கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
அம்னோவுடன் அரசியல் ஒத்துழைப்பு இல்லை, பாஸ் கூறுகிறது
அடுத்தப் பொதுத்தேர்தலில் பாஸ் கட்சியுடன் கூட்டாக வேலை செய்யும் சாத்தியத்தை பிரதமர் நஜிப் நிராகரிக்கவில்லை என்ற போதிலும், அம்னோவுடன் எவ்வித அரசியல் ஒத்துழைப்பும் இல்லை என்று பாஸ் பிடிவாதம் செய்கிறது. சமயம், மக்கள் மற்றும் நாடு ஆகியவற்றுக்காக பாஸ் கட்சி அம்னோவுடன் ஒத்துழைக்கும். ஆனால் அது அரசாங்கங்களுக்கு…
டிஎபி: சட்டம் 355 பற்றிய பெர்சத்துவின் நிலைப்பாட்டை முகைதின் சொல்ல…
ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 க்கான சட்டத் திருத்தங்களை பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் ஆதரிக்கிறார் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறிக்கொண்டுள்ளார். அது குறித்து கருத்து தெரிவிக்காமல் டிஎபி தலைவர்களில் பலர் மௌனம்…
ஜொங்-நாம் மனைவியும் பிள்ளைகளும் அவரின் உடலை அடையாளம் காண்பித்தார்களாம்: சுப்ரா…
சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், கொல்லப்பட்ட கிம் ஜொங்-நாமின் உடல் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறினார். “அவரின் உடலை அவரின் மனைவியும் பிள்ளைகளும் அடையாளம் காண்பித்தார்கள் என எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரம் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்”, என்றவர் இன்று புத்ரா ஜெயாவில் …
315 வட கொரியர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள்: துணைப் பிரதமர் தகவல்
துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, 2014- இலிருந்து 315 வட கொரியர்கள் மலேசியாவில் வசித்து வருவதாகக் கூறினார். அவர்களில் ஒரு பகுதியினர் மலேசிய சுற்றுலா அமைச்சின் மலேசியா என்னுடைய இரண்டாவது இல்லம்(எம்எம்2எச்) திட்டத்தின்கீழ் இங்கு வசித்து வருகிறார்கள். மற்றவர்கள் மாணவர்களும் மலேசியாவில் பணி புரிவோரும் ஆவர் என …
கைது நடவடிக்கையால் ‘உண்மையான கடத்தல்காரர்களை’ப் பிடிக்கும் முயற்சி திசை திரும்பக்கூடாதே…
பாதிரியார் ரேய்மண்ட் கோவின் குடும்பத்தார், கடத்தல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதை அடுத்து “உண்மையான கடத்தல்காரர்களை”க் கண்டுபிடிக்கும் முயற்சியில் கவனம் சிதறி விடக்கூடாது, தகவலறிந்தவர்கள் தகவலைப் பகிர்ந்து கொள்ளாமலும் இருந்திடக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ரேய்ம்ண்ட் கோ கடத்தப்பட்டு ஒரு மாதம் ஆகும் நிலையில் இன்று ஓர் …
வட கொரிய விவகாரத்தில் ஏஜி வாய் திறப்பதில்லை; பிரதமரின் உத்தரவாம்
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, வட கொரிய விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிப்பதே இல்லை. கேட்டால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உத்தரவு என்கிறார். முதன்முதலில் அவரிடம் கருத்துக் கேட்டதற்குப் “பலரும் பேசத் தொடங்கினால் பேச்சுகளுக்குப் பாதகமாய் அமையக் கூடும்”, என்று கூறினார். மேலும் துருவித் துருவிக் …
கருணைமிக்க செயல் கைருலைப் பிரபலமாக்கியுள்ளது
முகம்மட் கைருலுக்கு வயது 20. ஒரு வழக்குரைஞர் அலுவலகத்தில் பொருள்களை உரிய இடத்துக்குக் கொண்டு சேர்க்கும் டிஸ்பேஜ் வேலை செய்து வருகிறார். சாதாரண வேலை செய்யும் ஒரு சமானியர். ஆனால், அவரது கருணை உள்ளம் இன்று அவரைச் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக்கியுள்ளது. அப்படி என்ன செய்து விட்டார் கைருல்? …
துவான் இப்ராகிம்: சட்டம் 355 திருத்தங்கள், பெர்சத்துவுக்குச் சம்மதமே
1965 ஷியாரியா நீதிமன்ற (குற்றவியல் நீதி) ச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) ஏற்பதாக பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார். இரு கட்சிகளும் அண்மையில் அவ்விவகாரம் குறித்து விவாதித்ததாகவும் பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் அதற்கு இணக்கம் தெரிவித்தார் …
