ஹெலிகாப்டரை வீழ்த்தியஉக்ரைன் போராட்டக்காரர்கள்

ஸ்லோயன்ஸ்க்:முந்தைய, 'சோவியத் ரஷ்யா' அமைப்பிலிருந்து வெளியேறிய உக்ரைன் நாட்டில், ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்களுக்கும், உக்ரைன் அரசு படைகளுக்கும் இடையே நடந்த சண்டையில், ஸ்லோயன்ஸ்க் நகருக்கு அருகில், ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை போராட்டக்காரர்கள் சுட்டு வீழ்த்தினர்.'போராட்டக்காரர்கள், எளிதில் எடுத்துச் செல்லும், விமான எதிர்ப்பு பீரங்கிகளை பயன்படுத்தினர்' என, உக்ரைன் அதிகாரிகள்…

எகிப்து ஜனாதிபதி தேர்தல் – இராணுவ தளபதி அமோக வெற்றி

எகிப்தில் ஹோஸ்னி முபாரக் பல்லாண்டு காலம் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்தார். எனினும் மக்கள் புரட்சியின் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து எகிப்தில் நடந்த தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியைப் பிடித்து, முகமது மோர்சி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் கடந்த ஆண்டு முகமது மோர்சிக்கு…

கர்ப்பிணிப் பெண் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் – பாகிஸ்தான்…

பாகிஸ்தானில் நீதிமன்றத்தின் முன்னால் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குடும்பத்தவர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கோர சம்வத்தை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள முடியாதென பாகிஸ்தானிய பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பர்ஸானா பர்வீன் என்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி பற்றி முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு…

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ராணுவப் பயிற்சி?

சிரியாவில் அதிபர் அல்-அசாதுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மிதவாதத் தன்மை கொண்ட அமைப்புகளுக்கு ராணுவப் பயிற்சி வழங்க அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் ஒப்புதல் வழங்குவார் என கூறப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: அதிபர் ஒபாமா ஒப்புதல் அளிக்க உத்தேசித்துள்ள திட்டத்தின்படி, சுதந்திர சிரியா ராணுவத்திலிருந்து (கிளர்ச்சியாளர்கள்…

மாபியா கும்பல்களையும் ‘பாதிக்கும்’ பொருளாதார நெருக்கடி

உலகப் புகழ் பெற்ற " காட் பாதர்" என்ற நாவலை எழுதிய மரியோ புஸோ கூட இந்த நிலையை கற்பனை செய்திருக்க மாட்டார் ! உலகில் தொடரும் பொருளாதாரப் நெருக்கடி இத்தாலியின் மாபியா ( சட்டவிரோதக் கிரிமினல்) கும்பல்களையும் பாதித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இத்தாலியின் மூத்த போலிஸ் அதிகாரி…

1.8 டன் வெடிமருந்துகளுடன் 5 தீவிரவாதிகள் கைது

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் 1.8 டன் வெடிமருந்து பொருள்களுடன் 5 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து சீன காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: சீனாவில் அபிலிஸ் தாவூத் என்பவர் தலைமையிலான தீவிரவாதக் குழு, உரும்கி என்ற இடத்தில் இம்மாதம் 22ஆம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பயங்கரவாதிகள்…

குடும்பத்தினர் சம்மதமின்றித் திருமணம்: பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற பெற்றோர்

பாகிஸ்தானின், லாகூர் நகரின் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, ஒரு பெண்ணை அவரது குடும்பத்தினரே கல்லால் அடித்துக் கொலை செய்திருக்கின்றனர். அந்தப் பெண், தங்கள் சம்மதமில்லாமல், ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதுதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று அந்தக் குடும்பத்தினர் கூறினர். தனது வழக்கு குறித்த விசாரணைக்காக, அந்தப் பெண்…

உக்ரைன் அதிபர் தேர்தல்: போரோஷென்கோ வெற்றி

உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோடீஸ்வரரும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளருமான போரோஷென்கோ (48) முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் உக்ரைனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் கூறுகையில், ""உக்ரைனில் போர், குழப்பம், குற்றச்செயல்களுக்கு முடிவு கட்டுவதுடன் நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் நடவடிக்கை…

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு: யூனியனுக்கு எதிரான கட்சிகள் அபாரம்

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் யூனியனுக்கு எதிரான கட்சிகள் வலுவான நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் மொத்தம் உள்ள 751 இடங்களில், யூனியனுக்கு எதிரான கட்சிகள் 140 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிகிறது. இது, ஐரோப்பிய நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியனில்…

உக்ரைனில் அதிபர் தேர்தல்: மந்தமான வாக்குப்பதிவு

உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு இடையே அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எனினும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கிழக்குப் பகுதியில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அப்போதைய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் கையெழுத்திட மறுத்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகக்…

ஆப்கானுக்கு ரகசிய விஜயம் செய்த ஒபாமா

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் விரைவில் வெளியேறவுள்ள நிலையில், ஜனாதிபதி பராக் ஒபாமா திடீரென ரகசிய விஜயம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் இருந்து சனிக்கிழமை மாலை அமெரிக்க விமானப்படை விமானத்தில் புறப்பட்ட அவர், ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானப்படை தளத்தை நேற்று சென்றடைந்தார். அவருடன் பிரபல பாடகர் பிராட் பைஸ்லியும் வந்தார். ஆப்கானிஸ்தானுக்கு…

152 இந்திய மீனவர்கள் விடுவிப்பு: பாகிஸ்தான் நல்லெண்ண நடவடிக்கை

புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிலையில் அவரது பதவியேற்பு நாளான திங்கள்கிழமை பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 152 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு அரசு விடுவிக்க முடிவு செய்துள்ளது. நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அந்நாடு…

