மோடியின் தொடர் வெளிநாட்டு பயணங்கள்: ஏன்? எதற்காக?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர வெளிநாட்டுப் பயணம் ஒரு புதிரான நடவடிக்கையாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. இதுபற்றி எதிர்க்கட்சிகளும், மக்களும் ஊடகங்களும் நிறையவே விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற விமர்சனங்கள் இப்போது வெளிநாட்டினராலும் முன்வைக்கப்படுகிறது. அதில் முக்கியமானதாக பிபிசியின் வணிக ஆசிரியர் கமல் அகமது சமீபத்தில் கூறியிருப்பதுதான், இந்திய…

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வி: இந்தியா…

பயங்கரவாதத்துக்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வியடைந்துவிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆண்டறிக்கை மீதான விவாதம், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அசோக்குமார் முகர்ஜி பேசியதாவது: உலக நாடுகளுக்கு இடையே…

கடலூரில் ரூ1,000 கோடிக்கு சேதம்… படுமந்தமாக நிவாரணப் பணிகள்.. கடும்…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ரூ1,000 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் நிவாரணப் பணிகள் படு மந்தமாக இருப்பதால் பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர். நிவாரணப் பணிகளை செய்துவருகிறோம் என முதல்வர் ஜெயலலிதா படத்தை முன்னிலைப்படுத்தி பேட்டி தருவதில் அக்கறை காட்டும் அமைச்சர்கள் 4 நாட்களாக…

தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கும் சென்னை: முதல்வர் தொகுதியில் மேயரை விரட்டியடித்த…

முதல்வரின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நிவாரண நடவடிக்கைகலை மேற்பார்வையிட சென்ற அதிகமுகவினரை பொது மக்கள் அடித்து விரட்டியுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் மேற்குப்பகுதி மிகவும் தாழ்வான பகுதி என்பதால், நேதாஜிநகர், குமரன்நகர், துர்காதேவி நகர், மூப்பனார் நகர், மீனாம்பாள் நகர், ஜெ.ஜெ.நகர், எழில்நகர், தண்டையார்பேட்டை, கொடுங்கையூர் போன்ற…

பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் வெடித்த உக்கிர போராட்டங்கள்!

பிரதமர் நரேந்திர மோடியின் இங்கிலாந்து வருகைக்கு எதிராக நூற்றுக்கணக்கான இந்தியர்கள், "பயங்கரவாதியே திரும்பிப் போ" முழக்கத்துடன் பிரமாண்ட போராட்டங்களை லண்டனில் நடத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம், முறைப் பெண்களுடன் திருமணம்: கொரியர்கள் தமிழர்களின்…

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள், தமிழர்களின் வழிவந்தவர்களா என உலகத் தமிழறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் சி.சிதம்பரம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், கொரிய மொழியில் உள்ள பல சொற்கள் தமிழ் சாயலில் அமைந்திருக்கின்றன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில், கனடாவின்…

“தானே” புயல் சேதத்தை விட வெள்ளத்தால் அதிக உயிர் சேதம்:…

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் தாமதமாக வழங்கப்படுவதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. 2000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பதால்…

திப்பு சுல்தான் பற்றி தவறாக பேசினால், கொல்லப்படுவாய்! பேஸ்புக்கில் மிரட்டல்

திப்பு சுல்தான் பற்றி தவறாக பேசினால், கொல்லப்படுவாய் என மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்துள்ளனர். திப்புசுல்தான் சுதந்திர போராட்ட தியாகி கிடையாது,தேச துரோகி என்று கர்நாடக பாஜக தலைவர்கள் கூறிவரும் நிலையில், 'மைசூர் ஹுலி சாஹிதே மிலாத் மஹான் திப்பு சுல்தான்'…

இந்துக்களுக்கு எதிராக அநியாயம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை நவாஸ்…

பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிராக அநியாயம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நவாஸ் செரீப் உறுதி அளித்துஉள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது தொடர்பாக சர்வதேச சமூதாயம் கவலையை வெளிப்படுத்திய நிலையில், கராச்சியில் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்…

மியன்மார் ஜனநாயக மலர்ச்சியும் பர்மியத் தமிழர்களும்!

மியன்மார் என்று அழைக்கப்படுகின்ற பர்மாவில் 25 ஆண்டுகளிற்கு பிறகு முதன்முறையாக ஜனநாயகத் தேர்தல் என்ற அந்தஸ்தோடு, இப்போது இடம்பெற்ற தேர்தல் இடம்பெற்று முடிந்திருக்கின்றது. கனடாவிலுள்ள தமிழர்களின் தொகையை ஒத்த தமிழர்கள் பர்மாவில் இருந்தாலும் அவர்கள் நூறாண்டுகளாகச் சந்தித்த வலி மிகப்பெரியது. பல்லாயிரக்கணக்கணக்கான தமிழர்கள் பர்மாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். சாராம், லுங்கி…

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ‘தமிழ்நாடு’ தான் முன்னிலை!