1எம்டிபிமீதான நஸ்ரி-மகாதிர் விவாதத்துக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை
சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிசுக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குமிடையில் திட்டமிடப்பட்டுள்ள விவாதத்துக்கும் அரசாங்கத்துக்கும் “சம்பந்தமில்லை” என இரண்டாவது நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி இன்று கூறினார். நிதி அமைச்சின்கீழ் உள்ள 1மலேசியா மேம்பாட்டு நிறுவன விவகாரங்கள் குறித்து அவ்விருவரும் விவாதமிடுவதை அவர் …
கிளந்தான் நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம், பிகேஆர் கூறுகிறது
கிளந்தானில் பிகேஆர் போட்டியிட்ட நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கிளந்தான் பிகேஆர் கூறுகிறது. பிகேஆர் போட்டியிட்ட அத்தொகுதிகளை அதனிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பாஸ் கேட்டுக் கொண்டுயுள்ளது. அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில்…
பிரதமர்: வட கொரிய நெருக்கடியை எதிர்நோக்குவதில் மலேசியர்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும்
எதிரணி உள்பட எல்லாத் தரப்பினரும் வட கொரிய நெருக்கடிக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒன்றுபட்ட ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டிருக்கிறார். வெளி அச்சுருத்தலை எதிர்நோக்கும்போது மக்கள் வெளிப்படுத்தும் ஒற்றுமையை வைத்துத்தான் ஒரு நாட்டின் வலிமை கணிக்கப்படுகிறது. “பிரச்னைகளை அல்லது மருட்டலை …
பாதிரியாரை விரைவில் கண்டுபிடிப்பீர்: நஜிப்புக்கு உலக தேவாலய மன்றம் கோரிக்கை
ஜினிவாவில் அமைந்துள்ள உலக தேவாலய மன்றம், கடத்தப்பட்ட பாதிரியார் ரேய்மண்ட் கோ-வைக் கண்டுபிடிக்க விரைந்து செயல்பட வேண்டுமாய் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. புதன்கிழமை அம்மன்றத்தின் பொதுச் செயலர் ஒலாவ் பிக்ஸே ட்வைட் எழுதிய திறந்த மடலில் அக்கடத்தல் சம்பவம் மிகுந்த “கவலையைக் கொடுத்திருப்பதாக”வும் அது சிறுபான்மை …
எம்ஏசிசி விசாரணையில் ஜோகூர் அரண்மனை குறுக்கிடாது
ஜோகூர் மாநிலத்தில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மேற்கொண்டுள்ள எந்தவொரு விசாரணையிலும் அரண்மனை தலையீடு இருக்காது என்கிறார் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார். “இப்படிப்பட்ட விவகாரங்களில் அரண்மனை குறுக்கிடுவதுமில்லை, யாரையும் பாதுகாப்பதுமில்லை”, என சுல்தான் இப்ராகிம் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. ஜோகூரில் எம்ஏசிசி செய்துவரும் விசாரணைகள் …
அமனா: எக்ஸ்கோவை பிடித்தது சரி, ‘காட்பாதரை’ யும் விட்டுவிடக் கூடாது
ஊழல் புரிந்ததற்காக ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் லத்திப் பாண்டியைக் கைது செய்த அதிகாரிகளைப் பாராட்டிய பார்டி அமனா நெகரா(அமனா), அடுத்து அவரின் ‘காட்பாதரையும்’ விட்டுவிடக்கூடாது, அவருக்கும் அவ்விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கூறியது. குறிப்பாக, ஜோகூர் மந்திரி புசார் காலிட் நோர்டின் ஆட்சியில்தான் அது நடந்துள்ளது என்பதால் …
தியன் சுவா சட்ட நடவடிக்கைகள் முடியும் வரையில் எம்பியாக இருப்பார்,…
பத்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தியன் சுவா அவர் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பு சம்பந்தமான வழக்கு முடிவடையும் வரையில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பார். ஒரு போலீஸ் அதிகாரியை அவமதித்ததற்காக தியன் சுவாவுக்கு பெட்டாலிங் ஜெயா செசன்ஸ் நீதிமன்றம் இன்று ரிம3,000 அபராதம் விதித்தது. இது…
