உயர்ந்து வரும் எரிபொருள் விலையைச் சமாளிக்க ஏர்ஏசியா எக்ஸ் நிறுவனம் தனது கொள்ளளவைச் சரிசெய்தல், செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விமானக் கட்டணங்களை மாற்றியமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த விமான நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் ஆலோசகர் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். "கேபிடல் ஏ (Capital A)…
பிற்பகல் 2 மணிக்குள் சரணடைவீர்: தாஜுடின் ஆதரவாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கலகம் செய்த பாசிர் சாலாக் எம்பி தாஜுடின் அப்துல் ரஹ்மானின் 10 ஆதரவாளர்களும் இன்று பகல் 2 மணிக்குள் போலீசிடம் சரணடையுமாறு போலீஸ் எச்சரித்துள்ளது. தவறினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். “அவர்கள் யார்…
மரியா விடுதலைக்காக பேரணி நடத்துவோர் மீது போலீஸ் நடவடிக்கை: ஐஜிபி…
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்துவோர் போலீஸ் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராகுமாறு போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறியுள்ளார். டட்டாரான் மெர்டேகாவில் மெழுகுவத்தி ஏந்தி நடத்தப்படும் போராட்டங்கள் சட்டவிரோதமானவை என்றும் அவற்றுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் இரண்டு …
நீதிமன்றம்: தேச நிந்தனை வழக்குகளில் அதற்கான நோக்கமிருந்ததை அரசுத் தரப்பு…
1948 தேசநிந்தனைச் சட்டம் பகுதி 3(3) செல்லாது என்று அதிரடித் தீர்ப்பு ஒன்றை இன்று வழங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம், தேச நிந்தனை செய்யும் நோக்கம் இருந்தது நிரூபிக்கப்பட வேண்டும் என்று கூறியது. நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு நடப்பில் உள்ள எல்லா நிந்தனை வழக்குகள்மீதும் ஒரு தாக்கத்தை …
ஜாஹிட்: அம்னோ அரசியல் ஒத்துழைப்பு குறித்து பாஸ் கட்சியுடன் விவாதித்ததில்லை
அம்னோவும் பாஸும் அரசியலில் ஒத்துழைப்பது குறித்து ஒருபோதும் விவாதித்ததில்லை என்கிறார் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி. ‘உம்மா’ (முஸ்லிம்கள்) நலன் குறித்து மட்டுமே அவை விவாதித்துள்ளன. “முஸ்லிம்களின் நலன் பற்றி, இன்னும் தீர்க்கப்படாதிருக்கும் விவகாரங்களுக்குக் கூட்டாக தீர்வு காண்பது குறித்து பேசப்பட்டிருக்கிறது. அதை (அம்னோவுடன் பேச்சு நடத்த …
ஹாடி ஷரியா நீதிமன்ற மசோதாவை தாக்கல் செய்தார்; விளக்கம் அடுத்த…
பாஸ் தலைவர் அப்துல் ஹாடலவாங் அவரது ஷரியா நீதிமன்றத்தை வலுப்படுத்துவதற்கான திருத்தப்பட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், இன்றுடன் நாடாளுமன்ற கூட்டம் முடிவுறுதால் அவரது மசோதாவுக்கு அடுத்த மார்ச் நாடாளுமன்ற கூட்டத்தில் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரியதாயினும், இதில்…
மரியாவுக்கு சிஐஏ தொடர்பா? கருத்துரைக்க ஐஜிபி மறுப்பு
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு அமெரிக்க மத்திய உளவுத் துறை(சிஐஏ)யுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுவது குறித்துக் கருத்துரைக்க இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மறுத்தார். அத்தொடர்பு குறித்து போலீசுக்குத் தகவல் கிடைத்துள்ளதா என்று கேட்டதற்கு, “நான் அது குறித்துக் கருத்துரைக்கப் போவதில்லை. சொன்னது …
நாடாளுமன்றத்தில் அமளி: காலிட் சமட்டை ஒரு கும்பல் தாக்க முயன்றது
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு டஜன் ஆள்கள் ஷா ஆலம் எம்பி காலிட் சமட் காரில் வந்து இறங்கியதும் அவரைச் சூழ்ந்து கொண்டு அசிங்கமாக திட்டத் தொடங்கினார்கள். அவர்களில் சிலர் காலிட்டைப் பாதுகாத்து நின்ற பாதுகாவலர்களைத் தாண்டிச் செல்ல முனைந்ததால் சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் பாதுகாவலர்கள் சிலரும் …
