முகிதின் யாசின் தலைமையிலான பெர்சத்து தங்களை மிஞ்சிவிடுமோ என்ற "அச்சம் மற்றும் பொறாமை" காரணமாகவே, பாஸ் கட்சி அதனுடன் உறவை முறித்துக் கொண்டதாக ‘உரிமை’ கட்சியின் தலைவர் ப. ராமசாமி இன்று தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பதிவில், பாஸ் கட்சி பெர்சத்துடனான உறவைத் துண்டிக்காவிட்டால், பெர்சத்துவின் செல்வாக்கு…
பிகேஆர்: சுல்தானை “கட்டாயப்படுத்த” பாஸ் முன்பு தயங்கவில்லை!
சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு இரு பெயர்களை அரண்மனைக்கு அனுப்ப பாஸ் எடுத்துள்ள முடிவிற்கு அது அளித்துள்ள காரணத்தை பிகேஆர் நிராகரித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஒரே ஒரு பெயரை மட்டும் சமர்ப்பிக்கையில் அவருக்கு மனசாட்சிக்குத்தல் ஏதும் இல்லை…
இரண்டு பெயர்களைத் தாக்கல் செய்யப்போவதாக பாஸ் பிடிவாதம்
மந்திரி புசார் பதவிக்கு பக்கத்தான் ரக்யாட் கட்சிகள் ஒரே ஒரு பெயரையே அரண்மனையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அன்வார் இப்ராகிமின் வேண்டுகோளை நிராகரித்த பாஸ், இரண்டு பேரைப் பரிந்துரைக்கப் போவதாகக் கூறியுள்ளது. சுல்தானின் ஆணைப்படிதான் பாஸ் நடந்துகொள்ளும் என அதன் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி மலேசியாகினியிடம் …
சுவா: அன்வார்தான் நடப்பில் எம்பி-ஆக இருப்பார்
டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிலாங்கூர் மந்திரி புசாரானால் அன்வார் இப்ராகிம்தான் மாநிலத்தை நிர்வகிப்பர் என முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறியுள்ளார். அசிசாவின் பின்னணியில் இருந்துகொண்டு அன்வார்தான் ஆட்டுவிப்பார் என்பதைச் சொல்ல ராக்கெட் இயல் படித்திருக்க வேண்டியதில்லை என்றாவர். அசிசாவுடன் தமக்குத் …
நிக் நஸ்மி: தலையை வெட்டுவேன் என்றவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை…
அரசாங்கம் பக்கத்தான் ரக்யாட் தலைவர்களுக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தும்போது பாஸ் எம்பிகள் நால்வரின் தலையை வெட்டப் போவதாக மிரட்டிய பெர்காசா தகவல் பிரிவுத் தலைவர் ரஸ்லான் காசிமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காலிருப்பது ஏன் என்று பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கேட்கிறார்.…
அம்னோ எம்பி: பக்கத்தான், சுய நலமிகளின் கூட்டணி
பக்கத்தான் ரக்யாட்டில் தெளிவான கொள்கை இல்லாததும் அதில் உள்ள கட்சிகள் சுயநலத்துடன் செயல்படுவதும்தான் இன்றைய சிலாங்கூர் அரசியல் நெருக்கடிக்குக் காரணம் என அம்னோ எம்பி ஷம்சுல் அனுவார் நசாரா கூறினார். “சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் ஒவ்வொரு பக்கத்தான் கட்சியும் பொதுநல நோக்கின்றி சுயநலத்துடன் செயல்படுவதுபோல் தெரிகிறது. இதனால்தான்…
அன்வார்: பாஸ் ஆகஸ்ட் 17 முடிவை மதிக்க வேண்டும்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு வேட்பாளர்கள் நியமனம் செய்வதில் பக்கத்தான் ரக்யாட் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு பெயரைத்தான் முன்மொழிய வேண்டும் என்று ஆகஸ்ட் 17-இல் பக்கத்தான் தலைமை மன்றம் செய்த முடிவைப் பின்பற்றுமாறு பாஸ் கட்சியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மந்திரி புசார் பதவிக்கு…
சேவை செய்ய முடியாவிட்டால் மஇகா தலைவர் பதவி விலகுவது நல்லது
மலேசிய இந்தியர்களுக்குச் சேவை செய்ய முடியாவிட்டால் மஇகா தலைவர் பதவி விலகுவதே நல்லது என அக்கட்சியின் இளைஞர் பகுதி முன்னாள் தலைவர் டி.மோகன் கூறியுள்ளார். “சமூகத்துக்குச் சேவை செய்யும் ஆர்வம் இல்லையென்றால், ஜி.பழனிவேல் தகுதியான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து பதவி விலகுவதே நல்லது”, என மோகன் அறிக்கை ஒன்றில்…
நெகாரா கூ ஒரு சங்கமல்ல என ஆர்ஓஎஸ்ஸிடம் தெரிவிக்கப்பட்டது
