டில்லியில் ஆம் ஆத்மி படு சுறு, சுறு ; ஒரே…

புதுடில்லி: டில்லியில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் படு வேகமான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஒழிக்க கடுமையாக பாடுபடுவேன் என உறுதியுடன் களம் இறங்கியிருக்கிறார். இதன் முதல் கட்டமாக குடிநீர் விநியோக துறையில் ஒரே நாளில் 800 ஊழியர்களை இட மாற்றம் செய்து…

கெஜ்ரிவாலிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: திக்விஜய்சிங் திடீர் வேண்டுகோள்

பெங்களூரூ: அரசியல்கட்சிகளும் அதன் தலைவர்களும் ஆம் ஆத்மி கட்சியியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டில்லி முதல்வரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என காங்.,மூத்த தலைவர் திக்விஜய்சிங் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் பாராட்டியுள்ளார். மேலும் வீடுகளில் உட்கார்ந்து கொண்டு விமர்சித்துவருபவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள்…

தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம்

உலக அளவில் தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம் கிடைத்துள்ளது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் கூறினார். மதுரை  உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கத்தை சென்னை,…

காஷ்மீர் பண்டிட்கள்: அரசு நடவடிக்கை வெற்றி பெறவில்லை: ஒமர் அப்துல்லா…

ஜம்மு: காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் குடும்பங்கள் மீண்டும் அவரவர் வீடு திரும்புவதற்கு அரசு எடுத்த நடவடிக்கை வெற்றி பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வேதனை தெரிவித்தார். ஜம்முவில் உள்ள பட்டா போரியில் நடந்த அகில இந்திய இளைஞர் காஷ்மீரி சமாஜ் மாநாட்டில் கலந்து…

ஊழல் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லை : கெஜ்ரிவால்

புதுடெல்லி: ‘‘ஊழல் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லை. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நிறைவடைந்தது. அதன்பின் அவர் அளித்த பேட்டி: டெல்லி…

தமிழகத்தில் “ஆம் ஆத்மி’ போட்டி

வரும் மக்களவைத் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இத் தகவலை அக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் யோகேந்திர யாதவ் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல், தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சியின்…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.-டி5

ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பம் மூலம் இந்த ராக்கெட் ஏவப்பட்டதால் இது இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. இருபது ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு…

பொறுமை காக்க மாட்டோம் என்று இலங்கை அரசை மத்திய அரசு…

இன்னொரு முறை தமிழக மீனவர்களைத் தொட்டால் பொறுமை காக்க மாட்டோம் என்று இலங்கை அரசை மத்திய அரசு உடனே எச்சரிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இலங்கைத் தமிழர்கள்…

பெரிய வீட்டை நிராகரித்த கேஜ்ரிவால்

சர்ச்சை எழுத்ததை அடுத்து 800 சதுர மீட்டர்களுக்கும் அதிகமான பரப்பில் பெரிய 5 அறைகளைக் கொண்ட, இருமாடி அதிகாரபூர்வ இல்லத்தில் குடிபுகும் திட்டத்தை இந்திய தலைநகர் டில்லியின் புதிய முதலமைச்சர் கைவிட்டுள்ளார். தனக்காக நிர்வாகம் ஒதுக்கிய பெரிய ஆடம்பர அதிகாரபூர்வ வதிவிடத்தை தனது ஆதரவாளர்கள் எதிர்த்ததாக அரவிந்த் கேஜ்ரிவால்…

இந்திய கற்சூளைகள் தரும் ”இரத்தக் கற்கள்”

இந்தியாவின் செங்கற்சூளை தொழிற்துறையில் நிலவும் மனித அவலத்தை ஒழிக்க நிறையச் செய்ய வேண்டியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் எழுச்சி கண்டுவருகின்ற நிர்மாணத்துறைக்கு கற்களை விநியோகிக்கின்ற இந்த தொழிற்துறையை பிரிட்டன் மற்றும் ஏனைய பல்தேசியக் கம்பனிகளும் பயன்படுத்துகின்றன. வேகமாக வளருகின்ற இந்தியப் பொருளாதாரத்தின் மிகவும் முக்கிய பகுதியாகவும் இந்தத் தொழிற்துறை…

வாழை விளைச்சலில் உலக சாதனை படைத்த தேனி விவசாயிகள்

வாழை சாகுபடியில் தேனி மாவட்ட விவசாயிகள் உலக சாதனை படைத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தற்போது 8 ஆயிரம் ஹெக்டேரில் வாழை சாகுபடி நடக்கிறது. ஜி 9, நேந்திரன் ரகங்களில் திசு வாழைகள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. சராசரியாக 1 ஹெக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளனர். மிகவும்…

மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள். இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் இலங்கை சிறையில் உள்ள தமிழக…

‘இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இல்லை என்பது தவறு’: மன்மோஹன்

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைளுக்கு தீர்வுகாண்பதற்காக இலங்கை அரசாங்கத்தை இணங்கச்செய்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியில் மூன்றாவது…

வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட தீவிரம்?

வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட கர்நாடக பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வெடிகுண்டு வழக்கு தொடர்பாக கர்நாடக பொலிசார் வீரப்பன் கூட்டாளிகள் என முத்திரை குத்தி ஞானபிரகாஷ், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட வீரப்பன்…

நாடே நாசமாப்போச்சு! ஆவேசத்தில் கேஜ்ரிவால்

குடிநீர் வசதி இல்லாதது, மோசமான சாலைகள், பற்றாக்குறை மின் விநியோகம் என அனைத்து அவலங்களுக்குமே இந்த பாழாய்ப்போன அரசியல்தான் காரணம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாக கூறியுள்ளார். டெல்லி சட்டசபையில் கேஜ்ரிவால் அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரியது. அதற்கு முன்பு நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து…

திருமண வயது: பாமக கோரிக்கைக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு

21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் போது, அந்தத் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாமக மத்திய அரசுக்கு கோரிக்கை. வியாழனன்று சென்னையில் நடந்த பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 21…

என்ன செய்யப் போகிறார் மன்மோகன் சிங்?

கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் போகிறார் என்கிற செய்தி வெளிவந்ததுமுதலே பிரதமர் பதவி விலகக்கூடும் என்கிற வதந்தி பரவலாகவே தலைநகரப் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை முடிந்தவரை தவிர்க்கும் பிரதமர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் என்பதுதான் அதற்கு…

3600 கோடி ரூபா ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்தியா

முக்கிய பிரமுகவர்களுக்காக 12 நவீன சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க, ஆங்கில இத்தாலிய நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. லஞ்சப் புகாரின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற இந்திய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள், மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 360…

டில்லியில் இலவச நீர் விநியோகம் வெற்றி பெறுமா?

டில்லிவாழ் மக்களுக்கு நாளொன்றுக்கு 700 லிட்டர் நீர் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது சாத்தியமா என்று கேள்விகள் எழுந்துள்ளன. அங்கு சிறுபான்மை அரசுக்கு தலமையேற்றுள்ள அரவிந்த் கேஜரிவால், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அறிவித்த முதல் கொள்கை முடிவில் டில்லி மக்களுக்கு இலவசமாக நீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.…

இந்தியாவை சற்று திரும்பி பார்க்கலாமே!

2014ம் ஆண்டை இன்முகத்தோடு அடியெடுத்து வைக்கும் இந்திய மக்களுக்கு எங்களது புத்தாண்டு வாழ்த்துகள். புதிய ஆண்டை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும், தான் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்ப்பது அவனது வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடும் விடயமாகும். அந்த வகையில் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ள நிலையில்…

சிறுவன் நரபலி: அதிர்ச்சியில் உறைந்த கிராமவாசிகள்

சத்திஸ்கர் மாநிலத்தில் கண்டதுண்டமாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்துள்ள 10 வயது சிறுவனின் சடலம் உள்ளூர் வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சத்திஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் ரத்னபூர் பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் (10) என்ற சிறுவன் கடந்த சனிக்கிழமை காலை அப்பகுதியின் மலை மீது அமைந்துள்ள லக்கன் தேவி கோயிலுக்கு…

டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர்

டெல்லியில் குடும்பம் ஒன்றிற்கு மாதத்திற்கு இலவசமாக 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், ஆம் ஆத்மி…

சமைக்காமல் சீரியல் பார்க்கிறாயா! கணவரின் கண்டிப்பால் மனைவி தீக்குளிப்பு

கடலூர் மாவட்டத்தில் சமையல் செய்யாமல் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்ததை கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்துள்ளார். நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி சீதா. இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. 21 வயதான சீதா, 2 நாட்களுக்கு முன்பு வீட்டில்…