுப்பது ஜனநாயக கோட்பாடுகளைக் கேலிக்கூத்தாக்குவதாகும்…
பேரரசர் பிறந்தநாளை முன்னிட்டு, தலைமை நீதிபதிக்கும் சாமிவேலுவுக்கும் ‘துன்’ விருது
இன்று, மாட்சிமை தங்கியப் பேரரசர், சுல்தான் முஹமட் V அவர்களின் பிறந்த நாளையொட்டி, தேசிய உயர்மட்ட விருதான ‘துன்’ விருதை, நாட்டின் மூன்று முக்கிய நபர்கள் பெறுகின்றனர். கடந்த ஆகஸ்ட் 4-ல், நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முஹமட் ராவுஸ் ஷாரிஃப், இந்தியா, தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் ச.சாமிவேலு…
இருமொழித் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது!
மலேசிய அரசாங்கம் மலேசிய தேசியமொழிப்பள்ளிகளுக்காக அறிமுகப்படுத்திய இருமொழித் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் அமலாக்கம் செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தி வரும் மே 19 இயக்கத்தினர் பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இந்த இருமொழித் திட்டத்தை அப்பள்ளியில் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கையை பெட்டாலிங் ஜெயா தமிழ்ப்பள்ளி…
பக்காத்தான் ஹராப்பான் ‘அலி பாபா உத்தி’யைப் பயன்படுத்துகிறது, பிரதமரின் உதவியாளர்…
ஹராப்பானின் ‘மேலாதிக்கக் கட்சி’யான ஜசெக-வும், புத்திசாலித்தனமாக அரசியல் காய் நகர்த்தும் ‘நடைமுறை தலைவர்’-ஆன லிம் கிட் சியாங்கும், பக்காத்தான் ஹராப்பானின் தோற்றத்தை வடிவமைக்கின்றனர் என பிரதமரின் பத்திரிக்கைச் செயலாளர் தெங்கு ஷரிஃபுடின் தெங்கு அஹ்மாட் கூறியுள்ளார். அலி பாபாவின் உத்தியைப் போன்று, மலாய் தலைவர்களை முன்னணியில் வைத்துவிட்டனர், ஆனால்,…
நேரடிப் போட்டிகளில் பாஸுக்கு அக்கறை இல்லை- அமனா
பிகேஆர் பாஸுடன் பேச்சு நடத்தும் விருப்பத்தைக் கொண்டிருந்தாலும் பாஸுக்கு பிஎன்னுடன் நேரடிப் போட்டிகளில் ஈடுபடுவதில் சிறிதும் விருப்பமில்லை என்பதைத் தெளிவாகவே காட்டிக் விட்டது என அமனா நினைவூட்டியுள்ளது. இரண்டாண்டுகளாக பக்கத்தான் ஹரபான் சகாக்கள் (பிஎன்னுடன்) நேரடிப் போட்டியைத் தவிர்ப்பதற்கு பாஸை வளைத்துப்போட கடுமையாக பாடுபட்டுள்ளனர். ஆனால், அம்முயற்சி நிறைவேறாததற்கு …
சிலாங்கூர் ஹராபான் தலைமை நிர்வாகிகள் பட்டியல் : அஸ்மின் வெளியிட்டார்
சிலாங்கூர் பக்கத்தான் ஹரபான் தலைவர் அஸ்மின் அலி அக்கூட்டணியின் மாநில நிர்வாகிகள் பட்டியலை இன்று வெளியிட்டார். அதில் நான்கு பங்காளிக்கட்சிகளுக்கிடையில் 4: 3: 3:2 என்ற விகிதாசாரத்தில் நிர்வாக அதிகாரம் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. பட்டியலில் அதிக இடங்கள் பிகேஆருக்கு. பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வுக்கு இரண்டு இடங்கள். அஸ்மின் நான்கு …
பாஸுக்கு ‘அரசாங்கத்தை அமைக்கப்போகும்’ மனநிலை தேவை
எதிர்வரும் பொதுத் தேர்தலில், 40 நாடாளுமன்ற இடங்களை வெல்வது பாஸின் இலக்காக இருக்கலாம் ஆனால், அது “அடுத்த அரசாங்கத்தை அமைக்கப்போகும்” மனநிலையுடன் செயல்பட வேண்டும் என அதன் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார். “பாஸ் ககாசான் செஜாத்ராவுடன் இணைந்து 14வது பொதுத் தேர்தலை நொக்கிச் சென்று கொண்டிருக்கிறது.…
எகிப்திய கடற்படை எட்டு மலேசியர்களைக் காப்பாற்றியது
நேற்று செங்கடலின் வடக்குக் கரையோரத்துக்கு அப்பால், மூழ்கும் நிலையில் இருந்த ஒரு சுற்றுலா படகிலிருந்து எட்டு எகிப்தியர்களையும் ஒன்பது மலேசியர்களையும் எகிப்திய கடற்படை காப்பாற்றியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்தது. கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து அபய அழைப்பு வந்ததை அடுத்து கடல்படை விரைந்து சென்று அந்த 17பேரையும் மீட்டதாக …
மலேசியர்கள் சவூதி அராபியாவில் திருமணம் செய்ய தடை
சுற்றுலா துணை அமைச்சர் மாஸ் எர்மையாதி சம்சுடின், மலேசியர்கள் சவூதி அராபியாவில் திருமணம் செய்துகொள்ள அனுமதி இல்லை என்றும் அப்படிச் செய்வது அந்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும் என்றும் கூறினார். மலேசியர்கள் சவூதி அராபியாவில் திருமணம் செய்துகொள்வது ஒரு வழக்கமாக மாறி வருகிறது என்று கூறிய அவர், தம் அமைச்சு …
