தெலங்கானா உருவாவதை யாராலும் தடுக்க முடியாது!

தனி தெலங்கானா மாநிலம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய சமூகநலத்துறை அமைச்சர் பல்ராம் நாயக் தெரிவித்தார். திருமலை ஏழுமலையானை தரிசிக்க சனிக்கிழமை மாலை திருமலைக்கு மத்திய அமைச்சர் பல்ராம் நாயக் வந்தார். அவரை திருப்பதி திருமலை தேவஸ்தான உயர் அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர்…

காமலீலைகள் புரிந்த கொடூரன் சிறையிலிருந்து தப்பியோட்டம்!

பல்வேறு பாலியல் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கைதி ஜெய்சங்கர், பெங்களூரு மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கர்நாடகத்தில் தொடர் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஜெய்சங்கர் (எ) சங்கர் (36), பெங்களூரு பரப்பன…

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை: மணிக்கொரு மரணம்

இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தியா எங்கிலும் பார்க்க 2012ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. 2007…

கச்சத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தம்

கச்சத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கே சொந்தம், இலங்கைக்கு அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- கச்சத் தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அதை மீட்க முடியாது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை…

சேதுத் திட்டம்: காங்கிரஸூக்கு கருணாநிதி எச்சரிக்கை

சேது சமுத்திரத் திட்டத்தை காங்கிரஸ் (மத்திய அரசு) நிறைவேற்றாவிட்டால், அதன் கையை திமுக விட்டுவிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணியை தி.மு.க. அமைக்கப் போவதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த தின பொன் விழா…

எல்லை தாண்டி மீன்பிடிக்க உரிமை கோருகிறார் அழகிரி

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கவும், இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன்பிடிக்கவும் இருநாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே எஸ் அழகிரி இலங்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இவரது இந்த கோரிக்கையை இந்திய பிரதமர் வாயிலாக இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தும்படியும், தாமும்…

கச்சத் தீவை மீட்க வேண்டும்: அதிமுக

இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்குள்ளாகி சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களைக் காக்க அந்த நாட்டின்வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை மக்களவையில் அதிமுக உறுப்பினர் எம். தம்பிதுரை வலியுறுத்தினார். இதுதொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை அவர் பேசியது: ராமநாதபுரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 அப்பாவித் தமிழர்களை இலங்கைக்…

கச்சத் தீவை திரும்பப் பெற முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய…

"இந்திய-இலங்கை கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது, கேட்பாரற்றுக் கிடந்த கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அது அந்நாட்டுக்கே சொந்தமாகிவிட்டது' என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா- இலங்கை இடையே 1974-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம்…

பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசு மட்டுமே பொறுப்பல்ல

நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசு மட்டுமே பொறுப்பல்ல என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளிக்கிழமை தெரிவித்தார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு, நடப்புக் கணக்கில் பெரும் பற்றாக்குறை எனப் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களை…

சென்னையில் 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகள், பொது இடங்களில் 20 லட்சம் பனை மர கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். மேலும் சென்னையில் இந்தாண்டுக்குள் 5.5 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வையை 11 சதவீதம் என இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்…

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: நாடாளுமன்றத்தில் இன்று மன்மோகன் சிங் அளிக்கவுள்ளார்.

ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்கவுள்ளார். மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை காலையில் எழுப்பியபோது, அவையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங், "சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்…

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைத் தொடங்கியவர்களில் ஒருவரான யாசின் பட்கலை (30)(இடது) பிகார் மாநில போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர். அவருடன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படும் ஹாதி என்ற அசதுல்லா அக்தர் என்பவரும்…

தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்

சென்னை : தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய காலைநேர…

உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது

பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறினார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியால், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், ரத்தன் டாடா இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் இது தொடர்பாக…

ரூபாய் மதிப்பு மேலும் சரிவு எதிரொலி: பிரதமர் பதவி விலக…

ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு புதன்கிழமை ரூ. 68.80 ஆகச் சரிந்ததைத் தொடர்ந்து இக்கருத்தை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பாஜக…