தம் தொகுதியில் நாச வேலைகள் பெருகிவிட்டதாக சட்டமன்ற உறுப்பினர் முறையீடு
பினாங்கு கெபுன் பூங்கா தொகுதி் சட்டமன்ற உறுப்பினர் அவரது தொகுதியில் “தீ வைப்போர், நாச வேலை செய்வோர், அரசியல் எதிரிகள் பெருகிவிட்டனர்” என்கிறார். அத்தீய சக்திகள் 2013இலிருந்து அத்தொகுதியில் தாம் செய்து வரும் நற்பணிகளைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சியா கா பெங் (பிகேஆர்- கெபுன் பூங்கா)…
மரியாவைப் பாராட்டிய அன்வார் கைது செய்யப்படுவதினின்றும் யாருக்கும் பாதுகாப்பில்லை என்றார்
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவிப்போர் வரிசையில் தற்போது சிறையில் உள்ள பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிமும் சேர்ந்து கொண்டிருக்கிறார். மரியாதைக்குரிய ஒரு சிவில் அமைப்புத் தலைவரான மரியா போன்ற ஒருவரே பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்படும்போது அதே நிலை மற்ற …
மரியாவின் “ஆட்கொணர்” மனு செவ்வாய்க்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் ஆட்கொணர் மனுவை செவிமடுக்கும். நீதிபரிபாலன ஆணையர் நோர்டின் ஹசான் அவரது அறையில் இந்த முடிவைச் செய்தார். இதற்கு முன்னர் போலீஸ் அதிகாரி தாம் லாய் குவான் மரியாவின் மகன் அஸுமின் முகமட் யுனூஸ் தாக்கல்…
ஐஜிபி: போலீஸ் திடீர் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்…
சோஸ்மா சட்டத்தின் கீழ் பெர்சே தலைவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் நோக்கம் அல்லது சமீபத்தில் நடத்தப்பட்ட பேரணி காரணமல்ல என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கர் கூறினார். இவ்விவகாரம் சம்பந்தப்பட்ட "குழப்பம்" களையப்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திய அவர், கடந்த வாரம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள…
நாடாளுமன்றத்தில் ஊழல்: லிப் எங் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்த கையூட்டு கொடுக்க வேண்டியிருப்பதாகக் கூறி மக்களவையில் பரபரப்பை உண்டு பண்ணினார் லிம் லிப் எங் (டிஏபி- செகாம்புட்). “பொதுமக்களில் சிலர் இங்கு கார்களை நிறுத்த முனைகிறார்கள். முடிவதில்லை. ஏனென்றால் கார் நிறுத்த இடங்கள் இருப்பதில்லை. பாதுகாவலர்கள் கார் நிறுத்தும் இடங்களை அடைத்து வைத்து …
கிட் சியாங்- மகாதிர் கூடிக்குலாவுவது ‘பல்டி அடிப்பின்’ உச்சக்கட்டம்
டாக்டர் மகாதிர் முகம்மட் தம்மை இதுகாறும் குறைகூறி வந்துள்ள லிம் கிட் சியாங்குடன் அரசியல் கூட்டு வைத்துக் கொண்டிருப்பது அரசியல் ‘பல்டி- அடிப்பு’க்கு நல்ல எடுத்துக்காட்டு என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார். பாதுகாப்புக் குற்றச் சட்டம் பயன்படுத்தப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் லிம் …
மகாதிர் அன்வாருடன் நட்பு பாராட்டுவதை நினைத்து வெட்கப்படுகிறாராம் இப்ராகிம் அலி
பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் சிறைவாசத்தில் உள்ள அன்வார் இப்ராகிமுடன் மீண்டும் நட்பு கொண்டிருப்பதை எண்ணி வெட்கப்படுகிறாராம். அதனால்தான் இப்ராகிம் அலி, மகாதிரின் கட்சியான பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா( பெர்சத்து)வில் சேரவில்லையாம். முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் இப்ராகிம் அவரது …
மகளிர் அமைப்புகள் ‘மரியாவுக்காக நடைப்பயணம்’
இன்று காலை சுமார் 300 பேர், பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் விடுதலைக்காக பாடாங் மெர்மோக்கிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி நடைப்பயணம் சென்றனர். பல்வேறு மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த அவர்கள் கருஞ்சிவப்பு, பெர்சேயின் மஞ்சள் நிற ஆடை அணிந்து காலை மணி 10.45க்கு நடைப்பயணத்தைத் தொடங்கி 20 நிமிடங்களில் நாடாளுமன்றத்தைச் …
