அன்வார்: என் எதிரிகள் மூலை முடுக்குகளிலிருந்து வெளியில் வந்து கொண்டிருக்கின்றனர்

பக்காத்தான் ராக்யாட்டின் தலைமைப் பரப்புரையாளரான அன்வார் இப்ராஹிம், தமக்கு எதிராக இப்போது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களைப் பார்க்கும் போது தமது எதிரிகள் மூலை முடுக்குகளிலிருந்தும் வெளியாகிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது எனக் கூறுகிறார். என்றாலும் தாம் உறுதியாகவும் பொறுமையாகவும் இருக்கப் போவதாக அவர் நேற்றிரவு செபாராங் பிராயில் மகளிர் எழுச்சிக் (…

பக்கத்தானில் இணைவதற்கான பிஎஸ்எம் மனு மீது விரைவில் முடிவு எடுக்கப்படும்

பக்கத்தான் கூட்டணியில் இணைவதற்கு மலேசிய சோசலிசக் கட்சி செய்திருந்த மனு மீது பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றம் விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கூறினார். பக்கத்தான் கூட்டணியின் மூன்று பங்காளிக் கட்சிகளின் தலைமைச் செயலாளர்கள் அடங்கிய பக்கத்தான் ரக்யாட் செயலகத்தின் கவனத்திற்கு…

சிலாங்கூர் தோட்ட மாணவர் தங்கும் விடுதி கட்டுமான அறிமுக விழா

மலேசிய திருநாட்டின்  மேம்பாட்டுக்கு  உழைத்து  உருக்குலைந்தது இந்திய இனம் என்றால் அது மிகையாகாது. ஆனால், அப்பெருமைக்குரிய இனம் இன்று பற்பல வகைகளில்  சிறுமைப் படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். வீண் வாய்வீச்சுக்கு நமக்கு நேரமில்லை, பிற்போக்கு வாதங்களிலேயே 56 வருடங்களை நாம் தொலைத்து விட்டோம். இனி வரும் காலத்தையாவது எதிர்காலச்…

‘லண்டனில் உள்ள என் புதல்வி செமினியில் ஒரு வாக்காளர்’

அண்மையில் பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமி, காஜாங்கில் உள்ள தமது குடும்ப வீட்டுக்குச் சென்றிருந்த போது 'சிலாங்கூரை நேசியுங்கள்' என்ற பிரதமருடைய கடிதம் அங்கு அனுப்பப்பட்டிருந்ததைக் கண்டு வியப்படையவில்லை. ஆனால் அந்தக் கடிதத்தை அணுக்கமாக ஆராய்ந்த போது தமது 25 வயது புதல்வு ஸ்ரீ வைதேகிக்கு…

எதிர்ப்பாளர்கள் எம்ஆர்டி நிலைய கட்டுமானத் தளத்தை சுற்றிலும் ‘பெருஞ்சுவரை’ அமைத்தனர்

கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் பகுதியில் எம்ஆர்டி திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று பாசார் செனி எம்ஆர்டி நிலைய கட்டுமானத் தளத்தைச் சுற்றிலும் 150 மீட்டர் நீளத்துக்கு 'பெருஞ்சுவரை' நிர்மாணித்தது. செங்கற்கள் வரையப்பட்ட நீண்ட மஞ்சள் நிற பதாதையில் அந்த 'சுவர்' கட்டப்பட்டது. அதில் எம்ஆர்டி…

பொதுத் தேர்தல் மாயாஜாலமாக பாலஸ்தீனப் பயணத்தை பயன்படுத்த வேண்டாம்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பலஸ்தீனத்துக்குத் தாம் அண்மையில் மேற்கொண்ட பயணத்தை ஒர் அரசியல் மாயாஜாலமாகப் பயன்படுத்தக் கூடாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார். எது எப்படி இருந்தாலும் மலேசியர்கள், தங்கள் தாயகத்தையும் உரிமைகளையும் இழந்த பாலஸ்தீன மக்களுடைய போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும்…

மகாதிர்: இப்ராகிம் அலி அம்னோவின் பேச்சாளர் அல்ல

“அல்லாஹ்” என்னும் சொல்லைக் கொண்ட மலாய்மொழி பைபிளை எரிக்க வேண்டும் என்று அம்னோ என்றுமே மொழிந்ததில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று கூறினார். மலாய்க்காரர் உரிமைகளுக்காகப் போராடும் வலச்சாரி அமைப்பான பெர்காசா-வின் தலைவர் இப்ராகிமின் பேச்சு அம்னோவின் கருத்தைப் பிரதிபலிக்காது என்றாரவர். “இப்ராகிம் அலி (இடம்) அம்னோ…

