சீனாக்காரனை மட்டுமல்ல, சிலோன்காரனையும் எதுவும் செய்ய முடியாது! தடுமாறும் கரையோர…

இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இராமேஸ்வரம் கடற்பகுதியில் இன்டியன்நேவி கப்பல்கள், கோஸ்ட்கார்டு கப்பல்கள், வான்வழியே பாதுகாக்க சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள், இது போதாதென்று தமிழ்நாடு பொலிஸின் கடலோரக் காவல் படை, அவர்களின் அதிவேகப் படகுகள் என்று ஏராளமானவை உள்ளன. இப்படையினருக்காக இராமேஸ்வரத்தில் ஒரு நேவி முகாமும்,…

பாட்னா சம்பவத்திற்கும் கயா குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம்: புலனாய்வுத்துறை

பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுகளை வைத்தவர்கள், பீகார் மாநிலம் புத்த கயாவில் கடந்த ஜூலை மாதம் நடந்த குண்டுவெடிப்பிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம்…

சென்னையில் இரு தபால்நிலையங்கள் மீது குண்டுவீச்சு: 2 பேர் கைது

சென்னையில் நள்ளிரவில் தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி தபால் நிலையங்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலைய வளாகத்திற்கு…

கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளலாமா? விவசாயி தீக்குளிப்பு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்லப்போவதாக வந்த அறிவிப்பினை அடுத்து விவசாயி ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் (43). இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…

பாட்னா குண்டுவெடிப்பு பேரதிர்ச்சி தரும் உண்மைகள் : வைகோ

பாட்னாவில் மோடி பங்கேற்கவிருந்த பேரணியில் குண்டுவெடிப்பு நடந்திருப்பது குறித்து வெளியாகும் உண்மைகள் பேரதிர்ச்சி தருகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிறன்று பாட்னாவின் காந்தி மைதானத்தில், மோடி பங்கேற்ற பேரணியில், அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர்;…

பாட்னா தொடர் குண்டு வெடிப்பு: ஒரு மணி நேரத்துக்கு முன்பே…

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் எங்கு நாசவேலை செய்தாலும், அந்த இடத்தை ஒரு தடவைக்கு 2 தடவை ஆய்வு செய்வார்கள். குண்டு வைக்க வேண்டிய இடங்களுக்கு சென்று ஒத்திகையும் பார்ப்பார்கள். பாட்னா காந்தி மைதானத்துக்குள்ளும் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் சென்று ஒத்திகை பார்த்துள்ளனர். மறுநாள் அதிகாலை குண்டுகளை வைக்க முடிவு…

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சல்மான் குர்ஷித் முடிவு: தமிழகத் தலைவர்கள்…

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளது குறித்து  திமுக தலைவர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ், தேமுதிக விஜயகாந்த் மற்றும் தங்கபாலு  உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். குர்ஷித் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள…

தமிழக மீனவர்களை கைது செய்வதற்கு இலங்கை தமிழ் மீனவர்களே காரணம்:…

காரைக்கால், அக்.27– காரைக்காலில் மத்திய மந்திரி நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:– காரைக்கால் பகுதியை சேர்ந்த சுமார் 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அவர்களது 4 படகுகளையும் இலங்கை அரசு கையகப்படுத்தி உள்ளது. காரைக்கால் மீனவர்கள் அங்குள்ள திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் சிறை…

தமிழர் உணர்வை மதிக்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகச்சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இலங்கை தூதர் கரியவாசம் கருத்து தெரிவித்திருக்கிறார்.தமிழர்கள்அனைவரும் ஒன்றுபட்டு கடுமையாக எதிர்க்க வேண்டிய கருத்து இது.“காமன்வெல்த் மாநாட்டினை இந்தியாபுறக்கணித்தால், இந்தியா தனிமைப்படுத்தப்படும்” என்று இவர் டெல்லியிலே இருந்து கொண்டு கூறியிருக்கிறார். அது…

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது உறுதி:…

இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தான் தமிழக மீனவர்கள் பிர்ச்சனை குறித்து பேசமுடியும். எனவே இந்தியா கலந்து கொள்வது உறுதி  என இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள்,…

தமிழருக்கு செவாலியர் விருது

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் கெளரவ விருது, தமிழரான அஞ்சலி கோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்த விருதை அவருக்கு அளித்துப் பேசிய பிரான்ஸ் நாட்டின்…