இப்ராகிம் அலியின் நண்பராக இருப்பதற்கு வெட்கப்படும் மகாதிர்
மலாய்க்காரர்களின் உரிமைக்காக போராடி வரும் பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி தமது நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் தாம் வெட்கப்படுவதாக முன்னாள் பிரதமர் மகாதிர் கூறினார். "நான் வெட்கப்படுகிறேன். அவர் எனது நண்பர், ஆனால் அவர் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவில் சேர மறுக்கிறார் ஏனென்றால் நாங்கள் டிஎபியுடன்…
ஹாடியின் மசோதா இவ்வாரம் தாக்கல் செய்யப்படும், ஸாகிட் கூறுகிறார்
ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் (சட்டம் 355) திருத்தம் செய்வதற்கான மசோதா நாளை அல்லது வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். இச்சட்ட திருத்த மசோதாவை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தாக்கல் செய்திருந்தார். இத்திருத்தங்கள்…
மரியாவை சோஸ்மாவின் கீழ் கைது செய்ததின் மூலம் அரசாங்கம் அளித்திருந்த…
அரசாங்கம் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012ஐ (சோஸ்மா) தவறாகப் பயன்படுத்தாது என்று வாக்குறுதி அளித்திருந்தது. பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை அச்சட்டத்தின் கீழ் கைது செய்ததின் மூலம் அரசாங்கம் அந்த வாக்குறுதியை மீறிவிட்டது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறினார். "அந்த எழுத்து…
மரியாவை ஒருநீதிபதியின் முன்கொண்டுவரக் கோரும் ஆட்கொணர் மனு தாக்கல் செய்யப்பட்டது
சோஸ்மா சட்டத்தின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தனி அறைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெர்சே தலைவர் மரியா சின் தம்மை நீதிபதியின்முன் நிறுத்தக் கோரும் ஆட்கொணர் (Habeas-corpus) மனுவை இன்று தாக்கல் செய்தார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவரை ஒரு நீதிபதி அல்லது நீதிமன்றத்தின்முன் கொணர்ந்து அவர் உண்மையிலேயே சிறையிலடைக்கப்பட…
4 நாள் குளிக்காமலிருந்த ஜமால் ‘பெர்சே 7’ தொடங்குகிறார்
சிவப்புச் சட்டைகள் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அந்த நான்கு நாள்களும் அவர் குளிக்கவில்லை. இன்று அம்பாங் போலீஸ் தலைமையகத்தில் விடுவிக்கப்பட்டதும் செய்தியாளர்களைச் சந்தித்ததும் ஜமால் முதலில் சொன்னது இதுதான்: “நான்கு நாள்களாக நான் குளிக்கவில்லை”. நான்கு நாள் குளிக்காமல் தடுப்புக் காவலில் …
ஜமாலும் சிவப்புச் சட்டையினரும் விடுவிக்கப்பட்டனர்
தடுத்து வைக்கப்பட்டிருந்த பெர்சே எதிர்ப்பாளரும் சுங்கை புசார் அம்னோ தலைவருமான ஜமால் முகம்மட் யூனுஸ் விடுவிக்கப்பட்டார். பெர்சே பேரணியை எதிர்க்கும் சிவப்புச் சட்டை இயக்கத்தின் தலைவரான ஜமால் கடந்த சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அவரையும் அவருடன் கைதான மேலும் மேன்று சிவப்புச் சட்டையினரையும் நான்கு நாள் …
மரியா தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக பினாங்கு சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம்
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பாதுகாப்புக் குற்ற (சிறப்பு நடவடிக்கை)ச் சட்டத்தையும் அதன்கீழ் பெர்சே தலைவர் மரியா சின் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றை பினாங்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தாயாரான மரியா ஒரு பயங்கரவாதியோ அரசியல்வாதியோ அல்ல என்று லிம் குறிப்பிட்டார். …
பாஸ் எம்பி ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார்
பாஸ் பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார், சனிக்கிழமை பெர்சே 5 பேரணியில் கலந்துகொண்டதற்காகக் கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளார். பெர்சே 5 பேரணியில் கலந்துகொண்ட கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் …


