இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
நாட்டின் வளர்ச்சி வேகம் குறைந்ததற்கு மோடிதான் காரணம் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி, நடப்பு நிதி ஆண்டில் (2017-18) நாட்டின் பொருளாதார வளர்ச்சிவேகம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தலைமை புள்ளிவிவர அதிகாரி ஆனந்த், நேற்று முன்தினம் நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த வளர்ச்சி கடந்த நிதி ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி காங்கிரஸ் தலைவர்…
அடிபணிய மாட்டோம்.. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடரும்: தொழிற்சங்கங்கள்…
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு முதலே, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,…
தமிழர் பிரதமரானால் என்ன செய்வீர்கள்? – இந்தித் திணிப்பு குறித்து…
ஐநாவில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவருவது குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மத்திய அரசின் மொழி சார்ந்த கொள்கைகள் குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளார். இந்தி மொழியை ஐநாவில் இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிப்பது குறித்து அரசு…
தமிழகம் முழுவதும் பேருந்துகள் வேலை நிறுத்தம் தீவிரம்- இயல்பு வாழ்க்கை…
சென்னை: தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 % ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. முதலில் 2.40% மட்டுமே தர முடியும் என்று சொன்ன அரசு பின்னர் 2.44%…
ரஜினியே வேண்டாங்கிறேன்…எங்க வீட்ட நாங்க பாத்துக்கிறோம் – சீமான்
சென்னை: ஒரு வீட்டில் அப்பா சரியில்லை என்றால் மூத்த மகன் காப்பாற்ற மாட்டானா? பக்கத்து வீட்டுக்காரன், அண்டை வீட்டுக்காரன் தேவையில்லை என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ரஜினியின் அரசியல் வருகைக்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். வரவேற்பும், எதிர்ப்பும் கலந்த கருத்துக்கள்…
சென்னையில் பல இடங்களில் நடுவழியில் பஸ்கள் நிறுத்தம்.. வீடு திரும்ப…
சென்னை: பல இடங்களில் நடுவழியிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் போக்குவரத்து உழியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை மாநகரின் பல இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்துகள் நிறுத்தம் சென்னையில் பல…
84 மீனவர்கள், 159 படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை பிரதமருக்கு,…
சென்னை, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 தமிழக மீனவர்கள் மற்றும் 159 படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கை சிறைகளில் இருந்து…
பழிவாங்கும் நடவடிக்கையாக எல்லையில் பாகிஸ்தான் நிலைகளை இந்தியா துவம்சம் செய்தது!
ஜம்மு, எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பிற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எல்லையில் பாகிஸ்தான் நிலைகளை இந்தியா துவம்சம் செய்தது. காஷ்மீர் எல்லையில் சம்பா செக்டாரில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தானின் இந்த அடாவடி தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமை கான்ஸ்டபிள் ஆர்.பி.…
5 லட்சம் இந்தியர்களை வெளியே அனுப்பும் அமெரிக்கா..
நியூயார்க்: எச்-1பி விசா காலக்கெடு முடிந்தும் அமெரிக்காவில் பல வெளிநாட்டு பணியாளர்கள் தங்கி இருக்கிறார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த பணியாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக எச்-1பி விசா பெறுவதில் நிறைய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. சில சில விதிமுறை மாற்றங்களும்…
ரத்த தானம் அளிக்கும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை- மத்திய அரசு…
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களிடம் ரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வை பெருக்கும் விதமாக ரத்ததானம் செய்தால் ஊதியத்துடன் கூடிய ஊதியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறையின் சேவை விதிகளின்படி, தற்போதைய நிலையில், ஊழியர்கள் ரத்த தானம் செய்தால், அவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை யாரும்…
ஆடு மேய்ப்பதற்காக அமெரிக்க விஞ்ஞானி வேலையை உதறி தள்ளிய இந்தியர்..!
