கேரளாவில் இன்று முதல் மது விலக்கு அமல்

கேரளாவில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாய முன்னணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் அறிவித்த மது விலக்கு கொள்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவு படி அடுத்த…

பாகிஸ்தான் உளவாளி சென்னையில் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இலங்கையைச் சேர்ந்த அருள் செல்வராஜன் என்பரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) சென்னையில் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தூண்டுதலின் பேரில் இலங்கையைச் சேர்ந்த சிலர் உளவு பார்ப்பதற்காக தென்னிந்தியாவில் குறிப்பாக,…

வெள்ளத்தில் சீர்குலைந்த காஷ்மீர்; நிஜ ஹீரோக்கள் ராணுவ வீரர்களே !

ஸ்ரீநகர்: தங்களது உயிரையும் துச்சமென மதித்து, காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் செய்து வரும் மீட்புப்பணிகள் அம்மாநிலத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது வரை விரோதிகளாக பார்க்கப்பட்டு வந்த இந்திய ராணுவத்தினர், தற்போது காஷ்மீர் மக்களால் ஹீரோக்களாக பார்க்கப்பட்டு வருகின்றனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த 60 ஆண்டுகளில் பார்த்திராத கனமழை…

ஒபாமாவை இரு நாள்கள் சந்திக்கிறார் மோடி

"அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில் வரும் 29,30ஆம் தேதிகளில் சந்திக்கவுள்ளார்' என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் தனது அமெரிக்கப் பயணத்தில் அதிபர் ஒபாமாவை இரு முறை சந்திக்க உள்ளது அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு…

கந்து வட்டித் தொழில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு…

கந்து வட்டித் தொழிலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்து வட்டி பிரச்னையால் மக்கள்படும் சிரமம் குறித்து தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம்…

டில்லியில் ஆட்சியை பிடிக்க ரூ.4 கோடி லஞ்சம்!

புதுடில்லி:புதுடில்லியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் ஆம் ஆத்மி கட்சி அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.ஆனால் சில நாட்களிலேயே காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலால் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் நீண்ட…

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்: மத்திய…

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ.) தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனுமதிக்காது என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்தியில் புதிய அரசு அமைந்து கடந்த 2ஆம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைந்தன. இதையொட்டி, வர்த்தகம்,தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தில்லியில் திங்கள்கிழமை…

திருவள்ளுவர் பிறந்தநாளை கொண்டாட நாடாளுமன்றக் குழு பரிசீலனை

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின்  முதலாவது கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழுக்காக குரல் எழுப்பும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் உள்ளிட்டோர். திருவள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக்…

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து முடியுங்கள்! மாநில…

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நாளில் இருந்து ஒரு வருடத்திற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.   மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த…

குழந்தை திருமணம் கற்பழிப்பை விட கொடுமையானது: டில்லி கோர்ட் கடும்…

புதுடில்லி: 'சிறார்களுக்கு திருமணம் செய்து வைப்பது, கற்பழிப்பு குற்றத்தை விட கொடுமையானது; கேவலமானது' என, டில்லி கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லியை சேர்ந்த பெற்றோர், தங்கள் மகளின் கணவர் மற்றும் அவரின் உறவினர்கள், வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும், தங்கள் மகளை கொடுமைப்படுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை: இந்த…

அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் பெண்கள்: பரோக்கள் என்ற பெயரில் சமூகத்தில்…

ராஜஸ்தான் மாநிலங்களில் இளம் பெண்கள், ஆடு, மாடுகளை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் அவலம் நடந்து வருகிறது. பெண் குழந்தைகளை பெற்றோரே விலைக்கு விற்று விடுகிறார்கள். மேவாட் என்ற நகரில் காலங்காலமாய் நடந்துவரும் வியாபாரம் இது. அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரைக்கும் இங்கே பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள்.…

காஷ்மீர் பேரழிவு : ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம்…

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை கொட்டியது. சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், ஜீனாப், தாவி நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு…

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது

தில்லி ஜாமா மசூதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில், இந்தியன் முஜாஹிதீன் (ஐ.எம்.) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் அஜாஸ் ஷேக்கை, தில்லி தனிப்பிரிவு காவல்துறையினர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். இதுகுறித்து தில்லி காவல் துறையின் தனிப்பிரிவு சிறப்பு ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா…

