கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
பிரதமர்: ‘பிணையாளிகளை’ விடுவிக்க வேண்டியுள்ளது, அதனால் மலேசியா உறவுகளைத் துண்டிக்காது
வட கொரியாவிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்ட மலேசியர்களை விடுவிக்க வேண்டியிருப்பதால் மலேசியா அந்நாட்டுடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “நாம் அவர்களுடன் நட்புகொண்டுள்ள ஒரு நாடு.......அந்த உறவை வைத்திருக்க வேண்டும், அதுதான் பேச்சு நடத்துவதற்கு வகை செய்யும்”, என நஜிப் நாடாளுமன்றத்தில்…
சிறு வணிகர்கள் பிரிம் உதவி பெற வங்கிக் கணக்கைக் காட்ட…
மலேசிய நிறுவன ஆணைய(எஸ்எஸ்எம்)த்தில் பதிவுபெற்று சிறு வணிகத்தில் ஈடுபடுவோர் பந்துவான் ரக்யாட் மலேசியா (பிரிம்) உதவித் தொகைக்குச் செய்து கொள்ளும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகக் கூறப்படுவதை நிதி அமைச்சர் II ஜோஹாரி அப்துல் கனி மறுத்தார். “சிலர் அவர்களின் பிரிம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகக் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவை நிராகரிக்கப்படவில்லை, அவர்களிடமிருந்து…
வட கொரிய தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறத் தடை
வட கொரிய தூதரக அதிகாரிகளும் பணியாளர்களும் மலேசியாவிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார். பியோங்யாங் வட கொரியாவில் உள்ள மலேசியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறத் தற்காலிகத் தடை விதித்ததை அடுத்து மலேசியாவும் பதிலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று என்றவர் விளக்கினார். வட …
மலேசியாவில் சீனாவின் திட்டங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை இல்லையா? மறுக்கிறார்…
மலேசியாவில் சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் உள்ளூர் மக்கள் வேலைக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் என்று கூறப்படுவதை அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சர் சுவா டீ யோங் மறுத்தார். மலேசிய- சீன குவாந்தான் தொழில் பூங்காவில் அலையன்ஸ் ஸ்டீல் (ம) சென்.பெர்ஹாட் தொடங்கியுள்ள எஃகு ஆலையை அவர் சுட்டிக்காட்டினார்.…
பியோங்யாங்கில் மலேசிய தூதரகப் பணியாளர்கள் ஆவணங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர்
நேற்று தொடங்கி, பியோங்யாங்கில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணியாளர்கள் ஆவணங்களை எரிப்பதையும் அவர்களின் பயணப் பெட்டிகளை வாகனங்களில் ஏற்றுவதையும் காண முடிந்ததாக சைனா செண்ட்ரல் தொலைக்காட்சி (சிசிடிவி) அறிவித்தது. இன்று காலை தூதரக வளாகத்தில் பறந்து கொண்டிருந்த மலேசிய, ஆசியான் கொடிகள் இறக்கப்பட்டதாகவும் சிசிடிவி செய்தி கூறிற்று. மலேசியா …
ஜி25: பிளவை ஏற்படுத்தும் பாஸ் மசோதா நமக்கு வேண்டாம்
நாடாளுமன்றத்தில் இப்போது விவாதிக்கப்படவிருக்கும் பாஸ் கட்சியின் சட்டம் 355 க்கு திருத்தங்கள் செய்வதற்கான தனிநபர் மசோதாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது அல்லது அந்த விவாதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு ஜி25 அமைப்பின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையீடு செய்துள்ளனர். மேலும், அதற்கான…
ஸாகிர் நாய்க் நாடு கடத்தப்பட வேண்டும், டெக் கீ கூறுகிறார்
சர்ச்சைக்குரிய சமயச் சொற்பொழிவாளர் ஸாகிர் நாய்க் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டும், ஏனென்றால் பேச்சு சுதந்திரத்திற்கும் வரம்பு உண்டு என்று கொள்கை முன்னெடுப்புகள் மையத்தின் (CPC) இயக்குனர் லிம் டெல் கீ கூறுகிறார். "அனைத்து சமுதாயங்களிலும் பேச்சு சுதந்திரத்திற்கு வரம்புகள் உண்டு என்பதை ஒவ்வொருவரும் அறிவர்", என்று…
சுப்ரா: ஜொங்-நாம் மாரடைப்பால் இறக்கவில்லை