தமிழ் உணர்வாளர் பொன்முகம் காலமானார்
மஇகாவில் தொடங்கி ஜனநாயகச் செயல் கட்சி வரையில் சென்று பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் தொகுதியில் போட்டியிட்டவரும், தமிழ்ப்பற்று மிகுந்தவருமான வழக்குரைஞர் பொன்முகம் நேற்று தனது 78 ஆவது வயதில் காலமானார். நேற்று காலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு…
ஐநா பணியாளர்களான மலேசியர் இருவர் வட கொரியாவிலிருந்து வெளியேறினர்
வட கொரியாவின் பயணத் தடையைத் தொடர்ந்து அங்கு சிக்கிக்கொண்ட 11 மலேசியர்களில் ஐநா பணியாளர்களான இருவர், அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. அவ்விருவரும் ஐநாவின் உலக உணவுத் திட்டப் பணியாளர்கள். செவ்வாய்க்கிழமை வட கொரியா மலேசியர்களுக்குத் தடை விதிப்பை அறிவித்ததை அடுத்து பிரதமர் நஜிப் அப்துல்…
குவான் எங்: இப்போது ஒன்றுபட்டிருப்பது முக்கியம், அரசாங்கம் செய்தது சரியா,…
வட கொரிய “பிணை” நெருக்கடியைக் கையாள்வதில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார். பியோங்யாங்கில் பாரிதவிக்கும் 11 மலேசியர்களும் “விரைவில் நாடு திரும்புவார்கள்” என்று எதிர்பார்ப்பதாக லிம் குறிப்பிட்டார். “இப்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். அவர்கள் திரும்பிய…
வீடமைப்பு ஊழல்: ஜோகூர் எக்ஸ்கோ கைது
வீடமைப்பு, நில ஊழல் தொடர்பில் ஜோகூர் ஆட்சிமன்ற உறுப்பினர் அப்துல் லத்திப் பாண்டி இன்று கைது செய்யப்பட்டார். ஜோகூர் பாருவில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அலுவலகத்துக்கு விசாரணைக்காக சென்றபோது அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்டார் ஆன்லைன் கூறிற்று. அவர் கைதானதை இன்று பெட்டாலிங் ஜெயாவில் த ஸ்டார்…
ரிம12,000 வருமானம் பெறுவோர்கூட பிரிம் தொகைக்கு விண்ணப்பம் செய்தனர்
இவ்வாண்டு பந்துவான் ரக்யாட் 1மலேசியா(பிரிம்) உதவிக்கு விண்ணப்பம் செய்திருந்த 600,000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏனென்றால் அவர்கள் வருமானம் ரிம4,000-த்துக்கும் அதிகமாகும். மாதம் ரிம8,000-இலிருந்து ரிம12,000 வரை வருமானம் பெறுவோர்கூட உதவி கேட்டு மனுச் செய்திருந்தார்கள் என நிதி அமைச்சர் II ஜொஹாரி அப்துல் கனி இன்று தெரிவித்தார்.…
புத்ரா ஜெயா: வட கொரியர் கொலை மீதான விசாரணை முடிய…
வட கொரிய அதிபர் கிம் ஜொங் நாம் கொலை விவகாரம் சட்டென்று முடிவுக்கு வரப் போவதில்லை அதற்கு “நாம் எதிர்பார்ப்பதைவிட நீண்ட காலமாகும்” என மலேசியா எச்சரித்துள்ளாது. விசாரணை முடிந்த பிறகுதான் அனைத்துலக நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முடியும் என்று பியோங்யாங்கின் நட்புநாடான சீனா கூறியிருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.…
வட கொரியாவுடனான ராஜதந்திர நெருக்கடியைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடாதீர்,…
அரசியல் இலாபத்திற்காக மலேசியா மற்றும் வட கொரியாவுக்கு இடையிலான சச்சரவைப் பயன்படுத்தக்கூடாது என்று பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் கூறுகிறார். தங்களுடைய சொந்த அரசியல் திட்டங்களுக்காக இந்த ராஜதந்திர சச்சரவை அனைத்து அரசியல் கட்சிகளும் பயன்படுத்தமாட்டார்கள் என்று தாம் நம்புவதாக முகைதின் இன்று பெட்டாலிங் ஜெயாவில் ஒரு…
பிரதமர்: வட கொரியாவில் மலேசியர்கள் காவலில் வைக்கப்படவில்லை
வட கொரியாவில் உள்ள 11 மலேசியர்களும் தடுத்து வைக்கப்படவில்லை என்பதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தியுள்ளார். “அவர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ள எந்தத் தடையுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தடுத்து வைக்கப்படவில்லை. “அவர்கள் (வீட்டைவிட்டு) வெளியில் சென்று வழக்கமான காரியங்களில் ஈடுபட முடிகிறது. “ஆக, அவர்களின்…