கூட்டரசுப் பிரதேச விருதுப் பட்டியலில் சாமிவேலு முதலிடம் வகிக்கிறார்

இன்று கூட்டரசுப் பிரதேச தினமாகும். அதனை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ள 283 பேர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இந்தியா, தெற்காசியாவுக்கான மலேசியாவின் சிறப்புத் தூதர் எஸ் சாமிவேலு தலைமை தாங்குகிறார். அவருக்கு Darjah Seri Utama Mahkota Wilayah (SUMW) விருது கொடுக்கப்பட்டுள்ளது. அது  Datuk Seri Utama என்னும்…

அடையாளக் கார்டு திட்டத்துடன் எனக்கு சம்பந்தமில்லை என அன்வார் மீண்டும்…

சபாவில் அடையாளக் கார்டு திட்டத்தில் (Project IC) தமக்கு பங்கு இருந்ததாகக் கூறப்படுவதை அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். அந்த விஷயம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டதே இல்லை என்றும் அத்துடன் அதற்காக நடத்தப்பட்ட எந்தக் கூட்டத்திற்கும் தாம் தலைமை தாங்கவும் இல்லை, கலந்து கொள்ளவும் இல்லை  என்றும் அவர் சொன்னார்.…

‘மலேசிய பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய மதிப்பீடு சரியல்ல’

அண்மையில் வெளியிடப்பட்ட உலகப் பத்திரிகைச் சுதந்திரப் பட்டியலில் மலேசியாவுக்கு தாழ்ந்த இடம் வழங்கப்பட்டிருப்பது ஆய்வாளர்கள் “கணிப்பு வேலையைச் சரியாகச் செய்யவில்லை” என்பதைக் காட்டுகிறது என்கிறார் மலாய் மெயில் நாளேட்டின் முன்னாள் செயல்முறை ஆசிரியர் அஹிருடின் அட்டான். ”நான் என்ன நினைக்கிறேன் என்றால், Reporters Sans Frontiers (ஆர்எஸ்எப் எல்லைகளற்ற…

சிங்கப்பூர் வாக்களிப்பு விதிமுறைகள் பற்றி இசி சொல்வது தவறு

வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவதற்கு குறிப்பிட்ட கால அளவுக்குள் மூன்று மாதங்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் (இசி) கூறிக் கொள்வது தவறானது என கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் தேர்தல் விதிமுறைகளின் கீழ் "வெளிநாட்டு வாக்காளராக' ஒருவர் தகுதி…

500 தோட்டப்புற மாணவர்களுக்கு தங்கும் விடுதி, சிலாங்கூர் மாநில அரசு…

வெப்ப மண்டல காட்டை தங்களுடைய வெறும் கைகளாலேயே வெட்டி அழித்து நாடாக்கிய இந்திய தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் தேவைப்படும் கல்வி வசதிகளைச் செய்து தருவதற்கு மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தம் அளிக்கும் நோக்கத்தின் ஓர் அங்கமாக சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தோட்டப்புற மாணவர்கள் 500 பேர் தங்குவதற்கான தங்கும் விடுதி கட்டுமான திட்டத்தை…

சிலாங்கூர் மாநில அரசின் மாணவர் தங்கும் விடுதி கட்டுமான அறிமுக…

உலக நாடுகள் எல்லாம் ஏழ்மையில் வாழும் தங்கள் நாட்டு மக்களின் மேம்பாட்டுக்குத்  திட்டம் தீட்டி மக்களின்  வாழ்க்கைத் தரம் உயரப் பாடுபட்டுவரும் வேளையில், இந்நாட்டு குடிமக்களின் ஒரு பகுதியினரான  இந்தியர்களை குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்று  அவமதிக்கும் கூட்டத்திடம் நமது தலைவிதியை நிர்ணயிக்கும் ஆட்சிப் பொறுப்பைக் கடந்த 55…

மகாதீர்: புரஜெக்ட் ஐசியில் அன்வார் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார்

சபாவில் 1990களில் தகுதி பெறாத குடியேறிகளுக்கு குடியுரிமையும் அடையாள அட்டையும் வழங்கும் திட்டத்தில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தமது உத்தரவு இல்லாதிருந்தும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கூறிக்கொண்டார். "அவர் வழக்கமாக நடவடிக்கை முயற்சியை மேற்கொள்வார்; சில சமயங்களில் (தேவைக்கு மேலும்) அதிகமாகச்…

பேராசிரியர்: அன்பளிப்புக்கள் பிஎன் பாசத்தை வாங்க முடியாது

அண்மைய சிங்கப்பூர் இடைத் தேர்தல் ஒன்றை எடுத்துக்காட்டாகக் கொண்டால் நஜிப் நிர்வாகம் வழங்கி வரும் பல வகையான ரொக்க அன்பளிப்புக்கள், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்து விட முடியாது என அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். "வாழ்க்கைச் செலவுகள் முதலாவது பிரச்னையாகும். பிஎன் அரசாங்கம்…

ஒரே எண்ணில் பலருக்கு அடையாள அட்டைகள்!