உளவு பார்க்கும் அமெரிக்கா!: எதற்கும் அஞ்சாத இந்திய பிரதமர்

அமெரிக்க உளவு நிறுவனங்கள் 35 உலக தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உலகத் தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானதால் அவர் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவைத்…

ராகுல் காந்திக்கு எதிராக வலுப்பெறும் குற்றச்சாட்டுக்கள்

பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யுடன் முசாஃபர்நகர் முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பு வைத்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு பாஜக, சமாஜவாதி, இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. "கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள முஸ்லிம் இளைஞர்களுடன் ஐ.எஸ்.ஐ. தொடர்பு…

மீனவர்கள் தாக்குதல் வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பு…

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க  மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி  அதிமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் தம்பிதுரை, மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சதாசிவம் மத்திய…

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தாற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான…

தமிழக சட்டசபைத் தீர்மானம்! ஏமாற்றம் அளிக்கிறது! கவலை தருகிறது :…

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று இன்று வியாழக்கிழமை தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, சட்டமன்றம் முழுமனதாக நிறைவேற்றி இருக்கிறது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று…

பீகார் மாநிலத்தில் திருமணப் பந்தத்தில் இணைந்த இரு இளம் பெண்கள்

பீகார் மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிப்பருவம் முதலே நெருங்கிய தோழிகளாக இருந்த இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்களின் இந்த நெருக்கத்தை கண்டித்த பெற்றோர்கள், இவர்களை பிரிக்க முயற்சி செய்துள்ளனர். ஆண் - பெண் காதலை…

டார்ஜிலிங்கில் அதிகளவு காணாமல் போகும் பெண் குழந்தைகள்! அதிர்ச்சி தகவல்

டார்ஜிலிங்கில் ஆண்டு தோறும் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் ஒப்பிடும் போது, சுற்றுலாத் தளமான டார்ஜிலிங்கில் குழந்தைகள் காணாமல் போவது அதிகமாக இருப்பதாக அம்மாநில குற்றப்பதிவு ஆணையம் கண்டறிந்துள்ளது. இங்கு சமீபகாலமாக காணாமல் போகும்…

எனது பாட்டி, அப்பாவை போல நானும் கொல்லப்படலாம்: ராகுல் காந்தி

நாட்டிற்காக உயிர்நீத்த எனது பாட்டி, தந்தை ஆகியோரைப் போல நானும் கொல்லப்படலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை என்று, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உருக்கமாகப் பேசினார். ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு என்ற இடத்தில்…

பல மைல் தூரம் பறந்து தாக்கும் ஏவுகணையை தயாரிக்கும் இந்தியா

ஒலியைவிட ஏழு மடங்கு வேகத்தில் பறந்து, அதிகபட்சம் 7,200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் மிக அதிவேக "ஹைப்பர்சோனிக்' ஏவுகணையை இந்தியா தயாரிக்கவுள்ளது. 2017-ஆம் ஆண்டில் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக மூத்த பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகளில் ஒருவரும் "பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்' நிறுவனத் தலைமை செயல் அதிகாரியுமான…

நக்ஸல்கள் நடத்தியுள்ள தாக்குதல்களில் 11,742 பொதுமக்கள் பலி

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக நக்ஸல்கள் நடத்தியுள்ள தாக்குதல்களில் சுமார் 12,000 பொதுமக்கள், 3,000 பொலிஸார் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்: நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1980ஆம் ஆண்டு முதல் நக்ஸல்கள் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த…

கழிவறை தண்ணீரில் ஜூஸ்: அதிர்ச்சி தகவல்

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கழிப்பிடங்களில் உள்ள தண்ணீரால் கரும்பு ஜூஸ் தயாரித்து கடைகளில் விற்றுவரும் செயல் அம்பலமாகியுள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சேலம் பேருந்துகள் நிற்கும் "ஷெட்' அருகேயும், கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்திலும், பழரச கடைகள்…

மக்களவைத் தேர்தல்: பாமக தலைமையில் புதிய அணி

மக்களவைத் தேர்தலில் பாமக தலைமையில் புதிய அணியை அறிவித்தார் அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலையும் அவர் திங்கள்கிழமை வெளியிட்டார். சென்னையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் ராமதாஸ் கூறியதாவது: தொகுதியும் வேட்பாளரும்: கிருஷ்ணகிரி - பாமக தலைவர் ஜி.கே.மணி,…