பெண்ணாக மாற விரும்பிய இளைஞருக்கு நீதிமன்றம் அனுமதி

அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பிய இளைஞருக்கு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த மாணவர் பிடன் பரூவா (வயது 21). தன்னை ஒரு பெண்ணாகவே கருதும் இவர், பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பினார்.…

ஜனநாயகத்தை கொலை செய்கிறார் ப.சிதம்பரம்: அக்னிவேஷ்

பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு இந்திய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என சமூக ஆர்வலரும் மாவோயிஸ்டுகளின் முன்னாள் அமைதித் தூதுவருமான சுவாமி அக்னிவேஷ் குற்றம் சாட்டினார். மேலும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஜனநாயகத்தை கெடுப்பதில் முதன்மை வகிக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மாவோயிஸ்டுகள் தங்கள் கோரிக்கைகளை…

வணக்கம் சொல்லி மம்தாவை சந்தித்த ஹிலாரி

டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று சந்தித்தனர். வழக்கமான கைகுலுக்கல் மற்றும் வணக்கங்களையும் இருவரும் பரிமாறிக் கொண்டனர். இது திட்டமிட்டதல்ல எனவும், இந்த சந்திப்பினால் மேற்கு…

எதிரி ஏவுகணையை அழிக்கும் தற்காப்பு தயாரிப்பில் இந்தியா

அதிநவீன தற்காப்பு கவச ஏவுகணையை இந்தியா தயாரித்துள்ளது. இரண்டு நகரங்களில் இதை, விரைவில் நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இரண்டு நகரங்கள், அன்னிய நாட்டினர் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிக்கும். எதிரி நாட்டில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தடுக்கும் வகையிலான தற்காப்பு கவச ஏவுகணையை, மத்திய ராணுவ ஆராய்ச்சி…

மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட கலெக்டர் பால்மேனன் விடுதலை

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டு, 12 நாட்களாக அவர்களின் பிடியில் இருந்த, சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன், (வயது 32), கடந்த 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால்…

மாணவி தலை துண்டித்து கொலை: மாணவருக்கு தூக்கு தண்டனை!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜெயின்ட் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு படித்து வந்தவர்கள் குஷ்பூ மற்றும் பிஜேந்திரகுமார். இவர்கள் இருவரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று கல்லூரி வளாகத்தில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது…

மேற்குவங்கத்தில் தரையிறங்கிய வங்கதேச போர் விமானம்!

வங்கதேசத்திற்கு சொந்தமான இராணுவ போர் விமானம் மேற்குவங்க மாநிலத்திற்குள் அவசர அவசரமாக த‌ரையிறக்கப்பட்டது. இதற்கான ‌காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு சொந்தமான ராணுவ பயிற்சி விமானம் பி.டி.16, ‌இன்று ஜெஸ்ஸூர் நகரிலிருந்து இந்திய எல்லையில் பறந்து கொண்டிருந்த போது திடீரென மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் விமான…

எளிமையாக பழகி மக்களை கவரும் உத்தரபிரதேச முதல்வர்!

இந்தியாவின் உத்தரபிரதேச முதல்வராக பதவி ஏற்றதில் இருந்தே அகிலேஷ் யாதவ் மக்களிடம் மிகவும் எளிமையாக பழகி வருகிறார். யார் என்றாலும் அவரை சந்திக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார். மாயாவதி முதல்வராக இருந்தவரை முதல்வரின் அரசு வீட்டுக்குள் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பு கெடுபிடிகள்…

அக்னி 5 ஏவுகணையின் உண்மையான திறன் மறைப்பு: சீனா குற்றச்சாட்டு

அக்னி 5 ஏவுகணையின் உண்மையான பாயும் திறனை இந்தியா மறைத்து விட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன இராணுவ அறிவியல் பிரிவு ஆராய்ச்சியாளரான வென்லாங் இதுபற்றி கூறுகையில்; "அக்னி 5 ஏவுகணையின் பாய்ந்து சென்று தாக்கும் திறன் 5000 கிலோ மீட்டர் அல்ல, மாறாக 8000 கிலோ மீட்டர்…

பத்மஸ்ரீ விருதை திருப்பி ‌கொடுத்த காந்தியவாதி!