ஒரே மாதிரி எண்களில் பலருக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்படிப்பட்ட பிரச்னையைக் கொண்ட சுமார் 600 அடையாள அட்டைகள் இருக்கலாம் என்றும் தேசிய பதிவுத் துறை (என்ஆர்டி) தெரிவித்துள்ளது. “ஆம். சுமார் 600 அடையாள அட்டைகள் இருக்கலாம் என்று எங்கள் ஆவணங்கள் கூறுகின்றன”, என என்ஆர்டி தலைமையக அடையாள…

நஜிப்பின் கீழ் அம்னோ ஆணவம் குறைந்துள்ளது

நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தில் அம்னோவின் ஆணவம் குறைந்துள்ளதாக முன்னாள் அம்னோ தலைவர்களில் ஒருவரான அப்துல்லா அகமட் கூறுகிறார். அதனால் மலாய் வாக்காளர்கள் தேர்வு செய்யக் கூடியதாக இப்போது ஆளும் கட்சி திகழுவதாக அவர்  சொன்னார். வரும் பொதுத் தேர்தலில் முக்கியமான போர்க்களம் மலாய் வாக்காளர்களே என்று அவர்…

கிறிஸ்துவர்கள் பாரிசானின் ‘பாதுகாப்பான வைப்புத் தொகைகள்’ அல்ல!

சபா, சரவாக்கில் உள்ள மொத்த வாக்காளர்களில் 40 விழுக்காட்டினரான கிறிஸ்துவ வாக்காளர்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றது. அதனால் தனது 'பாதுகாப்பான வைப்புத் தொகைகள்' என பிஎன் அடிக்கடி பெருமை அடித்துக் கொள்ளும் அந்த இரு மாநிலங்கள் மீதான பிஎன் பிடிக்கு மருட்டல் ஏற்பட்டுள்ளது. யூகேஎம் என்ற மலேசிய…

வெளிநாடு வாழ் மலேசியர்களின் ‘Jom Balik Undi’ இயக்கம்

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள், சக மலேசியர்கள் நாடு திரும்பி வாக்களிக்க வேண்டும் அதன்வழி நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாக உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அவ்வியக்கம்  'Jom Balik Undi’ (நாடு திரும்பி வாக்களிப்போம்) என்று அழைக்கப்படுகிறது. அதைத் தொடக்கிய ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வில்லியம்…

பைபிள் எரிப்பு மருட்டல் மீது போலீசார் பெர்க்காசா தலைவர்களை விசாரித்தது

'அல்லாஹ்' என்ற சொல்லைக் கொண்ட மலாய், ஜாவி பைபிள்களுக்கு எரியூட்ட 'விழா' ஒன்று ஏற்பாடு செய்யப்படுவதாகக் கூறப்பட்ட வதந்திகள் மீது பினாங்கு போலீசார் இரண்டு பெர்க்காசா தலைவர்களிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, அதன் தகவல் பிரிவுத் தலைவர் ரோஸ்லான் காசிம் ஆகியோரே அந்த…

நஜிப்: ‘நிர்வாக மாற்றம் பொருளாதாரக் குழப்பத்தை விளைவித்து விடும்’

நாட்டு நிர்வாகத்தில் ஏற்படும் எந்தத் தீவிரமான மாற்றமும் கடுமையான பொருளாதாரக் குழப்பத்தை விளைவித்து விடும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். "தீவிரமான மாற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாது போனால் நாணய மதிப்பு வீழ்ச்சி அடையும். பண வீக்கம் அதிகரிக்கும். சுற்றுலாத் தொழில் முடங்கி விடும். நாட்டின் பாதுகாப்புக்கு…

ஹிஷாம்: கோரப்படாத மைகார்டுகளை சாபாவுக்கு அனுப்புமாறு பணிக்கும் கடிதம் போலியானது

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், கோரப்படாமல் கிடக்கும் மைகார்டுகளை சாபாவுக்கு அனுப்பும்படி பணிக்கும் கடிதம் எதுவும் கிடையாது என்று மறுத்தார். அவ்வாறு கூறும் கடிதம் இருந்தால் அது போலிக் கடிதமாகத்தான் இருக்கும். “அது ஒரு போலி கடிதம். அது பொய்யானது. ஒரு போலிக் கடிதத்தின் அடிப்படையில்தான் அவ்வாறு குற்றம்…

பினாங்கு நாடற்றோரின் கண்டனக் கூட்டத்தில் குழப்பம்

இன்று காலை பினாங்கின் தேசிய பதிவுத் துறை(என்ஆர்டி)க்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்த சிவப்பு அடையாள அட்டை வைத்திருப்போர் அதன் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதை போலீசார் தடுத்ததை அடுத்து அங்கு குழப்பம் மூண்டது. முன்னதாக, சிவப்பு அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 30பேரும் அவர்களின் குடும்பத்தாரும் பக்காத்தான் ரக்யாட் சட்டமன்ற…