காங்கிரஸ் கட்சிக்கு மோடி ஒரு சவால்தான்!

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சவால்தான் என்பதை நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார். கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்று வரும் "சிந்தனை திருவிழா'வின் கலந்துரையாடல் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவர் மேலும் கூறியது: "நாங்கள் (காங்கிரஸ்) ஒரு…

இந்தியாவின் புவியியல் அமைப்பையே மாற்றியது காங்கிரஸ்தான்: மோடி குற்றம் சாட்டினார்!

இந்தியாவின் பிரிவினைக்கு அனுமதி அளித்து நாட்டின் புவியியல் அமைப்பை மாற்றியதும், நாட்டுக்காகப் பாடுபட்ட முக்கிய தலைவர்களைப் புறக்கணித்து, நேரு குடும்பத்தினரின் புகழ் பாடி வரலாற்றை மாற்றியதும் காங்கிரஸ்தான் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் வரலாறு-புவியியலை பாஜக மாற்றிவிட்டதாக குற்றம்…

கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததற்கு வெளியுறவு அமைச்சர் மழுப்பலான பதில்

கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காததற்கு, இலங்கை தமிழர் பிரச்சினை மட்டும் காரணமல்ல என மழுப்பலாக, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இலங்கையில்  கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு இம்மாதம் 15ல் தொடங்கி, 17 வரை நடக்கிறது. இலங்கையில் 2009ல் நடந்த உள்நாட்டு…

சவுதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்…

சவுதியில் வேலை இழந்து தவிக்கும் தமிழர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு  அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்லார். இதுற்குறித்து அவர் வெளியிட்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சவுதி அரேபியாவில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட நிதாகத் சட்டத்தால் அங்கு…

இந்தியப் பெண்ணுக்கு ஐ.நா விருது

இந்தியாவை சேர்ந்த சமூக சேவகி மார்தா தோத்ரேக்கு ஐக்கிய நாடுகள் சபை, உலக தலைமை பண்பு விருது வழங்கி கௌரவித்தது. ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் சமூகசேவைகளில் ஈடுபட்டவர்களுக்கு ஐ.நா உலக தலைமை பண்பு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா…

பிரபாகரன் படத்துடன் பானர் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!- பழ.நெடுமாறன், காசி ஆனந்தன்…

உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா நிகழ்வின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்துடன் பானர் வைக்கப்பட்டிருந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தஞ்சை…

10 இலட்சத்திற்காக தந்தையை சுட்டுக்கொன்ற மகன்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டதில் 63 பேர் பலியானார்கள். முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள…

‘தம்’ அடித்தால் அரசு வேலை கிடையாது: அரசு உத்தரவு

ராஜஸ்தான் மாநில அரசுப் பணிகளில் சேருவோர் புகை பிடிக்கக் கூடாது என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1ம் திகதி நடைபெற உள்ளது. இதனால் கடந்த 5ம் திகத முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதே நாளில் ராஜஸ்தான் மாநில…

பல்லாயிரம் மக்கள் புடை சூழ முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நிகழ்வுகள் எழுச்சியுடன்…

தமிழக அரசின் மாணவர் கைது உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைக்கு மத்தியில் தமிழக மாணவர்கள் தங்கள் முள்ளிவாய்க்கால் பரப்புரை சுடரினை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் இருந்து மாணவர்களின் சுடர் பயணம் தொடங்கப்பட்ட போது அதனை தமிழக காவல்துறையினர் தடுத்து மாணவர்களை கைது செய்துள்ளதுடன்…

‘பாதரச விநாயகர்’: சித்த வைத்தியரின் 40 ஆண்டு முயற்சி வெற்றி

பாதரசத்தால் விநாயகர் சிலை செய்ய வேண்டும் என்ற ஆசைக்கு 40 ஆண்டுகாலத்தை அர்ப்பணித்து தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியில் வெற்றியும் பெற்று விட்டார் சித்த வைத்தியர் ஒருவர். பாதரசம் என்பது ஒரு திரவ நிலை உலோகம். நீரைவிட பல ஆயிரம் மடங்கு அடர்த்தியானது. குறைந்த வெப்பக் கடத்தி. ஐ.நா.சபையால் பட்டியலிடப்பட்ட…

தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள்

தமிழ்நாட்டில் இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் மூன்று பேர், தேயிலை ஆராய்ச்சிக்காக குன்னூரில் தங்கியிருந்தனர். இதனை தமிழ் அமைப்புக்கள் கடுமையாக எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து சிங்களவர்கள் மூவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பெங்களூரு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்: டில்லியில் தமிழக பா.ஜ.க, வேண்டுகோள்