காந்தியின் பொருட்கள் ஏலம் விடப்படுவதை எதிர்த்த பிரபல எழுத்தாளரும் காந்திவாதி தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார். காந்திஜியின் ரத்த கறை படிந்த புல், புல்லில் இருந்த மண் உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் ஷ்ராப்ஷையர் பகுதியில், 'முல்லக்' ஏல நிறுவனத்தால், ஏலம் விடப்பட்டது. இதனை இந்தியா உடனடியாக…

இந்திய தலைநகரில் இராணுவம் குவிப்பு: இராணுவப் புரட்சியா?

இந்திய மத்திய அரசுக்கு தெரிவிக்காமல், கடந்த ஜனவரி மாதம், டில்லி அருகே இராணுவம் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் அங்கு இராணுவப் புரட்சி என்ற வதந்தியும் வெளியாகியது. எனினும், அத்தகவல் முற்றிலும் முட்டாள்தனமானது. இந்திய அரசு மற்றும் இராணுவம் மீது, சேற்றை வாரி வீச…

ஏலத்துக்கு வருகிறது காந்தியின் ரத்தக்கறை படிந்த மண்

மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரது உடலில் இருந்து வெளியேறிய ரத்தக்கறை படிந்தசிறிய அளவிலான மண்ணும், புற்கதிர்களும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஏலத்தில் விற்கப்படவுள்ளன. இதுமட்டுமல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த இதர அரிதான பொருட்களும் பிரித்தானிய ஏல நிறுவனமான முல்லாக்ஸால் ஏலத்தில் விடப்படுகிறது. காந்தி பயன்படுத்திய…

இலங்கைக்கு செல்கிறது அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு

இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த குழு இலங்கை செல்ல இருந்தது. ஆனால் 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் தள்ளி…

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விரும்புகிறது, மன்மோகன் சிங்

ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள சிறிலங்கா மீதான தீர்மானம் இந்தியாவின் குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இருக்குமானால் இந்தியா அத்தீர்மானத்தை ஆதரிக்க விரும்புகிறது. "சமத்துவம், உண்மையான மதிப்பு, நீதி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் சிறீலங்கா தமிழ் சமூகத்தின் எதிர்காலம் அமைய வேண்டும் என்ற நமது குறிக்கோள்களை…

இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்திக்கொள்ள பிரிட்டன் முடிவு

இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இதுவரை அளித்து வரும் நிதியுதவியை நிறுத்த, பிரிட்டன் முடிவு செய்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குப் பின், இந்நிதியுதவி இந்தியாவுக்கு கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் அனைத்துலக மேம்பாட்டுத் துறை, பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, நிதியுதவி செய்து வருகிறது. பிரிட்டனின் மற்ற துறைகளைப்…

ஒரிசாவில் இத்தாலி சுற்றுலாப் பயணிகள் கடத்தப்பட்டனர்

இந்தியாவின் கிழக்கே, ஒரிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இத்தாலி நாட்டவர்கள் இருவரைக் கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கந்தாமால் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலியர்கள் இருவரே கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக அயல்பிரதேசமொன்றில் சுற்றுலாப் பயணிகளுக்கான முகவர் நிலையமொன்றை நடத்தி வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்…

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்: திமுக-ஆதிமுக கோரிக்கை

இலங்கையின் இறுதிப் போரின்போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான…

இந்தியாவில் 4 மாநிலங்களில் மண்ணைக் கவ்வியது காங்கிரஸ்

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் மண்ணைக் கவ்வியுள்ளது காங்கிரஸ். அரசியல் செல்வாக்கை இழந்து விட்டதாகக் கூறப்பட்ட முலாயம் சிங் யாதவ், உ.பி., மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். பெரும் ஊழல், ஆடம்பரங்களால் மக்கள் செல்வாக்கை இழந்த மாயாவதி, ஆட்சியைப்…

“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம்”: இந்தியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆதரிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஐ.நா மனித உரிமை மன்றத்தை பலவீனப்படுத்தும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் நான்கு ஆண்டுகளுக்கு…

காதலர் தினத்தில் இளம்காதலன் கொலை; பெண் வீட்டார் நடத்திய வக்கிர…

உலகம் முழுவதும் அன்பை பறிமாறும் இவ்வேளையில் இளம் காதலன், தனது காதலியை சந்திக்க சென்ற போது அந்த பெண் வீட்டார் அடித்து உதைத்து அவனது உயிரை பறித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் உ.பி. மாநிலம் மீரட் நகர் அருகே இச்சம்பம் நடந்துள்ளது. கேத்வான் நகரை…