தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வரின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காவல்துறை குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி.யின் மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை இரவு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வீடு,…

கூடங்குளத்தில் பதற்றம் : கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் உண்ணாவிரதம்

கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளதை கண்டித்து கடற்கரை கிராமங்களில் இன்று மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.…

பெண்ணாக மாற விரும்பிய இளைஞருக்கு நீதிமன்றம் அனுமதி

அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பிய இளைஞருக்கு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த மாணவர் பிடன் பரூவா (வயது 21). தன்னை ஒரு பெண்ணாகவே கருதும் இவர், பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பினார்.…

ஜனநாயகத்தை கொலை செய்கிறார் ப.சிதம்பரம்: அக்னிவேஷ்

பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு இந்திய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என சமூக ஆர்வலரும் மாவோயிஸ்டுகளின் முன்னாள் அமைதித் தூதுவருமான சுவாமி அக்னிவேஷ் குற்றம் சாட்டினார். மேலும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஜனநாயகத்தை கெடுப்பதில் முதன்மை வகிக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மாவோயிஸ்டுகள் தங்கள் கோரிக்கைகளை…

வணக்கம் சொல்லி மம்தாவை சந்தித்த ஹிலாரி

டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று சந்தித்தனர். வழக்கமான கைகுலுக்கல் மற்றும் வணக்கங்களையும் இருவரும் பரிமாறிக் கொண்டனர். இது திட்டமிட்டதல்ல எனவும், இந்த சந்திப்பினால் மேற்கு…

அமைச்சர் விழாவில் அதிமுக-திமுக மோதல்!

கமுதி அருகே உள்ள புல்வாய்குளம் பகுதியில் கோயில் விழா ஒன்றில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அன்னாதானத்தை துவக்கி வைத்து வைத்து பேசிய அமைச்சர் சுந்தர்ராஜ், இது போன்ற அன்னதானம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அனைத்து கோயில்களிலும் நடத்தப்பட்டு…

எதிரி ஏவுகணையை அழிக்கும் தற்காப்பு தயாரிப்பில் இந்தியா

அதிநவீன தற்காப்பு கவச ஏவுகணையை இந்தியா தயாரித்துள்ளது. இரண்டு நகரங்களில் இதை, விரைவில் நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இரண்டு நகரங்கள், அன்னிய நாட்டினர் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிக்கும். எதிரி நாட்டில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தடுக்கும் வகையிலான தற்காப்பு கவச ஏவுகணையை, மத்திய ராணுவ ஆராய்ச்சி…

மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட கலெக்டர் பால்மேனன் விடுதலை

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டு, 12 நாட்களாக அவர்களின் பிடியில் இருந்த, சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன், (வயது 32), கடந்த 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால்…

கருணாநிதியின் கோரிக்கையை நிராகரித்த இந்திய மத்திய அரசு

இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் முன்னாள்  முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை, இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார். இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபை கருத்துக் கணிப்பு…

மாணவி தலை துண்டித்து கொலை: மாணவருக்கு தூக்கு தண்டனை!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜெயின்ட் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு படித்து வந்தவர்கள் குஷ்பூ மற்றும் பிஜேந்திரகுமார். இவர்கள் இருவரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று கல்லூரி வளாகத்தில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது…

காதலர்கள் ஓட்டம் : உதவியவர்கள் தற்கொலை

காதலர்கள் வீட்டை விட்டு ஓடியதற்கு துணைபுரிந்ததாக, கிராம பஞ்சாயத்தாரால் வீட்டில் சிறைவைக்கப்பட்ட தம்பதி, விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழகத்தின் பெரம்பலூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூரை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் மற்றும் தனலெட்சுமி. காதலித்து வந்த இவர்கள், சிலநாட்களுக்கு முன் வீட்டைவிட்டு ஓடினர். இவர்களுக்கு உதவியதாக,…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: உச்சநீதிமன்றமே விசாரிக்க முடிவு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மாற்றி, தானே விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அவர்களது மனுவை, உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி, ஜூலை 10-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடுமாறு ஜி.எஸ். சிங்வி…

மதுரை ஆதீனமாக செக்ஸ் சாமியார் நித்யானந்தா! இந்து அமைப்புகள் கொதிப்பு!

செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக ஏப்ரல் 27ல் தற்போதைய ஆதீனம் அருணகிரி, பெங்களூருவில் முடிசூட்டினார். இந்நிகழ்ச்சிக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்; "நித்யானந்தா நியமனத்தை பிற மடாதிபதிகள்…

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது!