இந்தியப் பெண்களே தனியாக வெளியே போகாதீர்கள்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜக எம்.பி ஹேமமாலினி கூறியுள்ளார். நாட்டு நிலைமை சரியில்லை என்பதால் பெண்கள் நிலை மோசமாக இருப்பதாகவும், பெண்கள் யாரும் வீட்டை விட்டுப் போக வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் வெளியே போவதாக இருந்தால் தனியாக போக…

இந்திய எண்ணெய் கப்பலை பிடித்த ஈரான்!

ஈரானில் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் கடந்த 15 நாட்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனில் 1 மில்லியன் ஜாமீன் தொகை கோருகிறது ஈரான். ஈராக்கின் பஸ்ராவில் கச்சாஎண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு வந்தது இந்திய அரசுக்கு சொந்தமானது…

இந்தியாவில் ‌மொத்தம் 65 பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன: அக்குழுக்களுக்கு பாகிஸ்தான்…

புதுடில்லி: ஜனநாயக ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் இந்தியாவில் ‌மொத்தம் 65 பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன எனவும் அக்குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கி வருகின்றன என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஜனநாயக ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாக தீவிரவாத செயல்களி்ல் ஈடுபடும் பயங்கரவாத கும்பல்களில் லஷ்கர்-இ-தொய்பா,…

இன்றும், நாளையும் திருப்பதி எல்லையை மூடும் போராட்டம்

ஒரே ஆந்திரம் இயக்கத்தை ஆதரிக்கும் திருப்பதி கூட்டு போராட்டக் குழு புதன், வியாழன் ஆகிய 2 தினங்கள் திருப்பதிக்குள் பக்தர்கள் யாரும் செல்ல முடியாதபடி நகரின் எல்லைகளை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளது. ஆந்திரத்தை 2 மாநிலங்களாகப் பிரிக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக…

மேலும் புதிய மாநிலங்களை உருவாக்கும் திட்டமில்லை

தெலங்கானாவைப் போல வேறு எந்தப் புதிய மாநிலத்தையும் உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு அறிவித்தது. போடோலாந்து, கோர்காலாந்து, விதர்பா போன்ற புதிய மாநிலங்களை உருவாக்குவது பற்றிய கேள்வி ஒன்றுக்கு, உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், ""இப்போதைக்கு இதுபோன்ற திட்டங்கள்…

காட்டுயானைகளை பழகுயானைகளாக மாற்றுவது சரியா?

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், விவசாய விளைநிலங்களில் புகுந்து விளைபயிர்களை அழிக்கும் ஆறு காட்டுயானைகளின் கூட்டத்தைப் பிடித்து அவற்றை பழகு யானைகளாக மாற்றும் நடவடிக்கைகளை தமிழக வனத்துறை தற்போது மேற்கொண்டு வருகிறது. “ஆபரேஷன் மாலை” என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்த நடவடிக்கையின்படி, இந்த யானைக் கூட்டத்தில் உள்ள…

திருமலைக்கு செல்லும் பக்தர்களையும் தடுத்து நிறுத்துவோம்: தெலுங்கானா எதிர்ப்பு போராட்டக்…

ஆந்திராவில் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் இன்று 28–வது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகள் வர்த்தக நிறுவனங்கள் செயல்படவில்லை. ஒட்டு மொத்த மக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் காரணமாக திருப்பதியிலும்…

விஞ்ஞானிகளுக்கு கலாம் வலியுறுத்தல்

ஐதராபாத் : நாட்டின் பாதுகாப்புத்துறையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துமாறு விஞ்ஞானிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐதராபாத்தில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் ஆராய்ச்சி மையத்தின் வெள்ளிவிழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரிசர்ச் சென்டர் இமாரத்(ஆர்.சி.ஐ) எனப்படும் இந்த ஆராய்ச்சி மையத்தில் நாட்டின்…