வட கொரியரான கிம் ஜொங்-நாம் இறப்புக்குக் காரணம் மாரடைப்பு என்று பிணப் பரிசோதனை அறிக்கை குறிப்பிடவில்லை என்பதைச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இன்று உறுதிப்படுத்தினார். கிம் மாரடைப்பால் இறந்தார் என்று வட கொரியா கூறியிருப்பதை மலேசிய தடயவியல் குழு ஏற்கனவே நிராகரித்திருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். “வட கொரியா …
பெர்சே: இசி-இன் ‘இலவச விமானப் பயண’ இயக்கம் தேவையற்ற ஒன்று
தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் இயக்கமான பெர்சே, இலவச விமானப் பயணச் சீட்டுக் குலுக்கல் நடத்தி வாக்காளர் பதிவை ஊக்குவிக்கும் தேர்தல் ஆணையத்தின் முயற்சியைச் சாடியுள்ளது. வயதுக்கு வந்தவர்களை இயல்பாகவே வாக்காளர்களாக்கி விட்டால் போதுமே அதை விடுத்து அவர்களைக் கவர்ந்திழுக்க இப்படிப்பட்ட முயற்சிகள் அவசியம்தானா என்று அது கேள்வி எழுப்பியது.…
நீதிமன்றத் தீர்ப்புகளில் அரசு தலையீடு இல்லவே இல்லை- தலைமை நீதிபதி
எந்த ஒரு வழக்கிலும் அரசாங்கம் தலையிடுவதில்லை என்கிறார் மலேசியாவின் தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியா. “தலையீடு இருந்ததே இல்லை. வழக்குகளை நாங்கள் சுதந்திரமாகத்தான் விசாரிக்கிறோம்”, என அரிப்பின் இன்று பெர்னாமா நேர்காணல் ஒன்றில் கூறினார். நீதிமன்றங்கள் கூட்டரசு, மாநில அரசுகளுக்கு எதிராகக்கூட தீர்ப்பளித்ததுண்டு. “அவர்கள் தீர்ப்பை ஏற்கத்தான் வேண்டும்”, …
ஊழல், தகவல் கசிவு குறித்து பேரரசர் அதிருப்தி
அரசுப் பணியாளர்கள் ஊழல் செய்வது அரசாங்கத் தகவல்களைக் கசிய விடுவது போன்ற விவகாரங்களால் பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகம்மட் அதிருப்தி அடைந்துள்ளார். “முறைகேடுகளும் விரயங்களும் ஊழல்களும் தொடர்ந்து நிலவுவதும் அரசாங்கத்தில் இரகசியமாகக் காக்கப்பட வேண்டிய தகவல்கள் கசிய விடப்படுவதும் அதிருப்தி அளிக்கின்றன”, என்றாரவர். மாமன்னர் இன்று காலை இவ்வாண்டுக்கான …
அடுத்த பொதுத் தேர்தலில் மகாதிர் போட்டி?
டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் பதவியிலிருந்து விலகி இரண்டு பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது, ஆனாலும் முன்னணி அரசியலிலிருந்து அவர் இன்னும் ஓய்வு பெறவில்லை. அவருக்குப் பின் பிரதமராக அப்துல்லா அஹ்மட் படாவியை நியமித்தவரும் அவரே. படாவி பதவியிலிருந்து வெளியேறக் காரணமாக இருந்தவரும் அவரே. இப்போது பிரதமர் நஜிப் …
ருக்குநிகாரா பற்றிய முன்மொழிதல் சட்ட நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டது
சட்டம் அறிந்த 31 வழக்குரைஞர்களும் கல்விமான்களும் ருக்குநிகாரா பெடரல் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை நிராகரித்தனர். மலாய்க்காரர்கள் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா ஏற்பாடு செய்திருந்த ஒரு வட்டமேசை விவாதத்தில் பங்கேற்றிருந்த அவர்கள் ருக்குநெகாரா மற்றும் பெடரல் அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றின் உருவாக்கம்…
“துணைப் பிரதமர் கிட் சியாங்” பெரும் அதிகாரமுள்ளவராக இருப்பார், நஜிப்…
புத்ராஜெயாவை பின் இழக்க நேர்ந்தால், டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் துணைப் பிரதமராவது நிச்சயம் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். யார் பிரதமராக வேண்டும் என்பதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றபோதிலும், துணைப் பிரதமர் யார் என்பதில் லிம் மற்றும் மகாதிர் ஆகிய இருவருக்கும்…
தோக் பா: பாஸ் கிளந்தான் அம்னோவின் எதிரி
சமய விவகாரங்களில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் ஒத்துழைக்கலாம். ஆனால், தேர்தல் விவகாரத்தைப் பொறுத்தவரையில் கிளந்தானில் அவர்கள் எதிராளிகள் என்று மாநில அம்னோ தலைவர் முஸ்தாபா முகமட் கூறுகிறார். கிளந்தான் பாஸ் கட்சியால் 1990 லிருந்து தொடர்ந்து ஆளப்பட்டு வருகிறது. அதை பாஸிடமிருந்து கைப்பற்றுவதற்கு மிகைப்படியான நடவடிக்கைகள்…
வட கொரியா தூதர் வெளியேற்றப்பட்டார்