நெகாரா கூ இயக்கக் குழு தலைவர் ஜைட் கமருடின், அது பதிவு செய்யப்படாத அமைப்பு என்று கூறப்படுவதன் தொடர்பில் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யைச் சந்தித்து அதன் நடவடிக்கைகள் பற்றி விளக்கியுள்ளார். நேற்றுக் காலை நெகாராகூ புரவலர் அம்பிகா ஸ்ரீநிவாசனுடன் ஜைட் ஆர்ஓஎஸ்சைச் சந்தித்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜைட்,…
கீர் மருத்துவமனையில்: அவரது ஊழல் வழக்கு மூன்றாவது தடவையாக ஒத்திவைப்பு
ஊழல் குற்றத்துக்காக விதிக்கப்பட்ட 12-மாத சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை, அவர் மருத்துவமனையில் இருப்பதால் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. கீர் உடல்நலம் குன்றியிருப்பதாக அவரின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா கூட்டரசு நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவருக்குக் …
செப்டெம்பர் 3 – எம்பி நியமனத்திற்கான கடைசி நாள்
மந்திரி புசார் பதவிக்கான பக்கத்தான் ராக்யாட்டின் வேட்பாளர்களின் பெயரை அரண்மனையிடம் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் அடுத்த புதன்கிழமை என்று அரண்மனை நிர்ணயித்துள்ளது. மலேசியாகினி பார்த்துள்ள இக்கடிதத்தில் செப்டெம்பர் 3 குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பாணி பக்கத்தான் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளார். இதனிடையே,…
எம்பி முட்டாள்தனமாக பேசுகிறார், கடிதத்தை வரைந்தது அவரது அலுவலகம்
சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களால் மட்டுமே பின்பற்றப்படும் அரசியல் சம்பிரதாயம் பற்றிய விவாதம் சூடேறி வருகிறது. இது குறித்து கருத்துரைத்த டிஎபி சிலாங்கூர் மாநில தலைவர் டோனி புவா பதவி விலகவிருக்கும் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் முட்டாள்தனமாக பேசுகிறார் என்று சாடியுள்ளார். 2008 மற்றும் 2013…
அன்வார் ஒன்று சொல்கிறார்; காலிட் வேறொன்று சொல்கிறார்
2008, 2013 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பக்கத்தான் ரக்யாட் அரண்மனையிடம் ஒரு பெயரைக் கொடுத்ததா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களையா? சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் சமர்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அன்வாரும் பிகேஆர் தலைவர் வான் அசிசா …
பக்கத்தானை ஆதரிக்காதவர்கள் பாஸிலிருந்து வெளியேறலாம்
பாஸ் கட்சி பக்கத்தான் ரக்யாட் கூட்டணியில் இருப்பதை விரும்பாதவர்கள், பிரச்னை செய்து கொண்டிருக்காமல் கட்சியிலிருந்து வெளியேறலாம் என பாஸ் மத்திய குழு உறுப்பினர் காலிட் சமட் கூறியுள்ளார். “அரசியல் ஒத்துழைப்பு என்பது பாஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவாகும். அதைச் செய்ய விரும்பாதவர்கள் பாஸை விட்டு வெளியேறி அம்னோ அல்லது …
காலிட்: எம்பி பதவிக்கு ஒரு பெயரை மட்டும் தாக்கல் செய்யும்…
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு தம் பெயரை மட்டுமே பக்கத்தான் ரக்யாட் அரண்மனையிடம் தாக்கல் செய்ததாக பிகேஆரும் டிஏபியும் கூறிக் கொண்டிருப்பதை அப்துல் காலிட் இப்ராகிம் மறுக்கிறார். எனவே, அதைக் காரணம் காட்டி இப்போதும் ஒரே ஒரு பெயரை மட்டுமே தாக்கல் செய்யப்போவதாக …
அன்வார்: என் மனைவி என்பதற்காக அசிசா தேர்ந்தெடுக்கப்படவில்லை
சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கான வேட்பாளராக டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் தம் மனைவி என்பது காரணமல்ல என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். தம் மனைவி எம்பி வேட்பாளராக பெயர் குறிப்பிடப்படிருப்பதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு அரசியல் சர்ச்சையாக்கி, …
பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்பி வேட்பாளராக நியமனம் செய்யப்பட மாட்டார்கள்
