போஸ் மலேசியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் 15% முதல் 40% வரை உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத்…
மக்கள் சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்
காலஞ்சென்ற பேராக் சுல்தான் சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு இறுதி மரியாதை தெரிவிப்பதற்கு ஆட்சியாளர்கள், நாட்டின் பெருமக்கள், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கோலா கங்சார் இஸ்தானா இஸ்கண்ட்ரியா வளாகத்தில் திரண்டுள்ளனர். காலை மணி 8.30க்கே மக்கள் வரத் தொடங்கி விட்டனர். அரை மணி நேரம் கழித்து …
என்ஜிஓ: உண்மைக்கு நஜிப் அரசாங்கம் ஏகபோக உரிமையாளர் அல்ல
மாறுபடும் கருத்துக்களை முடக்கிப்போடும் முயற்சிகளை பிரதமர் நஜிப்பின் அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நியூ யோர்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் அதிகாரிகளும் மக்களின் குறைகூறல்களுக்கும் அவற்றை ஊடகங்கள் வெளியிடுவதற்கும் இடமளிக்க வேண்டும் என மனித …
மலேசிய உள்நாட்டு விவகாரங்களில் சிறீலங்கா தூதரகம் தலையீடு!, குலா காட்டம்!
- மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர். மே 28, 2014. கடந்த 15 ஆம் தேதி 3 தமிழ் ஈழ அகதிகள் மலேசிய உள்துறை அமைச்சால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு அந்த மூவரும் பயங்கரவாதிகள் எனக் கூறப்பட்டு சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.…
சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்
பேராக் சுல்தான் ராஜா அஸ்லான் முஹிப்பிடின் ஷா இன்று காலமானார். அவருக்கு வயது 86. இதனை அறிவித்த மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர், சுல்தான் பிற்பகல் மணி 1.30க்கு கோலாலும்பூர் தேசிய இருதயக் கழகத்தில் உயிர்நீத்தார் என்று கூறினார். அவரது உடல், கோலா கங்சார் கொண்டு செல்லப்பட்டு …
கேட்பரிக்கு மட்டுமல்லாமல் ஊழலுக்கு எதிராகவும் எதிர்ப்பைக் காட்டலாமே
முன்னாள் பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி சைனுல் அபிடின், சாக்லெட்டுகளில் பன்றி டிஎன்ஏ கலந்திருப்பதாகக் கூறி அளவுமீறி ஆத்திரப்படும் முஸ்லிம்கள் பெரும் பாவங்களாகக் கருதப்படும் ஊழல், சூதாட்டம், வட்டி முதலிய விவகாரங்கள் பற்றி குறை சொல்லாதது ஏன் என்று கண்டித்திருக்கிறார். “கேட்பரிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது பாராட்டத்தக்கது. அது பயனீட்டாளர்களின் …
முக்ரிஸ்: டியானாவின் பல முகங்கள் குழப்புகின்றன
கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், தெலோக் இந்தான் டிஏபி வேட்பாளர் டியானா சோபியா முகம்மட் டாவுட்டின் உருவப்படங்களைக் கொண்ட பல சுவரொட்டிகளால் குழப்பமடைந்திருக்கிறார். “பல படங்களைப் பார்க்கிறேன்....... ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. “சிலவற்றில் ‘துடோங்’ அணிந்திருக்கிறார், சிலவற்றில் நிறுவன அதிகாரிபோல் காட்சியளிக்கிறார், சிலவற்றில் ‘பாஜு கூரோங்’ அணிந்திருக்கிறார்.…
தெலோக் இந்தான் தலைவிதி வெளியூர் வாக்காளர்களின் கைகளில்
தெலோக் இந்தான் இடைத் தேர்தல் முடிவு அத்தொகுதிக்கு அப்பால் வசிக்கும் வாக்காளர்களால் தீர்மானிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. வெளியூர்களில் உள்ள வாக்காளர்கள் பெருமளவில் திரும்பி வந்தால் அது டிஏபி-இன் வெற்றிக்கு உதவும். குறைந்த எண்ணிக்கையினரே திரும்பி வந்தால் அது பிஎன்னுக்குச் சாதகமாக அமையும். குத்துமதிப்பாக 30 விழுக்காட்டு வாக்காளர்கள் தொகுதிக்கு …
ஆத்திரப்படாமல் அமைதியாக இருக்குமாறு என்ஜிஓ-களுக்கு அபிம் அறிவுறுத்தல்
கேட்பரி-எதிர்ப்பு என்ஜிஓ-கள் அந்த சாக்லெட் தொழிற்சாலையைத் தீவைத்துக் கொளுத்த வேண்டும் என்றெல்லாம் ஆவேசப்படாமல் அமைதிகாக்க வேண்டும் என மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கம்(அபிம்) வலியுறுத்தியுள்ளது. அந்த நிறுவனம், அதன் சாக்லெட் பொருள்கள் பலவற்றில் பன்றி சம்பந்தப்பட்ட டிஎன்ஏ கலந்திருப்பது சுகாதார அமைச்சின் சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விசாரணை செய்யப்பட்டு …