வட கொரியாவின் தூதர் காங் சோலை மலேசியா வெளியேற்றியது. மலேசியாவுக்கு எதிராக அவர் வெளியிட்டிருந்த அறிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க விஸ்மா புத்ராவுக்கு இன்று வரும்படி அவர் அழைக்கப்பட்டிருந்தார். மாலை மணி 6 ஆகியும் அவர் வரவில்லை. இதனைத் தொடர்ந்து விஸ்மா புத்ரா வட கொரியா தூதரகத்திற்கு ஒரு…
ஐநா பிரகடனத்தை மதித்து அன்வாரை விடுவிப்பீர்: வழக்குரைஞர்கள் மனு
குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டின்கீழ் இரண்டாண்டுகளுக்குமேல் சிறையில் இருந்துள்ள எதிரணி முன்னாள் தலைவர் அன்வார் இப்ராகிமை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு அவரின் வழக்குரைஞர்கள் அரசாங்கத்திடம் மனுச் செய்துள்ளனர். “அன்வார் இப்ராகிமை ஏன் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மனுவில் விவரித்துள்ளோம். “தன்மூப்பாக தடுத்து வைப்பது மீதான ஐநா பணிக்குழு அவர் …
ஷாஃபி: அப்போதே சிஎம் பதவி கொடுக்க முன்வந்தார்கள், நான் என்றும்…
சாபா முதலமைச்சர் ஆகும் ஆசை தமக்கு என்றும் இருந்ததில்லை என்று கூறும் முன்னாள் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ஷாஃபி அப்டால், முன்பு ஒரு முறை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமக்கு சிஎம் பதவி வழங்க முன்வந்தபோது அதைத் தாம் மறுதலித்து விட்டதாகக் கூறினார். “என்னிடம் …
அஸ்மின்: முதல் தடவை வீடு வாங்குவோருக்கு வங்கிகள் உதவ வேண்டும்
வீடு வாங்க விரும்புவோரின் நிதிப் பிரச்னைக்குத் தீர்வுகாண உள்ளூர் வங்கிகள் முன்வரவேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி வலியுறுத்தியுள்ளார். 1997-இல் ஆசிய நிதி நெருக்கடியின்போது கூட்டரசு அரசாங்கமும் மக்களும் இணைந்து வங்கிகளின் செலுத்தப்படாத கடன்களுக்குப் பொறுப்பேற்க பெங்குருசான் தானாஹர்தா நேசனல் பெர்ஹாட்டைத் தோற்றுவித்தனர் என்றாரவர்.…
மலேசியாவில் சுயேட்சையான நீதித்துறை இல்லை என்கிறார் நவநீதம் பிள்ளை
தென்ஆப்ரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் ஒரு தெளிவான வேறுபாடு இருக்கிறது. மலேசியாவில் சுயேட்சையான நீதித்துறை இல்லை என்பதுதான் அந்த வேறுபாடு என்று நவி என்று அழைக்கப்படும் நவநீதம் பிள்ளை நேற்றிரவு பினாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் கூறினார். தென்ஆப்ரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான நவி ஐநாவின் மனித உரிமைகள்…
கோபிந்த் சிங் முஸ்லிமாக மாறுவார்!
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோவிடம் 500 அரசார்பற்ற அமைப்புகளைப் பிரதிநிதிப்பாக கூறிக்கொள்ளும் ஒரு கூட்டத்தினர் அவரின் உள்ளத்தில் இஸ்லாத்திற்கு ஆதரவான மாற்றத்தை ஏற்படுத்தி ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 க்கான திருத்தங்களுக்கு ஆதரவளிக்கக் கோரும் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். இன்று பூச்சோங்கில் வெள்ளிக்கிழமை…
முன்னாள் அமைச்சர் ஒருவர் சாபா சிஎம் ஆவதற்கு ஆசைப்பட்டாராம்: நஜிப்…
எதிர்கட்சித் தலைவராக உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர் தம்மை சாபா முதலமைச்சராக்கும்படி கேட்டுக்கொண்டதாக நஜிப் அப்துல் ரசாக் கூறினார். சிஎம் ஆவது அந்த முன்னாள் அமைச்சரின் தணியாத தாகமாக இருந்து வந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். “என்னுடைய கருத்து சுய விருப்பம் மக்களுக்கான போராட்டத்தை விஞ்சியதாக அமைந்து விடக்கூடாது”, …
தடுப்புக்காவலில் இருந்த வட கொரியர் விடுதலை
கிம் ஜொங்-நாம் கொலை தொடர்பில் விசாரணைக்கு உதவியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த வடகொரியர் இன்று காலை விடுவிக்கப்பட்டார். ரி-ஜொங்-சொல், 47, அவரது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிகிறது. ரி-மீது குற்றஞ்சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டு அவரது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என சட்டத்துறைத் தலைவர் முகம்மட் …