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் மீறி, கொமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால், அது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு சமமாக ஆகிவிடும் என்று, தமிழக, பா.ஜ.க, கூறியுள்ளது. இலங்கையில், இம்மாதம் நடைபெற போகும், கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில், இந்தியா…

இந்தியாவில் வெளிநாட்டு வங்கிகள் செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி

இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் செயல்பட வாய்ப்புகளைத் திறந்துவிடும் புதிய விதிகளை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் கிளைகளைத் திறக்க மேலும் சுதந்திரம் தரப்படும். மேலும், அவை இந்திய நிதித்துறையை மேம்படுத்துவதில் மேலதிக பங்காற்ற முடியும் . ஆனால்…

இலங்கை காமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்பது குறித்து மத்திய மந்திரிசபை…

புதுடெல்லி, நவ.7- இலங்கையில் இந்த மாதம் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் ஏகமனதாக…

ஈழத்தமிழரின் தியாகத்தை பறைசாற்றும் முள்ளிவாய்க்கால் முற்றம் – சிறப்பு பார்வை

தஞ்சாவூர், நவ. 7- உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஆறாத ரணமாக இன்றும் வலித்துக் கொண்டிருக்கிறது முள்ளிவாய்க்கால் படுகொலை. துடிக்கத் துடிக்க தமிழர்களை கொன்று குவித்த கோரத் தாண்டவம், உள்நாட்டுப் போர் என்ற போர்வையில் சொந்த மக்களையே சூறையாடி இனஅழிப்பை அரங்கேற்றிய கொடுமை, இலங்கையைத் தவிர எந்த நாட்டிலும் இல்லை.…

அசாராம் பாபு மீது குற்றச்சாட்டு பதிவு

பலாத்கார வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாராம் பாபு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 400 ஆசிரமங்களை நடத்தி வரும் ஆன்மீக தலைவர் அசாராம் பாபு, ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக ராஜஸ்தான்…

கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது

இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி, இன்று தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி, சேலத்தில் வருமான வரித்துறை அலுவலகம் முன் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி, முன்புறத்தை சேதப் படுத்தினர் திராவிடர் விடுதலைக்…

இந்தியாவை தீவிரமாக கண்காணிக்கும் முயற்சியில் சீனா

இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய விமானங்களை கண்காணிக்கும் ரேடார் நிலையம் ஒன்றை சீனா அமைத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே உள்ள தவூலத்பெக்கில் தரையிறங்கும் இந்திய விமானங்களை கண்காணிக்க இந்த ரேடார் நிலையத்தை சீனா அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தாங்கள்…

காந்தியின் கைராட்டினம் 1.8 லட்சம் டாலருக்கு ஏலம் !

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் சிறையில் இருந்தபோது மகாத்மா காந்தியினால் பயன்படுத்தப்பட்ட கை நெசவு ராட்டினம் பிரிட்டனில் இன்று 1.8 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ( 1.11 கோடி இந்திய ரூபாய்கள்) ஏலம் போனது. இந்த ராட்டினமே காந்தியின் சுதேசி இயக்கக் குறியீடாகவும், மிகவும் உன்னதமான பொக்கிஷமாகவும் அனைவராலும்…

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்க மேலும் 2 அமைச்சர்கள்…

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மேலும் 2 மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது அந்நாட்டு ராணுவம் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா: தமிழர்கள் கலந்து கொள்ளுமாறு…

தஞ்சையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சியில், உலக தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு நிகழ்ச்சி…

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா?

இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒட்டி இந்தியாவில் பல்வேறு கருத்தறியும் அமைப்புகளால் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளைத் தடை செய்வது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை சமீபத்தில் கேட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த யோசனைக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. "காங்கிரஸுக்கு தேர்தல் ஜுரம்" காங்கிரஸ் கட்சியின்…

வாகா எல்லையில் இந்தியா – பாக். வீரர்கள் இனிப்புகள் பரிமாறி…

அட்டாரி, நவ.4- தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சாலை வழி எல்லைப் பகுதியான வாகா எல்லைக் கோடு அருகே பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தார்கள். இந்தியாவின் பாரம்பரியமும், பிரசித்தியும் பெற்ற இனிப்பு வகைகளை எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. டெபி ஜோசப்…