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. திருப்பூர் விவசாயி கந்தசாமி முதலில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழ் நாட்டில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களில்…

பாலியல் ‌பேராசிரியர் படத்துக்கு செருப்புமாலை அணிவித்து அஞ்சலி

தமிழகத்தின் நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் படத்தை வைத்து செருப்பு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி மாணவிகள் நூதன போரட்டம் நடத்தினர். நெல்லை பல்க‌‌லைக்கழக பேராசிரியர் செல்லமணி (வயது 51) மீது பாலியல் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை ‌கோரி கடந்த மூன்று நாட்களாக அப்பல்கலைக்கழக…

மேற்குவங்கத்தில் தரையிறங்கிய வங்கதேச போர் விமானம்!

வங்கதேசத்திற்கு சொந்தமான இராணுவ போர் விமானம் மேற்குவங்க மாநிலத்திற்குள் அவசர அவசரமாக த‌ரையிறக்கப்பட்டது. இதற்கான ‌காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு சொந்தமான ராணுவ பயிற்சி விமானம் பி.டி.16, ‌இன்று ஜெஸ்ஸூர் நகரிலிருந்து இந்திய எல்லையில் பறந்து கொண்டிருந்த போது திடீரென மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் விமான…

போர் காலம் முடிந்து விட்டது இந்தியாவுடன் இனி பேச்சு மூலமே…

போர் காலம் முடிந்து விட்டது. காஷ்மீர் பிரச்னை, தீவிரவாதம் உள்பட எல்லாவற்றுக்கும் இந்தியாவுடன் இனிமேல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறினார். பாகிஸ்தானின் வளர்ச்சியில் தொண்டு நிறுவனங்களின் பங்கு என்ற தலைப்பில் இஸ்லாமாபாத்தில் நேற்று ஒரு மாநாடு நடந்தது. இதில்,…

கருணாநிதி கண் முன்னே தி.மு.க. உடையும்: நாஞ்சில் சம்பத் சொல்கிறார்!

தமிழக அரசியல் வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல தடவை பல கட்சிகளை உடைத்து இருக்கிறார். கட்சியை உடைப்பதில் கருணாநிதிக்கு நிகர் வேறு எவரும் இல்லை என  ம.தி.மு.க. மாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். மதுரை மகபூப்பாளையத்தில் ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையில்லை: ஆராய்ச்சியாளர்

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை கூடங்குளம் அணுஉலையால் தீர்த்துவிட முடியாது. கூடங்குளம் அணுஉலை தொடங்கப்பட்டால் தமிழ்நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற தமிழக அரசின் பிரசாரம் ஒரு அப்பட்டமான பொய் என இந்தியாவின் புகழ்பெற்ற அணுஉலை ஆராய்ச்சியாளரும், பொறியாளருமான நீரஜ் ஜெயின் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின்போது…

எளிமையாக பழகி மக்களை கவரும் உத்தரபிரதேச முதல்வர்!

இந்தியாவின் உத்தரபிரதேச முதல்வராக பதவி ஏற்றதில் இருந்தே அகிலேஷ் யாதவ் மக்களிடம் மிகவும் எளிமையாக பழகி வருகிறார். யார் என்றாலும் அவரை சந்திக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார். மாயாவதி முதல்வராக இருந்தவரை முதல்வரின் அரசு வீட்டுக்குள் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பு கெடுபிடிகள்…

அக்னி 5 ஏவுகணையின் உண்மையான திறன் மறைப்பு: சீனா குற்றச்சாட்டு

அக்னி 5 ஏவுகணையின் உண்மையான பாயும் திறனை இந்தியா மறைத்து விட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன இராணுவ அறிவியல் பிரிவு ஆராய்ச்சியாளரான வென்லாங் இதுபற்றி கூறுகையில்; "அக்னி 5 ஏவுகணையின் பாய்ந்து சென்று தாக்கும் திறன் 5000 கிலோ மீட்டர் அல்ல, மாறாக 8000 கிலோ மீட்டர்…

பத்மஸ்ரீ விருதை திருப்பி ‌கொடுத்த காந்தியவாதி!

காந்தியின் பொருட்கள் ஏலம் விடப்படுவதை எதிர்த்த பிரபல எழுத்தாளரும் காந்திவாதி தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார். காந்திஜியின் ரத்த கறை படிந்த புல், புல்லில் இருந்த மண் உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் ஷ்ராப்ஷையர் பகுதியில், 'முல்லக்' ஏல நிறுவனத்தால், ஏலம் விடப்பட்டது. இதனை இந்தியா உடனடியாக…