மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அனுமதிக்காதீர்: மத்திய அமைச்சர்களுக்கு அன்புமணி…

சென்னை: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை அனுமதிக்கக் கூடாது என்று கூறி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பாமக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,   டெல்லி பல்கலைக்கழகத்தின் மரபணு பொறியியல் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு…

திருநங்கை பிரித்திகா யாஷினிக்கு எஸ்.ஐ. பதவி வழங்கலாம்: தமிழக அரசுக்கு…

எஸ்.ஐ. பதவிக்கு விண்ணப்பித்த திருநங்கை பிரித்திகா யாஷினி முழு தகுதியுடன் இருப்பதால் அவருக்கு அந்த அந்த பதவியை வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரித்திகா யாஷினி. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து…

சகிப்பின்மை: விவாதிக்க அரசு தயார்

நாட்டில் தற்போது சகிப்பின்மை நிலவுவதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். மாட்டிறைச்சி உண்டதாக உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டார். இதனைத்…

சசிபெருமாள் மரணத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி

காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.  அதேவேளையில், சசி பெருமாள் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனக் காவல்துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சசிபெருமாள் மரணம் தொடர்பாக அவரது…

எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்!

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் வைத்து காலணியால் தாக்கப்பட்டதாக தமிழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது, சென்னையிலிருந்து வெளியாகும் "தெ ஹிந்து" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்"…

பாகிஸ்தானுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிரச்னைக்குரியவராக இருக்கிறார் மோடி: பர்வேஸ் முஷாரப்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிரச்னைக்குரியவராக இருக்கிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.  சேனல் 92வுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: - இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நடக்கும் பிரச்னை ஆளும் கட்சியின் கொள்கை அடைப்படையிலானது அல்ல.…

தில்லி மக்களுக்கு ஓர் எச்சரிக்கை: சுற்றுச் சூழல் மாசு அபாயகரமான…

தில்லியில் சுற்றுச் சூழல் மாசு அபாயகரமான கட்டத்தை எட்டிவிடும் நிலையில் இருப்பதாக தெரிவந்துள்ளது. தில்லியில் காலையில் இருந்து நண்பகல் வரையில் 200 முதல் 500 கனமீட்டர் மைக்ரோகிராம் மாசு ஏற்படுவதாக தெரிகிறது. மேலும் கடந்த சில நாட்களாக தில்லியில் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தில்லி வானிலை…

ஓசோன் படலம்: மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போய்ப் பாருங்க.. பசுமைத்…

டெல்லி: ஓசோன் படலம் குறித்து முதன்முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனை தெரிந்து கொள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள பூகோள சக்கரத்தை பாருங்கள் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் கண்டிப்பு காட்டியுள்ளனர். ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை…

தாவூத்துக்கு பாகிஸ்தானில் கூடுதல் பாதுகாப்பு?

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தானில் கூடுதல் ராணுவப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியாக விளங்கிய சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டிருப்பதையடுத்து, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மும்பையில் நிழல் உலக தாதாவாக வலம் வந்த தாவூத் இப்ராஹிமின்…

விஜயகாந்த்தால் தமிழர்களுக்கு எவ்வளவு கேவலம்?… சீமான் வேதனை

திருச்சி: எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் விஜயகாந்த். இவரது பேச்சைக் கேட்டால் பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கெல்லாம் எவ்வளவு கேவலம். தமிழர்களைக் கேவலமாக நினைக்க மாட்டார்களா என்று வேதனை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான். வருகிற சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தனது…

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.25 கோடி அபராதமா? இலங்கை அச்சுறுத்தலை…

சென்னை: தமிழக மீனவர்களின் படகுகளுக்கு கோடிக் கணக்கில் தண்டம் விதிப்போம் என்று இலங்கை அரசு அச்சுறுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு இலங்கை ரூபாய் 25 கோடி அபராதம் விதிக்க அந்நாட்டு அமைச்சரவை…

சீனாவிடம் சரணடைந்தார் நேரு: கிரண் ரிஜ்ஜூ கருத்தால் சர்ச்சை

ஐதராபாத்: கடந்த 1962ம் ஆண்டு நடந்த போரின் போது சீனாவிடம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சரணடைந்தார் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஐதரபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில்,…

தாத்ரியில் நடந்ததென்ன? கன்றுக்குட்டி திருட்டால் நடந்த கொலை

புதுடில்லி : ஒரு கன்றுக்குட்டி திருடப்பட்ட சம்பவம், உண்மைநிலை அறியாமல், அரசியல் மற்றும் மதசாயம் பூசப்பட்டதால், பூதாகரமாக வெடித்தது தற்போது அம்பலமாகி உள்ளது. உ.பி., மாநிலம் தாத்ரி கிராமத்தில் இஸ்லாமியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம்…