சென்னை: இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக அசோசாம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2012-13-ம் ஆண்டில் இந்திய உற்பத்தித் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களைக் ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னிலை வகுக்கிறது. இந்தியாவில் உற்பத்தி மற்றும் தொழிற்துறை சிறந்து விளங்கும்…

விழாக் காலங்களில் மக்கள் செலவிடும் தொகை பாதியாகக் குறைந்தது.. அசோசாம்…

டெல்லி: இந்தியாவில் நடுத்தர மற்றும் கீழ்தட்டுக் குடும்பங்கள் விழாக்காலத்தில் செலவிடும் தொகை கடந்த வருடத்தை விட 43 சதவீதம் குறைந்துள்ளதாக அசோசாம் அமைப்பு கூறியுள்ளது. இத்தகைய நிலைக்கும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கல்விக் கட்டணங்கள் உயர்வு மற்றும் குறைவான வேலைவாய்ப்புகள் ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளதாக இவ்வமைப்பு…

எல்லை தாண்டி வந்தால் 25 கோடி அபராதம்! இலங்கை அரசின்…

தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்றும், தாக்குதல் நடத்தி ஊனப்படுத்தியும், பிடித்துச் சென்று சிறையில் அடைப்பதுமான இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ‘இனி எல்லை தாண்டி வரும் மீனவர்களின் படகுகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதிப்போம்’ என அடுத்த அஸ்திரத்தை அப்பாவி மீனவர்கள் மீது ஏவியுள்ளது…

இந்தியாவைத் தாக்குவதற்காக பாகிஸ்தான் உருவாக்கியுள்ள அணுகுண்டுகள்: உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன!

பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டங்களால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. "பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் அந்த நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: 120 அணு குண்டுகளை வைத்துள்ள பாகிஸ்தான், இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷியாவுக்கு…

பாஜக, மோடிக்கு இது பொன்னான தருணம்… திருந்த!

பலரும் எதிர்பார்த்ததற்கும், அஞ்சியதற்கும் மாறாக பீகார் தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நிலவப் போகிறது அல்லது சொற்ப இட முன்னணியில் நிதீஷ் குமார் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றி விடும் என்றே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. என்டிடிவி மற்றும் சாணக்கியா தொலைக் காட்சிகளின்…

தமிழகம், புதுவையில் கடும் மழை:இயல்பு நிலை பாதிப்பு

தமிழகம் அருகே வங்க கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை நீடிக்கின்றது. இப்பகுதிகளில் செவ்வாய்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், திங்களன்று பெய்து வரும் அடை மழை, மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.…

மோடி, அமித்ஷாவின் அகம்பாவம் அழிந்தது…. கொண்டாடும் கேஜ்ரிவால்

டெல்லி: பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கான வாக்கெடுப்புதான் பீகார் தேர்தல் முடிவுகள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்தவர் கேஜ்ரிவால். வாக்காளர்கள் நிதிஷ்குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது தேர்தலில் வென்றுள்ள நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கேஜ்ரிவால்.…

பீகாரில் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார்… தொலைபேசியில் மோடி, ட்விட்டரில் அமித்ஷா…

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் முதல்வராகியுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் ட்விட்டரில் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பீகாரில் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணியாற்றியது…

தாவூத் இப்ராஹிமை மறைத்து வைத்திருக்கும் பாகிஸ்தான்: சோட்டா ராஜன் வெளியிட்ட…

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் அரசாங்கத்தின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளதாக சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார். மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முன்னாள் நண்பரான சோட்டா ராஜன் ஆஸ்திரேலியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இந்தோனேசியா வந்தபோது பாலி நகரில் வைத்து போலிசார் அவரை…

ஆந்திராவில் செம்மரக் கடத்தலை தடுக்க மோப்ப நாய்களுக்கு பயிற்சி

திருப்பதி, நவ.8– ஆந்திர மாநிலம் சேஷால வனப்பகுதியில் செம்மரங்களை கடத்தல்காரர்கள் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். இதைத் தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 150–க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களை கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல சிறப்பு…

“இந்தியாவின் வளர்ச்சி சீனாவைவிட சிறப்பானதாக இருக்கும்’

வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி சீனாவைவிட சிறப்பானதாக இருக்கும் என்று உலகப் பொருளாதார அமைப்பு கூறியுள்ளது. உலக பொருளாதார அமைப்பின் (டபிள்யூ.இ.எஃப்.) தெற்காசிய, இந்தியா பகுதி தலைவர் விராஜ் மேத்தா இது தொடர்பாக இணையதளத்தில் கூறியிருப்பதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் முக்கியமானதான இந்தியாவில், இப்போது அரசியல், பொருளாதார…

ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த தேவையான சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பீகார் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி…

கோவனை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை

பாடகர் கோவனை காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாடல் மூலம் அரசை விமர்சித்த மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு நக்சலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி 2…