சொத்து விவரம் அறிவித்த ஒரே எம்பி
நேற்று, தம் சொத்து விவரத்தை அறிவித்த பிஎஸ்எம்-இன் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ் சொத்து விவரத்தை அறிவித்த ஒரே எம்பியாகவும் திகழ்கிறார். சுங்கை சிப்புட் எம்பி-ஆக இரண்டாம் தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மருத்துவரின் சொத்து மதிப்பு ரிம265,300. அவரது சொத்து விவரம் வருமாறு: ஈப்போவில் ஒரு வீடு- ரிம140,000 1988…
தெலோக் இந்தானில் இந்தியர்கள் வெற்றியாளரை நிர்ணயிப்பார்கள்
கடும் போட்டி நிலவும் தெலுக் இந்தான் இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்களே வெற்றியாளரைத் தீர்மானிப்பவர்களாக திகழக் கூடும். அங்கு சீன வாக்காளர்களில் 42 விழுக்காட்டினர் டிஏபி-யை ஆதரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலாய் வாக்காளர்களில் 38 விழுக்காட்டினர் பிஎன்னை ஆதரிக்கலாம். இந்நிலையில் இந்தியர்களின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கும். “சீனர்களின் ஆதரவைப் …
தீபாவின் முன்னாள் கணவரின் மனு நிராகரிக்கப்பட்டது
பிள்ளைகளின் பராமரிக்கும் உரிமையை தம் முன்னாள் மனைவி தீபாவுக்குக் கொடுக்கும் தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி என்.வீரன் @ இஸ்வான் அப்துல்லா செய்துகொண்ட மனுவை முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் பிள்ளைகள் இனி தாயாரின் பராமரிப்பில்தான் இருப்பார்கள். கடந்த மாதம் சிரம்பான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்திவைக்க …
‘நன்றி கெட்டவர்கள்’ என்று மீண்டும் சொல்லி விடாதீர்கள்: ஜாஹிட்டுக்கு மஇகா…
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “நன்றி கெட்டவர்கள்”என்று தெலோக் இந்தான் இந்திய வாக்காளர்களிடமும் சொல்லிவிடாமல் இருக்க வேண்டும் என மஇகா நினைவுறுத்தியுள்ளது. இப்படிப்பட்ட பேச்சு இடைத் தேர்தலில் பிஎன் வாய்ப்புகளைக் குறைத்துவிடலாம் என மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். நேற்று தெலோக் இந்தானில் மலாய் …
அகதிகளை சிறீலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது – அநியாயமானது, அக்கிரமானது, அநாகரீகமானது
மலேசிய அரசாங்கம் இரகசியமாகவும் வலுக்கட்டாயமாகவும் இரு சிறீலங்கா அகதிகளையும் அடைக்கலம் தேடி வந்த இன்னொருவரையும் நேற்று சிறீலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. மலேசிய அரசாங்கத்தின் இந்த அநியாய, அக்கிரம மற்றும் அநாகரீகமான நடவடிக்கையை மனித உரிமைக் கழகமான சுவாராம் இன்று கடுமையாக விமர்சித்து கண்டனம் செய்தது. இயக்க பிரதிநிதிகள் பலர் கலந்து…
காணாமல்போன விமானம் பற்றிய விவரங்களை மலேசியாவும் இன்மார்செட்டும் வெளியிட்டன
மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து துறையும் பிரிட்டனின் செயற்கைத் துணைக்கோள நிறுவனமான இன்மார்செட்டும் எம்எச்370 விமானத்தின் பாதையை முடிவுசெய்வதற்குப் பயன்பட்ட முழு விவரங்களையும் இன்று வெள்யிட்டன. அந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையைப் பெற்றுக்கொண்டதாக காணாமல்போன விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். மார்ச் 8-இல், கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங்குக்கு 239 …
பெர்காசாவிலிருந்து விலகுகிறார் யம்மி
தெலோக் இந்தான் இடைத் தேர்தல் வேட்பாளர் டியானா சோபியா முகம்மட் டாவுட்டின் தாயார் யம்மி சமத். பெர்காசாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று டியானாவுடனும் மற்ற டிஏபி தலைவர்களுடனும் செய்தியாளர் கூட்டமொறில் கலந்துகொண்ட யம்மி, தாம் மலாய் உரிமைகளுக்காக போராடும் அந்த என்ஜிஓ-வில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால் அதற்கு …