எளிதில் உடைக்க முடியாத பாஸ்வேர்டுகள்: இந்திய வம்சாவளி மாணவி சாதனை

நியூயோர்க் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் எளிதில் உடைக்க முடியாத பாஸ்வேர்டுகளை விற்பனை செய்துவருகிறார். மிரா (11) என்ற இந்திய வம்சாவளி மாணவி சாதாரண வழிமுறையை பயன்படுத்தி இந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கி வருகிறார். ஐந்து பகடை காய்களை உருட்டும்போது, 5 எண்கள் கிடைக்கும் உதாரணத்திற்கு 13465…

ஊத்திக் கொடுத்த உத்தமியும், உத்தமரும்.. மதுவிலக்கை வலியுறுத்துவது தேசத்துரோகமா? சீமான்…

மது விலக்குக்கு எதிராக பாடல் பாடியதற்காக கைது செய்யப்பட்ட கோவன் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுவின் தீமைகளையும், மது விலக்கின் தேவை குறித்தும் தமிழக மக்களுக்கு வீதி நாடகங்கள் மூலமும், தனது பாடல்களின் மூலமும் விழிப்புணர்வு…

மது விற்பனை செய்யும் ஆட்சியாளர்களிடம் மனிதத் தன்மையை எதிர்பார்க்க முடியாது:…

மது விற்பனை செய்யும் ஆட்சியாளர்களிடம் மனிதத் தன்மையை எதிர்பார்க்க முடியாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் பாடல்களை இயற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மக்கள் கலை இலக்கியக்…

லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு: முஷாரஃபின் கருத்தில் ஆச்சரியம் இல்லை;…

லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு ஆதரித்து, உதவிகளை மேற்கொண்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று, அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் டிம் கெய்ன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது: லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை…

உலகிலேயே அதிக மாசுபட்ட நகரம் தில்லி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நச்சுத் துகள்கள் காரணமாக உலகிலேயே மிக மாசுபட்ட நகரமாக தில்லி மாறியுள்ளது என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தில்லியின் நில அமைப்பு, வானிலை, ஆற்றல் நுகர்வு கலாசாரம், நகர மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக அதிகரிக்கும் காற்று மாசுபாடு ஆகியவை குறித்து பிரிட்டனின் சுர்ரே பல்கலைக்கழகக் ஆராய்ச்சியாளர்கள் குழு…

டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவன் தே.பா. சட்டத்தின் கீழ்…

சென்னை: மது ஒழிப்பிற்காக மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடல் இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை…

செல்வ வளர்ச்சியில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியது இந்தியா..!

உலக நாடுகளின் செல்வ வளம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த ஆய்வில் பிரிட்டன் நாட்டின் முக்கிய ஆய்வு நிறுவனம் ஒன்று ஈடுபட்டு இருந்தது. கடந்த 15 வருடத்தில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக் குறித்து முழுமையாக ஆய்வு செய்ததில் இந்திய நாட்டின் செல்வ வளம் சுமார் 211 சதவீதம்…

தமிழக மீனவர்களை பாதுகாக்க 24 மணித்தியால கண்காணிப்பு: இந்திய கடலோர…

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்கும் வகையில் 24 மணித்தியால கண்காணிப்பு பணியில் தாம் ஈடுபட்டு வருவதாக இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் சர்மா தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக்…

புத்திசாலியாக்கும் மாத்திரை மோடபினில்: போற்றும் மாணவர்கள்

லண்டன், அக். 29- தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மோடபினில்(Modafinil) என்கிற மாத்திரை புத்திசாலித்தனத்தை தூண்டுவதற்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர். இதனை ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். நீண்ட நேரம் பணிபுரியும் காவல் துறையினருக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் 24 வெவ்வேறு துறைகளின் கீழ் சோதனை…

வர்த்தக வாடகைத்தாய் நடைமுறைக்கு தடை: இந்திய அரசு

வாடகைத்தாய் நடைமுறை என்பது இந்தியாவில் பெரும் வர்த்தகமாக வளர்ந்து வருகிறது வர்த்தக நோக்கிலான வாடகைத்தாய்கள் நடைமுறையை இந்தியாவில் தடைசெய்யவிரும்புவதாக இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இதற்கான சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றினால் இந்தியாவில் சமீப ஆண்டுகளில் பெரும் வர்த்தகமாக வளர்ந்துவரும் வாடகைத்தாய்கள் நடைமுறை இந்தியாவில் தடை செய்யப்படும். குறிப்பாக…