பள்ளியில் படிக்கும் போது நீயெல்லாம் ஆடு மேய்க்கத்தான் சரியாக வருவாய் என்று பலர் திட்டு வாங்கி இருப்போம். அப்படித் திட்டு வாங்கியவர்களில் பலர் வெளிநாடுகளில் மிகப் பெரிய பணிகளிலும் இருப்பார்கள். இந்தியாவில் தற்போது உள்ள இளவட்டங்களில் பலர் வெளிநாட்டுக் கனவுடன் இருக்கும் நேரத்தில் நாம் இங்குப் பார்க்க இருக்கும்…
தலித்துகளின் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை
தலித் இளைஞர்கள் செய்த போராட்டத்தினால் மும்பை மாநகரமே செய்வாய்க்கிழமையன்று ஓரளவு ஸ்தம்பித்தது. 'பீமா கோரேகான்'சண்டையின் 200வது ஆண்டை நினைவுக்கூர்வதற்காக புனே நகரில்நேற்று ஆயிரக்கணக்கான தலித்துகள் திரண்டபோது வெடித்த மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமுற்றனர். ஆதிக்க சாதியான பேஷ்வாவின் படைகள் பிரிட்டிஷ்காரர்களால் தோற்கடிக்கப்பட்டதை இந்நாளில் தலித் தலைவர்கள் நினைவுக்கூர்கின்றனர். ஏனெனில், பேஷ்வாவுக்கு எதிராக சண்டையிட்ட…
பீமா கோரேகான் யுத்த வெற்றியை கொண்டாட எதிர்ப்பு- புனேயில் இந்துத்துவா…
மும்பை: 200 ஆண்டுகளுக்கு முந்தைய பீமா கோரேகான் யுத்த வெற்றியைக் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தியதில் புனேவில் தலித் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றம் நிலவுகிறது. வீர சிவாஜிக்கு பின்னர் மகாராஷ்டிராவை…
தமிழ்நாடு முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன
சென்னை, புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டாஸ்மாக் கடைகளில் அனைத்து வகையான மது பாட்டில்களும் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ‘பீர்’ வகைகள் அதிக அளவு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மது விற்பனை 31-ந்தேதியன்று பிற்பகலுக்கு பின்னர் களை கட்டத்தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல டாஸ்மாக் கடைகளில்…
சினிமாவில் நடித்து வந்தால், தலைவனாக்கி நாட்டை ஆள வைப்பார்கள் என்று…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்து உள்ளோம். திருக்குறள் இதைத்தான் கூறுகிறது. ரஜினி, படங்களில் நடிப்பதில் பிரச்சினை இல்லை. தலைவராக, முதல்- அமைச்சராக எங்களை ஆளுவதில்தான் சிக்கல் உள்ளது.…
ரஜினி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்- இயக்குநர் கௌதமன்…
சென்னை : ரஜினி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று இயக்குநர் கௌதமன் சவால் விடுத்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களுடனான சந்திப்பின் போது அவர் நேற்று அறிவித்தார். அப்போது அவர் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து இயக்குநர்…
பாலியல் வன்புணர்வை தடுக்கும் உள்ளாடை: 19 வயது மாணவியின் கண்டுபிடிப்பு
உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதை தனது கண்டுபிடிப்பு தடுக்கும் என்று நம்புகிறார் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண். சீனூ என்ற இளம் பெண் உருவாக்கியிருக்கும் பெண்களுக்கான உள்ளாடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒருவிதமான பூட்டு அமைப்பு பெண்கள் பாலியல்ரீதியாக வன்புணர்வு செய்யப்படுவதை தடுக்கும். தனது கண்டுபிடிப்புக்கு…
தெருக்களில் ரோந்து பணிக்கு, ரோபோ போலீஸ் நியமனம்.. எங்கு தெரியுமா..?
‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடு அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் அதிக அளவில் உள்ள இவற்றின் செயல்பாடு தற்போது இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தும் பணி தொடங்கி விட்டது. தற்போது உலகிலேயே முதன் முறையாக தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ‘ரோபோ’ போலீஸ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு…
2017 சீமானுக்கு எப்படி இருந்தது? ஒரு சிறப்பு நேர்காணல்..
நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு செயல்பாடும் அரசியல் தளத்தில் புதிய விவாதத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு சதவீத வாக்குகளை வாங்கினாலும், அடுத்து வந்த நாள்களில் புதிய உற்சாகத்தோடு களப்பணியில் இறங்கினார்கள் நாம் தமிழர் தொண்டர்கள். அதன் விளைவாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 3,800 வாக்குகளைப் பெற்று…
மக்களவையில் அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் குறிப்பிட்ட குல்அஃப்ஷான் யார்?
முத்தலாக் விவாகரத்து முறை சட்ட விரோதமானது என்பதை உறுதிப்படுத்தும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் வியாழக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டு, கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. வரைவு மசோதாவில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், குரல் வாக்கெடுப்புமூலம் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இனி மாநிலங்களவையில் மசோதா முன்வைக்கப்பட்டு அங்கு…
பிரான்சில் இந்திய சிறுவர்கள் 22 பேர் மாயம்: வழக்குப்பதிவு செய்து…
புதுடெல்லி, ரக்பி விளையாட்டு பயிற்சி அளிப்பதாக கூறி மூன்று போலி டிரவல் ஏஜென்சிகளால் பிரான்சுக்கு அனுப்ப பட்ட 22 இந்திய பதின்ம வயது மாணவர்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, இந்த விவகாரம் குறித்து விசாரணையை துவங்கியுள்ளது. சிபிஐ தரப்பில் இது குறித்து…
‘முத்தலாக்’ தடை மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது
புதுடெல்லி, முஸ்லிம் கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. இதைத்தொடர்ந்து, உள்துறை…
2016-17-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவு: மக்களவையில் நிதி அமைச்சர்…
புதுடெல்லி, மக்களவையில் இன்று பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:‘‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும், ஜிடிபி என அழைக்கப்படும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2015 -2016 நிதியாண்டில் 8 சதவீதமாக இருந்தது. 2016 -17 நிதியாண்டில் இது, 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டான, 2017…
