‘பாஸுக்கு ஓட்டுபோடுவது, பாரிசானுக்குப் போடுவதற்குச் சமம்’ – பாஸுக்கு மகாதீர்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில், பாஸுக்குப் போடும் ஓட்டு, பாரிசானுக்குப் போட்டதற்குச் சமம் என்று டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். நேற்று, பாஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முஹமட் காலில் அப்துல் ஹாடி, பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களிப்பது, டிஏபி-க்கு வாக்களிப்பதற்குச் சமம் என்று கூறியதற்கு, மகாதீர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.…
எம்எசிசி தலைவர் நஜிப்புடன் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும், கிட் சியாங்…
பிரதமர் நஜிப் அமெரிக்காவுக்குச் செல்லும் போது மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் சுல்கிப்ளி அஹமட்டும் அவருடன் செல்ல வேண்டும். அங்கு அவர் 1எம்டிபிக்கு தொடர்புடைய நிதிகள் காணாமல் போய்விட்டது மீதான விசாரணையை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் என்று டிஎபியின் மூத்த தலைவர்…
போரெக்ஸ் ஆர்சிஐ: அன்வார், சிடிக் கடும் வாக்குவாதம்
1980, 90-களில் பேங்க் நெகராவுக்கு ஏற்பட்ட வெளிநாணயச் செலாவணி இழப்பு குறித்து விசாரணை செய்யும் அரச ஆணையத்தில் (ஆர்சிஐ) பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் விசாரணைக்குத் தலைமையேற்றிருக்கும் முகம்மட் சிடிக் ஹசானுக்குமிடையில் கடும் வாக்குவாதம் மூண்டது. மத்திய வங்கிக்கு ஏற்பட்ட உண்மையான இழப்புகளை அறிந்திருந்தும் அன்வார் அதை …
பாஸுடன் பேச்சுகள்: கூட்டு முடிவுகளை மதிப்பவர் அன்வார்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூட்டு முடிவுகளுக்கு மதிப்பளிப்பவர் என்கிறார் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில். சிறையில் உள்ள அன்வார் இப்ராகிம் எழுதிய கடிதம் பாஸுடன் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ளும் பேச்சுகள் தொடர்வதற்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் காணப்படுவது பற்றி கருத்துரைத்தபோது சைபுடின் அவ்வாறு …
ஜாகிர் நாய்க்கின் தற்காப்புக்கு முன்வராத மலாய்க் கட்சிகளுக்கு இப்ராகிம் அலி…
பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, சர்ச்சைக்குரிய இந்திய முஸ்லிம் சமய போதகரான ஜாகிர் நாய்க்கைத் தற்காக்க முன்வராத பாஸ், அம்னோ, பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) ஆகியவற்றைச் சாடினார். மலாய்க்காரர்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் இக்கட்சிகள் அந்தப் போதகர் சார்பாக குரல் கொடுக்க முன்வந்திருக்க வேண்டும் என்றார். “பாஸ் அல்லது …
போரெக்ஸ் வணிகம் நடக்கும் இடத்துக்கு மகாதிர் வந்ததில்லை- முன்னாள் வணிகர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அன்னிய செலாவணி வணிகம் நடைபெறும் இடத்துக்கு வந்ததே இல்லை என மத்திய வங்கிக்காக போரெக்ஸ் வணிகம் செய்த முன்னாள் வணிகர் ஒருவர் கூறினார். 1980-இலும் 1990 முற்பகுதியிலும் மத்திய வங்கிக்கு ஏற்பட்ட வெளிநாணயச் செலாவணி இழப்பு குறித்து விசாரணை செய்யும் அரச …
‘பாரிசானுக்கு ஒரு ஓட்டுகூட இல்லை’, ஹிண்ட்ராப் 14-வது பொதுத் தேர்தலில்…
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ‘பாரிசான் நேசனலுக்கு ஒரு ஓட்டுகூட இல்லை’ என ஹிண்ட்ராப் இயக்கம் நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்யப்போவதாக அதன் தேசியத் தலைவர் வேதமூர்த்தி பொன்னுசாமி தெரிவித்துள்ளார். அண்மையில், பிகேஆர் கூலாய் கிளை ஏற்பாடு செய்திருந்த, சுதந்திரத் தினத் தேநீர் விருந்தில் கலந்துகொண்ட…
பெட்ரோல் விலை நான்கு சென்னும் டீசல் விலை ஒரு சென்னும்…
எரி பொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறது. இன்று நள்ளிரவிலிருந்து ரோன்95 மற்றும் ரோன்97 ஆகியவற்றின் விலை ஒரு லீட்டருக்கு 4 சென் உயர்வு கண்டு, புதிய விலை ஒரு லீட்டர் ரிம2.20 மற்றும் ரிம2.48 க்கு முறையே விற்கப்படும். டீசல் விலை ஒரு லீட்டருக்கு ஒரு சென்…