பிகேஆரும் டிஏபியும் சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை மட்டுமே நியமனம் செய்துள்ள வேளையில் பாஸ் அதன் வேட்பாளர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. “அரண்மனையிலிருந்து கடிதம் இன்னும் வரவில்லை, விரைவில் வரலாம்”, என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா …
வெறித்தனமே நம் எதிர்காலம் ஆகிவிடக் கூடாது
அண்மைக் காலமாக, மலேசியாவில் வெறித்தனம் தலையெடுத்து வருவதாகக் கூறும் பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப், அதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். “நம் ஊடகங்களில் இன, சமய வெறி முக்கிய இடம்பெற்று வருவதைக் காண வருத்தமாக உள்ளது. இந்நிலை வரவர மோசமடைந்தும் வருகிறது. “இப்போதைய நிலையே நாட்டின் எதிர்காலமாகி …
தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுவதை எண்ணி பெர்சே வருத்தம்
தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் பெர்சே அமைப்பு, அடுத்தடுத்து பலர் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்படுவது குறித்து கவலையடைந்துள்ளது. அது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று அது கூறியது. தற்போதைய அரசியல் நிலைக்கு எதிராக சிறிதளவு எதிர்ப்பு காட்டினால்கூட தேச நிந்தனைச் சட்டம் பாய்கிறது. “இது ஜனநாயகத்துக்கு முரணானது”, என்று …
ராயர்மீது இரண்டு தேச நிந்தனை குற்றச்சாட்டு
டிஏபி-இன் ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர்மீது மூன்று அம்னோ தலைவர்களை “செலாகா” என்று கூறியதற்காக இரண்டு தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மே 20-இல், காலை மணி 9.30க்கு பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தில் ராயர் அச்சொல்லைப் பயன்படுத்தியதற்காக பகுதி 4 (1) (பி))-இன்கீழ் குற்றம் சாட்டிருக்கிறார். இரண்டு …
டிஎபி, பிகேஆர்: எம்பி பதவிக்கு அஸிசாவின் பெயர் மட்டுமே தாக்கல்…
காலிட் இப்ராகிமுக்கு மாற்றாக சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் வான் அஸிசாவின் பெயரை மட்டுமே டிஎபி மற்றும் பிகேஆர் முன்மொழியும். இம்முடிவு பக்காத்தான் கூட்டணியின் மூன்று கட்சிகள் ஒவ்வொன்றும் சிலாங்கூர் சட்டமன்ற பிரதிநிதிகளிலிருந்து "இரண்டு மேற்பட்ட பெயர்களை" முன்மொழிய வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான்…
குதப்புணர்ச்சி வழக்கை ஒளிபரப்பலாம், நீதிமன்றம் அனுமதித்தால்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கின் மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அதை நேரடி ஒளிபரப்புச் செய்வதில் பிரச்னை எதுவுமில்லை எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் ஷபரி சிக் கூறினார். “ஆனால், நீதிமன்றம் நேரடி ஒளிபரப்புக்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே”, என்று கூறிய அமைச்சர் இதற்குமுன் …
காலிட் பதவி விலகுகிறார்; திடீர் தேர்தல் இல்லை
அப்துல் காலிட் இப்ராகிம் மந்திரி புசார் பதவியிலிருந்து விலக சிலாங்கூர் சுல்தான் அனுமதித்தார். அதேவேளை, இன்னொருவர் அப்பதவியை ஏற்கும்வரை அதில் தொடர்ந்து இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அதிகாரம் சீராகக் கைமாறுவதையே சுல்தான் விரும்புவதாக தெரிகிறது. ஆனால், அவர், எம்பி பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்டவர்களைப் பரிந்துரைக்குமாறு …
அஸ்மினுக்கு ஹாடி எம்பி பதவி கொடுத்தாரா? அஸ்மின் உதவியாளர் மறுப்பு
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு சிலாங்கூர் மந்திரி புசார் பதவி கொடுக்க முன்வந்தார் எனக் கூறப்படுவதை அஸ்மினின் உதவியாளர் மறுக்கிறார். “அது உண்மை அல்ல”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். இதனிடையே, மாராங் எம்பி-ஆன ஹாடி, இவ்விவகாரம்மீது நாளை அறிக்கை வெளியிடுவார் …