சோமாலிய நாடாளுமன்றத்தில் தாக்குதல்: 10 பேர் பலி

சோமாலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சோமாலிய நாடாளுமன்றத்தில் திடீரென ஆயுதம் ஏந்தி வந்தவர்கள் வாயிற்கதவை வெடிவைத்து தகர்த்துவிட்டு அதிரடியாக உள்நுழைந்துள்ளனர். விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தாக்குதல் நடைபெற்றதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்…

போகோ ஹராம் “தீவிரவாதக் குழு’: ஐ.நா. அறிவிப்பு

அல்-காய்தா தீவிரவாத குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் போகோ ஹராம் அமைப்பை "தீவிரவாதக் குழு' என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வியாழக்கிழமை அறிவித்தது. அதையடுத்து, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் அந்த அமைப்பின் பெயரையும் பாதுகாப்பு கவுன்சில் சேர்த்துள்ளது. இதன்மூலம் போகோ ஹராம் அமைப்புக்கு தனிநபரோ அல்லது நிறுவனமோ, நிதியுதவி…

சிரியாவின் பாதுகாப்பு விவகாரம் – பிரான்ஸின் முயற்சி தோல்வி

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக கிளர்ச்சி நடந்து வருகிறது. அந்நாட்டு இராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக நடந்து வரும் உள்நாட்டு போரில் இதுவரை ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். அசாத்தின் ஆதரவு படையினர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், சிரியாவில் நிலவி…

ரஷிய ஆதரவாளர்கள் தாக்குதல்: உக்ரைன் ராணுவ வீரர்கள் 14 பேர்…

ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைனில் வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவம், அந்நாட்டு ராணுவத்தினருக்கு கருப்பு தினமாக அமைந்துள்ளது. ரஷிய நாட்டு எல்லைக்கு அருகே உள்ள கிழக்கு தொழிற்சாலைப் பகுதியில்…

சீனாவில் தொடர் குண்டுவெடிப்பு: 31 பேர் பலி

சீனாவில் தீவிரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில், பொதுமக்கள் 31 பேர் பலியாகினர். மேலும் 90 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் சின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில்…

நைஜீரியாவில் பயங்கரம் : இரட்டை குண்டுவெடிப்பில் 118 பேர் பலி

நைஜீரியாவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய இரட்டை குண்டுவெடிப்பில் 118 பேர் பலியாகினர். இதுகுறித்து அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், "ஜோஸ் நகரில் உள்ள சந்தைப்பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற 20 நிமிடங்கள் கழித்து, வெடிகுண்டு நிரப்பப்பட்ட மினி…

தாய்லாந்து அவசரக் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை

தாய்லாந்தில் அரசியல் குழப்பநிலைமையை தணிக்கும் முயற்சியாக நாட்டின் இராணுவத் தலைவர் ஏற்பாடு செய்திருந்த அவசர பேச்சுவார்த்தை முடிவுகள் எதுவும் இன்றி முடிவடைந்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான மற்றும் ஆதரவான ஆர்ப்பாட்ட இயக்கங்களைச் சேர்ந்த 7 வெவ்வேறு அரசியல் குழுக்களின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். ஆனால் தற்காலிக பிரதமர் பேச்சுவார்த்தையில்…

இரானிய நடிகையின் முத்தத்தால் சர்ச்சை

பிரான்ஸின் பிரபலமான கான் திரைப்பட விழாவில் இரானிய நடிகை ஒருவர் கொடுத்த முத்தம் இரானில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இரானிய நடிகையான லெய்லா ஹடாமி அவர்கள், விழாவுக்கு வந்தபோது, அந்த விழாக்குழு தலைவரான கில்ஸ் ஜேகப் அவர்களை பார்த்து குசலம் விசாரித்து பேசியபோது அவருக்கு கன்னத்தில் ஒரு முத்தம்…

செயற்கை போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது: ஐநா எச்சரிக்கை

உலகில் செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக ஐநா மன்றம் மீண்டும் எச்சரித்துள்ளது. போதை தரும் புதிய புதிய ரசாயன கலவைகள் முன்பெப்போதும் இல்லாத வேகத்தில் உருவாக்கப்பட்டு வருவதை ஐநாவின் போதை மருந்து குற்ற ஒழிப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. 2013ஆம் ஆண்டில் புதிதாக அடையாளம் காணப்பட்ட செயற்கை…

கிறிஸ்தவரை மணந்த இஸ்லாமிய பெண்ணுக்கு சுடானில் மரணதண்டனை

கிறிஸ்தவர் ஒருவரை மணந்த 27 வயதான ஒரு சுடானிய பெண்ணுக்கு மதத்தை கைவிட்ட குற்றச்சாட்டின் பேரில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருடைய திருமணம் செல்லாது என்று கூறி, திருமணத்துக்கு புறம்பான உறவு வைத்திருந்ததாகக் கூறி அவருக்கு 100 கசையடிகளுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. 8 மாத கர்ப்பிணியான டாக்டர் மரியம் யாஹ்யா இப்ராஹிம்…

காவல்நிலையத்துக்குள் நுழைந்து பெரியவரை சுட்டுக் கொன்ற பையன்

பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்த சிறுபான்மை மதப் பிரிவு ஒன்றைச் சேர்ந்த அறுபத்தைந்து வயது பெரியவர் ஒருவரை பதின்ம வயது பையன் ஒருவர் காவல்நிலையத்துக்குள் நுழைந்து சுட்டுக் கொன்றுள்ளார். பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் கலில் அகமது என்ற அந்த முதியவர் வெள்ளிக்கிழமை இரவு காவல்நிலையத்தில் அறை ஒன்றில்…