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ளம்: பலி எண்ணிக்கை 116ஆனது

ஜம்மு பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை படகு மூலம் சனிக்கிழமை மீட்டு வரும் ராணுவ வீரர்கள். ஸ்ரீநகரில் வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதன்கிழமை முதல் பெய்து வரும் தொடர்…

சிவராசனின் இரட்டை வேடம்! டெல்லி பத்திரிகையாளரின் பேட்டி – சென்ற…

''ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அவரது பேட்டி கடந்த இதழில் வெளியாகி இருந்தது. இந்த இதழிலும் தொடர்கிறது. இதோ பெரோஸ் அஹ்மத் பேசுகிறார். சிவராசன் ஏன் டெல்லி…

தடை விதிப்பதால் அப்பாவி தமிழர்கள்கூட வரமுடியவில்லை!- புலிகள் தடை தீர்ப்பாயத்தில்…

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. 2013-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு ஆண்டுகள் தடையை ஐந்து ஆண்டுகளாக நீட்டித்துச் சட்டத் திருத்தம் செய்தது. அந்த அடிப்படையில், இந்த ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள்…

நான் சொல்லித்தான் இந்தியக் கப்பல்களை ராஜபக்‌ஷே பிடித்து வைத்திருக்கிறார்! சீண்டும்…

சேர்ந்தே இருப்பது சுப்பிரமணியன் சுவாமியும் சர்ச்சைகளும் என்று சொல்லலாம். இப்போது மீனவர்கள் பற்றி அவர் அடித்த கமென்ட் கடலோர மக்களின் மனத்தில் சுனாமியாகக் கொந்தளித்து வருகிறது. மீன் பிடிக்கிறதுக்காக எல்லைதாண்டி வரும் தமிழ்நாட்டுக் கப்பல்களை எல்லாம் பிடிச்சு வெச்சுக்குங்கோ. கப்பல் முதலாளிகளின் கட்டாயத்தினால் வரும் மீனவர்களை விடுதலை செஞ்சுருங்கோ…

விலைவாசி உயர்வால் மக்கள் துன்புறும்போது ஜப்பானில் முரசு வாசிக்கிறார் மோடி:…

""மின் பற்றாக்குறை, விலைவாசி உயர்வால் மக்கள் துன்பப்படும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானில் முரசு வாசித்துக் கொண்டிருக்கிறார்'' என்று பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகத் தாக்கிப் பேசினார். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 2 நாள்…

ரயில்வே அமைச்சரின் மகனுக்கு பிடி ஆணை

பாலியல் பலாத்கார வழக்கில் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடாவின் மகன் கார்த்திக் கெளடாவை கைது செய்ய பெங்களூரு மாநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது. கார்த்திக் கெளடா மீது கன்னட நடிகை மைத்ரி கெளடா பெங்களூரு ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார்.…

தாக்குதல் நடத்த இந்தியாவில் புதிய அமைப்பு: அல்-காய்தா அறிவிப்பால் நாடு…

இந்தியாவில் ஜிஹாத் (புனிதப் போர் என்ற பெயரிலான தாக்குதல்கள்) நடத்த,"காய்தாத் அல் ஜிஹாத்' என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக "அல்-காய்தா' பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜவாஹிரி பேசிய விடியோ காட்சி, அல்-காய்தா அமைப்பின் ஊடகப் பிரிவான "அஸ் சஸாப்…

நக்ஸலைட்டுகளை ஒடுக்க புதிய திட்டம்: ராஜ்நாத் சிங்

நக்ஸலைட்டுகளை ஒடுக்க விரிவான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற மாநில காவல்துறை பயிற்சி அகாதெமி தலைவர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தீவிரவாதத்தாலும், மாவோயிஸ்டுகளாலும், கிளர்ச்சியாளர்களாலும் பல்வேறு சவால்கள் ஏற்பட்டு வருகின்றன.…

கங்கை தூய்மையாவது எப்போது? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி…

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்தத் தலைமுறையில் இது சாத்தியமாகுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த நிலை வாரியான செயல் திட்டத்தை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசுக்கு…

மோடி ராஜ்ஜியத்தின் முதல் நூறு நாட்கள்

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மோடியின் தலைமையிலான அரசே தனிப் பெரும் பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ளது. திறன் மிக்க பேச்சாளரும், சமூக வலை தளங்களை மிக நேர்த்தியாக கையாண்டவருமான மோடி இந்தியாவுக்கு நல்ல காலத்தை கொண்டுவருவேன்…