இந்தியர்களுக்கு இனிமேல் நஜிப்மீது நம்பிக்கை வராது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மலேசிய இண்ட்ராப் சங்கத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நடந்துகொள்ளாமல் ஏமாற்றி விட்டார் என்பதால் இனி அவர்மீது இந்திய சமூகத்துக்கு அறவே நம்பிக்கை வராது என இண்ட்ராப் செயலாளர் பி.ரமேஷ் கூறினார். நிலைமை இவ்வாறிருக்க, தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் இந்தியர்களின் வாக்கு பிஎன்னுக்கு …
டியானாவுக்கு பாஸ் ஆதரவு: தலைவர் ஹாடி உறுதிப்படுத்தினார்
தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் டிஏபி வேட்பாளர் டியானா சோபியா முகம்மட் டாவுட்டைத்தான் பாஸ் ஆதரிக்கும். நாடாளுமன்றத்தில் ஹுடுட்டை ஆதரிக்கப்போவதில்லை என்று டியானா தெரிவித்திருந்தாலும் பாஸ் கட்சியின் ஆதரவு அவருக்குத்தான் என்பதை அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் உறுதிப்படுத்தினார். “அவர் தெளிவான நோக்கும் போக்கும் கொண்ட ஒரு …
‘நான் பெர்காசாவில் இருந்தால் என்ன’-எதிர்கேள்வி கேட்கிறார் டியானாவின் தாயார்
தெலோக் இந்தான் இடைத் தேர்தல் வேட்பாளர் டியானா சோபியா முகம்மட் டாவுட்டின் தாயார், தாம் பெர்காசாவில் இருப்பதற்கும் தம் மகள் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் சம்பந்தமில்லை என்று தம்மைக் குறைகூறுவோருக்குப் பதில் அளித்துள்ளார். “நான் அம்னோ உறுப்பினர். பெர்காசா உறுப்பினர். அதனால் யாருக்கு என்ன பிரச்னை? “டியானாதான் போட்டியிடுகிறார்.…
ஜாஹிட்: டிஏபி-க்கு வாக்களிக்கும் சீனர்கள் ‘நன்றிகெட்டவர்கள்’
டிஏபிக்கு வாக்களிக்கும் சீனர்கள், குறிப்பாக பணக்கார வியாபாரிகள் “நன்றி கெட்டவர்கள்” என அம்னோ உதவித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “மலாய்க்காரர்களும் இந்தியர்களும் சீன வியாபாரிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.......அவர்கள் வியாபாரத்தில் உயர்ந்த நிலைக்கு வந்ததும் டிஏபி-க்கு வாக்களிக்கிறார்கள். அது நன்றிகெட்ட தனம் அல்லவா?”, என்றவர் வினவ அவரது…
ஸாஹிட்: டிஎபிக்கு வாக்களிக்கும் சீனர்கள் நன்றி கெட்டவர்கள்
டிஎபிக்கு வாக்களிக்க விரும்பும் சீனர்கள், குறிப்பாக வாணிபத்தில் வெற்றி கண்டவர்கள், நன்றி கெட்டவர்கள் என்று அம்னோ உதவித் தலைவர் அஹமட் ஸாஹிட் ஹமிடி கூறுகிறார். ஏன் நன்றி கெட்டவர்கள் என்றால், அவர்கள் செல்வந்தர்களாவதற்கு பங்களிப்புச் செய்த மலாய்க்காரர்களையும் இந்தியர்களையும் அவர்கள் கைவிட்டு விட்டனர். இந்தியர்கள் மீது அதிகமான…
12 ஊடுருவல்காரர்களின் விசயத்தில் ஐஜிபி அம்னோ ஆள்போல் நடந்துகொள்கிறார்
பினாங்கு சட்டமன்றக் கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களைப் பொறுத்தவரை, இன்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் “அம்னோ அரசியல்வாதிபோல்” நடந்துகொள்கிறார் என அலோர் ஸ்டார் பிகேஆர் எம்பி கூய் ஹிசியாவ் லியாங் குறைகூறினார். புதன்கிழமை நடந்த அச்சம்பவத்தில் அம்னோ, பெர்காசா உறுப்பினர்களும் தீவகற்ப மலாய் மலாய் மாணவர் கூட்டமைப்பைச் …
நஜிப்: சமத்துவமின்மை மலேசியாவின் மிகப் பெரிய சவால்
பொருளாதார ஏற்றத்தாழ்வே மலேசியாவை எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்று நிதி அமைச்சில் பட்ஜெட் ஆலோசனை மன்றக் கூட்டத்தில் பேசிய நஜிப், ஆசியானுடனும் உலகின் மற்ற பகுதிகளுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது மற்றொரு பெரிய சவாலாகும் என்றார். “ஏற்றத்தாழ்வே மிகப் பெரிய …
மா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்
தெலோக் இந்தான்: இடைத் தேர்தலுக்கான அவரது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட பிஎன் வேட்பாளர் மா சியு கியோங், மற்றவற்றோடு அந்நகரின் பிரபல சாய்ந்த கோபுரத்தை யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்போவதாக அதில் வாக்குறுதி அளித்துள்ளார். தெலோக் இந்தானில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அவ்வறிக்கை…


